கோடீஸ்வரர்கள் வரி பாக்கி! எளியோர்களிடம் கறார் வசூல்! -மதுரை மாநகராட்சி அவலம்!

t

செல்வந்தர்களும், பெரும் நிறுவனங்களும் கடந்த 10 ஆண்டு களுக்கு மேலாக முறையாக கட்டணம் செலுத்தாமல் 40 கோடிக்கு மேல் பாக்கி வைத் துள்ளதால் மதுரை மாநகராட்சியே திவாலாகும் சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது. ஆனால், ஆயிரம், இரண்டாயிரத்திற்காக எளிய மக்களிடம் கறார் காட்டி அவர் களின் அன்றாட வாழ்க் கையை அவதிக்கு உள்ளாக்கியிருக்கிறார் கள் மதுரை மாநக ராட்சி நிர்வாகத்தினர்.

yy

இதனால் ஆவே சம் அடைந்த எளிய மக்கள் மதுரை மாநக ராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது நம்மிடையே பேசிய கோபி, ""சிம்மக்கல் அனுமர் கோவில் தெருவில் இருக்கிறேன். நான் வீட்டுவரி ரூ.900 கட்டவேண்டும். எனக்கு எந்தவித நோட்டீஸும் கொடுக்காமல் திடீரென மாநகராட்சி அதிகாரி செந்தில் தலைமையில் 10 பேர் வந்தார்கள். என் வீட்டிற்கான தண்ணீர்க் குழாயை துண்டித்துவிட்டு, பாதாளச்சாக்கடையை அடைத்தனர். நல்லதண்ணி தொட்டியை இடித்து விட்டுச் சென்றுவிட்டனர்.

இதுபோல சிம்

இதுபோல சிம்மகல் ஏரியாவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். போன முறை செலுத்திய வீட்டுவரியை காட்டிலும் இப்போது இரண்டு மடங்கு உயர்த்தி இருக்கிறார்கள். உயர்த்திய வீட்டுவரியை குறைக்கசொல்லி மக்கள் எல்லோரும் மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளித்துள்ளோம். இந்த நிலையில்தான் அராஜக மாக எந்தவித முன்அறிவிப்பும் இல்லாமல் இப்படிச் செய்துவிட்டார்கள். பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் பல வருடங்களாக கோடிக்கணக்கில் வரி பாக்கி வைத்துள்ளார்கள். அவர்களிடம் இப்படி கறார் காட்டுவதில்லை. ஏங்களிடம் மட்டும் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள்?'' என்றார் பரிதாபமாக.

tt

சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ ஹக்கீம் இதுகுறித்து நம்மிடம் பேசியபோது, ""மதுரை யில் சாதாரண பொதுமக்கள் வீடுகளுக்கு திடீரென வீட்டுவரி உயர்த்தியதால் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்திவரும் வேளையில், இதை வாபஸ் வாங்கவேண்டும் என்ற நோக்கத்தில், மிரட்டல் போக்கில் வீடுகளுக்கு நல்லதண்ணி குழாயை அடைப்பது, சாக்கடை வழியை அடைப்பது, வீடுகளுக்கு முன் குப்பைத்தொட்டியை வைப்பது என்று அராஜகப்போக்கின் மூலமாக வசூலிக்க ஆரம்பித்துள்ளனர். இவர்களிடம் வசூலில் இவ்வளவு கண்டிப்பை காட்டுபவர்கள் பெரிய பெரிய வணிக நிறுவனங்களிடம் எப்படி வசூல் செய்திருக்கிறார்கள் என்று தகவல் உரிமை சட்டத்தின் மூலம் தகவல் வந்ததில் பெரும் அதிர்ச்சிக்குள்ளானோம். மதுரையை சுற்றி இருக்கும் பெரிய நிறுவனங்கள் அனைத்தும் 10 வருடங்களுக்கு மேலாக வரிப்பாக்கி வைத்துள்ளன. இதில் கல்வி நிறுவனங்கள் தொடங்கி பெரிய மல்டி ஸ்பெஷல் மருத்துவ மனை, பெரிய ஸ்டார் ஹோட்டல்களிலிருந்து மதுரை காவல்துறை ஆணையர், நீதிபதிவரை பட்டியல் நீளுகிறது.

கடந்த 29-02-2020 அன்றைய தினத்தில் வைத்திருக்கும் வரிபாக்கி மட்டும் 40,00,00,000 (நாற்பது கோடி)க்குமேல் உள்ளது. மதுரையில் ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் வரி செலுத்துகிறார்கள். வருடத்திற்கு 150 கோடிக்கு மேல் வசூல் செய்கிறார்கள். இதில் 100 கோடி பெரும் நிறுவனத்தார்கள் சரியாக வரி செலுத் தாமல் இழுத்தடிக்கிறார்கள். ஆனால் சாதாரண மக்களிடம் ஆயிரம், இரண்டாயிரத்திற்கு இவ்வளவு கெடுபிடி காட்டுகிறார்கள். வரிப்பாக்கி வைத் திருப்பவர்களில் பெரும்பாலும் கல்வி நிறுவனங்கள் நடத்துபவர்கள். இவர்கள் வேண்டுமென்றே வரிப் பாக்கி வைத்துள்ளார்கள். கல்வி என்பது சேவை லிஸ்ட்டில் வருகிறது. அதனால் தங்களுக்கு விலக்கு அளிக்கவேண்டு என்று வழக்கு தொடர்ந்து வேண்டுமென்றே வரிப்பாக்கியை நிலுவையில் வைத்துவிட்டு வரி கட்டாமல் ஏமாற்றி வருகின்றனர். வரிப் பாக்கி வைத்திருப்பதில் நீதிபதி முதல் காவல் ஆணையர் வரையிலும், அரசு நிறுவனங்களும் அடங்கும். இதில் கொடுமை என்னவென்றால்... வருடம்தோறும் தவறாமல் வரி கட்டச்சொல்லி மாநகராட்சியிலிருந்து நோட்டீஸ் அனுப்பிக்கொண்டுதான் இருக் கிறார்கள். ஒவ்வொருத்தரும் பல கோடிகளில்தான் வரிப்பாக்கி வைத்துள்ளனர். இதை வசூலிக்க முடியாதவர்கள், சாதாரண மக்களிடம் கறார் காட்டுவது எந்தவிதத்தில் நியாயம்?'' என்கிறார்.

கோடீஸ்வரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிவிட்டு, எளிய மக்களிடம் மட்டும் கறார் வசூலில் ஈடுபடுவது குறித்து மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகனிடம் கேட்டபோது, ""வரி கட்டாத நிறுவனங்கள் பெரும் பாலும் கல்வி நிறுவனங்களாகவே இருக்கின்றன. 2017-இல் மாநக ராட்சியில் கட்டாயம் கல்வி நிறுவனங்கள் வரி கட்டவேண்டும் என்று தீர்மானம் போட்டார்கள். உடனே அவர்கள் நீதிமன்றம் போய் அதற்கு தற்காலிக விலக்கு வாங்கினார்கள். அதையும் எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளோம். அந்த வழக்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும், ஒவ்வொரு நிறுவனத்திடமும் நோட்டீஸ் அனுப்பி வரிவசூல் செய்ய தொடங்கி யிருக்கிறோம். அவர்களும் வரிப்பாக்கியை கட்டிக் கொண்டு வருகிறார்கள்''’என்று சொன்னதோடு முடித்துக்கொண்டார்.

எளிய மக்களிடம் காட்டும் கறார் வசூல் குறித்து அவர் எதுவும் பதில் சொல்லவில்லை.

-அண்ணல்

nkn070320
இதையும் படியுங்கள்
Subscribe