பீகார் தேர்தலில் 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6-ஆம் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவு நடந்திருக்கிறது. இத்தேர்தலில் 65 சதவிகித வாக்குகள் பதிவானது. இது பீகாரில் எந்த சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்கு சதவிகிதத்தை விடவும் அதிகமாகும். இதையடுத்து இந்த வாக்கு சதவிகித விவகாரத்தை வைத்தே, அடுத்தகட்ட பிரச்சாரத்தை முக்கிய கட்சிகள் முன்னெடுத்து வருகின்றன.
பீகார் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான உதித்ராஜ், "பீகார் முதற்கட்ட வாக்குப் பதிவில் 65 சதவிகிதத்துக்கு நெருக்கமான வாக்குகள் பதிவாகியிருப்பது ஆட்சிக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள் என்பதன் அடையாள மாகும். மூன்றில் இரு பங்கு பெரும் பான்மையுடன் மகாபந்தன் கூட்டணி ஆட்சியைப் பிடிப்பதைப் பார்க்கத்தான் போகிறீர்கள்''’என்றிருக்கிறார். பா.ஜ.க. என்ன இளைத்த கட்சியா, பா.ஜ.க. கூட்டணியினரும், "தங்கள் கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்' என்கிறார்கள்.
"மாநிலத்தின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு தாய்மார்கள், சகோதரிகள் வந்து தேர்தலில் வாக்களித்திருக்கிறார்கள். எனவே பீகாரில் தே.ஜ. கூட்டணியே ஆட்சியில் தொடரும்''” என பிரதமர் மோடி பிரச் சாரத்தில் வேப்பிலையடித்திருக்கிறார். கூடவே பா.ஜ.க.வினர் "குஜராத், மத்தியப் பிரதேசத்தில் வாக்குப் பதிவு சதவிகிதம் அதிகரித்தும், திரும்ப பா.ஜ.க.வே ஆட்சிக்கு வந்திருக்கிறது. அதனால் மஹாபந்தன் கூட்டணிக்காரர்கள் விடும் கதையை ஏற்கமாட்டோம்'' என்கிறார்கள்.
இந்த இரு அணியினரும் பட்டை யைக் கிளப்புகையில், புதிதாக ஜன் சுராஜ் கட்சியைத் தொடங்கியவரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர், "30 வருடங்களில் இல்லாத அளவுக்கு வாக்குப் பதிவு நடந்திருக்கிறது. பீகாரில் நிச்சயம் மாற்றம் வரப்போகிறது''’என ஆரூடம் சொல்கிறார்.
இது ஒருபுறமிருக்க தில்லி பேரவைத் தேர்தலில் வாக்களித்த பா.ஜ.க. மாநிலங்களவைத் தலைவர் எம்.பி. ராகேஷ் சின்ஹா, சந்தோஷ் ஓஜா உள்ளிட்ட சில தலைவர்கள் பீகார் தேர்தலிலும் வாக்களித்திருக் கிறார்கள். இதுகுறித்து காங்கிரஸின் ராகுல், ஆம் ஆத்மி தலைவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். அதற்கு பா.ஜ.க. தரப்பில், "அவ்விருவரும் டில்லி வாக் காளர் பட்டியலிலிருந்து தங்கள் பெயரை நீக்கிவிட்டு பீகாரில் வாக்காளர்களாகப் பதிவு செய்து கொண்டே வாக்களித்துள்ளதாக' விளக்கமளித்துள்ளனர்.
"தில்லி தேர்தல் நடந்தது பிப்ரவரி 2025, ஒன்பது மாதங்களில் தங்கள் பெயரை மாற்றிக்கொண்டு பீகாரிலும் வாக்களிப்பது எந்தவிதத்தில் நியாயம்? பா.ஜ.க.வினர் என்றால் இப்படி தேர்தல் நடக்கும் மாநிலங்களில் எல்லாம் பெயரை மாற்றிக்கொண்டு வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதிக்குமா?' என எதிர்க்கட்சிகள் பா.ஜ.க.வை விளாசிக் கொண்டிருக்கின்றன.
-சூர்யன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/10/bihar-election-2025-11-10-17-52-57.jpg)