Advertisment

தி.மு.க.வை ஜெயிக்க வைத்த பா.ஜ.க. மா.த! திருச்சி சூர்யா அதிரடி! (சென்ற இதழ் தொடர்ச்சி)

ss

பா.ஜ.க. அரசு தமிழக மீனவர்களை காப்பாற்ற தயாராக இல்லை என்கிறீர்கள். ஆனால் அவர்கள், மோடி பிரதமர் ஆனதிலிருந்து காங்கிரஸ் ஆட்சி போல் கைது, சிறை, உயிரிழப்பு இல்லை என்கிறார்களே...

Advertisment

அப்படி வெளியில் சொல்கிறார்கள். உண்மை நிலவரம் என்ன? காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் செய்திகளை திறந்தாலே, 5 மீனவர்கள் கைது, 10 மீனவர்கள் கைது என தினம் செய்தி வரும். செய்தியே வரவில்லை என்றாலும் மீனவர் கள் கைது என நாமே எழுதிக்கலாம். இப்போது அப்படியில்லை என்று நினைக் கிறீர்களா? செய்திகளை மூடி மறைக்கிறார்கள். இந்த வருடம் ஜனவரியில் இருந்து ஆகஸ்ட் வரை 340 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் கட லில் விழுந்து இறந்ததாக சொல்கிறார்கள். ஆனால் இலங்கை மருத்துவமனையில் இருந்து உடல் பெறப்படுகிறது. இப்படி சொல்லிக் கொண்ட

பா.ஜ.க. அரசு தமிழக மீனவர்களை காப்பாற்ற தயாராக இல்லை என்கிறீர்கள். ஆனால் அவர்கள், மோடி பிரதமர் ஆனதிலிருந்து காங்கிரஸ் ஆட்சி போல் கைது, சிறை, உயிரிழப்பு இல்லை என்கிறார்களே...

Advertisment

அப்படி வெளியில் சொல்கிறார்கள். உண்மை நிலவரம் என்ன? காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் செய்திகளை திறந்தாலே, 5 மீனவர்கள் கைது, 10 மீனவர்கள் கைது என தினம் செய்தி வரும். செய்தியே வரவில்லை என்றாலும் மீனவர் கள் கைது என நாமே எழுதிக்கலாம். இப்போது அப்படியில்லை என்று நினைக் கிறீர்களா? செய்திகளை மூடி மறைக்கிறார்கள். இந்த வருடம் ஜனவரியில் இருந்து ஆகஸ்ட் வரை 340 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் கட லில் விழுந்து இறந்ததாக சொல்கிறார்கள். ஆனால் இலங்கை மருத்துவமனையில் இருந்து உடல் பெறப்படுகிறது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நான் சொல்வது 2024 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை, கடந்த பா.ஜ.க. ஆட்சியில் 10 வருடங்களில் கணக்கு எடுத்து பார்த்தால் எவ்வளவு இருக்கும்.

Advertisment

tt

பாசிட்டிவாக பெரிதுபடுத்திக் கொண்டு அரசியல் ரீதியாக செயல்படு கிறார்கள். வெளிநாட்டில் இருந்து திரள் நிதி திரட்டுதவற்காகத்தான் செயல்படுகிறார்கள். மோடியை கண்டால் பாகிஸ்தான் நடுங்கு கிறது. சீனா அதிர்கிறது. இஸ்ரேல் போரை தடுத்துவிட்டார். வெளிநாடுகளே மோடியை கண்டால் நடுங்குகிறது என்கிறார்கள். 3வது முறையாக பிரதமராக மோடி பதவி யேற்றபோது இலங்கை அதிபரை அழைத்தீர் கள். இந்த அளவுக்கு இணக்கமாக இருக் கிறவர்கள், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதையும், கொலை செய்யப்படுவதையும் உங்களால் தடுக்க முடிந்தும் வேடிக்கை பார்க்கிறீர்கள். மற்ற நாடுகளை ஆட்டிப் பார்க்கும் உங்களால், உங்களுக்கு கீழே இருக்கும் நாட்டை ஒன்றும் கேட்க முடியாதா?

பா.ஜ.க. மாநில தலைவர் மாற்றப்படுவாரா?

ஒன்றியத்தில் இருக்கும் பா.ஜ.க. அரசு, மா.தலைவர் மேல் கடுமையான கோபத்தில் இருக்கிறது. அ.தி.மு.க. உடன் கூட்டணி வைத்திருந்தால் பா.ஜ.க. கூட்டணி கணிசமான வெற்றியை பெறமுடியும் என்று ஒன்றிய உள்துறையே பா.ஜ.க. மேலிடத்திற்கு தெரிவித்திருந்தது. தி.மு.க. கூட்டணி 40க்கு 40 வெற்றிக்கு மாநிலத் தலைவரே காரணம். இவர் எடப்பாடியை காலி செய்யவேண்டும் என்பதற்காக, தி.மு.க.வுக்கு சாதகமாக செயல்பட்டு அவர்களை வெற்றிபெற வைத்துவிட்டார். பா.ஜ.க. வாக்கு வங்கி அதிகரித்திருப்பது முக்குலத்தோர் பகுதிகள், வன்னியர் பகுதிகள், தேவேந்திரகுல வேளாளர் பகுதிகள்தான். கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் பா.ஜ.க. தலைவராக இருக்கும்போது, "என் மண் என் மக்கள்' நடைபயணம் நடத்தியபோதும், கொங்கு பகுதியில் கூட்டம் வந்ததே தவிர ஓட்டாக மாறவில்லை.

இதுதொடர்பாக அங்குள்ள கூட்டமைப்புகளில் விசாரிக்கும்போது வேட்பாளர்கள் மா.தலைவருக்கு வேண்டாத ஆட்கள். அவர்கள் தோற்கவேண்டும் என்று இவரே விரும்பியிருக்கிறார். அந்த கூட்டமைப்பினரை நீங்க பா.ஜ.க.வுக்கு ஓட்டு போடாதீங்க, தி.மு.க.வுக்கு ஓட்டு போடுங்க என்று சொல்லியிருக்கிறார். தி.மு.க.வில் இருக்கிற மூத்த அமைச்சர்களெல்லாம் நாம 40 ஜெயிச்சதுக்கு ஒருத்தருக்கு மாலை போடவேண்டும் என்றால் பா.ஜ.க. மாநிலத் தலைவருக்குத்தான் போடவேண்டும் என்கிறார்கள். அந்த அளவுக்கு தி.மு.க. 40 ஜெயிச்சதுக்கு மா.தலைவர்தான் காரணம் என்பது ஒன்றிய அரசுக்கு நன்றாகவே தெரிகிறது. அந்த கோபம் இவர் மேல் இருக்கிறது.

ஏனென்றால் இதற்கு முன்பு தமிழிசை, பொன்னார், சி.பி.ராதாகிருஷ்ணன் என பல மாநிலத் தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இவருக்கு கொடுத்ததுபோல் இவ்வளவு அதிகாரம் கொடுத்தது இல்லை. "யார் வீட்டுல ரெய்டு விடணும்... நாளைக்கே விட்டுடுவோம், இவன தூக்கணுமா... தூக்கிருவோம், என்.ஐ.ஏ. போகணுமா... போ, இன்கம்டாக்ஸ் ரெய்டு நடத்தணுமா... நடத்து' என எல்லா வசதிகளையும் செய்துகொடுத்தும், தமிழ்நாட்டில் பூஜ்ஜியமே இவர் டெல்லி தலைமைக்கு பரிசாக கொடுத்திருக் கிறார். கேரளாவில் கூட ஒரு சீட் பா.ஜ.க. வந்துவிட்டது. ஆனால் இங்கு அ.தி.மு.க. என்கிற ஒரு பெரிய கட்சியுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்காமல், தனியாக போட்டியிட்டு தோல்வியடைந்ததால் பெரிய கோபம் டெல்லிக்கு இருக்கிறது.

(தொடரும்)

சந்திப்பு: -வே.ராஜவேல்

படம்: நவீன்

nkn110924
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe