டிகை கவுதமி, இயக்குநர் -பாடலாசிரியர் கங்கைஅமரன், நடிகர் ராதாரவி, நடிகைகள் காயத்ரி ரகுராம், நமீதா, டைரக்டர் பேரரசு போன்ற சினிமா பிரபலங்கள் பா.ஜ.க.வில் ஐக்கியமாகிவிட்டார்கள். அனைவருக்கும் பதவிகளும் வாரி வழங்கப்பட்டன.

tt

பா.ஜ.க. தலைவராக எல்.முருகன் பொறுப்பேற்றதிலிருந்து சினிமா தயாரிப்பாளர்களுக்கு வலை வீசும் புது அசைன்மென்ட்டை கையில் எடுத்துள்ளார். செஞ்சி ராமச்சந்திரன் மத்திய இணையமைச்சராக இருந்தபோது அவருக்கு பி.ஏ.வாக இருந்தவர் தணிகைவேல். செல்வாக்கிலும் செல்வத்திலும் தன்னை உயர்திக்கொண்ட தணிகைவேல், முதலில் ம.தி.மு.க.விலும், தி.மு.க. இருமுறை ஆளுங்கட்சியாக இருந்தபோது அக்கட்சியிலும், அதன்பின் தே.மு.தி.க.வில் திருவண்ணாமலை மா.து.செ., இப்படி அரசியலில் பயணித்த தணிகைவேல், இப்போது பா.ஜ.க.வில் ஐக்கியமாகிவிட்டார்.tt

மூலதனம் எல்லாம் அரசியல் மூலம் என்றாலும் தணிகைவேலின் முதலீடுகள் முக்கால்வாசி சினிமாவில்தான். நடைபெறவிருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தேனாண்டாள் பிலிம்ஸ் என்.முரளி தலைமையை ஆதரிக்கிறார் இந்த தணிகைவேல்.

Advertisment

""நாலஞ்சு கட்சிக்குப் போய்ப் பாருங்க, நல்லது நடக்கலேன்னா நம்ம கட்சிக்கு வாங்க'' -இந்த பாலிஸிதான் இப்போது பா.ஜ.க.வை நோக்கி பல தமிழ் சினிமா தயாரிப்பாளர்களை படையெடுக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

மேற்படி பாலிஸியால் ஈர்க்கப்பட்டு கடந்த 09-ந் தேதி எல்.முருகன் தலைமையில் பா.ஜ.க.வில் ஐக்கியமாகிவிட்டார் சு.ராஜா என்ற தயாரிப்பாளர். ""பிரதமர் மோடியின் கொள்கைகளால் கவரப்பட்டு பா.ஜ.க.வில் என்னை இணைத்துக்கொண்டேன். எனது தலைமையில் இயங்கும் அறம் மக்கள் நல சங்கத்தின் 13 லட்சம் (?!) உறுப்பினர்களை பா.ஜ.க.வில் இணைக்க முயற்சி செய்வேன்'' என்கிறார் சு.ராஜா.

tt

Advertisment

கவிஞர் பா.விஜய் டைரக்ஷனில் அர்ஜுன்-ஜீவா காம்பினேஷனில் "மேதாவி' என்ற படத்தை தயாரிக்கிறார். கையில் இருப்பு ‘வெயிட்டாக இருப்பதால் பா.ஜ.க. இருக்க பயமேன் என்ற தெம்புடன் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார் சு.ராஜா.

இறை நம்பிக்கையில் அதீத நம்பிக்கையுள்ளவர் ஃபெப்சி சிவா. இவர் பா.ஜ.க.வில் இணைந்தது எப்போது என்பது வெளிப்படையாக தெரியாவிட்டாலும் தமிழக பா.ஜ.க. வி.ஐ.பி.க்களுடன் நெருக்கம் காட்டுவார். 15 கோடி பட்ஜெட்டில் தான் தயாரித்துள்ள "தமிழரசன்' படத்தின் ஆடியோ ரீலீஸை சென்னையிலுள்ள ஒரு கோயிலுக்குள் பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், ராதாரவி ஆகியோரை வரவழைத்து நடத்தியவர் ஃபெப்சி சிவா. சில கோடிகள் கடனில் தத்தளிக்கும் சிவாவிற்கு இப்போது தமிழக பா.ஜ.க.வில் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு மாநில செயலாளர் பதவி கிடைத்துள்ளது.

தயாரிப்பாளர் தணிகைவேல் மூலமாக தேனாண்டாள்’முரளி, பி.எல்.தேனப்பன், ஞானவேல் ராஜா, ’ஆடுகளம்’ கதிரேசன், தனஞ்செயன் போன்ற முன்னணி தயாரிப்பாளர்களுக்கு வலை விரித்துள்ளதாம் பா.ஜ.க. டெல்லி மேலிடம்.

இதேபோல் சினிமாத் துறைக்கு பல சலுகைகளையும் சினிமா தொழிலாளர்களின் வாழ்க்கைப் பாதுகாப்பிற்கான உத்தரவாதம் தருவதாகச் சொல்லியும் ஃபெப்சியின் தலைவராக இருக்கும் ஆர்.கே. செல்வமணியிடமும் வெயிட்டாக பேசி வருகிறதாம் பா.ஜ.க. தரப்பு.

சீயான்’ விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜுமன் "பொல்லாத உலகில் பயங்கர கேம்' என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். முதல் படத்திலேயே 5 விதமான கெட்-அப் என்பதால் ஐந்து ஹீரோயின்களை டைரக்டர் கமிட் பண்ணியிருப்பதால் வெரி ஹேப்பியாகிவிட்டார் அர்ஜுமன். ஐஸ்வர்யா தத்தா, அனித்ரா நாயர், ஆராத்யா, சாண்ரியா, சாந்தினி ஆகிய ஐந்து ஹீரோயின்களுடன், லாக்டவுன் முடிந்ததும் அதகளம் பண்ண காத்திருக்கிறார் அர்ஜுமன். இவர்கள் போக ‘பிக்பாஸ்’ ஜுலி வேற இருக்காராம்.

சாருஹாசனை வைத்து "தாதா 87' படத்தை டைரக்ட் பண்ணிய விஜய்ஸ்ரீஜி-தான் பொ.உ.ப.கே.’ படத்தின் டைரக்டர்.

னது ரசிகர்களுடன் சோசியல் மீடியாக்கள் மூலம் ஜாலியாக அரட்டை அடிக்கும் பழக்கம் உள்ளவர் ஸ்ருதிஹாசன். பாடுவது, இசைப்பது இவற்றிலும் தனது அப்பாவைப் போலவே சகலகலாவல்லியான ஸ்ருதி, இப்போது தனியாக யு-டியூப் சேனல் ஒன்றை தொடங்கப்போகிறாராம்.

tt

தான் உருவாக்கிய மியூசிக் ஆல்பங்களையும் பல்வேறு வெளிநாடுகளில் நடத்திய மேடை இசைக் கச்சேரிகளில் இதுவரை வெளிவராத விஷுவல் காட்சிகளையும் தன் யு-டியூப் சானலில் டெலிகாஸ்ட் பண்ணி ரசிகர்களை திக்குமுக்காட வைக்கப்போகிறாராம் ஸ்ருதி.

-ஈ.பா.பரமேஷ்வரன்