பிரதமர் மோடி இனி மாதம் ஒருமுறை தமிழகத்திற்கு வரத் திட்டமிட்டுள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் நடக்கும் வரை அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் என அடிக்கடி தமிழகத்திற்கு வருவார்கள். இது பா.ஜ.க. அனைத்து மாநிலங்களிலும் கடைபிடிக்கும் தந்திரம். ஆனால், ஒருமுறை தமிழகம் வந்ததற்கே... "போதும் இனியும் வர வேண்டுமா?' என பிரதமரை நினைக்க வைத்து விட்டார்கள் பா.ஜ.க.வினர். அந்த அளவிற்கு கோஷ்டி மோதல் உச்சகட்டத்தில் உள்ளது பா.ஜ.க.வில். பிரதமர் வருகிறார் என கோவையில் வானதி சீனிவாசன் பெரிய கலெக்சன் பார்த்து விட்டார். கோவை முருகானந்தம், அ..மலை ஆகியோரும் கோவை தொழிலதிபர்களிடம் கட்டாய நிதி வசூலில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால், நிர்மலா சீதாராமன் பிரதமருக்கு முன்பே கோவைக்கு வந்தார். அதற்கும் இந்த கோஷ்டி தொழிலதி பர்களை கசக்கிப் பிழிந்து நன்கொடை பிடுங்கியது. எத்தனை முறைதான் நாங்கள் நன்கொடை தருவது எனப் புலம்பினார்கள் என்கிறது கோவை பா.ஜ.க. வட்டாரங்கள்.
பிரதமரின் இயற்கை விவசா

பிரதமரின் இயற்கை விவசாய நிகழ்ச்சியை பி.ஆர்.பாண்டியன் என்ற விவசாய இயக்கத் தலைவர் ஏற்பாடு செய்திருந்தார். அவர் விவசாயிகளின் தலைவர்களில் ஒருவரான அய்யாக்கண்ணுடன் சேர்ந்து டெல்லியில் பா.ஜ.க.வின் விவசாய சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திய அகில இந்திய அளவிலான போராட்டங்களில் பங்கெடுத்தவர். அந்த போராட்டத்தின் எதிரொலியாக ஒன்றிய அரசு விவசாய சட்டங்களை வாபஸ் பெற்றது. இந்த பி.ஆர்.பாண்டியன்தான் கவர்னர் ஆர்.என்.ரவியுடன் நெருக்கமாகப் பழகி, ரவி மூலமாக இயற்கை விவசாய மாநாட்டை நடத்தி, அதில் பிரதமரை கலந்துகொள்ள வைத்தார். பி.ஆர்.பாண்டியன் பா.ஜ.க.வின் விவசாய சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தும்போது வி.கே.நாகராஜ் என்ற பா.ஜ.க. விவசாயிகள் அணித் தலைவர் பி.ஆர். பாண்டியனுக்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார். அந்த நாகராஜை கேட்காமல், முன்னர் பா.ஜ.க.வை எதிர்த்த பாண்டியன் நடத்தும் மாநாட்டிற்கு பிரதமரை எப்படி கவர்னர் வரவைக்கலாம்? என்கிற குடுமிப்பிடி சண்டை பா.ஜ.க.வில் எழுந்தது. விவகாரம் பிரதமர் அலுவலகம் வரை போக, நாகராஜையும் மாநாட்டிற்கு கூப்பிடுங்கள் என பிரதமர் அலுவலகம் அனுமதி யளித்து உத்தரவிட்டது. ‘நான் ஒரு இயற்கை விவசாயி’ எனத் தன்னைத்தானே அறிவித்துக் கொண்ட அ..மலை, பிரதமரின் இந்த மாநாட்டில் பி.ஆர்.பாண்டியன் கவர்னர் மூலம் கலந்துகொள்வதற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார். கவர்னர் அலுவலகத்தி-ருக்கும் ஒரு முக்கிய அலுவலர், பிரதமரின் இந்த நிகழ்ச்சியை காரணம் காட்டி மிகப்பெரிய வசூலில் ஈடுபடுகிறார் என அ..மலை புகார் எழுப்ப, ‘நீ செய்த வசூலை விட வேறு யாரும் தமிழகத்தில் பாஜகவின் பெயரை பயன்படுத்தி வசூல் செய்யவில்லை "நீ வாயை மூடு'’ என்ற உத்தரவு பிரதமர் அலுவலகத்தி-ருந்தே வந்தது. இதனால் அந்த மாநாட்டில் அ..மலை ஜீரோ வாக்கப்பட்டார். கவர்னர் ஹீரோ ஆக்கப்பட் டார். பிரதமரை வரவேற்கும் லிஸ்ட்டில் இடம்பெற அ..மலை கடுமையாக போராட வேண்டியிருந்தது. அந்த அளவிற்கு அ..மலை யின் நிலைமை மோசமாக்கப்பட்டது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/21/bjpkosti1-2025-11-21-10-35-48.jpg)
நயினார் நாகேந்திரன் கட்சியை சரியாக நிர்வாகம் செய்வதில்லை, பா.ஜ.க.வின் எம்.எல்.ஏ.க்களாக யார் வர வேண்டும் என்பதற்கு கலெக் சன் செய்து வருகிறார். நயினா ரின் மகன் நயினார் பாலாஜி சென்னை எழும்பூரிலுள்ள நயினாரின் உயர்தர ஹோட்டலில் தனி கவுண் டரே திறந்துள்ளார். நயினார் பாலாஜியைப் பார்க்க நீண்ட கியூ அந்த ஹோட்டலில் நிற்கிறது. பலமணி நேரம் காத்திருந்துதான் நயினாரின் மகனை பா.ஜ.க. தலைவர்கள் சந்திக் கிறார்கள். நயினாரிடம் பேச வேண்டுமென்றால் தி.மு.க.விலிருந்து பா.ஜ.க.விற்கு வந்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மூலமாகத்தான் அவரிடம் பேச முடியும். ராதாகிருஷ்ணன் போனைத் தவிர யார் போனையும் நயினார் எடுப்பதில்லை என ஏகப்பட்ட புகார்கள் நயினாருக்கு எதிராகக் குவிந்து வருகிறது. இந்த புகார்களை ஒரு மனுவாக எழுதி ஏ.சி.சண்முகம் மூலம் பிரதமர் கையில் கொடுத்தார்கள். பிரதமரிடம் கொடுக்கும் மனுவை அவரது பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து விட்டுத்தான் கொடுப்பார்கள். அப்பொழுது ‘இது என்ன?’ என அவர்கள் கேட்க, “எடப் பாடி பழனிச்சாமி கோவை மதுரை மெட்ரோ ரயில் தொடர்பாக கொடுத்த மனுபோல.. தமிழக பா.ஜ.க. விவகாரங்கள் பற்றிய மனு’ எனச் சொல்லிக் கொடுத்தார்கள். தமிழக பா.ஜ.க. முக்கிய தலைவரான கேசவவிநாயகம் மூலம் ஏ.சி.சண்முகத்திடம் இந்த மனு கொடுக்கப் பட்டதால், ஏ.சி.சண்முகம் அதைப் படித்துப் பார்க்காமல் பிரதமருக்கு கொடுத்துவிட்டார்” என்கிறார்கள் பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள்.
பிரதமர் விசிட்டின்போது தமிழக பா.ஜ.க.வில் பெட்டிஷன், கலெக்சன் என ஏகப்பட்ட விவகாரங்கள் நடந்தேறியிருக்கிறது என தலையிலடித்துக் கொள்கிறார்கள் பா.ஜ.க.வினர். கூட்டணி விவகாரங்கள் பற்றி அமித்ஷா கொடுத்தனுப்பிய விவரங்களை பிரதமர் மோடி எடப்பாடி தரப்புக்கும் மற்றவர் களுக்கும் ‘பாஸ்’ செய்திருக்கிறார். மீண்டும் வருவேன் எனச் சொல்லிச்சென்ற பிரதமர், அடுத்த முறை கோவை வரும்போது பிராமணர் கள் பூஜை செய்யாத ஒரு பூர்வீக கிராமக் கோவிலுக்கும் விசிட் செய்வதாக வாக்குறுதி யளித்துவிட்டுச் சென்றிருக்கிறார். “"பீகாரைப் போல் தமிழ்நாடு' என மாநாட்டில் பேசிய பிரதமர், தமிழ் மொழி பற்றியோ திருக்குறள் பற்றியோ வாய் திறக்கவில்லை. பிரதமர் மோடி யின் விசிட் பல்லிளித்திருக்கிறது’என்கிறார்கள் தமிழ் ஆர்வலர்கள்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us