Advertisment

பிஸ்கோத்து’ கணக்கு! பட்டாசு லஞ்சம்! கலெக்டர்-டி.ஆர்.ஓ. மோதல்!

collector-rto

விருதுநகர் கலெக்டர் சிவஞானத்துக்கும் டி.ஆர்.ஓ. ஆனந்தகுமாருக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. அதனால், இரு தரப்பினரையும் ‘டேமேஜ்’ பண்ணும் விதமாக, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், தகவல்கள் கசிந்தபடியே இருக்கின்றன.

Advertisment

collector-rto

"கலெக்டர் ரொம்ப நல்லவரு. ஆர்.டி.ஓ. அப்படி கிடையாது'’என்று நம்மிடம் கூறிய மீனம்பட்டி பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தலைவர் விநாயகமூர்த்தி, ""புதுசா ஒரு பட்டாசுக் கடை ஓப்பன் பண்ணணும்னா, லைசன்ஸுக்கு ரூ.25,000 லஞ்சம், டி.ஆர்.ஓ.வுக்கு கொடுத்தாகணும். பட்டாசு ஆலை புதுப்பித்தலுக்கும் டி.ஆர்.ஓ.வுக்கு ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை ரூ.7,000 லஞ்சம் தந்தாகணும். டி.ஆர்.ஓ. லைசன்ஸ் பட்டாசு ஆலைகள் மொத்தம் 250 இருக்கு. அதே மாதிரி, இந்த விருதுநகர் மாவட்டத்துல 1000 பட்டாசுக் கடைகள் இருக்கு. இந்தக் கடைகள் புதுப்ப

விருதுநகர் கலெக்டர் சிவஞானத்துக்கும் டி.ஆர்.ஓ. ஆனந்தகுமாருக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. அதனால், இரு தரப்பினரையும் ‘டேமேஜ்’ பண்ணும் விதமாக, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், தகவல்கள் கசிந்தபடியே இருக்கின்றன.

Advertisment

collector-rto

"கலெக்டர் ரொம்ப நல்லவரு. ஆர்.டி.ஓ. அப்படி கிடையாது'’என்று நம்மிடம் கூறிய மீனம்பட்டி பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தலைவர் விநாயகமூர்த்தி, ""புதுசா ஒரு பட்டாசுக் கடை ஓப்பன் பண்ணணும்னா, லைசன்ஸுக்கு ரூ.25,000 லஞ்சம், டி.ஆர்.ஓ.வுக்கு கொடுத்தாகணும். பட்டாசு ஆலை புதுப்பித்தலுக்கும் டி.ஆர்.ஓ.வுக்கு ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை ரூ.7,000 லஞ்சம் தந்தாகணும். டி.ஆர்.ஓ. லைசன்ஸ் பட்டாசு ஆலைகள் மொத்தம் 250 இருக்கு. அதே மாதிரி, இந்த விருதுநகர் மாவட்டத்துல 1000 பட்டாசுக் கடைகள் இருக்கு. இந்தக் கடைகள் புதுப்பித்தலுக்கும் ரூ.7000 லஞ்சம் தரவேண்டியிருக்கு. இதுல டி.ஆர்.ஓ.வுக்கு ரூ.5000, டி.ஆர்.ஓ. செக்ஷனுக்கு ரூ.2000/-ம்னு பிரிச்சிக்கிறாங்க. விதிமீறல் நடந்து மூடிய பட்டாசு ஆலைகளைத் திறக்கிறதுக்கு, ரூ.50,000-லிருந்து ரூ.1 லட்சம் வரைக்கும் டி.ஆர்.ஓ. வாங்குறாரு. அப்படி இப்படி பார்த்தால், ரூ.1 கோடிங்கிறதை லஞ்ச இலக்கா வச்சிருக்காரு. ரிட்டயர்ட் தாசில்தார் ஜோதிமணி உள்ளிட்ட ஒரு குழுவே லஞ்சம் வாங்குற விஷயத்துல டி.ஆர்.ஓ.வுக்காக கடுமையா உழைச்சிக்கிட்டிருக்கு.

இதையெல்லாம் கலெக்டர் சிவஞானத்துக்கிட்ட புகாரா கொடுத்தேன். டி.ஆர்.ஓ. அலுவலகத்துல என்ன நடக்குதுங்கிறத சி.சி.டி.வி. கேமரா பதிவுகளைப் பார்த்து உறுதிபண்ணிட்டு, டோஸ் விட்டிருக்காரு. அதுக்குப்பிறகுதான், லஞ்சம் வாங்குறதுக்காகவே பெண்டிங் வச்சிருந்த 200 பட்டாசுக் கடைகளோட லைசன்ஸையும், பணம் வாங்காம, அவசர அவசரமா போன்ல கூப்பிட்டு டி.ஆர்.ஓ. ஆபீஸ் கொடுத்துச்சு. அந்தக் கோபத்துலதான், கலெக்டருக்கு எதிரான விஷயங்களை வெளிப்படையா டி.ஆர்.ஓ. ஆபீஸ்ல பேச ஆரம்பிச்சிருக்காங்க''’என்றார்.

Advertisment

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானத்துக்கு எதிராக டி.ஆர்.ஓ. அலுவலகம் லீக் செய்திருக்கும் விஷயங்கள் இவை.

""எளிமையானவர், நேர்மையானவர் என்று தன்னை விளம்பரப்படுத்துகிறார் கலெக்டர் சிவஞானம். தன் மகளை அங்கன்வாடி மையத்தில் சேர்த்தது, பேருந்தில் பயணிப்பது என அவ்வப்போது ஸ்டண்ட் அடிக்கிறார். மதுரை, மண்டேலா நகரில் கலெக்டர் கட்டும் புது வீட்டுக்காக விருதுநகர் மாவட்ட நிர்வாகமே தன்னை முழுவீச்சில் ஈடுபடுத்தி வருகிறது. இதற்கு முந்தைய பி.ஆர்.ஓ. அருள்பதி, சிவகாசியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நிகழ்ச்சி செலவினங்கள் என ரூ.2.75 லட்சத்துக்கு விவரங்களைப் பட்டியலிட்டு தந்தபோது, போட்டோ ஆதாரம் கேட்டு, கையெழுத்திட மறுத்தார் சிவஞானம். அருள்பதி மாற்றலாகிச் சென்றவுடன், அதே விழாவுக்கு செலவான தொகை என்று ரூ.4.75 லட்சத்துக்கு கணக்கு காட்டினார்கள். பிஸ்கட் வாங்கிய செலவே ரூ.71,000 என்று எழுதினர். எதுவும் கேட்காமல் கையெழுத்து போட்டார் கலெக்டர்.

collector-rto

காரியாபட்டி அ.தி.மு.க. ஒ.செ. கரியநேந்தல் ராமமூர்த்தியின் மகன் வெற்றியும், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் வலதுகரம் என்று சொல்லப்படும் ராஜவர்மனின் அக்கா மகன் முத்துக்குமாரும், தங்களின் சொந்த மாவட்டத்திலேயே ஏ.பி.ஆர்.ஓ.க்களாக உள்ளனர். அதனால், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தற்போதைய பி.ஆர்.ஓ. ஜெகவீரபாண்டியனின் கட்டுப்பாட்டில் இல்லை. ஏனென்றால், அவர் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. க.சுப்புவின் மகன் ஆவார். வெற்றியும் முத்துக்குமாரும்தான் இந்தத் துறையில் இங்கே ஆல்-இன்-ஆல் ஆக இருக்கின்றனர். தாசில்தார் இடமாற்றம் போன்ற விஷயங்களைக் கையில் எடுத்துக்கொண்டு செயல்படுகின்றனர். சில காரண காரியங்களுக்காகவே, இவர்களை அனுசரித்துப் போகிறார் கலெக்டர். இல்லையென்றால், "ரூ.71,000/-க்கா பிஸ்கட் வாங்கினீர்கள்?' என்று கேள்வி கேட்டிருப்பாரே?''’என்று ஆட்சியர் குறித்து அள்ளிவிடுகின்றனர்.

இருதரப்பும் உரசலைத் தொடரும் நிலையில், டி.ஆர்.ஓ. ஆனந்தகுமார் ""ஆட்சியர் என்னை ஓரம் கட்டுகிறார். மாவட்ட நிர்வாகம் உருக்குலைந்துவிட்டது'' என்று புகார் வாசிக்கிறார். ஆட்சியர் சிவஞானமோ “""டி.ஆர்.ஓ. அலுவலகப் பணிகளில் தொய்வு ஏற்பட்டதால், நடவடிக்கை எடுத்தேன். முறைப்படி கடன் பெற்று மதுரையில் நான் வீடு கட்டி வருவது குறித்து தவறாகப் பேசுகின்றனர்''’என்று விளக்கம் அளிக்கிறார்.

-சி.என்.இராமகிருஷ்ணன்

collector-rto nkn10.07.2018
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe