Advertisment

பா.ஜ.க. ஆதரவில் தாராள கவனிப்பு! - தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் நிலவரம்

cinemaa

விஷால் தலை மையிலான தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முறைகேடுகள் நடந்ததால், சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு சங்கத்தின் செயல்பாடுகள் அரசால் முடக்கப் பட்டது. அரசால் நியமிக்கப் பட்ட தனி அதிகாரி ஒருவரின் கீழ்தான் சங்கம் இயங்கி வந்தது. இதனால் பல திரைப்படங்களின் ரிலீஸ் தேதியில் குழப்பம், சில படங்களின் கடைசிக் கட்ட பஞ்சாயத்து இவற்றால் தயாரிப்பாளர்கள் மத்தியில் திண்டாட்டம் நிலவியது.

Advertisment

cinemaa

இதையெல்லாம் பார்த்து அப்செட்டான டைரக்டரும் தயாரிப்பாளருமான பாரதிராஜா தலைமையில். தமிழ் சினிமா நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தோற்றுவிக்கப்பட்டு, நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த சங்கம் தனியாக செயல்பட்டு வருகிறது.

எனவே இந்த சங்கத் தில் இல்லாத மற்ற தயாரிப் பாளர்கள் ஒன்று கூடி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டதால், "2020 டிசம்பருக்குள் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்ட

விஷால் தலை மையிலான தயாரிப்பாளர்கள் சங்கத்தில் முறைகேடுகள் நடந்ததால், சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு சங்கத்தின் செயல்பாடுகள் அரசால் முடக்கப் பட்டது. அரசால் நியமிக்கப் பட்ட தனி அதிகாரி ஒருவரின் கீழ்தான் சங்கம் இயங்கி வந்தது. இதனால் பல திரைப்படங்களின் ரிலீஸ் தேதியில் குழப்பம், சில படங்களின் கடைசிக் கட்ட பஞ்சாயத்து இவற்றால் தயாரிப்பாளர்கள் மத்தியில் திண்டாட்டம் நிலவியது.

Advertisment

cinemaa

இதையெல்லாம் பார்த்து அப்செட்டான டைரக்டரும் தயாரிப்பாளருமான பாரதிராஜா தலைமையில். தமிழ் சினிமா நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தோற்றுவிக்கப்பட்டு, நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த சங்கம் தனியாக செயல்பட்டு வருகிறது.

எனவே இந்த சங்கத் தில் இல்லாத மற்ற தயாரிப் பாளர்கள் ஒன்று கூடி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டதால், "2020 டிசம்பருக்குள் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி இருப்பார்' எனவும் உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்.

Advertisment

இதனடிப்படையில் 2020-2022-ஆம் ஆண்டிற்கான தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் 22-11-2020-ல் நடைபெறுகிறது. "தேனாண்டாள் பிலிம்ஸ்' இராம சாமி (எ) முரளி தலைமையிலான "தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி'யில் தலைவர் பதவிக்கு முரளி, செயலாளர்கள் பதவிக்கு ராதாகிருஷ்ணன், கே.ஜே. ராஜேஷ், துணைத் தலைவர்கள் பதவிக்கு சிவசக்தி பாண்டியன், ஆர்.கே.சுரேஷ், பொருளாளர் பதவிக்கு சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதுபோக இந்த அணியில் ஆர்.மாதேஷ், எஸ்.தணிகைவேல், விஜயமுரளி, ஆர்.வி.உதயகுமார் உட்பட 21 பேர் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்.

"தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி'யில் தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர், செய லாளர்கள் பதவிக்கு டி.மன்னன், என்.சுபாஷ் சந்திரபோஸ், துணைத்தலைவர்கள் பதவிக்கு கே.முருகன், பி.டி.செல்வகுமார், பொருளாளர் பதவிக்கு என்.ராஜன் ஆகியோர் போட்டி யிடுகிறார்கள். ஏ.எம்.ரத்னம், மனோபாலா, ஷக்தி சிதம்பரம், அன்பாலயா பிரபாகரன் உட்பட 21 பேர் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்.

இரண்டு அணிகளுமே பண பலத்திலும் படை பலத் திலும் சரிக்குச் சமமாக மோதுகின்றன. முரளி அணியில் இருக்கும் பா.ஜ.க. பிரபலங்களான எஸ்.தணிகைவேல், ஆர்.கே.சுரேஷ் ஆகியோரின் கரன்சி மழை வலுவாகவே பெய்துவருகிறது. அதிலும் டெல்லி வி.வி.ஐ.பி. ஒருவரின் பணப்புழக்கத்திற்கு இங்கே கார்டியனாக இருப்பவர் நயன்தாராவின் மாஜி மேனேஜரான கே.ஜே.ராஜேஷ். அதனால்தான் தேர்தல் தேதி அறிவித்ததும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாகவே முதல்வர் எடப்பாடியை சந்தித்து ஆசி பெற்றார். கடைசிநேர அதிரடி கவனிப்பாக 3 கிராம் தங்கம் கொடுக்கும் முடிவுக்கு வந்துள்ளாராம் ராஜேஷ்.

cinemaa

டி.ஆரின் அணியிலோ டி.மன்னன் தனது சகல வித்தைகளையும் காட்டி வருகிறார். ""ஒரு ஓட்டுக்கு ஒரு மாத மளிகை சாமான்கள், பட்டு வேட்டி, சேலை, ரொக்கம் 5 ஆயிரம் என மொத்தம் 15 ஆயிரம் பிக்ஸ் பண்ணியுள்ளார் மன்னன். இந்த அணியில் மற்ற பதவிக்குப் போட்டியிடுவோர் கைக்காசை இறக்கவே யோசிக்கும் நிலையில், "மன்னனின் தாராளத்திற்குப் பின்னால் ஏராளமான பஞ்சாயத்து இருக்கிறது''’’என்கிறார்கள் நடுநிலை வாக்காளர்கள்.

மேற்படி இரு அணிகளுமே ஏகப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை வாரி வழங்கியிருக்கின்றன.

எந்த அணியிலும் சேராமல் "என் வழி தனி வழி' என தலைவர் பதவிக்கு சுயேட்சையாக களத்தில் குதித்துள்ளார் பி.எல்.தேனப்பன். இராம.நாராயணன் தலைவராக இருந்த காலத்திலிருந்தே தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார் தேனப்பன். இவரைக் கழுவி ஊத்த ஏதாவது சிக்கினால் நல்லாருக்கும் என இரண்டு அணியுமே தோண்டித் துருவிக் கொண்டிருக்கிறது. பாரதிராஜாவின் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தினர், இந்த தேர்தலில் போட்டியிட முடியாது என்றாலும் வாக்களிக்கலாம். அதனால் "அவர்கள் ஆதரவு தனக்கு கிடைக்கும், வெற்றிபெற முடியும்' என்ற நம்பிக்கையில் உள்ளார் தேனப்பன்.

தேனப்பன் வழியிலேயே சுயேட்சையாக துணைத் தலைவர் பதவிக்கு சிங்காரவேலன், ஃபைவ் ஸ்டார் கதிரேசன், மதியழகன், பொருளாளர் பதவிக்கு ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் ஆகியோர் களம் காண்கிறார்கள். சுயேட்சைகள் தரப்பிலும் ஓட்டுக்கு ரூ. 6 ஆயிரம் ஃபிக்ஸ் செய்யப்பட்டுள்ளதாம்.

""அந்த அணிகளின் பலத்தை மீறி உங்களால் வெற்றிபெற முடியுமா?'' என சிங்காரவேலனிடம் கேட்டபோது... “""சிம்புவின் சிக்கலுக்காக டி.ஆர். நிற்கிறார். பலகோடி கடனாளியாகிவிட்ட முரளி சில கணக்குடன் நிற்கிறார். சங்கமே இப்ப அபராதத்துலதான் ஓடிக்கிட்டி ருக்கு. நான் துணைத்தலைவரானால் சங்கத்திற்கு பலகோடி ரூபாய் நிதி திரட்ட முடியும். கண்டிப்பா நான் ஜெயிப்பேன்''’என்றார் கான்ஃபிடண்டாக.

-ஈ.பா.பரமேஷ்வரன்

படங்கள்: ஸ்டாலின்

nkn141120
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe