அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டத்துக்கு மக்களை அழைத்து வருவதற்காக வாகனம் ஏற்பாடு செய்வார்கள். கூலியாக பணம் தருவார்கள். பிரியாணிப் பொட்டலம், தண்ணீர் பாட்டில் தருவார்கள். ஆனால் இந்திய பிரதமர் நரேந்திரமோடி ரேடியோவில் பேசும் பேச்சைக் கேட்பதற்காக பொதுமக்களுக்கு பிரியாணி, டிபன் பாக்ஸ், புடவையெல்லாம் தந்துள்ளார்கள்.
இந்திய மக்களுடன் மாதத்தின் கடைசி ஞாயிறு அன்று மன் கி பாத்' (மனதின் குரல்) என்கிற தலைப்பில் ரேடியோவில் பேசிவருகிறார் மோடி. 2014, அக்டோபரில்
அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டத்துக்கு மக்களை அழைத்து வருவதற்காக வாகனம் ஏற்பாடு செய்வார்கள். கூலியாக பணம் தருவார்கள். பிரியாணிப் பொட்டலம், தண்ணீர் பாட்டில் தருவார்கள். ஆனால் இந்திய பிரதமர் நரேந்திரமோடி ரேடியோவில் பேசும் பேச்சைக் கேட்பதற்காக பொதுமக்களுக்கு பிரியாணி, டிபன் பாக்ஸ், புடவையெல்லாம் தந்துள்ளார்கள்.
இந்திய மக்களுடன் மாதத்தின் கடைசி ஞாயிறு அன்று மன் கி பாத்' (மனதின் குரல்) என்கிற தலைப்பில் ரேடியோவில் பேசிவருகிறார் மோடி. 2014, அக்டோபரில் தொடங்கிய இந்த நிகழ்ச்சி, 2023, ஏப்ரலில் 100வது மாதமாக மோடி பேசினார். இதனை சாதனையாகக் கொண்டாட பா.ஜ.க.வினர் முடிவெடுத்தனர். இந்தியா முழுவதும் கிராம மக்களிடம் பிரதமரின் பேச்சைக் கொண்டு செல்ல வேண்டுமென முடிவெடுத்ததன்படி, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டத்தில் பா.ஜ.க. மண்டல பொறுப்பாளர் கார்த்தியாயினி கண் காணிப்பில் பா.ஜ.க.வினர் ரேடியோ பாக்ஸுடன் கிராமங்களுக்கு செல்லச் சொல்லியிருந்தார்.
இதுகுறித்து திருவண்ணாமலையைச் சேர்ந்த பா.ஜ.க. மாவட்ட பிரமுகர் ஒருவரிடம் கேட்டபோது, "பிரதமர் மன் கி பாத் 100வது பேச்சை கிராம மக்களிடம் கொண்டு செல்லணும்னு தலைமையிலிருந்து ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தகவல் வந்தது. நாங்கள் கிராமங்களுக்கு சென்று பிரதமர் பேசறார், அதை கேட்க நீங்கள் எல்லாம் வரணும்னு சொன்னோம். அவர் பேசுவதை டிவியில் காட்டுவாங்களே அதுல பார்த்துக்கறோம்னு சொன்னாங்க. டிவியில இல்ல, ரேடியோவுல பேசறார் அப்படின்னு சொன் னோம். ரேடியோவா அது எங்ககிட்ட இல்லன்னு சொன்னாங்க. நாங்க ரேடியோ எடுத்து வர்றோம், நீங்க வந்து கேட்டால் போதும் அப்படின்னு சொன்னோம். அவர் பேசறதை கேட்டு என்னவாகப் போகுதுன்னு திருப்பிக் கேட்டாங்க.
பிரதமர் பேச்சை கேட்டால் பிரியாணி தர்றோம், டிபன் பாக்ஸ் தர்றோம், லட்டு தர்றோம் அப்படின்னு சொல்லி, பல இடங்களில் எங்கள் ஒன்றிய, கிளைக் கழக நிர்வாகிகள் அழைச்சாங்க. அப்பவும் மக்கள் வரல, கெஞ்சிக் கூத்தாடி வரவச் சோம். ஒவ்வொரு கிராமத்திலயும் 10 பேர், 20 பேர் அப்படிங்கற அளவில்தான் வந்தாங்க. அப்படி வந்தவங்களும் உடனே கிளம்பிட்டாங்க. பிரதமர் மோடி, இந்தியில் பேசியது யாருக்கும் புரியல. மாவட்டத் தலைவர்கள் நகரப்பகுதிகளில் ஏற்பாடு செய்த இடத்திலாவது பிரதமர் பேசியதை மொழி பெயர்க்க ஏற்பாடு செய்திருக்கலாம். அதையும் செய்யல. "கட்சியில் உள்ள 90 சதவிதம் பேருக்கு இந்தி தெரியாது. அதனால் பிரதமர் என்ன பேசுனாருன்னு அவுங்களுக்கும் புரியல. "மன் கி பாத்' பேச்சை விடுங்க. டிபன் பாக்ஸ், பிரியாணி வாங்கக்கூட மக்கள் வரலங்கறதுதான் கவலையா இருக்குங்க'' என்றார் மிகுந்த வருத்தத்துடன். இனி இந்தி பேச்சுக்கு மொழிபெயர்ப்பாளர் ஏற்பாடு செய்யுங்க!