ளுங்கட்சியாக ஆனா லும், சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வைக் குப்புறக் கவிழ்த்தது சேலம் மாவட்டம். வீரபாண்டி ஆறுமுகத்துக்குப் பிறகு தி.மு.க. வில் கோஷ்டிகள் கோலோச்சின. வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத் தாருக்கும் அரசியலில் பெரிய செல்வாக்கு இல்லை. ஒத்தை எம்.எல்.ஏ.வைக் கொண்டுள்ள சேலம் மாவட்டத்தில் தி.மு.க.வை தூக்கி நிறுத்த வியூகம் வகுத்திருக் கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

dd

Advertisment

மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேருவிடம் தரப்பட்டுள்ள நிலையில், ராஜேந்திரன் எம்.எல்.ஏ, செல்கவகணபதி, எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோரை அமைச்சர் ஒருங்கிணைத்து வேலை வாங்க வேண்டியுள்ளது. இந்நிலையில், 1242 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்கள் தொடக்க விழாவுக்காக டிசம்பர் 11-ல் சேலம் வந்தார் ஸ்டாலின். கட்சியினர், பொதுமக்கள், நாட்டுப்புறக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் என வரவேற்பு அமர்க்களமாக இருந்தது.

அதில் உற்சாகமடைந்த முதல்வர், "இது என்ன அரசு விழாவா அல்லது அரசாங்கமே விழாக்கோலம் கொண்டிருக் கிறதா என சந்தேகப்படும் அளவுக்கு இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது,'' என்றார். முந்தைய ஆட்சி பற்றி அதிகம் விமர்சிக்காமல், லேசாகத் தொட்டுச் சென்ற ஸ்டாலின், சேலத்திற்கும் கலைஞருக்கும் உள்ள தொடர்பு, மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் கட்சிப்பணிகள் ஆகியவற்றை வழக்கம்போல் சிலாகித்துப் பேசிய முதல்வர், விழா ஏற்பாடுகளை கவனித்து, கட்சி நிர்வாகத்தையும் சீர்படுத்தும் கே.என். நேருவின் பக்கம் மடையைத் திருப்பினார்.

"எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதனை சாதாரண வெற்றியல்ல; மிகப்பிரம்மாண்ட மான வெற்றியைப் பெறக்கூடிய அளவிற்கு நேரு அந்தக் காரியங் களை ஆற்றுவது உண்டு. அப்படி ஆற்றியிருக்கக் கூடிய அந்தப் பணி, இப்போது சேலத்திலும் அடியெடுத்து வைத்திருக்கிறது. ஆகவேதான் அப்படிப்பட்ட ஒரு ஆற்றலாளரைத் தேர்ந்தெடுத்து சேலம் மாவட்டத்திற்குப் பொறுப்பு அமைச்சராக நியமித்திருக்கிறோம்" என்றார். ஆனால், இன்னமும் உள்குத்து தீராத சேலம் தி.மு.க.வினர் இதை எந்தளவு கவனத்தில் கொண் டார்கள் என்று தெரியவில்லை.

Advertisment

உரையைத் தொடர்ந்த முதல்வர், ''ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்க்கை மேம் பாட்டையும் மனதில் வைத்து இந்த அரசு செயல்படும். தமிழ் நாட்டின் அனைத்துப் பகுதி களுக்கும் சமச்சீர் வளர்ச்சி பெறும் வகையில் திட்டங்கள் உருவாக்கப்படும். வறுமை குறை வான மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு நான்காவது இடத்தில் இருப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. பேரறிஞர் அண்ணா வும், கலைஞரும் நிறைவேற்றிய சமூகநலத் திட்டங்கள்தான் இதற்குக் காரணம்.

தமிழ்நாட்டில் பசி என்பதே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். வறுமையே இல்லாத மாநிலங்களின் பட்டிய லில் தமிழ்நாடு முதலாவதாக இருக்க வேண்டும். அதுதான் நமக்குப் பெருமை. அதை இலக்காகக் கொண்டுதான் இந்த அரசு முழு முயற்சியோடு களத்தில் இருக்கிறது'' என நிறைவு செய்தார்.

dd

யாருடனும் கூட்டணி இல்லை என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சொன்னாலும், அரசு நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள். முதல்வரின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பா.ம.க. எம்.எல்.ஏ. அருள், ''வழக்கமாக கோரிக்கை மனுக்களை வாங்கிக்கொண்டு தீர்வு காணாமல் சென்ற அரசைத் தான் கண்டிருக்கிறோம். சேலம் மாவட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முதல்வரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்துள்ளனர். நான் ஒரு ஆயாவைச் சந்தித்தேன். அவர், "ஒரு துண்டுச் சீட்டில் முதியோர் உதவித்தொகை கேட்டு மனு கொடுத்தேன். எனக்கும் உதவித் தொகை கிடைச்சுடுச்சு' என்றார். துண்டுச்சீட்டில் கொடுக்கும் மனுவுக்கும்கூட உயிர் கொடுக்கும் முதல்வரை வியந்து பார்க்கிறேன். கொரோனா ஒழிப்பில் திறம்படச் செயல்பட்ட முதல்வர்; பசுமைக் காவலர், தேனீயைப் போல சுறுசுறுப்பாக வலம்வந்து மக்கள் பணியாற்றுகிறார்'' என புகழ்ந்து தள்ளினார். மற்றொரு பா.ம.க. எம்.எல்.ஏ. சதாசிவம், "எப் போது வேண்டுமானாலும் எளிதாக சந்திக்கும் முதல்வராக எளிமையாக இருக்கிறார்'' என்றார்.

விழா முடிந்த பிறகு, 5 ரோடு ஜெயரத்னா மண்டபத்தில், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. வீரபாண்டி ராஜாவின் உருவப் படத்தை முதல்வர் திறந்து வைத்தார். அதையடுத்து, ஆய்வு மாளிகையில் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் சிறிதுநேரம் ஆய்வு நடத்தினார்.

"தி.மு.க. ஆட்சிக்கு வந்த கடந்த ஏழு மாதங்களில் 6 முறை முதல்வர் சேலம் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, சேலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் 10 இடங்களில் தி.மு.க. தோல்வி அடைந்துள்ள நிலையில், வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என மொத்த இடங் களையும் தி.மு.க. வசமாக்க வேண்டும். பிப்ரவரிக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்பதால், மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நட வடிக்கை எடுக்கும்படி அதிகாரி களையும், கட்சி நிர்வாகிகளையும் முதல்வர் உசுப்பிவிட்டுச் சென்றிருக்கிறார். சேலம் தி.மு.க. வில் திருப்பம் ஏற்படுகிறதான்னு பார்ப்போம்'' என்கிறார்கள் உடன்பிறப்புகள்.