பெண்களைப் புறக்கணித்த பெரிய கட்சிகள்! தனித்து களமிறங்கிய மகளிர்

pollai

டுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று காலம்காலமாக பெண்களை அடக்கி ஒடுக்கிவைத்த காலம் மாறி, இந்தியப் பிரதமராகவும், தமிழக முதல்வராகவும் பெண்கள் வந்துவிட்டனர். ஆனால் கட்சிகளில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுகிறதா என்று பார்த்தால் தேசிய கட்சியானாலும் சரி, மாநில கட்சியானாலும் சரி கேள்விக்குறிதான்.

ஆளும்கட்சியான அ.தி.மு.க.வில் 178 தொகுதிகளில் தங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். அதில் வெறும் 15 பெண் வேட்பாளர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். எதிர்க்கட்சியான தி.மு.க.வில் 186 சட்டமன்றத் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள னர். அதில் 11 பேர் மட்டுமே பெண் வேட்பாளர் கள். அ.ம.மு.க. 14, தே.மு.தி.க. 7, மக்கள் நீதி மையம் 13, பி.ஜே.பி. 3, காங்கிரஸ் 1, சி.பி.எம். 1, எஸ்.டி.பி.ஐ. 1, பா.ம.க. 1, ஐ.ஜே.கே. 1, த.மா.கா.1 என பெண்களை தங்கள் கட்சியின் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளன. (இதில் சீமானின் நாம் தமிழர் கட்சி மட்டும் விதிவிலக்காக 234 சட்டமன்ற தொகுதிக

டுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று காலம்காலமாக பெண்களை அடக்கி ஒடுக்கிவைத்த காலம் மாறி, இந்தியப் பிரதமராகவும், தமிழக முதல்வராகவும் பெண்கள் வந்துவிட்டனர். ஆனால் கட்சிகளில் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுகிறதா என்று பார்த்தால் தேசிய கட்சியானாலும் சரி, மாநில கட்சியானாலும் சரி கேள்விக்குறிதான்.

ஆளும்கட்சியான அ.தி.மு.க.வில் 178 தொகுதிகளில் தங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர். அதில் வெறும் 15 பெண் வேட்பாளர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். எதிர்க்கட்சியான தி.மு.க.வில் 186 சட்டமன்றத் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள னர். அதில் 11 பேர் மட்டுமே பெண் வேட்பாளர் கள். அ.ம.மு.க. 14, தே.மு.தி.க. 7, மக்கள் நீதி மையம் 13, பி.ஜே.பி. 3, காங்கிரஸ் 1, சி.பி.எம். 1, எஸ்.டி.பி.ஐ. 1, பா.ம.க. 1, ஐ.ஜே.கே. 1, த.மா.கா.1 என பெண்களை தங்கள் கட்சியின் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளன. (இதில் சீமானின் நாம் தமிழர் கட்சி மட்டும் விதிவிலக்காக 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 50 சதவிகிதப் பெண்களுக்கு வாய்ப்புக் கொடுத்துள்ளது.)

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பெண்களை வாழ்த்துகிறார்கள். ஆனால் ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பது என்று வரும்போது மட்டும் பெரும்பான்மை கட்சிகள் ஏன் பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தருவதில்லை. ஒவ்வொரு கட்சியிலும் மகளிர் அணி நிச்சயம் உண்டு. இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய கிளைவரை பெண் களுக்கு பொறுப்புகள் வழங்கிய அரசியல் கட்சிகள் அவர்களை பாராளுமன்ற உறுப்பினர்களாக, சட்டமன்ற உறுப்பினர்களாக உருவாக்குவதற்கான வாய்ப்புகளை மட்டும் ஏன் சரியாகக் கொடுப்பதில்லை.

s

"அனைத்து மக்கள் அரசியல் இயக்கம்' நடத்திவரும் ராஜேஸ்வரி பிரியாவிடம், அரசியல் கட்சிகள் பெண் வேட்பாளர்களுக்கு உரிய பிரதி நிதித்துவம் அளிக்காதது குறித்துக் கேட்டோம். “""அரசியல் கட்சிகள், அரசியல் சாராத பல்வேறு இயக்கங்கள் பெண்களை குத்துவிளக்கு ஏற்றவும் குத்தாட்டம் போடவும் போதுமென்றே நினைக் கின்றனர். ஒவ்வொரு கட்சியிலும் ஆளுமைத் தன்மை உள்ள பெண்கள் ஏராளம் உள்ளனர். அப்படியிருந்தும் அவர்களைப் புறக்கணிக்கிறார் கள். சில கட்சிகள் பெண்களுக்கு விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு வேட்பாளர் அந்தஸ்து வழங்கியுள்ளன.

வாய்ப்புக் கிடைத்தவர்களும் வாரிசு வழியில் வந்தவர்களாக இருப்பார்கள் அல்லது பணம் படைத்தவர்களாக இருப்பார்கள். இந்த இரண்டு தகுதி மட்டுமே கொண்ட பெண்களுக்கு அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்கின்ற வாய்ப்பளிக்கி றார்கள். மற்றபடி பெண்கள் முன்னேற்றம், பெண்கள் விடுதலை என்று மேடையில் மட்டும் வாய் கிழியப் பேசுவதோடு சரி. பெரும்பாலான அரசியல் கட்சிகள் வேட்பாளர்களின் நேர்காணலின்போது எத்தனை லட்சம், எத்தனை கோடி செலவு செய்வீர்கள் என்றுதான் கேட்கிறார்கள். அப்படிப்பட்ட இயக்கங்கள் பெண்களுக்கு எப்படி முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதற்காகத்தான் அனைத்து மக்கள் அரசியல் இயக்கம் துவங்கியுள்ளோம். தற்போது 40 தொகுதிகளில் எங்கள் இயக்கத்தின் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்களில் 20 பேர் பெண்கள். இப்படி பெண்கள் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் ஆண்களின் உதவிகளும் எங்களுக்கு கிடைத்துள்ளன. அதன்மூலம் இந்த இயக்கத்தை வளர்த்தெடுக்கும் பணியில் தீவிரமாக உள்ளோம்''’என்கிறார் ராஜேஸ்வரிபிரியா.

இதுகுறித்து "பெண்கள் விடுதலைக் கட்சி' என்ற அமைப்பை நடத்திவரும் திண்டிவனம் சபரிமாலா பேசும் போது, ""பல்வேறு இயக்கங்களில் ஆண்களுக்கு சரிசமமாக பெண்களும் இடம்பெற வேண்டும். அதே நேரத்தில் அந்த இயக்கத்திற்கு பெண் மாநிலத் தலைமையை ஏற்க வேண்டும். அரசியல் கட்சிகள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது அரசியல் மேடைகளில் பெண் விடுதலை பற்றி அதிகம் பேசுகிறார்கள். அவர்கள் பேச்சுக்கு எதிராகத்தான் செயல்பாடுகள் உள்ளன. மேலும் பெண்சமூகம் தெளிவு பெறவேண்டும். அப்போதுதான் பெண்கள் விடுதலையை நோக்கிச் செல்லமுடியும். பொள்ளாச்சி பெண்பிள்ளைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நடந்த ஒரு பகுதி. அப்படிப்பட்ட தொகுதியில் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் எங்கள் அமைப்பு சார்பாக வேட்பாளராகப் போட்டியிடுகிறேன்''’என்கிறார்.

பெரம்பலூரில் "புவனா சமுதாய அறக்கட்டளை' நடத்திவரும் டாக்டர் புவனேஸ்வரியோ, “""பெண்கள் திறமைகளை அவர்களது ஆளுமைகளை வெளிக்கொணர எங்கோ சில ஆண்கள் மட்டுமே துணையிருக்கிறார்கள். அதை இல்லையென்று மறுக்கமுடியாது. அதேநேரத்தில் எந்த இயக்கமும் பெண்களின் திறமைகளை வெளிப் படுத்துவதற்கு தயக்கம் காட்டுகின்றன. அதுபோன்ற இயக்கங்களை எதிர்பார்க்காமல் பெண்களே தனி அமைப்பாகத் திரண்டு அமைப்புகள் மூலம் சுயேச்சை யாக நின்று தேர்தல்களை சந்திக்கவேண்டும். மக்கள் சேவை செய்வதற்கு ஆண்கள் துணையைத் தேடுவதை விட அவர்களே அவர்களுக்குள் தலைமையேற்று வழி நடத்தினால் நிச்சயம் வெற்றிபெறுவார்கள்'' என்கிறார்.

தேர்தல்களத்தில் இத்தகைய புதிய முயற்சிகள் வெற்றிபெற்றால் அரசியல் கட்சிகளிலும் உரிய அள வில் பிரதிநிதித்துவம் கிடைக்கும்... இல்லையென் றால், பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்ட மானால் மட்டுமே சாத்தியம்.

nkn030421
இதையும் படியுங்கள்
Subscribe