பொள்ளாச்சி பாலியல் வழக்கின் விசாரணையை முதலில் சி.பி.சி.ஐ.டி. கையிலெடுத்த நிலையில், அதன் தொடர்ச்சியாக வழக்கு சி.பி.ஐ. வசமானது. இதில் குற்றவாளிகளாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், ஹேரென்பால், பாபு, அருளானந்தம் மற்றும் அருண்குமார் ஆகிய 9 நபர்கள் கைது செய்யப்பட்டிருக்க, கோவை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றது. 10-08-2022 அன்று கோவை மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவி முன் வந்த வழக்கு, வருகின்ற 24-08-2022 தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், கல்லூரி மாணவிகள் 4 நபர்கள், வேலை தேடிய பெண், நகைக்கடையில், பியூட்டி பார்லரில் பணியாற்றிய பெண்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட 7 நபர்களின் வாக்குமூலங்களுடன், மொத்தமாக 61 சாட்சியங்கள், 69 சான்றாவணங் கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உள்ளிட்டவை குறித்தான குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது சி.பி.ஐ. தரப்பு.
சி.பி.ஐ.யால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின் நகல் நக்கீரனுக்கு பிரத்யேகமாக கிடைக்கப்பெற்ற நிலையில் அதனை அப்படியே பகிர்கின்றோம்.
பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்கள் குறித்து பொதுவெளியில் பகிரக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவின்படி வாக்குமூலங்கள் கொடுத்த பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ மற்றும் ஐ என வரிசைப்படுத்தியுள்ளது சி.பி.ஐ. தரப்பு. அதிலிருந்து சுருக்கமாக..,
விக்டிம் A
சி.பி.ஐ.யின் காவல் ஆய்வாளர் விஜய வைஷ்ணவியின் முன் ஆஜரான பாதிக்கப்பட்ட பெண் ஆ, "+2 படிக்கும்போதே என்னுடைய ப்ரண்ட் தேஜாஸ்ரீ மூலமாக திருநாவுக்கரசைத் தெரியும். 2019-ஆம் ஆண்டு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும்பொழுது ரிஷ்வந்த் என்பவன் வாட்ஸ்-ஆப் மூலம் என்னைத் தொடர்புகொண்டு, என்னை இரண்டு வருடமாக தெரியும் என்றும், என்னை ரொம்ப பிடிக்கும் என்றும், என்னை லவ் பண்ணுவதாகவும் கூறி னான். ஆனால் அவனை முன் பின் பார்த்ததில்லை. இந்நிலையில், 12-02-2019 அன்று தனக்கு பிறந்தநாள் என்றும் அன்றைய தினத்தில் என்னு டன் முக்கியமான விஷயம் பேசுவதாகவும் கூறினான். "முகம் தெரியாத நபர் இப்படி பேசுவ தால் அவன் யார் என்று தெரிந்துகொள்ளும் நோக்கிலும், இந்த மாதிரி இனி பேசக்கூடாது என்று நோக்கிலும்' காலேஜ் லஞ்ச் டயத்தில் அவனை சந்திக்க ஒப்புக்கொண்டேன். அவன் வெள்ளை நிற போலேரோ காரில் இருப்பதாகக் கூற காரைத் திறந்து பின் சீட்டில் அமர்ந்து கொண்டேன். "காரில் ஒரு ரவுண்ட் போய்க் கொண்டே பேசலாம்' என்று அவன் கூறிய நிலையில், அவன் என்ன பேச வருகிறான் என்பதை அறிய அதற்கு ஒப்புக்கொண்டேன். காலேஜ் தாண்டி திப்பம்பட்டி அனுப்பர்பாளையம் வரை கார் போய் நின்றது. தென்னந்தோப்பிற்கு அருகில் நிற்க, "கண்ணை மூடிக்கொள். உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும்' என்று அவன் கூறிய நிலையில் கண்ணை மூடிக்கொண்டேன். என்னருகே வந்தவன் என்னுடைய கழுத்திலும் உதட்டிலும் முத்தம் கொடுக்க, அவனை தட்டிவிட்டேன். அவனோ என்னை மிரட்டி பலவந்தமாக என்னுடைய மேலாடையை (ஓவர் கோட்) கழட்டி, தொடர்ச்சி யாக குர்தியை தலை வழியாகக் கழட்டியவன்....... செய்தான். இதனை அப்படியே அவனுடைய ஞடடஞ போனில் பதிவு செய்து என்னிடம் காட்டி, "நான் திருநாவுக்கரசோட ப்ரெண்ட்' என்றவன், "இதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடாமல் இருக்க நான் கூப்பிடும் போதெல்லாம் நீ வரவேண்டும். நான், திருநாவுக்கரவு, சதீஷ் மற்றும் வசந்தகுமார் ஆகியோரை உடல்ரீதியாகவும், பண ரீதியாகவும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும்' என மிரட்டி கழுத்திலுள்ள தங்க செயினை பறித்துக்கொண்டான். பின்னாளில்தான் தெரிந்தது, அவனுடைய பெயர் சபரிராஜன் என்று'' என்கின்ற ரீதியாக இருக்கின்றது அவருடைய வாக்குமூலம்.
விக்டிம் B
"என்னுடைய அரியர் எக்ஸாமை எழுதுவதற்காக ஹால் டிக்கெட் வாங்க 5-ஆம் நம்பர் பஸ் மூலம் கல்லூரிக்குப் போனேன். இந்த நிலையில் இதற்கு முன்னால் என்னுடன் வாட்ஸ்- ஆப் மூலம் தொடர்புகொண்டு கண்ணியமாக நடந்துகொண்ட ரிஷ்வந்த் என்னை அழைத்து, "என்னுடைய அம்மாவை ஒரு தடவையாவது பார்த்துட்டுப் போ' என வற்புறுத்தி அழைக்க, நானும் அவனை நம்பி கறுப்பு நிற காரில் சின்னப்பம்பாளையம் கிராமத்திற்கு சென்றேன். வீடு முழுவதும் புகைப்படங்களாக இருந்த அந்த வீட்டில் யாரையும் காணோம். "அம்மாவைக் கூப்பிடு' என்றதற்கு, "நான் உன்னை லவ் பண்றேன்' என்றான் ரிஷ்வந்த். அதிர்ச்சியான நான், "இல்லையில்ல... நான் வேறொருத்தனை லவ் பண்றேன்' என்றேன். இந்த நிலையில் என்னை அங்கிருந்த பெட்டில் தள்ளி பலவந்தமாக மேல்சட்டையை உருவி கடிக்க ஆரம்பித்தான். அத்துடன் நில்லாமல் பேண்ட்டை கழற்ற முயற்சித்தான். அவனுடைய கையைத் தட்டி "எனக்கு மென்சஸ் டைம்டா' என கத்தியும் அவன் விடவில்லை. என்னை வன்புணர்வு செய்தான். இந்நிலையில், மொபைல் போனில் வீடியோ எடுத்துக்கொண்டே வந்த திருநாவுக்கரசு, ரிஷ்வந்தை அடித்து அனுப்புவது போல் அடித்து அனுப்பிவிட்டு, அவனும் என்னை வன்புணர்வு செய்தான். மென்சஸ் என்பதால் இரத்தப் போக்கு அதிகம் வெளியான நிலையில், ஹாரோன் என்பவனும், வசந்தகுமார், சதீஷ் ஆகியோரும் இரத்தப் போக்கு இருப்பதை கண்டுகொள்ளாம லேயே என்னை வன்புணர்வு செய்தனர். மறுபடியும் அங்கு வந்த ரிஷ்வந்திடம், "உன்ன நம்பித்தாண்டா வந்தேன்' எனக் கதறியும் மீண்டும் என்னை வன்புணர்வு செய்தான்'' என்றிருக்கிறார் விக்டிம் இ.
விக்டிம் C
சி.பி.ஐ. காவல் ஆய்வாளர் பச்சையம்மாள் முன்பு ஆஜரான விக்டிம் ஈ-யோ, "நகைக்கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த நானும், என்னுடைய கணவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு கோவை சுந்தராபுரத்தில் குடும்பம் நடத்திவந்தோம். கணவருக்கு ஊட்டியிலேயே வேலை கிடைத்த நிலையில், எனக்கும் அவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது. இந்நிலையில், என்னுடைய சொந்த ஊரான பொள்ளாச்சிக்கே வந்துட்டேன். வீட்டிற்கு வாடகை கொடுக்க இயலாத சூழ்நிலையில் உடுமலைப்பேட்டை ரோட்டிலுள்ள சூர்யா ஹாஸ்பிடல் அருகில் இருந்துகொண்டு என்னுடைய தங்கைக்கு போன் செய்து பணம் கேட்டேன். அவள் என்னைக் கோபமாகத் திட்டியதில் அழுகை வந்தது. அப்பொழுது அங்கிருந்த எனக்கு தெரிந்த பாபு என்கின்ற அண்ணன் என்னை விசாரித்துவிட்டு, "எனக்குத் தெரிந்த நண்பர் பைனான்ஸ் செய்கிறார். வா... வாங்கித் தருகின்றேன்' என்று கூறி மணியை அறிமுகப்படுத்தினார். மணியும் என்னைக் காரில் அழைத்துக்கொண்டு சின்னப்பம்பாளையத்தி லுள்ள ஒரு வீட்டிற்குச் சென்றார். "யாரும் இல்லையே அண்ணே? எப்ப பணம் தருவாங்க?' எனக் கேட்டேன். பதில் கூறாது பலவந்தப்படுத்தி என்னுடைய டிரெஸ்ஸை உருவி வலுக்கட்டாய மாக உடலுறவு கொண்டான் அவன். அதன்பின் அதனை செல்போனில் பதிவு செய்துகொண்டு வந்த திருநாவுக்கரசும், பாபுவும் தொடர்ச்சியாகக் கண்ட இடங்களில் கடித்துத் துன்புறுத்தி, உடலுறவு வைத்தனர். நானும், "பணமே வேணாம்... என்னை விட்டுங்க அண்ணா...' எனக்கெஞ்சியும் விடவில்லை அவர்கள்'' என்றிருக்கின்றார்.
விக்டிம் D
"என்னுடைய தங்கையும் உன்னுடன்தான் படித்துக் கொண்டிருக்கிறாள் என கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் பொழுது சூர்யா என்கின்ற நபர் வாட்ஸ்-ஆப் மூலம் அறிமுக மானார். அது நீண்ட நிலையில்... ஒருநாள் என்னைக் காதலிப்பதாக அவர் கூற, "அதெல்லாம் முடியாது' என திட்டவட்டமாகக் கூறிய நிலையில், "நண்பராகப் பழகுவோம்' என்றார் அவர். ஒருநாள் வீட்டிற்குப் போவதற்காக கல்லூரி பஸ் ஸ்டாப்பில் நின்ற நிலையில், சில்வர் நிற காரில் வந்த சூர்யா, "வா! உன்னைக் கொண்டுபோய் இறக்கி விடுகிறேன்' என்றார். நான் மறுத்தாலும் "ப்ரண்ட்னு சொல்றே... வரக்கூடாதா?'னு என்னைத் தொடர்ந்து வற்புறுத்திய நிலை யில், பின் சீட்டில் இருக்கின்ற நபர்களை கவனிக்காமல் காரில் ஏறிவிட்டேன். "திருநாவுக்கரசு என்று எனக்கு இன்னொரு பெயர் இருக்கின்றது' என்றவன், பின்சீட்டில் உட்கார்ந்திருந்த மணியையும், சதீஷையும் அறிமுகப்படுத்தினான். காரை சின்னப்பம்பாளையம் ரோட்டில் விடுவதை அறிந்து நான் கத்த, "அம்மா... அங்க இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்துவிட்டுப் போகலாம்' என என்னை சமாதானப்படுத்தினான் சூர்யா என்கின்ற திருநாவுக்கரசு. "வீட்டினுள் யாரும் இல்லையே?' என்பதற்குள் என்னைத் தள்ளிவிட்டு பலவந்தமாக வன்புணர்வு செய்தான். தொடர்ச்சியாக சதீஷ் வந்து என்னை முட்டி போட வைத்து... பின்னந்தலையை அழுத்திப் பிடித்து... அதன்பின் வன்புணர்வு செய்தான். அதன்பின் பாபு, மணி என பலரும் என்னை வல்லுறவுக்கு ஆளாக்கினர்'' என்கிறது விக்டிம் D-வின் வாக்குமூலம்.
விக்டிம் E
விக்டிம் E-வின் வாக்குமூலமோ, "நான் வேலை தேடிக்கொண்டிருப்பது எப்படியோ ரிஷ்வந்திற்கு தெரிந்துள்ளது. அதனைப் பயன் படுத்தி "திருநாவுக்கரசின் பைனான்ஸ் கம்பெனியில் வேலை இருக்கின்றது' என தூண்டில் போட்டு ஆனைமலைக்கு வரக் கூறினான் ரிஷ்வந்த். என்னுடைய தம்பியுடன் அங்கு சென்ற நிலையில், "திருநாவுக்கரசோட அப்பாதான் இண்டர்வியூ எடுப்பார். அவர் பழனியிலிருந்து சின்னப்பம் பாளையம் வீட்டிற்கு வந்துட்டிருக்கார். அதனால் நீங்க சின்னப்பம்பாளையம் போகணும்' என்று கூற, தாத்தூர் பிரிவில் தம்பியை இறக்கிவிடக் கூறி ரிஷ்வந்துடன் சின்னப்பம்பாளையம் போனேன். அங்க யாரும் இல்லை. என்னுடைய ஃபைலை வாங்குவது போல் என்னைத் தொட முயற்சித்தான் ரிஷ்வந்த். ஏதோ தப்பா நடக்கப் போகுதுன்னு நினைக்கையிலேயே பின்புறமாக வந்து என்னுடைய முடியைப் பிடித்து இழுத்து பெட்டில் தள்ளி கிஸ் செய்ய ஆரம்பித்தான். நான் பலவந்தமாகப் போராடி அவனைத் தள்ளி விட... அவனுக்கு இடது கையில் அடிபட்டது. அதன்பின் "நான் கத்தி ஊரைக் கூப்பிடுவேன்'னு மிரட்ட வேறு வழியில்லாமல் என்னை வீட்டைவிட்டு வெளியேற அனுமதித்தான். அதற்குமுன் அவன் என்னிடம் நடந்துகொண்டதை, அரைகுறை ஆடையுடன் போராடியதை வீடியோவாகக் காட்ட, எனக்குப் பகீரென்றது. இருந்தாலும் மன தைரியத்துடன் அந்த இடத்தை விட்டு விலகி வீட்டிற்கு வந்து அம்மாவிடமும், தம்பியிடமும் கூறினேன். இதற்கிடையில், "நீ எங்களுக்கு இணங்கவில்லை என்றால் உன்னுடைய வீடியோவை வெளியில் விட்டு விபச்சாரின்னு சொல்வேன்'னு சொன்னாங்க. நானும் அப்படியே இறுக்கமாக இருந்து கொண்டேன்'' என்கின்றது.
விக்டிம் F
"எங்களுடைய வீட்டிற்கு அருகில்தான் சதீஷ் வீடு இருந்தது. சுமார் 10 வருடமாக அவனைத் தெரியும். திடீரென ஒருநாள் என்னை லவ் பண்ணுவ தாக அவன் சொல்ல, நான் மறுத்துவிட் டேன். இதனை மறந்தும்விட்டேன். ஒருநாள் சதீஷோட போனிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அதில், "தனக்கு காலில் அடிபட்டு இருப்பதாகவும், ஒரு முறையாவது என்னை பார்க்கணும்' எனவும் சதீஷின் அம்மா பேசுவதாகக் கூறி னார்கள். இந்த நிலையில் அவங் களைப் பார்க்க அவங்களோட சொந்த ஊரான அம்பராம்பாளை யம் கூட்டிட்டுப் போக பொள் ளாச்சி பஸ் நிலையத்தில் காத் திருக்கச் சொன்னார்கள். ரிஷ்வந்த் என்பவன் வந்து அவனுடைய காரில் என்னை அழைத்துக்கொண்டு வேறோரு திசையில் செல்ல, அவனும் "அம்மா சின்னப்பம் பாளையத்தில் இருக்காங்க' என நம்ப வைத்து கூட்டிச் சென்றான். அந்த வீடு ஆட்கள் புழங்கிய இடமாக இல்லாததால் எனக்கு சந்தேகம் வந்தது. அதேவேளையில் மறு அறையில் ஆட்கள் இருப் பது தெளிவாகக் கேட்டது. அப்பொழுது நான் எதிர்பார்க்காத நிலையில் என்னுடைய தலைமுடி யைப் பிடித்து, என்னை பெட்டில் சாய்த்து ஆடை களை உருவி வல்லுறவு செய்தான். அதற்கடுத்த படியாக சதீஷ் வந்து, "இதுக்காகத்தாண்டி காத் திருந்தேன்' என அவனும் வல்லுறவு கொள்ள, அதற்கடுத்தபடியாக திருநாவுக்கரசும், ஹாரோனும் என்னை வல்லுறவு கொண்டனர். பெருங்காயங்களு டன் மூச்சுத்திணறலுடன் திரும்பிய எனக்கு, என்னுடைய ஆபாச வீடியோவை அனுப்பி... "திரும்ப வரணும்' என்றனர். "வந்தால் அந்த வீடியோவை டெலீட் செய்வோம்' என்றனர். இதற் காக என்னை கோயம்புத்தூர் வரவழைத்து அந்த ஹோட்டலில் வைத்து ரிஷ்வந்த் வல்லுறவு செய் தான்'' என்கின்றது விக்டிம் F-யின் வாக்குமூலம்.
இதுபோல இன்னும் ஓரிரு வாக்குமூலங்களுக் கான சாட்சியங்களை விசாரித்து பதிவு செய்த சி.பி.ஐ. தரப்பின் சான்றாவணமாக முறையே, File Named as Video 0001479, 0001483, 0001488, 0001410, Video IMG 1510, 0001128, VID 20180601200330, 180603093249, 20180601200330 Utßm 20180603093249 உள்ளிட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை காண்பித்து உறுதி செய்து, மேலும் சில்வர் கலர் ஹூண்டாய் வெர்னா, க்ரே கலர் போர்டு, ஸ்க்யூஸ் கலர் போர்டு, வெள்ளைக் கலர் மாருதி 800, கறுப்பு நிற போர்டு மற்றும் சில்வர் கலர் வோக்ஸ்வேகன் ஆகிய வாகனங்களை யும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.