Advertisment

கோடிக்கணக்கில் ஊழல்! விசாரணை அச்சத்தில் ஒய்.எம்.சி.ஏ. நிர்வாகிகள்!

yy

மிழ்நாட்டிலுள்ள ஒய்.எம்.சி.ஏ. தொண்டு நிறுவனம் 100 ஆண்டுகள் கடந்து செயல் பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சுமார் 700 கோடிக்கு நிலம் மற்றும் கட்டடங்கள் உள்ளது. இந்நிறுவனத்தின் தலைவர்களாகச் செயல்பட்டு வரும் நபர்கள் கோடிக்கணக்கில் ஊழலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந் திருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Advertisment

சென்னை ஒய்.எம்.சி.ஏ. நிறுவனத்துக்கு சொந்தமான 19.5 ஏக்கர் நிலம், ஓ.எம்.ஆர். சாலையில் கொட்டிவாக்கத்தில் உள்ளது. இதில் பல்நோக்குக் கூடம், உயர்நிலைப் பள்ளிக்கூடம், ஆதரவற்றோர் பெண்கள் இல்லம், விளையாட்டு மையம் என 9.5 ஏக்கரில் செயல்பட்டு வருகிறது. மீதமுள்ள 10 ஏக்கர் நிலத்தில், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி 2016ஆம் ஆண்டு, 5 ஏக்கர் நிலத்தை கிரிஸ்டல் கிரியேஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு 130 கோடி ரூபாய்க்கு 99 வருடக் குத்தகையாகக் கொடுக்கப்பட்டது. மீத முள்ள 5 ஏக்க

மிழ்நாட்டிலுள்ள ஒய்.எம்.சி.ஏ. தொண்டு நிறுவனம் 100 ஆண்டுகள் கடந்து செயல் பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சுமார் 700 கோடிக்கு நிலம் மற்றும் கட்டடங்கள் உள்ளது. இந்நிறுவனத்தின் தலைவர்களாகச் செயல்பட்டு வரும் நபர்கள் கோடிக்கணக்கில் ஊழலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந் திருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Advertisment

சென்னை ஒய்.எம்.சி.ஏ. நிறுவனத்துக்கு சொந்தமான 19.5 ஏக்கர் நிலம், ஓ.எம்.ஆர். சாலையில் கொட்டிவாக்கத்தில் உள்ளது. இதில் பல்நோக்குக் கூடம், உயர்நிலைப் பள்ளிக்கூடம், ஆதரவற்றோர் பெண்கள் இல்லம், விளையாட்டு மையம் என 9.5 ஏக்கரில் செயல்பட்டு வருகிறது. மீதமுள்ள 10 ஏக்கர் நிலத்தில், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி 2016ஆம் ஆண்டு, 5 ஏக்கர் நிலத்தை கிரிஸ்டல் கிரியேஷன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு 130 கோடி ரூபாய்க்கு 99 வருடக் குத்தகையாகக் கொடுக்கப்பட்டது. மீத முள்ள 5 ஏக்கர் நிலத்தை, ஒய்.எம்.சி.ஏ. கிரியே ஷன்ஸ் நிறுவனம் கொடுக்கும் 130 கோடி ரூபாய் பணத்தை வைத்து வணிக வளாகமும், இதர கட்டடங்களும் கட்டி, ஒய்.எம்.சி.ஏ.வுக்கு வருமானத்தைப் பெருக்கவேண்டும் என்பதே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பாக இருந்துள் ளது. ஒய்.எம்.சி.ஏ. கிரியேஷன்ஸ் நிறுவனம், 130 கோடி பணத்தை மூன்று வருடத்திற்குள் கொடுக்கவேண்டும் எனும் உத்தரவின்படி, 2016 மே மாதத்தில் தொடங்கி மூன்று வருடத்திற்குள் 130 கோடியை கொடுத்து முடித்துள்ளனர். இந்த 130 கோடி ரூபாய் பணத்தை வைத்து ஒய்.எம்.சி.ஏ. நிறுவனமானது, 5 ஏக்கர் நிலத்தில் வணிக வளாகம் கட்டி வருமானத்தைப் பெருக்கவேண்டும் என்பதை சரிவர செய்யாமல் இருந்துள்ளது.

Advertisment

tt

இந்நிலையில் ஒய்.எம்.சி.ஏ. உறுப்பினரான முத்து வில்லியம்ஸ், "ஏன் இதுநாள் வரையிலும் எந்தவிதமான வணிக வளாகமும் கட்டவில்லை? மொத்த பணமும் அவர்கள் கொடுத்தார்களா? இல்லையா?'' எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு, ஒய்.எம்.சி.ஏ. கிரியேஷன்ஸ் மொத்தப் பணத்தையும் கொடுத்துவிட்டனர். அதில் 31 கோடிக்கு கீழ்ப்பாக்கம், கொடைக்கானல் மற்றும் ராயபுரம் ஆகிய பகுதிகளில் இடத்தை வாங்கிப் போட்டுள்ளதாகவும், மீதமுள்ள 99 கோடியை கட்டடம், மறுசீரமைப்பு எனச் செலவு செய்ததாகவும் அதன் தலைவர் வின்சன் ஜார்ஜ் மற்றும் பொதுச்செயலாளர் ஆர்.சி.பாண்டியன் ஆகியோர் கூறியுள்ளனர்.

இதனை விசாரித்துப் பார்த்த முத்து வில்லியம்ஸ், அவர்கள் சொன்னபடி எந்தவிதமான மறுசீரமைப்பும் செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சி.சி.பி. பிரிவில் 08.07.21ஆம் தேதி புகாரளித்துள்ளார். புகாரை விசாரித்த போலீசார், "இது சிவில் வழக்காக வருவதால் நீங்கள் நீதிமன்றத் தின் மூலமாக வழக்கு பதிவு செய்யவேண்டும்' என்றதும், அதன்படி எழும்பூர் நீதிமன்றத்தை நாடி வழக்குப்பதிவு செய்வதற்கான உத்தரவை பெற்றார்.

cc

இந்த உத்தரவை ரத்து செய்யச் சொல்லி வின்சன் ஜார்ஜ் தரப்பு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. அதனை விசாரித்த நீதிபதி, "இதில் 130 கோடி ரூபாய் பணத்திற்கான முறையான வரவு-செலவு கணக்குகளைத் தாக்கல் செய்யாததால், குற்றம் நடந்ததற்கான முகாந்திரம் இருப்பதாக தெரியவருகிறது. ஆகையால் சி.சி.பி. பிரிவு போலீசார் விசாரித்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டார். அதை யடுத்து இது தொடர்பான முதற்கட்ட விசா ரணையை சி.சி.பி. போலீசார் தொடங்கியுள்ள னர். இந்த விசாரணையின் முடிவில் இவர்கள் செலவு செய்ததற்கான போதிய ஆவணங்கள் இல்லா தது உறுதியாகும்பட்சத்தில் அவர்கள் மீது நீதிமன்றத் தின் மூலம் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர். இதுகுறித்து வின்சன் ஜார்ஜிடம் கேட்ட போது "இது தொடர்பான 8 பேர் கொண்ட குழு உள்ளது. போர்டு மெம்பர்கள் இருக்கிறார்கள். எங்களை மட்டும் குற்றம் சொல்வது அபத்தமாக இருக்கிறது. மேலும் இது தொடர்பான விசாரணை சென்று கொண்டிருக்கிறது. தற்போது நான் இங்கே பணியி லும் இல்லை. அதனால் இதுகுறித்து தற்போது பேசக் கூடாது'' என முடித்துக்கொண்டார். இந்த வழக்கைத் தொடுத்த வில்லியம்ஸ் தரப்பில் கேட்டபோது, "ஒய். எம்.சி.ஏ. நிறுவனத்தின் பணத்தை ஒட்டுமொத்தமாக அவர்களிடம் இருந்து மீட்டு ஒய்.எம்.சி.ஏ. நிறுவனத் திற்கே தரப்பட வேண்டும். குற்றத்தில் ஈடுபட்டவர் களின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்றார்.

இந்நிறுவனத்துக்கு சொந்தமாக தமிழ்நாட்டில் உள்ள பல சொத்துக்களில் ஒன்றான இதிலேயே இவ்வளவு தில்லாலங்கடி வேலைகளைச் செய்திருப்பதால், மீதமுள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக் களில் எவ்வளவு சொத்துக்களை ஆட்டையைப் போட்டிருப்பார்களோ என்பதே ஒய்.எம்.சி.ஏ. நிறுவன உறுப் பினர்களின் மத்தியில் கேள்வியாக எழுந்துள்ளது. இந்த மோசடி தொடர்பான வழக்கை தமிழகம் முழுவதும் விசாரித்து, முழு உண்மையையும் வெளிக் கொண்டுவர வேண்டும் என்பதே இவர்களின் கோரிக் கையாக உள்ளது.

nkn200523
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe