திருச்சியிலுள்ள பாரதிதாசன் இன்ஸ்டி டியூட் ஆப் மேனேஜ் மென்ட் (BIM)  நிறுவனம், தொடர்ச்சியாகப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கி யிருப்பது பரபரப்பை கிளப்பிவருகிறது.

Advertisment

1982ஆம் ஆண்டு, பாரதிதாசன் இன்ஸ் ட்டியூட் ஆப் மேனேஜ் மென்ட் (BIM)  என்ற கல்வி நிறுவனத்தை, 'School of Excellence'  என்ற சிறப்பு அந்தஸ்துடன் பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்துடன் (BHEL) ) இணைந்து தொடங்கியது.  

Advertisment

பெல் நிறுவனம் தனக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலத்தை குத்தகை ஒப்பந்தம் மூலம் தருவதாகவும், பெல் நிறுவனத்தில் பணியாற்றும் பொதுமேலாளர்கள் போன்றோர், மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கவும் முடி வெடுக்கப்பட்டது. அதேபோல் பிம் (BIM)ஐ நிர்வகிக்க, சேர்மன், உறுப்பினர்கள் அடங்கிய 16 பேர் கொண்ட தனி ஆட்சிக்குழுவும் அமைக்கப்பட்டது. தன்னாட்சி அதிகாரம் மற்றும் நிரந்தரமான அங்கீகாரம் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்டது. 

அதோடு தங்களுடைய பேராசிரியர்களையும் இந்த கல்வி நிறுவனத்திற்கு தந்ததோடு, மாணவர்களுக்கான டிகிரி சான்றிதழையும் வழங் கியது. 

Advertisment

இந்நிலையில் கடந்த 2003-ல், ராமதுரை தலைமையில் நடந்த பொதுக்குழுக்கூட்டத்தில்,  பிம் நிறுவனத்தின் பைலா (Bylaws)-வில் திருத்தங்களை கொண்டுவந்து, தனியார் கல்லூரியாக ஆகிவிட்டதாகக் கூறிக்கொள்ளத் தொடங்கியது. அரசின் உயர் கல்வித் துறைக்கு சொந்தமான பல்கலைக் கழகத்தின் சட்டத் திருத்தங்களை, சிண்டிகேட் ஒப்புதல் பெற்று, சட்டமன்றத்தில் பில் பாஸ் செய்து, விவாதித்த பிறகு கவர்னரின் பார்வைக்கு அனுப்பி, ஒப்புதல் பெற்றபின் அரசியழில் வெளியிடப்படும். ஆனால் இங்கோ, 54வது பொதுக்குழுக் கூட்டத்தில், ந .ராமதுரை, ரவி அப்பாசாமி, ரமேஸ் கில்லி, த.ஃ.ராகவன், பாரதிதாசன் பல்கலைக்கழக அன்றைய துணைவேந்தர் முத்தையா மாரியப்பன் மற்றும் முன்னாள் துணைவேந்தர் முத்துக்கருப்பன் உள்ளிட்டவர்கள் பங்கேற்று அந்த சட்டத்திருத்தங்களை சுயமாக செய்துள்ளனர்.

 மேலும் அந்த சட்டத்திருத்தத்தில், "பல்கலைக்கழகம்' மற்றும் "மாநில அரசு' என்ற இரண்டு வார்த்தைகளையும் நீக்கினர். இந்த காலகட்டத்தில், செம்மலை உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அதேபோல் ஒரு சிண்டிகேட் குழுவில் ஒருவர் 3 வருடமே பதவியிலிருக்க முடியும்... அதிகபட்சம் கூடுதலாக 3 ஆண்டுகள். ஆனால், தற்போது ஆட்சிக்குழுவில் ரவி அப்பாசாமி (2001), த.ஃ ராகவன் (2003), ச.காமகோடி (2011), மோகன்  பராசரன் (2012), ச.பாலாபாஸ்கர் (2012) உள்ளிட்டவர்கள் இன்றுவரை பிம் ஆட்சிக்குழுவில் தொடர்ந்து நீடித்து வருகின்றனர்.

BIMa

தனியார் கல்லூரி என சட்டவிரோதமாக மாற்றிய நிலையிலும், BIM-ல் பணியாற்றுவோருக்கான சம்பளத்தை 2007ஆம் ஆண்டுவரை பல்கலைக்கழகமே வழங்கியது. இது பிரச்சனை யானதும், இஒங தனியார் கல்லூரியாக சட்டவிரோதமாக மாற்றப்பட்ட விவகாரம் 2010-ல் தான் தெரியவந்ததாக, தமிழக அரசின் உயர் கல்வித் துறைக்கு பல்கலைக்கழகம் தெரிவித்தது. அப் போது அமைச்ச ராக இருந்த பொன்முடி கண்டுகொள்ள வில்லை. 

இதுபோக, உள்ளூர் நிதித்தணிக்கை மேற்கொள் ளப்படவே இல்லை. வருடாந்திர வரவு செலவுக்கணக்கினை 2003-க்கு பிறகு அரசுக்கும் பல்கலைக்கழகத்துக்கும் சமர்ப்பிக்கவேயில்லை. போலி பேராசிரியர்கள் நியமனம் (முனைவர். பாஜ்பாய் ராஜீவ் மற்றும் முனைவர் நாயுடு ஜெயா) செய்து பணக்கொள்ளையில் ஈடுபட்டது. சட்டவிரோத விதிகள் பிரச்சனையானதால், இனி இஒங மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ் வழங்க முடியாதென பல்கலைக் கழகம் சொல்லும் போதெல்லாம் உயர் கல்வித்துறை அமைச்சர், செயலர் மூலம் அழுத்தம் கொடுத்து பட்டச் சான்றிதழை வழங்க வைத் துள்ளனர். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இயக்குநர்களாக நியமித்து, பல்கலைக்கழகத்தை அவர்கள் மூலமாக சமாளிக் கிறார்கள். 

இஒங மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்காததை எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட, மாணவர்களின் நலன்     கருதி வழங்க உத்தரவிட்டது. அதன்பின் பல்கலைக்கழகமும் வழங்கியது. மாணவர்களுக்கும், பேராசிரியர்கள் நியமனத்        திலும் இடஒதுக்கீடு முழுமை  யாக பின்பற்றப்படவில்லை. நிர்வாக ஆட்சிக்குழுவிலும் ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கும் பெண்களுக்கும் பிரதிநிதித்துவம் இல்லை.

இப்படிப்பட்ட பிம் நிறுவனத்தின்மீது உயர் கல்வித்துறை எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை. BIM நிர்வாகம், தான் ஒரு அரசு நிறுவனம் என்றும், அல்லது  தனியார் கல்லூரி என்றும், அல்லது தான் ஒரு சுயாட்சி கல்லூரி என்றுமாக, உச்ச நீதிமன்றத்திலும், அரசிடமும், AICTE, NBA போன்ற அமைப்புகளிடம் மாற்றி, மாற்றி தன்னை காட்டிக்கொண்டு ஏமாற்றிவருகிறது. மேலும், பிம் நடத்திவரும் MBA பட்ட படிப்புக்கு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அங்கீகாரத்தை நீட்டிப்பு செயவதற்காக, இக்கல்லூரி, களமாவூர் கிராமத்தில் இயங்கி வருவதாக பொய்யான தகவல் களை அளித்துவருகிறது.

திருச்சி -புதுக்கோட்டை சாலையில் BIM புதிதாக கட்டிவரும் வளாகம், உரிய அனுமதியை உயர்கல்வித் துறையிடம் வாங்காமல், கட்டப்பட்டு முடிவுறும் தருவாயிலுள்ளது. இப்பணியை ஏன் அரசின் பொதுப்பணித்துறைக்கு வழங்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. 2003- லிருந்து 2022 வரை, உயர் நீதிமன்றத் தீர்ப்பின்றி வழங்கப்பட்ட சான்றிதழ்கள் செல்லுபடியாகுமா? என்ற கேள்வியும் எழுகிறது. 

"இதுபோல் பல்வேறு முறைகேடுகளுடன் இயங்கிவரும் பிம் நிறுவனத்தின் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அனைவர் மீதும், பொதுச் சொத்தை அபகரித்தல், போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட கிரிமினல் குற்ற வழக்குகள் பதிவுசெய்து நட வடிக்கை எடுக்க வேண்டும்' என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.