விழுப்புரம் அருகே உள்ள குண்டலபுலியூர் என்ற இடத்தில் அமைந்துள்ள "அன்பு ஜோதி' பாதுகாப்பு ஆசிரமம், ஆதரவற்றவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்களில், சிறுவர் முதல் பெரியவர்கள், பெண்கள் வரை அனைவருக்கும் ஆதர வளித்து வந்தது. இந்த ஆசிரமத்தின்மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டு கள் எழுந்ததால், ஆசிரமத்துக்கு சீல் வைத்துள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/oldagefirm.jpg)
ஆசிரம நிர்வாகியின் மனைவி ஜூபின் மேரி, பணியாளர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிமையாளர் ஜூபின், குரங்கு கடித்ததால் மருத் துவமனையில் சிகிச்சை எடுப்பதால், சிகிச்சைக்குப் பின் அவரும் கைது செய்யப்படுவார். ஆசிரமத்தில் தங்கியிருந்த 140 பேர்களைப் பாதுகாப்பாக வேறு ஆதரவு இல்லங்களுக்கு அதிகாரிகள் அனுப்பி யுள்ளனர். ஆசிரமத்தின்மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர விசாரணையில் இறங்கினோம். இந்த ஆசிரமத்தை ஜூபின்பேபி, அவரது மனைவி ஜூபின்மேரி ஆகிய இருவரும் கடந்த 2005ஆம் ஆண்டு தொடங்கியுள்ளனர். மனநலம் பாதிக்கப் பட்டவர்கள், ஆதரவற்ற நிலையில் தங்கியிருக்கும் ஆண்கள், பெண்களை அழைத்து வந்து, அவர்களை ஒழுங்குபடுத்தி தங்க வைத்து, உணவு, உடை, மருத்துவ உதவிகள் தந்து பாதுகாத்து வந்தனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4ஆம் தேதி, திருப்பூரைச் சேர்ந்த ஹனிதீன் என் பவர் மனநிலை பாதிக்கப்பட்ட அவரது உறவின ரான ஜாபருல்லா என்பவரை இந்த ஆசிரமத்தில் சேர்த்துள்ளார். பிறகு தனது வேலைக்காக அமெ ரிக்கா சென்று விட்டார். அங்கிருந்து மீண்டும் 2022ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் ஊருக்கு வந்த போது, ஜாபருல்லா இங்கு எப்படி இருக்கிறார்? என்று கேட்டுள்ளார். ஆசிரம உரிமையாளர் ஜூபின் பேபி, இடப்பற்றாக்குறை காரணமாக ஜாபருல்லாவை பெங்களூரில் உள்ள ஆசிரமத்தில் சேர்த் துள்ளதாகக் கூறியுள்ளார். இதையடுத்து ஹனிதீன் பெங்க ளூர் சென்று விசாரித்தபோது ஜாபருல்லா அங்கு இல்லை எனறு கூறியுள்ளனர். இதுகுறித்து சரியான விவரங்களைத் தராததால் அதிர்ச்சியான ஹனிதீன், அன்பு ஜோதி இல்லத்தி லேயே மீண்டும் விசாரித்தபோது, பெங்களூர் ஆசிரமத்தில் ஜாபருல்லா இறந்திருக்கலாம்... அல்லது, ஆசிரமக் கதவை உடைத்து பலரும் தப்பிச்செல் வதுபோல் அவரும் தப்பியிருக்கலாமென்று பொறுப் பில்லாமல் பதில் தந்திருக்கிறார் ஜூபின் பேபி.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/oldagefirm1.jpg)
உடனே ஆசிரமத்தின்மீது ஹனிதீன், கிடார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் மீது போலீசார் சரிவர விசாரணை நடத் தாததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் பழனி, கோட்டாட்சியர் தலை மையில் குழுவினரை ஆசிரமத்தில் ஆய்வுசெய்ய உத்தரவிட்டார். சோதனையிட்டதில், எங்களை அடித்துத் துன்புறுத்தினார்கள், சரியான உணவு தரப்படவில்லை, நோய்வாய்ப்பட்டால் சரியான சிகிச்சை அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகளை வைத்தார்கள். வட மாநிலத்தைச் சேர்ந்த ரீபா என்ற பெண், தன்னைப் போன்ற பெண்களிடம் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கூறினார். இதையடுத்து நடவடிக்கை பாய்ந்துள்ளது. இங்கு தங்கியிருந்தவர் களில் 14 பேர் காணாமல் போயிருக்கிறார்கள். ஆசி ரமத்தில் தங்கியிருப்பவர்கள் தப்பிச்செல்லாதிருக்க இரண்டு குரங்குகளை ஓர் அறையில் வைத்து பயிற்சி யளித்திருக்கிறார்கள். அதிகாரிகள் விசாரணைக்கு வந்தபோது அந்த குரங்குகள், ஜூபின் பேபி உட்பட 9 பேர்களைக் கடித்துக் குதறியதில் அனைவரும் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிர்வாகத்திற்கு சொந்தமான ஆசிரமம் புதுச்சேரியில் உள்ளது. அதன் உரிமத்தை வைத்து இங்கு ஆசிரமத்தை நடத்தி வந்துள்ளனர். இது குறித்து நிர்வாகியின் மனைவி ஜுபின் மேரியிடம் கைது செய்யப்படுவதற்கு முன்பு கேட்டபோது, "ஆசிரம உரிமம் ஏழு மாதங்களுக்கு முன்புதான் காலவதியானது. புதுப்பிப்பதற்காக அனுப்பிய மனுவை காலதாமதம் செய்துவருகிறார்கள். இங்கு தங்கியவர்களில் பலர், மனநிலை சரியானதும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளனர். சிலர் நோய்வாய்ப்பட்டு இறந்ததால் நாங்களே அடக்கம் செய்துள்ளோம்'' என்று மழுப்பலாகக் கூறினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/oldagefirm2.jpg)
மாவட்ட ஆட்சியர் பழனி கூறுகையில், "அன்பு ஜோதி ஆசிரமத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள், புகார்கள் வந்ததால் விசாரணை நடத்தப்பட்டது. அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த 142 பேர்களில், 86 பேர்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களிடம் ஒப்படைக் கப்பட்டனர். மீதமுள்ளவர்களை வேறு இல்லங் களில் தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. ஆசிரமம் உரிய அனுமதியின்றி இயங்கி வந்துள்ளது. அங்கு தங்கியிருந்தவர்கள் சித்ரவதை மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப் பட்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந் துள்ளது. இது தொடர்பாக ஆசிரம நிர்வாகி அவரது மனைவி உட்பட ஏழுபேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்'' என்றார்.
இந்நிலையில் இந்த ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களில் மேலும் 5 பேரை காணவில்லை என்று புகார்கள் வந்தன. அடுத் தடுத்து பல்வேறு புகார்கள் வருவதால், இது தொடர்பான விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள் ளார். ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-02/oldagefirm-t.jpg)