Advertisment

பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கிய பா.ஜ.க! - பி.பி.சி. அலுவலகங்களில் சோதனை!

bbc

பிப்ரவரி 14-ஆம் தேதி காலை, பி.பி.சி.யின் டெல்லி அலுவலகத்துக்குள் 50 வருமான வரித் துறை அதிகாரிகள் அணிவகுத்து நுழைந்தனர். முதல்வேலையாக, பணி யாளர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப் பட்ட பின் சோதனைகள் தொடங்கின. டெல்லியில் சோதனை தொடங்கிய சற்றுநேரத்தில் பி.பி.சி.யின் மும்பை அலுவலகத்திலும் சோதனைகள் தொடங்கின.

Advertisment

இந்தியத் தரப்பில் இந்த சோதனைகளுக்கான காரணமாக, “பரிமாற்ற விலை விதிகள் தொடர்பாக இந்தியச் சட்டங்களுடன் வேண்டுமென்றே இணங் காதது, லாபத்தை சட்டவிரோதமாகத் திருப்புதல்” போன்ற தொழில்நுட்பக் காரணங்கள் சொல்லப் பட்டன. பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா, "இந்தியாவுக்கு எதிரான வெறுப்பைத் தூண்டும் வேலையைச் செய்வதாக வும், உலகிலேயே மிக ஊழல்மிக்க அமைப்பு பி.பி.சி.'’எனவும் முத்திரை குத்தினார்.

bbc

ஆனால், உண்மையான காரணம் குருடருக்கும் தெளிவாகத் தட்டுப்படும் ஒன்றுதான். இருபது வருடங்களுக்கு முன்பு குஜராத்தில் நடந்த கலவரத் தில், தற்போதைய இந்தியப் பிரதமர

பிப்ரவரி 14-ஆம் தேதி காலை, பி.பி.சி.யின் டெல்லி அலுவலகத்துக்குள் 50 வருமான வரித் துறை அதிகாரிகள் அணிவகுத்து நுழைந்தனர். முதல்வேலையாக, பணி யாளர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப் பட்ட பின் சோதனைகள் தொடங்கின. டெல்லியில் சோதனை தொடங்கிய சற்றுநேரத்தில் பி.பி.சி.யின் மும்பை அலுவலகத்திலும் சோதனைகள் தொடங்கின.

Advertisment

இந்தியத் தரப்பில் இந்த சோதனைகளுக்கான காரணமாக, “பரிமாற்ற விலை விதிகள் தொடர்பாக இந்தியச் சட்டங்களுடன் வேண்டுமென்றே இணங் காதது, லாபத்தை சட்டவிரோதமாகத் திருப்புதல்” போன்ற தொழில்நுட்பக் காரணங்கள் சொல்லப் பட்டன. பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா, "இந்தியாவுக்கு எதிரான வெறுப்பைத் தூண்டும் வேலையைச் செய்வதாக வும், உலகிலேயே மிக ஊழல்மிக்க அமைப்பு பி.பி.சி.'’எனவும் முத்திரை குத்தினார்.

bbc

ஆனால், உண்மையான காரணம் குருடருக்கும் தெளிவாகத் தட்டுப்படும் ஒன்றுதான். இருபது வருடங்களுக்கு முன்பு குஜராத்தில் நடந்த கலவரத் தில், தற்போதைய இந்தியப் பிரதமரும் அப்போதைய குஜராத் முதல்வருமான மோடியின் முக்கியப் பங்கைக் குறித்து, பி.பி.சி. சமீபத்தில் ஒரு ஆவணப் படத்தை வெளியிட்டி ருந்தது. இரு பகுதிகளைக் கொண்ட இந்த ஆவணப் படத்தின் பெயர் "இந்தியா: தி மோடி கொஸ்டின்'. அதில் மோடி அரசுக்கு நேரடித் தொடர்பு இருக்கிறது என கூறப்பட்டிருந்தது.

Advertisment

இந்த ஆவணப் படம் குறித்து உடனடியாக இந்தியத் தரப்பிலிருந்து சுடச் சுட கண்டனங்கள் எழுந்தன. “இது பிரச்சார நோக்கில் எடுக்கப் பட்டுள்ளதென்றும், பாரபட்சமும் காலனி ஆதிக்க மனப்பான்மையும் வெளிப்படையாகத் தெரிவ தாகவும்’மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம்பக்சி விமர்சித் தார். குஜராத் கலவரத்தில் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற இந்தியாவைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்ததால், அன்றைய டோனி பிளேர் அரசு, குஜராத் கலவரம் குறித்து விசாரணை ஒன்றை நடத்தியது. அந்த விசாரணை அமைப்பு அளித்த தகவல்கள் மூலமே பி.பி.சி.யின் ஆவணப் படம் தயாரிக்கப்பட்டது. ஆவணப் படத்தால் சேதாரத்துக்குள்ளாகியிருந்த பா.ஜ.க., அந்தப் படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதமான நிலையில் இந்தியாவில் டெல்லி, மும்பையிலுள்ள பி.பி.சி. அலுவலகங்களில் வருமான வரி சோதனையை மேற்கொண்டது. மூன்று தினங்கள் நடந்த சோதனைக்குப் பின், பி.பி.சி., "நம்பகமான, சுயேட்சையான ஊடக அமைப்பு பி.பி.சி. யார் பக்கமும் சார்பின்றி, பயமில்லாமல் செய்தியளிக்கும் எங்களது பத்திரிகையாளர்கள், சக பணியாளர்களுக்கு நாங்கள் துணைநிற்போம். எங்கள் டெல்லி, மும்பை அலுவலகத்தைவிட்டு வருமானவரி அதிகாரிகள் கிளம்பிவிட்டனர். இனியும் நாங்கள் அதிகாரிகளுடன் ஒத்துழைப்போம். விஷயங்கள் விரைவில் தீர்வுக்கு வரும் என நம்புகிறோம்'’என தெரிவித்துள்ளது.

சோதனை பற்றிய தகவல்களை வெளியிடவேண் டாம் என பி.பி.சி. அதன் பணியாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. செவ்வாயன்று இரவு முழுவதும் சோதனையின்போது சில ஊழியர்கள் அலுவலகங் களில் தங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். ஆனால் தற்போது அனைத்தும் இயல்புநிலைக்கு வந்துள்ளது.

bbc

இந்தச் சோதனையை எதிர்க்கட்சியான காங் கிரஸ், "வெட்கக்கேடான தாக்குதல்'’என விமர்சித்துள் ளது. "பிரதமரின் கடந்த காலத்தை யாராவது வெளிச்சம் போட்டுக் காட்டினால், அந்த ஊடகத்தின் நிகழ்காலமும் எதிர்காலமும், அரசின் ஏஜென்சிகளால் அழித்தொழிக்கப்படும்'’என காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான பவன்கெரா விமர்சித்துள்ளார்.

பதிலுக்கு பா.ஜ.க., "நாட்டில் எவரும் சட்டத்தை விட உயர்ந்தவர் கிடையாது' என சமாளித்துள்ளது.

இந்திய அதிகாரிகள் வரி தொடர்பான விசாரணைகளை ஒரு சாக்குப்போக்காக வைத்து, இந்தியாவின் முக்கியமான செய்தி நிறுவனங்களைத் துன்புறுத்துவது முன்பும் நிகழ்ந்திருக்கிறது. அது போல் இப்போது பி.பி.சி. ஊழியர்களைத் துன்புறுத்து வதை நிறுத்தவேண்டும் என சர்வதேச அழுத்தங்கள் கிளம்பியுள்ளன. பத்திரிகைச் சுதந்திரத்தை ஊக்குவிக் கும் லாப நோக்கற்ற நிறுவனமான "எடிட்டர்ஸ் கில்டு ஆப் இந்தியா', இந்த வருமானவரி சோதனை குறித்து ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது.

இந்த வருமான வரி சோதனைக்கு இந்திய ஊடகத்தைச் சேர்ந்தவர்கள் சொல்லும் காரணம் இதுதான்: ஒன்று பி.பி.சி.யின் ஆவணப்படத்துக்கு தகுந்த பதிலடி தரவேண்டும். இரண்டாவதாக, இந்திய ஊடகங்களை ஒடுக்குவதில் பா.ஜ.க. கணிசமாக வெற்றிபெற்றுள்ளது. அடுத்தகட்டமாக, வெளிநாட்டு ஊடகங்களைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். அதற் கான அடிவைப்பு தான் இது.

ஆவணப் படம் வெளியான தைத் தொடர்ந்து இந்து சேனா, பி.பி.சி.யை முழுமையாக இந்தியா வில் தடைசெய்யவேண்டுமெனக் கோரி உச்சநீதி மன்றத்தை அணுகியது. தேசியப் புலனாய்வு முகமை, பி.பி.சி.யை விசாரிக்கவேண்டும் என கோரிக்கை எழுந்தது. "பி.பி.சி.யே இந்தியாவை விட்டுப் போ' என்ற வாசகத்துடனான அட்டைகளை டெல்லி பி.பி.சி. அலுவலகம் முன் வைத்தது இந்து சேனா. மத்திய அரசு தன் பங்காக சோதனைகளை மேற்கொண்டுள்ளது.

ஏற்கெனவே ரிப்போர்ட்டடு வித்தவுட் பார்டர் அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், 180 நாடுகளைக் கொண்ட பட்டியலில், ஊடகச் சுதந்திரத்தில் இந்தியா 150-வது இடத்தில் இருந்தது. வருங்காலத்தில் இன்னும் கீழிறங்குமோ என்ற பயத்தை இத்தகைய சோதனைகள் ஏற்படுத்தியுள்ளன.

nkn220223
இதையும் படியுங்கள்
Subscribe