ராங் கால் : ஸ்டாலினுக்கு பீகாரு! எடப்பாடிக்கு பெங்களூரு! நீதிக்குப் பின் பதவி! ஓர் இந்திய சர்ச்சை!

rr

""ஹலோ தலைவரே, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை மோடி அரசு ராஜ்யசபா உறுப்பினராய் ஆக்கியிருப்பது இந்திய அளவில் சர்ச்சைகளை உருவாக்கிடிச்சே..''

""ஆமாம்பா... பாலியல் குற்றச்சாட்டு அவர்மேலே வந்தது. அப்புறம் அவர் தலைமையிலான பெஞ்ச்சிலிருந்து அயோத்தி விவகாரம் தொடர்பா தீர்ப்பு வந்தது. இப்ப ரிடையர்டுக்குப் பிறகு ராஜ்யசபா பதவி வந்திருக்குது.. சர்ச்சையும் வரத்தானே செய்யும்.''’

rr

""உண்மைதாங்க தலைவரே, கடந்த ஆண்டு, தீபக் மிஸ்ரா, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தப்ப, இதே ரஞ்சன் கோகாய், தன் சக நீதிபதிகளான செல்லமேஸ் வர், மதன் பி தாக்கூர், குரியன் ஜோசப் ஆகி யோரோடு ஊடகத்தினரை சந்திச்சார். உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்தை அரசு ஆக்கிரமிக்கப் பார்க்குது. தங்களுக்குத் தேவையான நீதிபதிகளைக் கொண்ட அமர்வுகளைத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மூலம் அது உருவாக்குதுன்னு’ மோடி அரசைக் கடுமையாக விமர்சிச்சார். அப்ப டிப்பட்டவரை மோடி அரசு நியமன எம்.பி. யாக்கியிருக்கு.''’

""ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியா இருந்த சதாசிவம் ரிடையர்டுக்குப் பிறகு கவர்னரானப்பவும் சர்ச்சை வந்ததே?''’

""குஜராத் தொடர்பான வழக்குகளில் சதாசிவம் தீர்ப்பளித்திருந்தாரு. கோகாய் இப்ப பரபரப்பா விவாதிக்கப்படுற ஒரு விவகாரத்தில் தீர்ப்பளிச்சவரு. அதாவது, 1971-க்குப் பின் இந்தியா வந்த வங்கதேச அகதிகளில் 2 ஆயிரம் பேரை அஸ்ஸாமில் கண்டுபிடிச்சி, அவங்களுக்கு குடியுரிமை இல்லைன்னு வெளியே அனுப்புனப்ப, இது தொடர்பான வழக்கை விசாரிச்சவரு ரஞ்சன் கோகாய். குடியுரிமையை நிரூபிக்க வேண்டிய வேலை அரசுக்குக் கிடையாது. அந்தப் பொறுப்பு குடிமக்களுக்குதான் இருக்கு. அதனால் வெளிநாட்டில் இருந்து வந்த ஒவ்வொருவரும் தங்கள் குடியுர

""ஹலோ தலைவரே, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை மோடி அரசு ராஜ்யசபா உறுப்பினராய் ஆக்கியிருப்பது இந்திய அளவில் சர்ச்சைகளை உருவாக்கிடிச்சே..''

""ஆமாம்பா... பாலியல் குற்றச்சாட்டு அவர்மேலே வந்தது. அப்புறம் அவர் தலைமையிலான பெஞ்ச்சிலிருந்து அயோத்தி விவகாரம் தொடர்பா தீர்ப்பு வந்தது. இப்ப ரிடையர்டுக்குப் பிறகு ராஜ்யசபா பதவி வந்திருக்குது.. சர்ச்சையும் வரத்தானே செய்யும்.''’

rr

""உண்மைதாங்க தலைவரே, கடந்த ஆண்டு, தீபக் மிஸ்ரா, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தப்ப, இதே ரஞ்சன் கோகாய், தன் சக நீதிபதிகளான செல்லமேஸ் வர், மதன் பி தாக்கூர், குரியன் ஜோசப் ஆகி யோரோடு ஊடகத்தினரை சந்திச்சார். உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்தை அரசு ஆக்கிரமிக்கப் பார்க்குது. தங்களுக்குத் தேவையான நீதிபதிகளைக் கொண்ட அமர்வுகளைத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மூலம் அது உருவாக்குதுன்னு’ மோடி அரசைக் கடுமையாக விமர்சிச்சார். அப்ப டிப்பட்டவரை மோடி அரசு நியமன எம்.பி. யாக்கியிருக்கு.''’

""ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியா இருந்த சதாசிவம் ரிடையர்டுக்குப் பிறகு கவர்னரானப்பவும் சர்ச்சை வந்ததே?''’

""குஜராத் தொடர்பான வழக்குகளில் சதாசிவம் தீர்ப்பளித்திருந்தாரு. கோகாய் இப்ப பரபரப்பா விவாதிக்கப்படுற ஒரு விவகாரத்தில் தீர்ப்பளிச்சவரு. அதாவது, 1971-க்குப் பின் இந்தியா வந்த வங்கதேச அகதிகளில் 2 ஆயிரம் பேரை அஸ்ஸாமில் கண்டுபிடிச்சி, அவங்களுக்கு குடியுரிமை இல்லைன்னு வெளியே அனுப்புனப்ப, இது தொடர்பான வழக்கை விசாரிச்சவரு ரஞ்சன் கோகாய். குடியுரிமையை நிரூபிக்க வேண்டிய வேலை அரசுக்குக் கிடையாது. அந்தப் பொறுப்பு குடிமக்களுக்குதான் இருக்கு. அதனால் வெளிநாட்டில் இருந்து வந்த ஒவ்வொருவரும் தங்கள் குடியுரிமையை அவர்களே நிரூபிக்கணும்னு தீர்ப்பு கொடுத்தாரு. இது தான், சி.ஏ.ஏ., என்.ஆர்.சியையெல்லாம் மோடி-அமித்ஷா கூட்டணி கொண்டுவர வாய்ப்பா அமைந்தது. இப்ப நாடாளுமன்றத்திலும் வெளியிலும் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் குரல் கொடுப்ப தால், அந்தச் சட்டங்களுக்கு ஆதரவா வாதங்களை வைக்க கோகாய் பயன்படுவாருன்னு பா.ஜ.க. எதிர்பார்க்குதாம்.''’

""நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியேற்பை எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்து எதிர்ப்பைப் பதிவு செய்ததும் ரஞ்சன் கோகாய் பதவியேற்பில்தானே!''’

""ஆளுந்தரப்பினர் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. இங்கே மாநிலத்திலும் அப்படித்தான்... பட்ஜெட் மானியக்குழு கூட்டத் தொடரில் 110 விதியின்கீழ் நிறைய அறிவிப்புகளை எடப்பாடி வெளியிடுறாரு. மு.க.ஸ்டாலினுக்கு பீகாரு பிரசாந்த்கிஷோர்னா, எடப்பாடிக்கு பெங்களூரு டீம்தான் தேர்தல் வியூக வகுப்பாளர் களாம். ராஜ்யசபா சீட் உள்பட பலவற்றிலும் அ.தி.மு.க.வில் உரிய முக்கியத்துவம் இல்லைங்கிற ஆதங்கம் நாடார் சமூகத்துக்கு இருப்பதால், பனைத் தொழிலாளர்களுக்கு இனிப்பு தரும் செய்தியாக, ரேசனில் இனி சர்க்கரைக்கு பதில் கருப்பட்டி வழங்கப்படும்ன்னு 110விதியின்கீழ் எடப்பாடி அறிவிச்சதும் பெங்களூரு டீம் வியூகம் தானாம். துப்புரவுத் தொழிலாளர்களைத் தூய்மை தொழிலாளர்கள்னு அறிவித்தது, அரசு வேலை வாய்ப்பில் தமிழில் படித்தவர்களுக்கே முன்னு ரிமை எல்லாமும் அதே டீமின் ஐடியாதானாம்.''

e

""கொரோனா பாதிப்பிற்கிடையிலும் சட்ட மன்றக் கூட்டத்தொடர் சளைக்காமல் நடக்குதே?''

""கூட்டத்தொடர் நடக்கும் நேரத்திலும் சட்டமன்ற வளாகத்தில் இருக்கும் கேண்டீன்கள் மூடித்தான் இருக்குது. இது பத்திரிகையாளர் களையும் எம்.எல்.ஏ.க்களுடன் வரும் கட்சிக் காரர்களையும் கஷ்டப்படுத்துது. அதனால்தான் துரைமுருகன், தமிழ்நாட்டில் சட்டமன்றமும் டாஸ்மாக்கும்தான் திறக்கப்பட்டிருக்குன்னு நக்கலடிச்சிருக்கார்.''’

""சட்டமன்றத்தில் பேசிய எடப்பாடி, தமிழகத்தில் கட்டுமானப் பணிகளுக்கு 80%பேர் எம் சாண்ட்டைத்தான் பயன்படுத்தறாங்கன்னும் மணல் திருடர்கள் கைது செய்யப்படுகிறார்கள்னும் சொல்லியிருக்காரே?''

""80% பேர் எம்.சாண்ட் பயன்படுத்துறதா முதலமைச்சர் சொன்னாலும், அவரோட பி.ஏ. தரப்பு ஆற்று மணலைத்தான் நம்புது போல. எடப் பாடியின் பி.ஏ.க்களில் ஒருவரான சேகருக்கு வேண் டிய பெரிய டீமே மணல் அள்ளிக்கிட்டு இருக்கு. திருவள்ளூரில் இருந்து கடலூர் வரை, ஒரு லோடு ரூபாய் 45 ஆயிரம் வீதம் விற்கப்படுது. பாதுகாக் கப்பட்ட வேளாண் மண்டலம்னு அறிவிச்சி காவிரி காப்பாளர் பட்டம் வாங்கிக்கிட்ட எடப்பாடி ஆட்சியில், டெல்டா மாவட்ட ஆறுகளை ஒட்டிய பகுதிகளில் மணலை எடுத்து ஒரு டிராக்டர் டிப்பர் மண் 6 ஆயிரம் ரூபாய்னு விக்கிறாங்க. எம்.சாண்ட் பயன்படுத்துற மாநிலத்தில் யாருக்காக இந்த மணல் அள்ளப்படுது. அதன் வருமானம் யார், யாரின் கஜானாவை நிரப்புது? கைதாக வேண்டிய மணல் திருடர்கள் பலரும் கோட்டையில் உள்ளவர்களிடம் பாதுகாப்பா இருக்காங்கன்னு ஆளுந்தரப்பிலிருந்து குற்றம்சாட்டப்படுது. அதிக விலை கொடுத்து மணல் வாங்குவதால் பணிகள் பாதிக்கப்படும் கட்டுமானத்துறையினரும் புலம்புறாங்க.'' ’

yy

""புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன், எடப்பாடி பழனிச் சாமியை சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறாரே?''’

""17-ந் தேதி முதல்வர் எடப்பாடியிடம் முருகன் வாழ்த்து பெற்றப்ப, என்ன சார்? இதுவரை உங்களைப் பார்த்ததும் இல்லை. கேள்விப்பட்டதும் இல்லையே...ன்னு எடப்பாடி வியப்பு தெரிவிச்சதோட, இதுவரை டெல்லியிலா இருந்தீங்க? என்ன செஞ்சிக்கிட்டு இருந்தீங்கன்னு கூலா விசாரிச்சிருக்கார். முருகனும் தன்னைப் பற்றிய விபரங்களை எல்லாம் எடுத்துச் சொன்னதோட, நான் டெல்லியில் இருந்தாலும் தமிழக அரசியலை உன்னிப்பா கவனிச்சிக்கிட்டுதான் இருந்தேன். உங்கள் பணிகள் என்னை கவர்ந்திருக்குன்னு பாராட்டினார். பதிலுக்கு எடப்பாடியும், தமிழக அரசியலுக்குப் புதுமுகமான நீங்கள், மேலும் மேலும் சிறப்படைய வாழ்த்தறேன்னு மகிழ்வோடு ஆசி வழங்கியிருக்கார்.''’

""தமிழக பா.ஜ.க. தலைவர் பதவி நிரப்பப்பட் டாலும் மற்ற பதவிகளுக்கு தமிழக பா.ஜ.க.வின ரிடையே பவர் யுத்தம் பரபரப்பா நடக்குதாமே?''’

""ஆமாங்க தலைவரே, பா.ஜ.க.வில் புதிய மாநிலத் தலைவர் நியமிக்கப்பட்டிருப்பதால், கட்சியின் தலைமை நிர்வாகிகளும் புதுசா தேர்ந்தெடுக்கப்பட இருக்காங்க. அந்தப் பதவிகளை நோக்கித்தான் இப்போ கட்சிப்புள்ளிகள் வரிஞ்சி கட்டறாங்க. தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் 7 பொதுச் செயலாளர் பதவியைக் குறிவச்சி எக்ஸ் எம்.பி. நரசிம்மன், எக்ஸ் எம்.எல்.ஏ. வேதரத்தினம், கருப்பு முருகானந்தம், கரு.நாகராஜன், விக்டோரியா கௌரி ஆகிய பா.ஜ.க. புள்ளிகள் பரபரக்கறாங்க. 8 rajiniதுணைத் தலைவர்கள் பதவிகள் நிரப்பப்பட இருப்பதால், அதற்கு எக்ஸ் எம்.பி. சசிகலா புஷ்பா, எக்ஸ்.எம்.எல்.ஏ. ரவிராஜ், மாஜி மந்திரி நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் காய் நகர்த்தறாங்க. தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் 10 செயலாளர் பதவிகளுக்காக நடிகை காயத்ரி ரகுராம், கே.டி.ராகவன் உள்ளிட்டோர் ஃபைட் பண்றாங்க. இதேபோல் மாநில இளைஞரணித் தலைவர் பதவிக்கு இப்ப இருக்கும் வினோஜும் மோடியின் சிஷ்யர்னு சொல்லப்படும் பிரித்வியும் முண்டியடிக்கிறாங்க. அதனால் அங்கே யுத்த ஆரவாரம் களைகட்டுது.''’

""அரசியல் கட்சி தொடங்கும் முன்பே, இணைய தள தொழில் நுட்பக் குழுவை ரஜினி வச்சிருக்காரே?''’

""உண்மைதாங்க தலைவரே, தமிழக அரசியல் கட்சிகள் ஒவ்வொன்னும் வலைத்தள செயல்பாடுகளுக்காக தொழில் நுட்பக் குழுவை நிய மிச்சிருப்பது போல் ரஜினியும், அப்படிப்பட்ட ஒரு குழுவோடு இணைஞ்சிருக்கார். அந்தக் குழு தான், அவரோட லீலா பேலஸ் ஸ்பீச்சில் அவர் சொன்ன தமிழ்நாட்ல அரசியல் மாற்றம், ஆட்சி மாற் றம் இப்ப இல் லைன்னா... எப்பவுமே இல்லைங்கிற டயலாக்கை ரஜினியின் அனுமதியோட வலைத்தளங்கள்ல ட்ரெண்ட் ஆக்கியிருக்கு. இதுக்குக் கிடைச்ச வரவேற்பு, ரஜினியை உற்சாகப்படுத்தியிருக்கு தாம். ரஜினியும் அவர்களை என்கரேஜ் பண்ணி யிருக்காரு. அதையடுத்துதான், ஒரு விருது விழாவில் பேசுறப்ப, நான் புள்ளி வச்சிட்டேன். அது சுழலா மாறியிருக்கு. அப்புறம் அலையாகி, தேர்தல் நேரத்தில் சுனாமியாகும்னு பஞ்ச் டயலாக் அடிச்சிருக்காரே..''’

""அது சம்பந்தமா நானும் ஒரு செய்தியைப் பகிர்ந்துக்கறேன், அந்த விருது விழாவில் கலந்துக்கிட்ட ரஜினி, கலைஞரை சி.எம். ஆக்கியது எம்.ஜி.ஆர்.தான்னும், தி.மு.க.வில் இருந்து வெளியே வந்து எம்.ஜி.ஆர். கணக்குக் கேட்டப்ப, அவர் மீது அனுதாப அலை உருவாச்சுன்னும், 1991-ல் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டபோது தி.மு.க. வுக்கு எதிரான அலை உருவாகி ஜெ.வை முதல்வராக்கியதுனு ஆரம்பிச்சி, தி.மு.க. தரப்பை விமர்சனம் செஞ்சாரு. வழக்கமா இது போன்ற ரஜினியின் தாக்குதல் களுக்கு அதிரடி பதில் கொடுப்பது உதயநிதியின் வழக்கம். ஆனா, இந்த முறை அவர் சைலன்ட். ஸ்டாலினும் வழக்கம்போல சட்டை செய்யலை. காரணம், ’சீண்ட நினைக்கும் எதிரியை சைலண்டா அலட்சியப்படுத்துங்கன்னு தேர்தல் வியூக வகுப்பாளரான பீகார்காரரின் ’ஐபேக்’ ஆலோ சனை சொல்லியிருக்குதாம்.''

nkn210320
இதையும் படியுங்கள்
Subscribe