பா.ஜ.க. சொல்வதை தேர்தல் ஆணையம் செய்கிறது! -குற்றம்சாட்டும் முன்னாள் எம்.பி.!
இவ்விதழின் கட்டுரைகள்
சென்றவார இதழ்கள்
Next Story
ஆஜருக்கு மேல் ஆஜர்; அதிமுக வட்டாரத்தை பரபரப்பாக்கிய நீதிமன்றங்கள்
அதிமுக கட்சியினுடைய போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்ட விரோதமாக பணம் வசூலிப்பதாக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமிக்கு எதிராக அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துகள் தனக்கும், தன்னுடைய நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக சென்னை சார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கே.சி.பழனிச்சாமி, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த சென்னை சார்ஜ் டவுன் நீதிமன்றம் கே.சி.பழனிசாமி வழக்கை தள்ளுபடி செய்தது. அதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கே.சி.பழனிசாமி மீண்டும் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் கே.சி.பழனிசாமியின் வழக்கை தள்ளுபடி செய்த சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ததோடு, தொடர்ந்து வழக்கை நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில் கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கின் விசாரணை சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் ஜனவரி 23ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் ஏற்கனவே மாற்று நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கி இருக்கும் நிலையில், மற்றொரு வழக்கில் ஜனவரி 23ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி ஆஜராக சென்னை சார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Next Story
அதிமுக முன்னாள் எம்.பி. நீக்கப்பட்ட விவகாரம்; எடப்பாடி பழனிசாமிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமியை கட்சியில் இருந்து நீக்கியது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக கட்சியின் போலி உறுப்பினர் அட்டையை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாக கூறி அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமிக்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தன்னை பற்றி தெரிவித்திருந்த கருத்துகள் தன்னுடைய பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் கே.சி.பழனிசாமியின் அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கே.சி.பழனிசாமி சென்னை உயர்நீதி மன்றத்தில் மறு ஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தபோதே கே.சி.பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார் என எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது. இதனை கேட்டறிந்த நீதிபதி கே.சி. பழனிசாமியை கட்சியில் இருந்து நீக்கியது தொடர்பான முழு ஆவணங்களையும் தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உத்தரவிட்டார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 11 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.