கும்பகோணத்தில் கடந்த நவ. 29ஆம் தேதி, சனிக்கிழமை யன்று நடைபெற்ற தமிழக பா.ஜ.க. வின் அனைத்துப் பிரிவுகளுக்கான மாநில, மாவட்ட நிர்வாகிகள் மாநாடு, தி.மு.க.வை அச்சுறுத் தியதோ இல்லையோ முன்னாள் பா.ஜ.க. மாநில தலைவரை தூக்கமிழக்க வைத்துள்ளது.

Advertisment

கும்பகோணம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந் துள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடந்த பா.ஜ.க. அனைத்துப் பிரிவுகளுக்கான மாநில மாநாடு டெல்லிவரை பேசுபொருளாக மாறியிருக்கிறது. மாநாட்டிற்கான ஏற்பாடுகளை இரண்டு வாரத்திற்கு முன்பே துவங்கிவிட்டனர். அதேநேரம், மாநாடு நடந்த அன்று டிட்வா புயலால் ஒட்டுமொத்த டெல்டாவிற் கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு கனமழை கொட்டித்தீர்த்தது. பொது மக்கள் வீடுகளில் முடங்கியிருந் தனர். அப்படியிருந்தும் மாநிலம் முழுவதிலுமிருந்து பதினைந்தாயிரம் பா.ஜ.க. நிர்வாகிகள் மாநாட்டிற்கு வந்திருந்தனர். 

Advertisment

மாநாட்டுப் பந்தல் நிரம்பியிருந்ததோடு, ஒருபுறம் விதவிதமான உணவுகளும், மறுபக்கம் டீ, காபி, பிஸ்கட் வினியோகமும், மாநாட்டு அரங்கத்தில் பா.ஜ.க. பெயர் பதிக்கப்பட்ட வாட்டர் பாட்டில் களுமாக வழங்கப்பட்டு, கலந்து கொண்டவர்களை நன்றாகக் கவனித்துக்கொண்டனர். அதோடு, பாமா சுப்ரமணியம் மருத்துவமனை யின் சார்பில் 5 படுக்கைகள், 10 டாக்டர்கள், நர்சுகள் கொண்ட தற்காலிக மருத்துவமனையையும் அமைத்தனர். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டிகள் என எல்லா விதத்திலும் முன்னெச்சரிக்கை யோடு இரண்டரைக் கோடி செல வில் பிரமாண்ட ஏற்பாடுகளை  பிரிவுகளின் அமைப்பாளர் கே.டி. ராகவனும், பொருளாதாரப்பிரிவு மாநில இணை அமைப்பாளரான கார்த்திகேயனும் செய்திருந்தனர்.

மாநாட்டிற்கு பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அ...மலையின் குருநாதரான பி.எல்.சந்தோஷ், பொன்.ராதாகிருஷ் ணன், தமிழிசை சௌந்தரராஜன், கருப்பு முருகானந்தம், எச்.ராஜா என பா.ஜ.க.வின் முக்கிய தலைவர் கள் அனைவருமே வந்திருந்தனர். அ..மலை, வானதி சீனிவாசன் உள் ளிட்ட சிலர் மட்டும் ஆப்சென்ட்! 

Advertisment

மாஜி தலைவர் அ...மலை பின்னால்தான் தமிழக பா.ஜ.க. இருக்கிறது, அவர் வந்தால்தான் கூட்டம் வரும், அவர் இந்த மாநாட்டிற்கு வரமாட்டார் என்பதால் கூட்டம் வராது என பா.ஜ.க. வினரே பேசினர். ஆனால், அரங்கு நிறைந்திருந்த கூட்டத்தின் முன்னே, ""அடுத்து ஒரு லட்சம் நிர்வாகிகளோடு மாநாடு நடத்தப் போகிறோம்'' என கே.டி.ராகவன் கூறியது, பா.ஜ.க. தலைமையை ஆச்சரியப்பட வைத்ததோடு, அ..மலையின் ஹார்ட்பீட்டையும் எகிற வைத்திருக்கிறது.

அ...மலை மாநாட்டை தவிர்த்ததற்கான காரணத்தை பா.ஜ.க. நிர்வாகிகள் சிலரிடம் விசாரித்தோம். ""இதுவரை நான் தான் தமிழக பா.ஜ.க. எனக் கூறி பெருமை பேசிவந்த அ..மலைக்கு பதிலடியாகத்தான் இந்த மாநாட்டை இங்கு நடத்தியிருக்கிறார்கள். தான் கலந்துகொள்ளாமல் கூட்டம் கூடா தென்று அ...மலை எதிர்பார்த்தார். அதேபோல் தன்னால் ஹனி ட்ராப் பில் ஓரங்கட்டப்பட்ட கே.டி.ராகவன் முன்னின்று நடத்தும் மாநாடு என்பதால் இதில் கலந்துகொள் வதை தவிர்த்தார். கே.டி.ராகவனோ, கும்பகோணத்தை சேர்ந்த தனது நெருங்கிய நண்பரான நாராயணி கார்த்திகேயன் மூலமாக பிரமாண்டமாக இந்த மாநாட்டை நடத்திவிட்டார். இம்மாநாடு, அ...மலையை ரொம்பவே அப்செட்டாக்கியுள்ளது'' என்றனர்.