லோ தலைவரே, பரபரப்பா எதிர்பார்க் கப்பட்ட அ.தி.மு.க. மா.செ.க்கள் கூட்டம், சைலண்ட்டா நடந்து முடிஞ்சிருக்கு.''’

""அமைதிப் புயலா?''

""உண்மைதாங்க தலைவரே, 22-ந் தேதி நடந்த இந்த மா.செ.க்கள் கூட்டத்தில், ஜெயலலிதா நினைவிடத்தை பிரமாண்டமாக நடத்தனும்ங்கிற விவாதம்தான் பெருசா நடந்துச்சு. சசிகலா ரீலீஸாவதாக இருந்த நாளில் திறப்பு விழா நடப்பதால், தன் தலைமையிலான கட்சியின் பலத்தைத் திரட்டிக் காட்டணும்ங்கிறது எடப்பாடி திட்டம். ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் மூன்று பேருந்துகள் வீதம், தமிழகம் முழுக்க இருந்து 3 லட்சம் பேரை சென்னையில் திரட்டனும்னு எடப்பாடி பேசியிருக்காரு. சசிகலா தரப்புக்கு மட்டுமில்லாம, பா.ஜ.க.வுக்கும் இந்தக் கூட்டத்தின் மூலம் தன்னோட செல்வாக்கை உணர்த்த நினைக்கிறாராம் எடப்பாடி.''

jaya

Advertisment

""ம்...''

""மா.செ.க்கள் கூட்டம் முடிஞ்சதும், அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், வேலுமணி, வீரமணி மற்றும் கே.பி.முனுசாமி உள்ளிட்டவர்களோடு எடப்பாடி தனியா சீக்ரெட் ஆலோசனையையும் நடத்தினாரு. அதில் முழுக்க முழுக்க பா.ம.க.வைப் பற்றியே விவாதிக்கப்பட்டிருக்கு. அப்போது பேசிய சி.வி.சண்முகம், பா.ம.க. வலியுறுத்துதேன்னு 20 சதவீத உள்ஒதுக்கீட்டை நாம் ஏற்ககூடாது. நம்மிடம் பேரம் பேசி அதிக சீட்டை வாங்கனும்னுதான், இட ஒதுக்கீட்டு விவ காரத்தை பா.ம.க. கையில் எடுத்து நம்மை மிரட்டுது. அதேபோல் தி.மு.க. கூட்டணிக்கு போய்டுவோம்னும் வெறுமனே சீன் போடுதுன்னு காட்டமாகவே சொல்லியிருக்கார். இதையே மற்றவர்களும் வழிமொழிய, உடனடியாக தைலாபுரம் தோட்டத்துக்கு எடப்பாடி ஒரு செய்தியை அனுப்பியிருக்கார். அதில், உங்கள் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையைப் பரிசீலிக்கிறோம். உங்கள் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை நாங்கள் பார்த்துக் கறோம்ன்னு குறிப்பிட்டிருந்தாராம்.''

ramdoss-eps

""இதுக்கு தைலாபுரத் தின் ரீயாக்ஷன் என்னவாம்?''

Advertisment

""தைலாபுரமோ, இட ஒதுக்கீட்டை அறிவிப்பதில் உங்களுக்கு என்ன சிக்கல்? அதே போல், தேர்தல் செல வுக்கான தொகையை எங்களிடமே தர வேண்டும். அதை நாங்கள் முறையாக செலவு செய்து கொள்வோம்னு எடப்பாடிக்கு பதில் அனுப்பி யிருக்கு. இதைக்கண்ட எடப்பாடி, சீனியர் அமைச்சர்களிடம், நாடாளு மன்றத் தேர்தலின்போது, செலவுத் தொகையை எங்களிடமே கொடுங் கன்னு தைலாபுரம் கேட்டுச்சு. நாமும் கொடுத்தோம். ஆனால் அதை அது செலவு செய்யவே இல்லை. அதனால் தான் அவர்கள் பகுதியிலேயே நாம் கடுமையான தோல்வியை எதிர் கொண்டோம்னு வருத்தமாச் சொல்லியிருக்கார்.''

""பா.ம.க. தன்னோட நிர்வாகக் குழு கூட்டத்தை 31ந் தேதிக்கு ஒத்தி வச்சிடிச்சே...''’’

""வன்னிய சமுதாயத்தினருக் கான 20% உள்ஒதுக்கீடு தொடர் பாகவும், அதையொட்டிய கூட்டணி முடிவை எடுக்கவும்தான் பா.ம.க.வின் அவசர நிர்வாகக்குழு கூட்டத்தைக் கூட்டுவதா டாக்டர் ராமதாஸ் அறி விச்சாரு. எடப்பாடியின் அ.தி.மு.க. சைடிலிருந்து உறுதியா பதில் வரலைன்னாலும், நெகட்டிவ் ரிப்ளை இல்லை என்பதால் பா.ம.க நிர் வாகக்குழு தள்ளிப்போயிருக்கு. வட தமிழகத்தில் பா.ம.க.வின் வாக்கு வங்கியை உத்தேசித்து காய் நகர்த் தும் எடப்பாடி, பா.ம.க. விரும்புகிற படி, 20 சத ஒதுக்கீட்டை அறிவித்து விட்டு, அது மனம் குளிர்ந்த பின்னர், யார் மூலமாவது பொதுநல வழக்கு ஒன்றின் மூலம் அந்த அரசாணைக்கு தடை வாங்க வச்சிடலாம்னும் அதன் மூலம், தனி இடஒதுக்கீட்டை எதிர்க் கும் அல்லது தங்களுக்கும் அதே போல ஒதுக்கீடு வேணும்னும் கேட் கிற மற்ற சாதிக் கட்சிகளை சமாளிச் சிடலாம்னு திட்டமிட்டிருக்கிறாராம்.''’’

""அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணி பற்றியும் அதில் உள்ள கட்சிகள் பற்றியும் எப்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்?''

""டெல்லியில் அ.தி.மு.க.வுக்காக தனி அலுவலகம் ஒன்று கட்டப்பட்டு வருது. பிப்ரவரி 15ல் இதை பிரதமர் மோடி திறந்துவைக்க ஒப்புதல் தெரிவிச்சிருக்காராம். அப்போது அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி தொடர்பான அதி காரப்பூவ அறிப்பு rangவெளியிடப்பட இருப்பதோடு, அந்தக் கூட்டணியில் இருக்கும் எந்தெந்த கட்சிக்கு எத்தனை எத்தனை இடம் என்பது போன்ற விபரங்களும் அறிவிக்கப்பட இருக்கு தாம். அன்றே அ.தி.மு.க.வில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளையும் பா.ஜ.க. பைசல் செய்யப்போவதாகவும் சொல்லப்படுது.''

""பா.ஜ.கவும், அ.தி.மு.க.வும், இன்னும் மு.க.அழகிரியோடு தீவிரமாகப் பேச்சு வார்த்தை நடத்துதாமே?''

""அதுவும் உண்மைதாங்க தலைவரே, தி.மு.க. தலைமைமீது கோபம் இருந்தாலும், கலைஞரால் வளர்க்கப்பட்ட தி.மு.க.வுக்கு எதிராக எந்த நிலையிலும் செயல்பட மாட்டேன்னு மு.க. அழகிரி சொல்லிக் கொண்டிருந்தார். இருந்தும் அவரை பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் துரத்திப் பிடிச்சி, தங்கள் பக்கம் வரும்படி வலியுறுத்தி வருதாம். இந்த நிலையில், என் ஆதரவாளர்கள் 25 பேருக்கு சீட் கொடுப்பதாக இருந்தால், உங்கள் இரட்டை இலை சின்னத்திலேயே நான் நிற்கத் தயார்னு அழகிரி இறங்கி வந்துவிட்டதாகவும், அவருக்கு 10 சீட் வரை தருவதற்கு அ.தி.மு.க. ஒத்துக்கொண்ட தாகவும், ஆளுங்கட்சித் தரப்பிலிருந்து செய்தி கசியுது. அழகிரி தரப்பிடமோ இது பற்றி பேச்சு மூச்சைக் காணோம்.''

""மத போதகரான பால் தினகரனைக் குறிவைத்து அதிரடி ரெய்டெல்லாம் நடந்துச்சே?''’

""ஆமாங்க தலைவரே, நாடாளுமன்றத் தேர்தலின் போது, மோடியை பால் தினகரன் சந்திச்சி ஆதரவெல்லாம் தெரிவிச்சார். அதுக்குப் பிறகு, டெல்லியின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அவர் தாராளமாகவே’ நடந்துக்கிட்டார். இடையில் கொஞ்சம் சுணக்கம் ஏற்பட்டதால்தான், அவர் இப்ப மோடி அரசால் குறி வைக்கப் பட்டார்னு டெல்லிப் பக்கம் இருந்து செய்தி வருது. கடந்த 20-ந் தேதி பால் தினகரனின் வீடு, அலுவலகம், கோவையில் இருக்கும் அவரது காருண்யா பல்கலைக் கழகம் உள்ளிட்ட 28 இடங்களில் அதிரடி ரெய்டுகளை வருமான வரித்துறை நடத்துச்சு. மூன்று நாள் நடந்த தொடர் ரெய்டின் போது, கணக்கில் வராத 5 கிலோ தங்கம் மற்றும் 120 கோடி ரூபாய் முதலீடுகளைக் கண்டு பிடித்ததாக அறிவிக்கப்பட்டிருக்கு. இருந்தும் தினகரன் மீது கடும் நடவடிக்கைகளை எடுக்க முடியாமல் மோடி அரசு திணறுது. காரணம், ஈஷா மைய ஜக்கி வாசுதேவ், பாபா ராம்தேவ் போன்றவர்களுக்காக, ஆன்மீக அறக்கட்டளைகள் தனது வசூலுக்குக் கணக்கு காட்டத் தேவையில்லைன்னு, சட்ட ரீதியாக பா.ஜ.க. அரசால் கொடுக்கப்பட்ட சலுகை, இப்ப பால் தினகரனுக்கே கேடயமாக இருந்து அவரைப் பாதுகாக்குதாம்.''

""காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க மறுத்த ராகுல்காந்தி, பொங்கல் சமயத்தில் ஜல்லிக்கட்டு பார்க்க வந்தாரு. இப்ப மறுபடியும் தமிழகம் வந்து, அதிரடிப் பிரச் சாரத்தை நடத்தியிருக்காரே?''

""தி.மு.க.வின் தேர்தல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் கொடுத்த ஒரு அறிக்கையில், நாடாளு மன்றத் தேர்தலின் போது, தி.மு.க. கூட்டணி அபரிமிதமாக ஜெயிச்சதுக்கு, இங்கே மக்கள் மத்தியில் எழுந்திருந்த மோடி மீதான அதிருப்தி அலைதான் காரணம்னும், அந்த அலை அடங் காமல் இருந்தால், மீண்டும் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்னும் குறிப்பிடப்பட்டி ருந்ததாம். இதை அறிந்த ராகுல், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவை ரசித்த ஜோரோடு, மீண்டும் தமிழகம் வந்து கொங்கு மண்டலத்தில் மூன்றுநாள் சூறாவளிப் பிரச்சாரத்தை நடத்தியிருக்கிறார். இது மோடிக்கு எதிரான போர்ன்னு மக்கள் மத்தியில் ராகுல் பிரச்சாரத்தைக் கையில் எடுத்திருக்கார்.''

""காங்கிரஸ் தரப்புக்கு கமல் மீதும் ஒரு கண் இருக்குதாமே?''

""அரசியலில் எல்லா பக்கத்தையும் கவனிச்சுத் தானே ஆகணும். காங்கிரஸில் இருந்து விலகிய கராத்தே தியாகராஜன், ரஜினியின் அரசியல் வருகையை தீவிரமாக எதிர்பார்த்திருந்தவர். இப்ப அப்செட் ஆகியிருக்கும் நிலையில், அவரை ப.சி. தரப்பு மீண்டும் காங்கிரஸுக்கே அழைத்தது. ஆனால் கராத்தே அங்கு செல்ல மறுத்திட்டார். இந்த நிலையில், எடப்பாடியை அண்மையில் சந்திச்சாரு. அதேபோல் பா.ஜ.க. தலைவர் முருகனையும் அவர் சந்திச்சிப் பேசினார். அ.திமு.க.வும், பா.ஜ.க.வும் அவருக்கு அழைப்பு விட்ட நிலையில், இந்தக் கட்சிகளில் ஒன்றில் இணையலாமா? அல்லது இந்த இரு கட்சிகளின் கூட்டணியில் ஒரு தனி அமைப்பாக இயங்க லாமான்னு ஆலோசிச்சிக்கிட்டு இருக்காராம். எந்த முடிவா இருந்தாலும், தி.மு.கவுக்கும் ஸ்டாலினுக்கும் எதிரா செயல்படுவதுங்கிறதுதான் அவருக்கான அசைன்மெண்ட்.’''

""காவல்துறையில் தென் மாவட்ட அதிகாரி ஒருவரைப் பற்றிய ஹாட்டாக் அடிபடுதே?''

ops

""ஆமாங்க தலைவரே, நெல்லை மாவட்ட சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்துத் துணை ஆணையராக இருக்கும் மகேஷ்குமார், யாரைக் கண்டாலும் ஒருமையில் பேசுவதாகவும், பொது இடங்களில் கை ஓங்குவதுமாக இருக்கிறாராம். அதோடு டி.ஜி.பி.க்காக சில காரியங்களை செய்து கொடுக்கவே, தான் நெல்லையில் இருப்பதாகக் கூறிக்கொண்டே அடாவடியில் ஈடுபடுவதாகவும் முதல்வர் அலுவலகம் வரை புகார்கள் குவிந்துவரு கிறது. மேலும், உள்துறையில் கூடுதல் பொறுப்பில் இருக்கும் இவருக்கு நெருக்கமான அதிகாரி ஒருவர், அடிக்கடி நெல்லைக்கு வந்து சீக்ரெட் டீலிங்குகளை நடத்திவிட்டுச் செல்கிறாராம். இதுபற்றிய டாக் தான் இப்போது ஐ.பி.எஸ். அதிகாரிகள் வட்டாரத்தில் அதிகம் அடிபடுகிறது.''

""கோட்டையில் என்னென்ன மூவ் ஆகுது?''

''தேர்தல் நெருங்குதே... தங்களுக்குத் தேவை யானதையெல்லாம் கச்சிதமா மூவ் பண்ணி வைக் கிறதுதான் ஆளுந்தரப்பின் முதன்மையான வேலை. மூன்று வருடங்களுக்கு மேல் ஒரே இடத்தில் பணி யில் உள்ள கலெக்டர்கள், முக்கிய துறைகளில் உள்ள அதிகாரிகள் என பலரும் மாற்றப்பட இருக்கிறார்கள். குறிப்பாக, ஓ.பி.எஸ். ஆதரவைப் பெற்ற மாவட்ட கலெக்டர்கள், முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த கலெக்டர்கள் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரையும் அதிரடியாக மாற்ற கோட்டையில் லிஸ்ட் தயாரிக்கப்பட்டு வருகிறது.''

p

""நானும் ஐ.ஏ.எஸ் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன். சென்னையை ஒட்டியுள்ள மாவட்டத்தின் பெண் கலெக்டர், அங்குள்ள ஒரு தாசில்தாருக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் போட்டுட்டாரு. அந்த தாசில்தார் பழைய இடத்திலேயே நீடிப்பதற்காக கலெக்டரை சந்திச்சப்ப, உடனடியா மாற்றணும்னா கஷ்டம். வேணும்னா இந்த நம்பரில் உள்ளவரை காண்டாக்ட் பண்ணிப் பேசிட்டு, அவர் சொல்ற அமவுண்ட்டை கொடுத்துட்டீங்கன்னா, மேலிடம் மூலமா உங்களுக்கு பழைய இடத்திலேயே போஸ்டிங் கிடைச்சிடும்னு சொல்லி ஒரு போன் நம்பரை கொடுத்திருக்கிறார் கலெக்டர். அந்த தாசில்தாரும், கலெக்டர் கொடுத்த நம்பர் யாருடையதுன்னு தெரிஞ்சிக்கிட்டு, கலெக்டரிடம் வந்து, டிரான்ஸ்பர் போட்ட இடத்துக்கே போயிடுறேன். ஆனா, அந்த நம்பர் பற்றி மட்டும் மேலே சொல்லிடுறேன்னு சொல்லியிருக்காரு. கலெக்டர் பதறிப்போய், உங்களை பழைய இடத்திலேயே போட்டுடுறேன். அந்த நம்பரை பற்றி புகார் பண்ண வேணாம்னு சொல்லிட்டாராம். காரணம், அந்த நம்பருக்குரியவர் பெண் கலெக்டரின் கணவராம். இவர் டிரான்ஸ்பர், அவர் கலெக்ஷன்னு டிரான்ஸ்பர், போஸ்டிங், மணல் குவாரி இப்படி எல்லாத்துலேயும் கல்லா கட்டுறாங்களாம்.''