நவம்பர் 6, 11-ஆம் தேதிகளில் பீகாருக்கு இரண்டு கட்டத் தேர்தல் என அறிவித்திருக்கிறது தேர்தல் ஆணையம். இதையடுத்து பீகாரில் அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்கு மும்முரமாக ஆயத்தமாகத் தொடங்கியுள்ளன.
கடந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் ஒருங்கிணைந்த ஜனதா தளம் 115 தொகுதிகளிலும், பா.ஜ.க. 110 தொகுதிகளிலும் போட்டியிட்டன. அதில் பா.ஜ.க. 74 இடங்களிலும், ஜனதா தளம் 43 இடங்களிலும் வென்றது. அதேபோல ராஷ்ட்ரிய ஜனதா தளம் 144 இடங்களில் போட்டியிட்டு 74 இடங்களில் வெற்றிபெற, காங்கிரஸ் 70 இடங்களைக் கேட்டுப்பெற்று 19 இடங்களில் மட்டுமே ஜெயித்தது. இரு கூட்டணியிலுமே ஒரு முக்கிய கட்சி பெரும்பாலான இடங்களைக் கோட்டைவிட்டது சிக்கலை ஏற்படுத்தியது. எனினும் தேசிய ஜனநாயகக் கூட்டணி, சுயேட்சைகளின் தயவோடு ஆட்சியமைத்தது.
இம்முறை பா.ஜ.க. 101, ஒருங் கிணைந்த ஜனதா தளம் 101 இடங் களில் போட்டி யிடுகின்றன. மிச்ச முள்ள 42 இடங் களை எல்.ஜே.பி. (ராம்விலாஸ்), ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகளுக்கு தே.ஜ.கூ. பிரித்துக்கொடுத்திருக்கிறது.
மகாபந்தன் கூட்டணியில் காங்கிரஸ் 70 இடங்களைக் கேட்க, ஆர்.ஜே.டி. 58 இடங்களை ஒதுக்குவதாகச் சொல்கிறது. மற்றொரு கூட்டணிக் கட்சியான சி.பி.ஐ.(எம்.எல்.) கடந்த முறை பெற்ற அதே 19 சீட்டுகளை கோரிப்பெற்றிருக்கிறது. பா.ஜ.க. சீட்டுப் பகிர்வை முடித்து பிரச்சாரக் களத்தில் இறங்கியிருக்க, காங்கிரஸ்- ஆர்.ஜே.டி. கூட்டணியில் இடப்பகிர்வு இன்னும் முடிவுக்கு வராதது பின்னடைவுதான்.

பீகாரில் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சுமார் 17% முஸ்லிம்கள். ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் உவைசியுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமுகமாகப் போகாததால் அக்கட்சி தனியாகப் போட்டியிட முடிவுசெய்துள்ளது. இது அந்த வாக்குகளைப் பிரிப்பதோடு மகாபந்தன் கூட்டணிக்கு எதிராகவே செல்லும்.
இந்தியாவின் பெரிய கட்சிகளுக்கு வியூகம் வகுத்தளித்த பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி பீகாரில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுமெனத் தெரிகிறது. இதுவரை2 கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது அக்கட்சி.
மகாபந்தன் கூட்டணிக்கு ஆதரவாக வாக்குகளைத் தீர்மானிக்கும் விஷயங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்:
நிதிஷ்குமார் கடந்த 20 வருடங்களாக முதல்வராக நீடித்துவருகிறார். வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு வழங்கமுடி யாதது, வயது காரணமாக அரசு நிர்வாகத்தில் முழு மையாக ஈடுபடமுடியாதது, ஆட்சிக்கு எதிரான மனநிலை போன்றவை அவற்றில் முக்கியமானது.
பல்வேறு கருத்துக் கணிப்பு அமைப்புகள் மக்களின் பல்ஸ் பார்த்ததில், யாரை முதல்வராகத் தேர்ந் தெடுப்பீர்கள் என்ற கேள்விக்கு தேஜஸ்வியையே பெரும்பாலும் கைகாட்டியிருக்கிறார்கள். ஆனால் யார் வெற்றிபெறுவார்கள் என்பதற்கு என்.டி.ஏ. கூட்டணிக்கே ஒரு சதவிகிதம் அதிகமாக வாக்குகள் விழுந்திருக்கிறது.
“கடந்த 20 ஆண்டுகளாக இளைஞர்களுக்கு வேலை வழங்கமுடியவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு அரசு வேலை” என செல்லுமிடமெல்லாம் முழங்கிவருகிறார் தேஜஸ்வி.
பா.ஜ.க. தலைவர் சுஷில்குமார் மோடியின் மறைவு, பீகார் பா.ஜ.க.வுக்கு பாதிப்பு. அவரது இடத்தை புதிய தலைவர்கள் நிரப்புவார்களா என்பது சந்தேகம்தான்.
பீகார் வாக்காளர் பட்டியலில் லட்சக்கணக்கில் பெயர்கள் விடுபட்டிருப்பதாக ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி, ராகுல் மேற்கொண்ட வோட்டுத் திருடன் பிரச்சாரம் பீகார் இளைஞர்களை ஈர்த்திருக்கிறது. அதற்கெதிராக, சட்டவிரோதக் குடியேறிகளுக்கு மகாபந்தன் கூட்டணி ஆதரவு தருகிறதா எனக் கேள்வியெழுப்புகிறது தே.ஜ. கூட்டணி. சட்டவிரோதக் குடியேறிகளை நாட்டுக்குள் யார் அனுமதித்தது என காங்கிரஸ், பா.ஜ.க.வின் மென்னியைப் பிடிக்கிறது. தேர்தல் நெருங்க இத்தகைய பிரச்சாரங்கள் சூடுபிடிக்கும். இந்தப் பிரச்சாரத்தில் வலுவாகக் குரலெழுப்புபவர்கள் பக்கமே சாதகம் நிகழும்.
ஜன் சுராஜ் கட்சி யின் பிரசாந்த் கிஷோர், பா.ஜ.க., ஒருங்கிணைந்த ஜனதா தளம் இரண் டையும்தான் முரட்டுக் குத்து குத்துகிறார். ஆக, அவரது பிரச்சாரம் பா.ஜ.க. கூட்டணிக்கு விழும் வாக்குகளை சேதாரம் செய்யப் போகிறதா… இல்லை மகாபந்தன் கூட்டணி யிலும் சேதாரம் செய்யப்போகிறதா என்பதும் முக்கியமான கேள்வி.
மாறாக, பா.ஜ.க. -ஒருங்கிணைந்த ஜனதா தளம் கூட்டணி, ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது. வாக்காளர்கள் திரளாக பெயர்நீக்கப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பெரிதாக ஆளுங்கட்சியையோ, தேர்தல் ஆணையத்தையோ கடிந்துகொள்ளவில்லை.
காங்கிரஸ், ஆர்.ஜே.டி. இரண்டுமே 20 வருடங்களாக ஆட்சியில் இல்லை. இது, அதன் தொண்டர்களைப் பாதித்திருக்கிறது. இதில் காங்கிரஸ் பீகாரில் 30 வருடமாக ஆட்சியிலில்லை. இதன் தாக்கத்திலிருந்து அதன் தொண்டர்களைத் தட்டியெழுப்பி, உற்சாகமாக தேர்தலை எதிர்கொள்ளச் செய்ய, அவை பிரம்மபிரயத்தனம் செய்யவேண்டும்.
மாறாக, நிதிநிலை யிலும் பிரச்சாரக் கட் டமைப்பிலும் ஆன்லைன் பிரச்சாரத்திலும் வலுவாக இருக்கும் பா.ஜ.க. தன் குரல்கள் வலுவாக மக்களின் செவியில் விழும்படி பார்த்துக் கொள்ளும்.
ஒருபக்கம் மஹா பந்தன் கூட்டணி, உவைசி தனித்து நிற்பதன் காரணமாக முஸ்லிம் வாக்குகளில் கணிச மானதை இழக்கிற தென்றால், ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதன் காரணமாக தலித் வாக்குகளிலும் கணிசமாக இழக்கிறது. இயல்பாகவே முற்பட்ட வகுப்பினரின் ஆதரவு பா.ஜ.க. பக்கம் என்பதால், இடைநிலை ஜாதியினரின் வாக்குகளைப் பெருவாரியாக அள்ளி னால்தான் இக் கூட்டணிக்கு வலு வான வாய்ப்பு. இதை எதிர்கொள்ள இக் கூட்டணி என்ன செய்யப்போகிறது என்பதே கேள்வி.
லாலு கட்சி என் றாலும், தேஜஸ்விக்கும் அவரது சகோதரர் தேஜ் பிரதாப்புக்கும் நெடுநாட்களாகவே உரசல் இருக்கிறது. தேஜஸ்வியை எக்ஸ் தளத்தில் அவரது சகோதரர் தேஜ் பின் தொடரவில்லை. இந்த உரசலைத் தொட்டுக்காட்டும் பிரச்சாரங்கள் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தைப் பாதிக்கும்
பா.ஜ.க. சிறுதொழில் முனையும் பெண்களுக்கு என்றுகூறி 1.21 கோடி பெண்களுக்கு 10,000 ரூபாய் கொடுத்திருக் கிறது. இது வாக்குக்குக் கொடுக்கப்பட்ட பணமாகவே கருதப்படும். இதன் தாக்கத்தை மீறி பெண்களின் வாக்குகளைக் கவர மஹாபந்தன் கூட்டணி ஒரு நல்ல யோசனையை முன்வைக்கவேண்டும்.
லாலு ரயில்வே அமைச்சராக இருந்த போது நடந்த மோசடியான, ஐ.ஆர்.சி.டி.சி. ஹோட்டல் நில மோசடி வழக்கை விசாரணை அமைப்புகள் தற்போது கையிலெடுத்து அதில் தேஜஸ்வி பெயரையும் குறிப்பிட்டிருப்பது எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இப்போதைக்கு மஹாபந்தன் கூட்டணிக்கு முன்னால் இமயமலையைப் புரட்டும் பணி இருக்கிறது. மாறாக என்.டி.ஏ. கூட்டணிக்கு வெற்றியை மறுஉறுதிப்படுத்தும் வேலை மட்டும்தான்.
_____________
பிரசாந்த் கிஷோர்:
வியூகம் மட்டும் பலன்தருமா?
ஜன் சுராஜ் என்பதற்கு தமிழில் தோராயமாக "மக்கள் நல்லாட்சி' எனப் பொருள். இதன் தலைவரான பிரசாந்த் கிஷோர் பீகார் முழுவதும் வேட்பாளர்களை நிறுத்தினாலும் அவர் எந்தத் தொகுதியிலும் போட்டியிடவில்லை. கட்சி ஆரம்பித்து ஒரு வருடம்தான் ஆகிறது. பிரசாந்த் கிஷோரை தவிர்த்து வேறு யாரும் அறிந்த முகங்களில்லை. பூத் லெவல் நிர்வாகம், வலுவான கட்சியமைப்பு இல்லாதது பலவீனம். அதேசமயம், மக்களிடம் கட்சியை எடுத்துச்செல்வது எப்படியென்ற வியூகங்கள் நன்கறிந்தவர். பீகார் மக்கள் வேலைக்காக இடம்பெயர்வதைத் தடுப்பேன், பஞ்சாயத்து நிர்வாகம் போன்றவற்றை வலுப்படுத்துவேன், கல்விக் கட்டமைப்பை பீகாரில் மேம்படுத்துவேன் என பாமரர்களின் கனவைத் தட்டியெழுப்புகிறார். கூடவே, "பீகாரில் எதற்கு மதுவிலக்கு... நான் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை நீக்கி மதுக்கடைகளைத் திறப்பேன்' என்கிறார். பிரசாந்த் கட்சியால் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத்தான் ஆபத்து என மகாபந்தன் கூட்டணியும், மகாபந்தன் கூட்டணிக்குத்தான் ஆபத்து என என்.டி.ஏ.வும் மாற்றி மாற்றி சொல்லிக்கொள்கின்றன. இந்தத் தேர்தல் முடிவுதான், கிஷோரின் அரசியல் முடிவு சீரியஸானதா... நகைச்சுவை யானதா எனத் தெரியவைக்கும்.