பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொருளாதாரப் பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா, பள்ளி மாணவியின் தந்தை ஒருவர் கொடுத்த புகாரில் போலீஸால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொருளாதாரப் பிரிவு தலைவராக பதவி வகித்து வருபவர் எம்.எஸ்.ஷா. இவர் மீது 15 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவி ஒருவரின் தந்தை மதுரை மாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில் தனது மகளின் செல்போனுக்கு, எம்.எஸ். ஷாவின் செல்போன் எண்ணிலிருந்து இருந்து தொடர்ந்து ஆபாசமான உரையாடல்கள் வந்ததாகவும், இதையடுத்து தனது மகளைக் கேட்டபோது, தனது மனைவி பா.ஜ.க. பிரம
பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொருளாதாரப் பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா, பள்ளி மாணவியின் தந்தை ஒருவர் கொடுத்த புகாரில் போலீஸால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொருளாதாரப் பிரிவு தலைவராக பதவி வகித்து வருபவர் எம்.எஸ்.ஷா. இவர் மீது 15 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவி ஒருவரின் தந்தை மதுரை மாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில் தனது மகளின் செல்போனுக்கு, எம்.எஸ். ஷாவின் செல்போன் எண்ணிலிருந்து இருந்து தொடர்ந்து ஆபாசமான உரையாடல்கள் வந்ததாகவும், இதையடுத்து தனது மகளைக் கேட்டபோது, தனது மனைவி பா.ஜ.க. பிரமுகர் இருக்கும் இடத்திற்கு அழைத்துச்சென்று தனியாக இருந்துவந்தது தெரியவந்த தாகவும், அந்தப் பிரமுகர் மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததற்கு தனது மனைவியும் உடந்தை எனவும் புகார் மனுவில் குறிப் பிட்டிருந்தார்.
நக்கீரனில் கடந்த வருடம் ஏப்ரல் 12- இதழில், "சிறுமியைச் சீரழித்த பா.ஜ.க. தலைவர்!'’என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதனைத் தொடர்ந்து அவர்மீது போலீஸார் வழக்குப் பதிவுசெய்தனர். இராம சீனிவாசனின் நெருங்கிய ஆதரவாளராக எம்.எஸ். ஷா இருப்பதால் கைதிலிருந்து தப்பித்துவந்தார். நீதிமன்றத்தில் வழக்குப் பதிவாகி விசாரணை நடந்துவந்த நிலையில், கடந்த ஜனவரி 13-ஆம் தேதி வழக்கில் முகாந்திரம் இருக்கிறது எனக் கூறி, ஷாவை கைதுசெய்து சிறையிலடைக்க உத்தரவிட் டது. அதன்பிறகே போலீசார் இவரைக் கைதுசெய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து புகார் கொடுத்த பள்ளி மாணவியின் தந்தை கூறுகையில், "முதலில் என் மனைவி திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லூரியில் வேலை பார்த்துவந்தார். எங்களது குடும்ப வறுமை காரணமாக ஷாவிடம் பணம் வாங்கியிருந்தோம். அதைக் காரணம் காட்டி என் மனைவியை அவருடனே வைத்துக்கொண்டார். அதுகுறித்து ஒன்றும் செய்யமுடியவில்லை. பின் என் மகளிடம் அக்கறையாகப் பேசுவது போன்றும் பைக் வாங்கித் தருவதாகவும் செல்போன் வாங்கிக் கொடுப்பதாகவும் ஆசைகாட்டி பாலியல் தொந்தரவு அளித்துவந்தான்.
இதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. என் மகளும் "அப்பா பயமா இருக்குப்பா, அந்த அங்கிள் சரியில்லை' என்று அழுதாள். கடந்த வருடம் புகார் கொடுத்தேன். காவல்துறை கண்டுகொள்ளவில்லை. நக்கீரனில் இதுகுறித்து செய்தி வந்ததும் வழக்குப் பதிவு செய்தனர். இருந்தும் நீதிமன்றம் முன்வந்து கைதுசெய்ய உத்தரவிட்ட பிறகுதான் அவனைப் பிடித்து உள்ளே போட்டார்கள்''’ என்றார் பரிதாபமாக.
இந்த கைது குறித்து காவல்துறையிடம் கேட்டபோது, “"சிறுமியின் தாயிடம் விசாரித்ததில் அவர் அனைத்தையும் ஒப்புக் கொண்டார். எனவே பா.ஜ.க. நிர்வாகி எம்.எஸ்.ஷா, பள்ளி மாணவியின் தாய் ஆகிய இருவர் மீதும் போக் சோ சிறப்பு சட்டம் 11 (1), 11 (4), 12 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள் ளோம்''’என்றனர்.
“அன்னை பாத்திமா கல்லூரியில் இவருக்கென்று தனியான ஹெஸ்ட்ஹவுஸ் உள்ளது. அதற்கு இரவு நேரத்தில் பா.ஜ.க.வினர் வந்து செல்வார்கள். ஏற்கனவே பலமுறை பாலியல்ரீதியான பிரச்சனை நடந்து பெற்றோர்கள் சண்டையிட்டு போலீஸ் புகார் வரை சென்றுள்ளது. எல்லாவற்றையும் பணத் தால், தன் அரசியல் செல்வாக்கால் மறைத்துவிடுவார்''’என்றார் அக்கல்லூரியைச் சேர்ந்த ஒருவர்.