Advertisment

தமிழகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது! -போட்டுடைக்கும் டாக்டர் சரவணன்

ss

ரணமடைந்த இந்திய இராணுவ வீரர் லெட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தவந்த இடத்தில் அமைச்சர் பி.டி.ஆர். கார்மீது பா.ஜ.க.வினர் செருப்பு வீச, அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அன்று இரவு 12 மணிக்கு பா.ஜ.க.வின் மாவட்டச் செயலாளர் டாக்டர் சரவணன், நடந்த சம்பவத்திற்கு அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டார் இந்நிலையில் கடந்த 25-ஆம்தேதி இந்த சம்பவம் தொடர்பாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் தற்போதைய மாவட்டச் செயலாளர் சுசீந்திரனும் பேசும் ஆடியோவும் வெளியாகி தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து டாக்டர் சரவணனிடம் பேசினோம்.

அந்த ஆடியோவில் பேசிய குரல்கள் உண்மையா?

Advertisment

100க்கு 100% உண்மை. ரஜினி, கமல் போன்று பரிச்சயமான குரல்களை வேண்டுமென்றால் மிமிக்ரி செய்யலாம். சுசீந்திரன் யாரென்றே பலருக்கும் தெரியாது. அவர் குரலை கேட்டிருக்கக் கூட மாட்டார்கள். அது சுசீந்திரன் குரல்தான்.

bb

சுசீந்திரன்தான் அண்ணாமலையுடன் காரில் பயணித்தாரே… போனில்

ரணமடைந்த இந்திய இராணுவ வீரர் லெட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தவந்த இடத்தில் அமைச்சர் பி.டி.ஆர். கார்மீது பா.ஜ.க.வினர் செருப்பு வீச, அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அன்று இரவு 12 மணிக்கு பா.ஜ.க.வின் மாவட்டச் செயலாளர் டாக்டர் சரவணன், நடந்த சம்பவத்திற்கு அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டார் இந்நிலையில் கடந்த 25-ஆம்தேதி இந்த சம்பவம் தொடர்பாக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் தற்போதைய மாவட்டச் செயலாளர் சுசீந்திரனும் பேசும் ஆடியோவும் வெளியாகி தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து டாக்டர் சரவணனிடம் பேசினோம்.

அந்த ஆடியோவில் பேசிய குரல்கள் உண்மையா?

Advertisment

100க்கு 100% உண்மை. ரஜினி, கமல் போன்று பரிச்சயமான குரல்களை வேண்டுமென்றால் மிமிக்ரி செய்யலாம். சுசீந்திரன் யாரென்றே பலருக்கும் தெரியாது. அவர் குரலை கேட்டிருக்கக் கூட மாட்டார்கள். அது சுசீந்திரன் குரல்தான்.

bb

சுசீந்திரன்தான் அண்ணாமலையுடன் காரில் பயணித்தாரே… போனில் பேசுவது எப்படி சாத்தியம்?

அவர் என்ன திருப்பத்தூரில் இருந்தா கூடவருகிறார். மதுரை மேலூரிலிருந்து வரவேற்று அதன்பின்தான் அண்ணாமலையோடு பயணிக் கிறார். திருப்பத்தூரில் கிளம்பும்போதே இந்த பிளானைப் பேசியிருக்கலாம்ல. அதில் ஏர்போர்ட் குறித்து மட்டும்தான் பேசுகிறார். நல்லா கவனித்துக் கேளுங்க. இதுவரை இதற்கு அவர் மறுப்பே தெரிவிக்கவில்லை.

அப்படியென்றால் இந்த செருப்பு வீச்சு சம்பவத்திற்குப் பின்னால் அண்ணாமலை இருக்கிறார்?

கட்டாயம் இருக்கக்கூடும். அவர் சுபாவம் அப்படி. சினிமாவில் ஒரு வசனம் வருமே... கல்யாண வீட்டில் மாப்பிள்ளையாகவும், இழவு வீட்டில் பிணமாகவும் இருக்கவேண்டும் என்பதுபோல. தினமும் செய்தித்தாள்களில், தொலைக்காட்சிகளில் தன்னைப் பற்றியே மக்கள் பேசவேண்டும் என்று நினைப்பவர். அந்த கட்சியே எப்போதும் கலவரம்செய்து வளர நினைப்பவர்கள் இருக்கும் கட்சிதான்.

திராவிட குடும்பத்திலிருந்து வந்த நீங்கள் தி.மு.க.வில் சீட் கிடைக்கவில்லை என பா.ஜ.க.வுக்குப் போனது ஏன்?

அந்த நேரத்தில் ஒரு தவறான முடிவெடுத்துவிட்டேன். சரி, வந்தது வந்துவிட்டோம் கொடுத்த பொறுப்பை சரியாகப் பார்ப்போம் என்று களத்தில் புதிய புதிய ஆட்களை பா.ஜ.க.வில் சேர்த்து கட்சிப் பணி செய்யலாம் என்றால் அவர்களின் முழு போகஸும் அதில் இல்லை. பா.ஜ.க.வின் அடிப்படைக் கொள்கையே ஒரு எதிரியை உருவாக்கு. அப்போதுதான் நீ பலமுள்ளவனாக இருக்கமுடியும் என்பதுதான்.

Advertisment

saravanan

இப்போது பா.ஜ.க.வை பற்றி என்ன உணர்கிறீர்கள்?

பா.ஜ.க. மக்களுக்கான கட்சியே அல்ல. தமிழகத்தைப் பொறுத்த வரை அண்ணாமலை சும்மா தான். எல்லா முடிவுகளும் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியான கேசவவிநாயகம் வசம் தான். ஒரு மாதத்தில் கட்சியில் யார் என்னென்ன செய்யவேண்டும் என்ற சார்ட்டே அனைத்து மாவட்டச் செயலாளருக் கும் வந்துவிடும். சமூக வலைத்தளங் களில் என்னென்ன பதிவிடவேண்டும், மாற்றுமதத்தினர் மீது எப்படி வன் மத்தை வளர்க்கவேண்டும் என்பதையே முழு வேலையாக வைத்திருக்கிறார்கள்.

மதுரை மேலூரில் ஒரு முஸ்லிம் பைய னும் இந்துப் பெண்ணும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். அதை இரு வீட்டாரும் ஏற்க வில்லை. இருவரும் தற்கொலை செய்துகொண்டார்கள். அண்ணாமலை உடனே அந்த இடத்திற்கு போகச்சொல்கிறார். அதற்குள் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் குவியத் தொடங்கி, அங்கிருக்கும் கடைகளை அடைக்கச் சொல்கிறார்கள். நான் போய் விசாரிக்கிறேன். அங்கு கள்ளர் சமுதாயமும் முஸ்லிம் சமுதாயமும் நெருக்கமாக வாழ்கிறார்கள். அந்தப் பெண்ணின் தாயிடம் என்ன நடந்தது என்று விசாரித்துக் கொண்டிருக்கும்போதே தொடர்ச்சியாக போன் வருகிறது, மதம் மாறச்சொன்னார்களா என்று கேட்கச்சொல்லி. நானும் அந்தம்மாவிடம் கேட்டேன், அதற்கு அவர், அப்படியெல்லாம் இல்லை தம்பி நாங்க தாயாபிள்ளையா வாழ்கிறோம் என்று பதில்வருகிறது. அதற்குள் அங் கிருந்தவர்கள் அந்தம்மா விடம் ஏதோ பேசு கிறார்கள். அப்படிச் சொன்னால் அரசு நிவாரணம் வாங்கிக் கொடுக்கிறோம் என்று ஆசையைத் தூண்டு கிறார்கள். நான் தலைமையிடம் நடந் ததை விவரிக்கிறேன். என்னை போகச்சொல் கிறார்கள். அன்று முழு வதும் எனக்கு தூக்கம் வரவில்லை. இவ்வ ளவு மோசமான அரசியலை முன் னெடுக்கிறார்களே,… நாம் தவறான முடிவு எடுத்துவிட்டோமோ என்று.

இந்து மக்களிடம் வெறுப்புணர்வை வளர்ப்பது தான் இவர்களின் டார்கெட்டே புதிது புதிதாக மத வெறுப் புணர்வைத் தூண்டி அதற்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். மிகப் பெரிய மதக்கலவரத்தை செய்ய இருக்கிறார்கள். அப்படிச் செய்தால்தான் இங்கு கால் ஊன்றமுடியும் என்று திடமாக நம்புகிறார்கள். தமிழகத்திற்கு பா.ஜ.க. மிகப்பெரிய ஆபத்து கட்சிக்கு ரவுடிகள், குற்றச்செயல்களில் ஈடுபட்ட வர்கள் வந்தால், இவர்கள் வேண்டாம், இவர்கள் பெயர் களில் பல்வேறு குற்றவழக்கு கள் இருக்கு என்று தலை மைக்கு பரிந்துரைப்பேன். கடைசியில் மேலிடம், நான் யாரையெல்லாம் வேண்டாம் என்றேனோ அவர்களுக்கு பொறுப்பு கொடுத்துச் சேர்த் திருப்பார்கள். இதுகுறித்து அண்ணாமலையிடம் பேசி னால் கட்சிப் பொறுப்பு எல் லாம் கேசவவினாயகம்தான் முடிவுசெய்கிறார், என்னால் ஒன்றும் செய்யமுடியாது என்பார்

nkn310822
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe