தலைநகர் சென்னையின், அடையாறு பகுதியில் குடியரசு தினத்தன்று, இந்திரா நகர் முதல் அவென்யூ மோட்டார் வாகனக் கடையின் எதிரே, ஒரு மூட்டையில் ரத்தம் வழிந்துகொண்டுள்ளதாக போலீசாருக்குத் தகவல் வந்தது.
மூட்டையில் 30 வயது மதிக்கத்தக்க ஓர் ஆண் பிணமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், பிணத்தை பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப் பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்,
அந்த நபரின் பேன்ட்டில் ஒரு துண்டுச் சீட்டு இருந்தது. அதில் சில செல்போன் எண்கள் இருக்க, அந்த எண்களுக்கு போன் செய்த
தலைநகர் சென்னையின், அடையாறு பகுதியில் குடியரசு தினத்தன்று, இந்திரா நகர் முதல் அவென்யூ மோட்டார் வாகனக் கடையின் எதிரே, ஒரு மூட்டையில் ரத்தம் வழிந்துகொண்டுள்ளதாக போலீசாருக்குத் தகவல் வந்தது.
மூட்டையில் 30 வயது மதிக்கத்தக்க ஓர் ஆண் பிணமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், பிணத்தை பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப் பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்,
அந்த நபரின் பேன்ட்டில் ஒரு துண்டுச் சீட்டு இருந்தது. அதில் சில செல்போன் எண்கள் இருக்க, அந்த எண்களுக்கு போன் செய்தபோது, அது அடையாறிலுள்ள ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனமெனத் தெரிய வந்தது. போலீசார் அங்குசென்று விசாரணை நடத்தியபோது, பிணமாகக் கிடந்த அந்நபரின் பெயர் கௌரவ் குமார், பீகாரை சேர்ந்தவர், வேலை தேடி அடையாறிலுள்ள தனியார் செக்யூரிட்டி நிறுவனத்துக்கு வந்ததாகவும், 10 நாள் கழித்து வரும்படி கூறியதாகவும் மேலாளர் தெரிவித்துள்ளார்.
சென்னை சிட்டி போலீஸ் கமிஷனர் அருண், கொலையாளி களைப் பிடிக்க 5 தனிப்படை அமைத்து விசாரணையைத் துவக்கினார். சி.சி.டி.வி. காட்சிகளில் பிணமூட்டையை ஏற்றிவந்த பைக்கின் பதிவு எண் சிக்கியதும், அந்த நபர்களை தேடிப்பிடித்தனர். 9 பேரை விசாரணை வளையத்தில் கொண்டு வந்த போலீசார், சிக்கந்தர் என்பவரை தீவிர விசா ரணைக்குட்படுத்தினர். அப்போதுதான் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியானது. கொலையானது ஒருவ ரல்ல, 3 பேர் என்பது.
கொலையான கௌரவ்குமாரும், சிக்கந்தரும் பீகாரைச் சேர்ந்தவர்கள், இரு வருக்கும் காஞ்சி புரத்தில் பணி செய்யும்போது பழக்கம். கடந்த ஜனவரி 21ஆம் தேதி தன் மனைவி முனிதா குமாரி, 2 வயது மகன் பீர் மணிக் குமார் மூவருமாக ரயில் மூலம் சென் னைக்கு வந்துள்ளனர்.
கௌரவ்குமார் குடும்பத்துடன் இரண்டு நாள் பிளாட்பாரத்தில் தங்கியிருந்த நிலையில், சிக்கந்தர் அடையார் பகுதியில் இருப்பதாகத் தெரியவரவே, சிக்கந்தரை தொடர்புகொண்டு பேசியபோது தன்னுடன் தங்கிக்கொள்ள சொல்லவே, ஜனவரி 24ஆம் தேதி தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் தங்கியிருந்த சிக்கந்தர் அறையில் குடும்பத்துடன் தங்கியுள்ளார்.
அன்றிரவு சிக்கந்தர், அவரது நண்பர்களான நரேந்திரகுமார், ரவீந்திரநாத் தாகூர், பிகாஸ் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். சிக்கந்தரின் பார்வை கௌரவின் மனைவி முனிதாகுமாரிமீது பட, அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட, தடுக்கவந்த கௌரவ்குமாரை இரும்பு ராடால் தாக்கி கொலை செய்துள்ளனர். மத்திய பாலிடெக்னிக் கல்லூரியின் இரண்டாவது தளத்திலுள்ள லைப்ரரியின் பக்கத்து அறைவில் வைத்து இரவு முழுக்க பலாத்காரத்தில் ஈடுபட்ட நிலையில், குழந்தை அழுது சத்தமிட்டதால் அந்தக் குழந்தையை சுவரில் அடித்து கொடூரமாகக் கொலை செய்துள்ளான் சிக்கந்தர். கடைசியில் முனிதாகுமரியையும் கொன்று, இரவு முழுக்க பிணத்துடனே தூங்கியுள்ளனர். மறுநாள் டிஸ்போஸ் செய்யப்பட்ட பிணங்களில், இந்திரா நகரில் மூட்டை கட்டி வீசப்பட்ட கௌரவ்குமாரின் உடல் சிக்க... போலீஸ் விசாரணையில் இந்தக் கும்பல் சிக்கியுள்ளது.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us