ராங்கால்! கவர்னர் ரவிக்கு எதிராக பா.ஜ.க. அமைச்சர்! நினைத்ததை சாதிப்பாரா? கிளைமாக்ஸ் நேர திக்திக்கில் ஓ.பி.எஸ்.! எடப்பாடி முதுகில் குத்தும் அ.தி.மு.க. நிர்வாகிகள்

rr

"ஹலோ தலைவரே, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவி நீதிமன்றத்தில் ஊசலாடுது.''”

"ஆமாம்பா, எப்படியும் அ.தி.மு.க. லகானைப் பிடிச்சிடணும்னு தவிக்கிற ஓ.பி.எஸ். கிளைமாக்ஸ் கட்டத்தில் நிற்கிறாரே?''”

"ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்குத் தடை விதிக்கணும்னு தொடுக்கப்பட்ட வழக்கில், தங்கள் தரப்பு வழக்கறிஞர்கள், முக்கியமான பாயிண்டுகளை வைக்கலைங்கிற ஆதங்கத்தில் ஓ.பி.எஸ். தரப்பு இருப்பது பற்றி, கடந்தமுறையே நாம் பேசிக்கிட்டோம். இந்த செய்தி ஓ.பி.எஸ். தரப்பில் மட்டுமல்லாது, எடப்பாடி தரப்பிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடைசியா ஒரு தடவை கல்வீசிப் பார்த்துடலாம்னு, ஓ.பி.எஸ்.ஸே தன் பெயரில் ஒரு முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது, முன்பு விடுபட்ட பாயிண்டுகளை எல்லாம் தன் வழக்கறிஞர்கள் மூலம் நீதிமன்றத்தில் வைத்தார் ஓ.பி.எஸ்.''”

opseps

"ஆமாம்பா. நானும் கவனிச்சேன்.''”

"அதில் குறிப்பாக, தேர்தலில் கட்சியினர் அனைவரும் போட்டியிடுவதற் கான சம வாய்ப்பு வழங்கப்படவில்லை, வாக்காளர் பட்டியலை வெளியிடவில்லை, மனுத் தாக்கலுக்கு போதிய அவகாசம் தரப்படவில்லை என்பதை எல்லாம் அழுத்தமாக அவர்கள் வைத்தனர். மேலும், எடப்பாடி மட்டுமே போட்டியிடும் வகையில் விதிகள் திருத்தப்பட்டுள்ளன என்றும், அப்படித் திருத்தப்பட்ட விதிகளை நீக்கினால், தாமே போட்டியிடத் தயாராக இருப்பதாவும் ஓ.பி.எஸ். கடைசியாக ஒரு தரம் கல்வீசிவிட்டுக் காத்திருக்கிறார். 26ஆம் தேதி இதன் தீர்ப்பு வருகிறது. அப்போது நீதிமன்றம் எடுக்கும் முடிவைப் பொறுத்தே ஓ.பி.எஸ்.ஸின் அரசியல் எதிர்காலம் அமையப் போகுதுன்னு அரசியல் பார்வையாளர்கள் சொல்றாங்க. அதனால் அவரது கிளைமாக்ஸ் நிமிடங்கள் திக்திக்கோடு நகருது.''”

"இந்த விவகாரத்தில் எடப் பாடியின் மனநிலை எப்படி இருக்கிறது?''”

"சட்ட ரீதியான அனுகூலம் எடப்பாடிக்கு கிடைப்பது போல் தோன்றினாலும், அவர் நம்பிக்கை வைத்திருந்த கட்சியின் பெரும்புள்ளிகள் சிலர் அவர் முதுகில் குத்துவதால், அவரும் பதட்ட மன நிலையில்தான் இருக்கார். குறிப்பாக, மாஜி மந்திரிகளான தங்கமணியும் வேலுமணியும் எடப்பாடியை எதிர்க்கும் மனநிலைக்கு வந்திருக்காங்க. அதுக்குக் காரணம்,

"ஹலோ தலைவரே, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவி நீதிமன்றத்தில் ஊசலாடுது.''”

"ஆமாம்பா, எப்படியும் அ.தி.மு.க. லகானைப் பிடிச்சிடணும்னு தவிக்கிற ஓ.பி.எஸ். கிளைமாக்ஸ் கட்டத்தில் நிற்கிறாரே?''”

"ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்குத் தடை விதிக்கணும்னு தொடுக்கப்பட்ட வழக்கில், தங்கள் தரப்பு வழக்கறிஞர்கள், முக்கியமான பாயிண்டுகளை வைக்கலைங்கிற ஆதங்கத்தில் ஓ.பி.எஸ். தரப்பு இருப்பது பற்றி, கடந்தமுறையே நாம் பேசிக்கிட்டோம். இந்த செய்தி ஓ.பி.எஸ். தரப்பில் மட்டுமல்லாது, எடப்பாடி தரப்பிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கடைசியா ஒரு தடவை கல்வீசிப் பார்த்துடலாம்னு, ஓ.பி.எஸ்.ஸே தன் பெயரில் ஒரு முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது, முன்பு விடுபட்ட பாயிண்டுகளை எல்லாம் தன் வழக்கறிஞர்கள் மூலம் நீதிமன்றத்தில் வைத்தார் ஓ.பி.எஸ்.''”

opseps

"ஆமாம்பா. நானும் கவனிச்சேன்.''”

"அதில் குறிப்பாக, தேர்தலில் கட்சியினர் அனைவரும் போட்டியிடுவதற் கான சம வாய்ப்பு வழங்கப்படவில்லை, வாக்காளர் பட்டியலை வெளியிடவில்லை, மனுத் தாக்கலுக்கு போதிய அவகாசம் தரப்படவில்லை என்பதை எல்லாம் அழுத்தமாக அவர்கள் வைத்தனர். மேலும், எடப்பாடி மட்டுமே போட்டியிடும் வகையில் விதிகள் திருத்தப்பட்டுள்ளன என்றும், அப்படித் திருத்தப்பட்ட விதிகளை நீக்கினால், தாமே போட்டியிடத் தயாராக இருப்பதாவும் ஓ.பி.எஸ். கடைசியாக ஒரு தரம் கல்வீசிவிட்டுக் காத்திருக்கிறார். 26ஆம் தேதி இதன் தீர்ப்பு வருகிறது. அப்போது நீதிமன்றம் எடுக்கும் முடிவைப் பொறுத்தே ஓ.பி.எஸ்.ஸின் அரசியல் எதிர்காலம் அமையப் போகுதுன்னு அரசியல் பார்வையாளர்கள் சொல்றாங்க. அதனால் அவரது கிளைமாக்ஸ் நிமிடங்கள் திக்திக்கோடு நகருது.''”

"இந்த விவகாரத்தில் எடப் பாடியின் மனநிலை எப்படி இருக்கிறது?''”

"சட்ட ரீதியான அனுகூலம் எடப்பாடிக்கு கிடைப்பது போல் தோன்றினாலும், அவர் நம்பிக்கை வைத்திருந்த கட்சியின் பெரும்புள்ளிகள் சிலர் அவர் முதுகில் குத்துவதால், அவரும் பதட்ட மன நிலையில்தான் இருக்கார். குறிப்பாக, மாஜி மந்திரிகளான தங்கமணியும் வேலுமணியும் எடப்பாடியை எதிர்க்கும் மனநிலைக்கு வந்திருக்காங்க. அதுக்குக் காரணம், கட்சியின் பொதுச்செயலாளர் தேர்தலில், கட்சியின் சட்ட விதிகள் உட்பட தேர்தல் தேதி அறிவித்தது வரை, எல்லாவற்றை யும் எடப்பாடி தனக்குச் சாதகமாக ஆக்கிக்கொண்டதை அவர்கள் ரசிக்கலையாம். அதேபோல் பா.ஜ.க. அண்ணா மலையை எடப்பாடி பகைத்துக்கொண்டதும் தவறு என்பது அவர்கள் எண்ணமாம். இதனால் அதிருப்தி உள்ளுக்குள் இருந்தாலும், வேலுமணி எடப்பாடியோடு இருப்பதுபோல் காட்டிக்கொள்கிறார். ஆனால் தங்க மணியோ, எடப்பாடியை சந்திப்பதையே தவிர்த்து வரு கிறாராம். இந்த நிலையில் நீதிமன்றத் தீர்ப்பு, ஓ.பி.எஸ். ஸுக்கு சாதகமாகத் திரும்பினால் என்ன செய்வது? என்கிற பயம் எடப்பாடியைப் பிடித்து ஆட்டுகிறதாம்.''”

"சரிப்பா, ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடை விதிக்கும் விவகாரத்தில், கவர்னர் ஆர்.என்.ரவி சொல்லிவரும் சால்ஜாப்புக்கு எதிராக ஒன்றிய அமைச்சரே கருத்து தெரிவிச்சிருக்காரே?''”

rang

"உண்மைதாங்க தலைவரே, ஆன்லைன் சூதாட்டத் துக்கு தடை விதிக்கும் தி.மு.க. அரசின் சட்ட மசோதாவை, அரசுக்கே திருப்பி அனுப்பிய கவர்னர் ரவி, ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லைன்னு சொன்னதோட, மசோதா குறித்த 8 விதமான கேள்விகளை அரசிடம் கேட்டிருந்தார். அவற்றுக்கு தெளிவான பதிலை தி.மு.க. அரசு தெரிவித்தும் கூட, மசோதாவுக்கு ஒப்புதல் அளிக் காமல் கவர்னர் அடம்பிடிக்கிறார். ஆனால், சூதாட்ட தடை குறித்து நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி. பார்த்திபன் பிரச்சினையை எழுப்பிய போது, அதற்கு பதிலளித்த ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர், ‘சூதாட்டங்களுக்கு தடைவிதிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கிறதுன்னு கவர்னரின் நிலைப்பாட்டுக்கு எதிராக, அழுத்தமாக பதிலளித்திருக்கிறார். இதையறிந்த கவர்னர், அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் இருக்கிறாராம்.''

"இதற்கிடையே, தி.மு.க. எம்.பி. வைத்த ஒரு கோரிக்கையை ஒன்றிய அமைச்சர்களே பாராட்டி இருக்காங்களே?''”

"ஆமாங்க தலைவரே, தி.மு.க. எம்.பி.யான வழக்கறிஞர் வில்சன், சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் ஒன்றிய அமைச்சர் வீரேந்திர குமாரையும், பழங்குடியினர் துறைக்கான ஒன்றிய அமைச்சர் அர்ஜுன் முண்டாவையும் அண்மையில் நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனுவைக் கொடுத் திருக்கிறார். அதில், இந்து பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு, இந்து வாரிசு சட்டங்களில் சொல்லப்பட்ட பலன்கள் எதுவுமே இதுவரை கிடைக்க வில்லை. அதிலும், தந்தையின் சொத்துக் களில் அல்லது குடும்ப சொத்துக்களில் பெண்களுக்கு உரிமை உண்டு என்ற சட்டத்தின் பயன் அவர்களுக்கு இதுவரை தரப்படவில்லைன்னு சொல்லி இருக்கார்.''”

"ம்''”

"அதோடு, நமது வாரிசு உரிமை திருத் தச் சட்டம், சொத்துரிமை விவகாரத்தில் பெண்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஆனால் இந்த உரிமை இந்துப் பழங்குடிப் பெண் களுக்கு மறுக்கப் படுவதும் அவர் கள் புறக்கணிக்கப் படுவதும் முற்றி லும் அநீதியானது. அது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 14-ஆம் பிரிவுக்கு எதிரானது என்றெல் லாம் வில்சன் அந்த மனுவில் குறிப்பிட்டி ருக்கிறார். இதைப் படித்துப் பார்த்த அமைச்சர்கள் இருவரும், இப்படிப் பட்ட சமூக அநீதி இந்துப் பெண்களுக்கு தொடர்வது குறித்து, இதுவரை எங்கள் கவனத்துக்கு வர வில்லை. உடனே இது குறித்து கவ னம் செலுத்தப்படும்னு சொன்ன தோடு, இந்த விவகாரத்தைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வந்ததற்காக, தி.மு,.க. எம்.பி.யான வில்சனை மனதாரப் பாராட்டினார்களாம்.''”

rang

"நெல்லையில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள் பா.ஜ.க.வில் சலசலப்பை ஏற்படுத்திக்கிட்டு இருக்குதே?''”

"ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க.வுடன் கூட்டணி வேண்டாம் என்றும், அப்படி கூட்டணி வைத்தால் என் பதவியை ராஜினாமா செய்துவிடு வேன் என்றும் அண்மையில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் அண்ணாமலை. இது கட்சிக் கட்டுப்பாட்டுக்கு எதிரான குரல்னு வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலரும் அவருக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டனர். இந்த நிலையில் தேவேந்திர குல வேளாளர் சங்கம் என்ற பெயரில் நெல்லை பகுதியில், அண்ணாமலையின் வாய்ஸை மறைமுகமாக எதிரொலிக்கும் வகையில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. பிரதமர் மோடியைப் பார்த்துப் பேசுவதுபோல் "எங்கள் நரேந்திரா, தனித்து வா. தாமரையை தமிழகத்தில் 40-லும் மலரச் செய்வோம்'’ என்று, அதிலும் ஒருமை யில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த போஸ் டரை ஒட்டிய அண்ணாமலையின் அடிப் பொடி யாருன்னு இப்ப அங்க இருக்கும் பா.ஜ.க.வினர் ஆவேசத்தோடு தேடிக்கிட்டிருக் காங்களாம்.''”

"பிரபல வழக்கறிஞரான ஜான் சத்தியனை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக அமர்த்தும் படி மீண்டும் கொலீஜியம் அறிவுறுத்தி இருக்கிறதே?''”

"உண்மைதாங்க தலைவரே, டெல்லியில் இருக்கும் டிரையல் கோர்ட் வழக்கறிஞர் ஜான் சத்தியன், நீதித்துறையில் புகழ்பெற்றவர். இவர் கம்யூனிச சித்தாந்தம் கொண்ட பிரபல வழக்கறிஞர் என்.டி.வானமாமலையிடம் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை உயர்நீதிமன்ற நீதிபதியாக்கும்படி கடந்த ஆண்டு பிப்ரவரியி லேயே, நீதிபதிகளைத் தேர்வு செய்யும் கொலீஜியம் அறிவுறுத்தியும், ஒன்றிய அரசு அதைச் செய்ய வில்லை. காரணம், அவர் பிரதமர் மோடியின் செயல்பாடுகளை விமர்சித்து டிவிட் போட்டார் என்று, அவரை மறுதலித்து வந்தது. அதே நேரம், பா.ஜ.க.வை ஆதரித்தும், அதன் செயல்பாடுகளில் நேரடியாக பங்கேற்றும் வந்த பலரையும் மோடி அரசு, நீதிபதிகள் நாற்காலியில் அமரவைத்தது. கொலீஜியம் பரிந்துரைத்த பட்டியல் நிறுத்தி வைக்கப்பட்டதற்கு நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்த நிலையில், மீண்டும் கொலீஜியம், ஜான் சத்தியனை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக அமர்த்தும்படி மோடி அரசுக்கு அழுத்தமாக அறிவுறுத்தி இருக்கிறது. எனவே, ஜான் சத்தியன் நீதிபதியாக பதவிப் பிரமாணம் எடுப்பார் என்ற நம் பிக்கை, நீதித்துறை வட்டாரத்தில் பிறந்திருக்கிறது.''’

"இங்க உள்ள ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி பதவி உயர்வுக்கு யாகத்தை நம்புகிறாரே?''”

"உண்மைதாங்க தலைவரே, நெடுஞ்சாலைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக இருப் பவர் பிரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ். இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தனது மனைவியுடன் சென்றிருந்தார். அங்கு அவருக்காக நீண்ட நேரம் யாகமும், முக்கிய பூஜையும் நடத்தப் பட்டிருக்கிறது. அதாவது, தமிழக அரசின் தலை மைச் செயலாளராக வர வேண்டும் என்பதற்காக வே இந்த சிறப்பு யாகமும், பூஜையும் நடத்தப்பட்ட தாம். திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த தி.மு.க. பிரதி நிதி ராம்குமார் என்பவரின் ஏற்பாட்டில் இந்த பூஜை நடந்திருக்கிறது. நெடுஞ்சாலைத் துறை காண்ட்ராக்ட் விவகாரங்களில் பிரதீப் யாதவுக்கும், ராம்குமாருக்கும் நெருங்கிய நட்பு இருக்கிறதாம். அந்த நட்பின் அடிப்படையில்தான், பிரதீப் யாதவை அழைத்து இந்த யாகத்தையும், பூஜையை யும் ஏற்பாடு செய்திருக்கிறார் ராம்குமார். இந்த யாக விவகாரம் கோட்டை வட்டாரமெங் கும் புகைந்துகொண்டு இருக்கிறது.''”

rang

"சென்னை காவல்துறையில் சலசலப்பு அதிகமாகத் தெரியுதே?''”

"உண்மைதாங்க தலைவரே, சென்னை மாநகர காவல் ஆணையரகத்தின், கட்டுப் பாட்டின் கீழ் முதலில் 155 காவல் நிலை யங்கள் இயங்கி வந்தன. மாநகரத்தின் வளர்ச்சிக்கேற்ப குடியிருப்புகளும் பன்மடங்கு அதிகரித்ததால், மாநகர காவல்துறையின் பணிச் சுமை அதிக மானது. இதைத் தொடர்ந்துதான், 2021-ல், சென்னை கமிஷனர் அலுவலகத்தை தாம்பரத்திற்குத் தனியாக வும், ஆவடிக்குத் தனியாகவும் அமைத்து, மொத்தம் மூன்று கமிஷனர்களை தி.மு.க. அரசு நியமித்தது. இந்த மூன்று மாநகர காவல் எல்லையிலும் பணி செய்து வந்த உதவி ஆய்வாளர்கள் முதல் காவ லர்கள் வரை, பலரும் பல்வேறு காரணங்களுக்காக பணியிட மாற்றம் கேட்டிருந்தனர். இவர்களின் கோரிக்கையைப் பரிசீலிக்க, கூடுதல் காவல் கமிஷனர் லோகநாதனை உள்ளடக்கிய மூவரைக் கொண்ட கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. மேலும் கடந்த டிசம்பரில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் காவலர் குறை தீர்ப்பு முகாமை அமைத்து, மீண்டும் டிரான்ஸ்பர்கள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டன. இருந்தும் இன்னும் அம்மனுக்களுக்குத் தீர்வு கிடைக்காததில் மன உளைச்சலில் இருக்கிறார்கள் காவலர்கள்.''”

"நானும், போனமுறை நாம் பேசிக்கொண்ட விவகாரம் தொடர்பான ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். நாகை மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் செல்வக்குமார் மீது மாவட்ட கலெக்டர் கொடுத்த புகாரின் பேரில், அவரை அங்கிருந்து சென்னை சி.எம்.டி.ஏ.வுக்கு தமிழ்நாடு செய்தித்துறை இயக்குநர் மோகன் ஐ.ஏ.எஸ். இடமாறுதல் செய்ததையும், ஆனால், நாகையை விட்டு நகராமல் செல்வக்குமார் அடம்பிடிப்பதையும் நாம் அப்போது பகிர்ந்துக்கிட்டோம். இந்த நிலையில், இடமாறுதல் கொடுத்தும் சி.எம்.டி.ஏ.வில் ஏன் பதவியேற்கவில்லை? என்று செல்வக்குமாரிடம் விளக்கம் கேட்காத மோகன் ஐ.ஏ.எஸ்., சி.எம்.டி.ஏ.வின் மக்கள் தொடர்பு அலுவலராக திவாகர் என்பவரை தற்போது நியமித்திருக்கிறார். இது செய்தித்துறையில் சர்ச்சையை ஏற்படுத்திக்கொண்டிருக் கிறது.''

nkn250323
இதையும் படியுங்கள்
Subscribe