புதுச்சேரி அரசியலில், முதல்வர் ரங்கசாமி முன்பு வீசிய கத்தியை வைத்தே, பூமாரங் போல் பா.ஜ.க. திருப்பித் தாக்குவதால் அதிர்ச்சியில் உள்ளது என்.ஆர்.காங்கிரஸ்!

Advertisment

இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசியல் பிரமுகர்கள் சிலர், "புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ், தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு அடுத்த நிலையிலேயே பா.ஜ.க. உள்ளது. அக்கட்சி தனித்து நின்றால் ஒரு தொகுதியிலும் டெபாசிட்கூட வாங்காது. கடந்த 2021 தேர்தலில் டெல்லியின் ஆதரவு வேண்டுமென்பதற்காக பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தார் ரங்கசாமி. மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 16-ல் என்.ஆர்.காங்கிரஸ், 9-ல் பா.ஜ.க., 5-ல் அ.தி.மு.க. போட்டியிட்டன. ஆட்சியமைக்க 16 எம்.எல்.ஏக்கள் தேவை. ஆட்சியமைக்க தங்கள் ஆதரவு ரங்கசாமிக்கு வேண்டுமென்று பா.ஜ.க. திட்டமிட்டது. தேர்தல் முடிவில் என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பா.ஜ.க. 6 இடங்களிலும் வெற்றிபெற்றன. பா.ஜ.க. ஆதரவு தேவைப்பட்ட சூழலில், ரங்கசாமிக்கு நெருக்கடி தந்து சபாநாயகர் பதவி, இரண்டு அமைச்சர் பதவிகளை வாங்கிக்கொண்டது பா.ஜ.க. முதலமைச்சர் ரங்கசாமிக்கு, பா.ஜ.க. கொடுத்த டார்ச்சரில் நொந்துபோனதால், கடந்த நான்கரை ஆண்டுகளாக டெல்லிக்கு செல்லவில்லை. மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவி யேற்றபோதும்கூட டெல்லிக்கு போகவில்லை. பா.ஜ.க.வை அவர் ஒதுக்கினாலும்கூட, பா.ஜ.க. அவரை விடவில்லை'' என்றார்கள். 

Advertisment

இதுபற்றி பா.ஜ.க.வின ரிடம் பேசியபோது, "கடந்த தேர்தலில் நாங்கள் வெற்றிபெறக் கூடாதென உள்ளடி வேலைகளை செய்தவர் ரங்கசாமி. காலாப் பட்டு தொகுதியில் பா.ஜ.க.வின் கல்யாணசுந்தரம் போட்டியிட, அத்தொகுதியில் சுயேச்சையாகக் களமிறங் கிய செந்தில் என்பவரின் வேட்புமனுவை அப்பாசாமி கோவிலில் பூஜை செய்து ரங்கசாமி ஆசி வழங்கி அனுப்பிவைத்தார். திருநள்ளாறு தொகுதியில் பா.ஜ.க. வேட் பாளர் ராஜசேகருக்கு எதிராக வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் சிவாவுக் கும் ரங்கசாமியின் மறைமுக ஆதரவிருந் தது. அதேபோல் உழவர்கரை தொகுதியில் அ.தி.மு.க. ஓம்சக்தி சேகர் நின்றார். அத்தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நேரு சுயேச்சையாக நின்று வெற்றிபெற்றார். அவர் இன் றளவும் ரங்கசாமி கண் அசைவில் செயல்படுகிறார். முத்தியால் பேட்டையில் அ.தி.மு.க. சார்பில் மணிகண்டன் போட்டியிட் டார். அங்கே சுயேச்சையாக பிரகாஷ் என்பவர் என்.ஆர். காங் கிரஸ் ஆதரவாளராக வெற்றி பெற்றார். இப்படி கூட்டணிக்கட்சி களுக்கு எதிராகத் தனது ஆதரவாளர்களை சுயேச்சையாக களமிறக் கினார். அப்படிப்பட்டவரை எப்படி நம்புவது?'' என்கிறார்கள்.  

கடந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக ரங்கசாமி பயன்படுத்திய அதே பார்முலாவை இப்போது சார்லஸ் மார்ட்டினை வைத்து ரங்கசாமிக்கு எதிராக செயல்படுத்துகிறது பா.ஜ.க. இதுதான் ரங்கசாமியை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisment

ரங்கசாமி அமைச்சரவையில் கடந்த 90 நாட்களாக இலாகா இல்லாத அமைச்சராக இருப்பவர் பா.ஜ.க. ஜான்குமார். 2021 தேர்தலுக்கு முன்பு, காங்கிரஸிலிருந்து பா.ஜ.க.வுக்கு வந்தார். காமராஜர் நகர் தொகுதியில் ஜான்குமாரும், நெல்லிதோப்பு தொகுதியில் அவரது மகன் ரிச்சர்டும் நின்று வெற்றிபெற்றனர். ஜான்குமாருக்கு அமைச்சரவையில் இடம்தராததால் ஆட்சியை விமர்சிக்கத் தொடங்கினார். அடுத்தமுறை முதலமைச்சர் நாற்காலி யில் அமரவேண்டுமென்ற டெல்லி பா.ஜ.க. திட்டப்படி  ஜான் குமார் மூலமாக கோவை லாட்டரி மார்ட்டின் மகன் ஜோஸ் சார் லஸ் மார்ட்டினை புதுச்சேரிக்குள் களமிறக்கியது. ஜான்குமாரின் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் பொதுமக்களுக்கு தினமும் உணவு வழங்குவது, நலத்திட்டம் என்கிற பெயரில் பணம், பொருள் வழங்குவதோடு, புதுவையிலுள்ள பல அமைப்புகளுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் வாரி வழங்கத் தொடங்கினார். இதனால் ஜான்குமாரை ஆஃப் செய்ய அமைச்சர் பதவி தரவைத்தார் ரங்கசாமி. அப்போதும் அவர் சார்லஸ் மார்ட்டினை விடாததால் இலாகா ஒதுக்கவில்லை. சார்லஸ் மார்ட்டின் விவகாரத்தில் பா.ஜ.க. தலைவர்களிடம் கோபத்தை வெளிப்படுத்தி னார் ரங்கசாமி. இதனால் ஜோஸ்சார்லஸ் மார்ட்டின், மக்கள் மன்றம் என்கிற பெயரில் அமைப்பை தொடங்கி அதன் தலைவ ராக இளையமகன் ரீகனை அறிவித்து, சார்லஸ் மார்ட்டினை பா.ஜ.க.வின் டெல்லி திட்டப்படி இயக்குகிறார் அமைச்சர் ஜான்குமார். கடந்த வாரம் புதுச்சேரி சாதனையாளர்களுக்கு விருது நிகழ்ச்சி நடத்தினார் சார்லஸ். அப்போது, "விரைவில் புதுச்சேரிக்கு மட்டும் அரசியல் கட்சி தொடங்கப்போகிறேன், நான் யாருக்கும் பி டீம் இல்லை' என பேட்டியளித்தார். 

2026 தேர்தலில் உள்ளூர் பிரபலங்களை தங்கள் பக்கம் இழுத்து செலவுக்கு பணம் தந்து வேட்பாளர்களாக்கத் திட்டமிட்டுள்ளது சார்லஸ் மார்ட்டின் -ஜான்குமார் டீம். தற்போது அமைச்சர் ஜான்குமார், அவரது மூத்தமகன் எம்.எல்.ஏ. ரிச்சர்ட், இளையமகன் ரீகன், சார்லஸ் மார்ட்டின், சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான திருநள்ளாறு சிவக்குமார், திருப்புவனம் அங்காளன், உழவர் கரை சிவசங்கர் இந்த அணியில் உள்ளனர். என்.ஆர்.காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில் மட்டும் தங்கள் அணி சார்பில் வேட் பாளர்களை நிறுத்துவது என முடிவு செய்துள்ளனர். அதாவது கடந்த தேர்தலில் ரங்கசாமி செய்ததை, தற்போது என்.ஆர்.காங்கிரஸுக்கு எதிராக பா.ஜ.க. செய்கிறது. இதற்காக ஜான்குமாருக்கு முதலமைச்சர் ஆசையும் காட்டியுள்ளது பா.ஜ.க. என்கிறார்கள் விபரமறிந்தவர்கள். பா.ஜ.க.வின் அரசியல் சதுரங்கத் தில் வரும் தேர்தலில் ரங்கசாமி வெற்றிபெறுவாரா என்பது போகப்போகத்தெரியும்