தீபாவளிக்கு ரிலீஸாகி பரபரப்பாகப் பேசப்பட்டுவரும் பைசன் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது. தென்மாவட்டத்தில் நிலவும் சாதிய பிரச்சனைகளை வன்மத்தோடு கையாண்டிருக்கிறார், சமூகங்களுக்கிடையே மோதலை உருவாக்குகிறார், கபடி வீரரின் வாழ்க்கையை படமாக்கியவர், அதன் பின்னணியில் நடந்த க்ரைம்களை மறைத்துவிட்டார் என்றெல்லாம் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு எதிராக சர்ச்சைகள் வெடித்தபடி இருக்கின்றன.
மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில் வெளிவந்துள்ள படம் பைசன் காளமாடன். தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான கபடி விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த கபடி வீரரும் இந்தியாவின் அர்ஜுனா விருது பெற்றவருமான மணத்தி கணேசன் என்பவரின் நிஜ கபடி வாழ்க்கையையே படமாக இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ்.
படம் ரிலீசானதிலிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருவதுடன் சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறது பைசன். குறிப்பாக, தென்காசி மாவட்டத்தில் செயல்படும் "சத்ரிய சான்றோர் படை' என்ற அம
தீபாவளிக்கு ரிலீஸாகி பரபரப்பாகப் பேசப்பட்டுவரும் பைசன் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது. தென்மாவட்டத்தில் நிலவும் சாதிய பிரச்சனைகளை வன்மத்தோடு கையாண்டிருக்கிறார், சமூகங்களுக்கிடையே மோதலை உருவாக்குகிறார், கபடி வீரரின் வாழ்க்கையை படமாக்கியவர், அதன் பின்னணியில் நடந்த க்ரைம்களை மறைத்துவிட்டார் என்றெல்லாம் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு எதிராக சர்ச்சைகள் வெடித்தபடி இருக்கின்றன.
மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில் வெளிவந்துள்ள படம் பைசன் காளமாடன். தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான கபடி விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்த கபடி வீரரும் இந்தியாவின் அர்ஜுனா விருது பெற்றவருமான மணத்தி கணேசன் என்பவரின் நிஜ கபடி வாழ்க்கையையே படமாக இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ்.
படம் ரிலீசானதிலிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருவதுடன் சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறது பைசன். குறிப்பாக, தென்காசி மாவட்டத்தில் செயல்படும் "சத்ரிய சான்றோர் படை' என்ற அமைப்பு, மாரி செல்வராஜை கைது செய்யவேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது.
"பைசன் படத்தில் குறிப்பிட்ட சமூகத்தை அவமதிக்கும்விதமாகவும், சமூக கலவரத்தைத் தூண்டும்விதமாகவும் காட்சிகள் வடிவமைக் கப்பட்டுள்ளன. சமூகப் பதட்டத்தை ஏற் படுத்துவதாகவும் இருக்கிறது'” என்று குற்றம்சாட்டுகின்ற னர் அந்த அமைப் பினர்.
அதேசமயம், இதற்கு நேர்மாறாக, சினிமா பிரபலங்கள் பலரும் மாரி செல்வராஜை ஆதரித்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவுசெய்கின்றனர். தமி ழகத்தின் தென்மாவட்டங்களில் வாழும் குறிப்பிட்ட சமூகத்தின் குரலாக இந்த படத்தில் மாரி பேசுகிறார்.
படத்தில் சாதிய வன்மத்தை காட்சிப்படுத்தியிருந்தாலும் எந்த ஒரு சாதியையும் அவர் இழிவுபடுத்தவில்லை. அனைத்து காட்சிகளிலும் நெறிமுறைகளை அவர் மீறவில்லை. சாதிய பிரச்சனைகள் எப்படியெல்லாம் ஒரு சாமானிய விளையாட்டு வீரனை அழிக்கத் துடிக்கிறது என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் என்றெல்லாம் மாரி செல்வ ராஜுக்கு ஆதரவான குரல்கள் எதிரொலிக்கின்றன. இதனால் "பைசன்' படம் தொடர்பான விவாதங்கள் பொதுவெளியிலும் சினிமா உலகிலும் சூடுபிடித் திருக்கிறது.
இதற்கிடையே ரசிகர்களோடு ரசிகராக நெல்லையில் "பைசன்' படத்தைப் பார்த்து விட்டு வந்த இயக்குநர் மாரி செல்வராஜிடம் செய்தி யாளர்கள் பல்வேறு கேள்வி களை எழுப்பினர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/23/bison1-2025-10-23-16-12-03.jpg)
அப்போது அவர், “"தென்மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களிடம் அவர் களுக்குப் புரியும் வகையில் பேசவேண்டும், ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களிடமும் பேச வேண்டும் என நான் நினைத்தேன். அதற்கு ஒரே வழி மணத்தி கணேசனின் கதையை எடுப்பதுதான். அவரது கதைக்குள் என் கதையும் இருக்கிறது. தென்மாவட்ட இளைஞர்களின் கதை இது. அவர்களின் கனவு, கோபம், வலி, தேடல் எல்லாம் இதில் இருக்கிறது. தென்மாவட்டங்கள் மீது கட்டமைக்கப்பட்ட பிம்பத்தை மாற்றவேண்டும், தென்தமிழக இளைஞர்களின் மனநிலையை மாற்றவேண்டும் என்பதே பைசன் படத்தின் நோக்கம்''’என்று விவரித்தார் மாரி செல்வராஜ்.
மணத்தி கணேசனின் கபடி வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் பைசன் திரைப்படத்தில், 1994-ல் ஜப்பானில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய கபடி அணி தங்கம் வென்றதையும் அதன் உற்சாகத்தையும் காட்சிப்படுத்தியிருக்கிறார் மாரி செல்வராஜ்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய முன்னாள் விளையாட்டு வீரர்கள்,
"ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 1994-ல் ஜப்பானில் நடந்தது. இதில், இந்திய கபடி அணியும் கலந்து கொண்டது. அன்றைக்கு தமிழகத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர்தான் இந்திய கபடி அணிக்கு கேப்டன். அந்த காலகட்டத்தில், தமிழக உளவுத்துறையின் (எஸ்.பி.சி.ஐ.டி) எஸ்.பி.யாக இருந்த குண்டு பாண்டியன், இந்திய கபடி அணி சம்மேளனத்தின் தலைவர். அந்த குண்டு பாண்டியன் தலைமையில்தான், அன்றைக்கு இந்திய கபடி அணி ஜப்பானுக்குச் சென்றது.
ராஜரத்தினம், மணத்தி கணேசன் உள்பட தமிழகத்தைச் சேர்ந்த 4 வீரர்கள் இந்திய கபடி அணியில் இடம்பெற்றிருந்தனர். ஜப்பானில் நடந்த கபடிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து இந்திய அணி களமிறங்கியது. இரு அணிகளும் மூர்க்கமாக மோதின. இறுதியில், இரு அணிகளும் சமமான புள்ளிகளை எடுத்திருந்த நிலையில், பிரச்சனைகள் வெடித்தன. போட்டியை ரத்து செய்யலாம் என்ற நிலையில் ரீ மேட்ச் நடத்த இந்திய அணி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை பாகிஸ்தானும் ஏற்றுக்கொள்ள, ரீ மேட்ச் நடத்தப்பட்டது. அதில் இந்திய அணி வெற்றிபெற்று தங்கம் வென்றது. சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது இந்திய அணி. அன்றைக்கு சர்வதேச அளவில் பரபரப்பாக பேசப்பட்டது அந்த போட்டி''’என்றனர்.
சாதிய வன்மத்துக்குள் விளையாட்டுகள் சிக்கக்கூடாது என சமூக அக்கறையோடு காட்சிப்படுத்தியிருக்கிறார் மாரி. இது பாராட்டப்படவேண்டிய விசயம்தான்.
_____________
சுய லாபத்துக்குப் பயன்படுத்தப்பட்ட வீரர்கள்!
94ல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றுத் திரும்பிய வீரர்களின் லக்கேஜ்களை விமான நிலைய அதிகாரிகள் சோதனையிட்டபோது, ஜப்பானிலிருந்து கொண்டுவரப்பட்ட கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள் (டிஸ்குகள்) சிக்கின. இந்திய கபடி அணி வீரர்கள் கைதுசெய்யப்படும் சூழல் உருவானது. ஆனால் அது சர்வதேச அளவில் இந்திய வீரர்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் என்பதால் அந்நடவடிக்கை தவிர்க்கப்பட்டது. அப்போது, இந்த நடவடிக்கைக்குப் பின்னால் அன்றைய அ.தி.மு.க. எம்.பி. ஸ்ரீதர், காங்கிரஸ் பிரமுகர் ராயபுரம் மனோ பெயர் அடிபட்டது. ஆனாலும் தன் அரசியல் செல்வாக்கால் மனோ தப்பிவிட்டார். விளையாட்டு வீரர்களை, தங்கள் சுயலாப முயற்சிக்குப் பயன்படுத்திய அந்த அரசியல் நிகழ்வுகளையும் படத்தில் பதிவுசெய்திருக்கவேண்டும் இயக்குநர் மாரி செல்வராஜ் என்கின்றனர்.
Follow Us