அமைதிக்கு விலக் களித்து அடுத்த வேட்டைக்கு தயாராகியுள்ளது அமலாக்கத் துறை. ஈ எர்ழ்ம் ஊழல் தொடர்பான வில்லங்க ஆவணம் ஒன்று அதன் கையில் சிக்கியுள்ளது. ஈ எர்ழ்ம் ஊழல் என்றால் என்ன என்பதைப் பார்க்கும் முன் டாஸ்மாக் குறித்த அடிப்படை விவரங்களைப் பார்ப்போம்.
சென்னையை தலைமை யிடமாக கொண்டு, ஆறு மண்டலங்களாகவும், 38 மாவட்டங்களில், 43 மாவட்ட மேலாளர்கள் கீழும் செயல் பட்டு வருகின்றது டாஸ்மாக் நிறுவனம். மதுபானங்களை ஆறு மண்டல குடோன்களிலும், 43 மாவட்ட குடோன்களிலும் இருப்புவைத்து, தமிழகம் முழுவதிலுமுள்ள 4,829 டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்து வருகிறது. தமிழ்நாட்டில் 11 மதுபானத் தொழிற்சாலைகள், 8 பீர் தொழிற் சாலைகள், ஒரு ஒயின் தொழிற்சாலை இயங்கிவரும் நிலையில், 250 மதுபான வகைகளை கொள்முதல் செய்கிறது டாஸ்மாக் நிறுவனம்.
இதில் 185 உள்ளூர் மதுவகைகள், 43 உள்ளூர் பீர் வகைகள், 3 உள்ளூர் ஒயின் வகைகள், 6 வெளிமாநில மது வகைகள், 8 வெளிமாநில ஒயின் வகைகள், 5 வெளிநாட்டு பீர் வகைகள் அடங்கும். முந்தைய ரெய்டின்போது டாஸ்மாக் விற்பனையில் 1,000 கோடி ரூபாய்க்குமேல் ஊழல் நடைபெற்றதாக அறிக்கை வெளியிட்டது அமலாக்கத்துறை. அதில் மதுபானங்கள் கொள்முதல் மற்றும் விற்பனையில், பெரிய அளவில் முறைகேடுகள் நடப்பதாகவும் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடப்பதாகவும் அறிவித்திருந்தது.
ஓய்வுபெற்ற அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர், "தமிழ்நாட்டில் இயங்கும் மதுபான தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களை டாஸ்மாக் நிறுவனம் மூலம் விற்பனைசெய்து, கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும், சுமார் ரூ. 12 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இதனால்தான், மதுபான விற்பனையை, மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி வரம்புக்குள் கொண்டுசெல்லாமல், மாநில அரசின் VAT வரி கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். எனினும் ஆளும் முதல்வருக்கே தெரியாமல் C Form படிவத்தின் மூலம் கோடிக்கணக்கான ஊழலை நடத்தியுள்ளனர். இது சம்பந்தமான ஆவணங்கள் அமலாக்கத்துறை கையில் சிக்க, அடுத்த வேட்டைக்கு தயாராகியுள்ளது'' என்றார்.
அது என்ன C Form..? (THE CENTRAL SALES TAX ACT #1956, Sec. 6: Liability to tax on inter #State sales.) C“படிவம் என்பது மாநிலங் களுக்கிடையேயான விற்பனையின் பின்னணியில் உள்ளது. TIN No சர் பதிவுசெய்யப்பட்ட வாங்குபவ ரால், பதிவுசெய்யப்பட்ட விற்பனையாளருக்கு வேறொரு மாநிலத்திலிருந்து வாங்குவதற்கு, சலுகை விலையில் பொருட்களை வாங்க (இது 2%) இந்தப் படிவம் வழங்கப்படுகிறது. C’படிவம் வழங்கப்படா விட்டால், மாநிலத்தில் பொருந்தக்கூடிய முழு விற்பனை வரியையும் வாங்குபவர் செலுத்த வேண்டும். விற்பனையாளரின் விவரங்கள், விலைப் பட்டியல் விவரங்கள் போன்றவற்றைக் கொடுத்து, அனைத்து கொள்முதல் விலைப்பட்டியல்களுக்கும் C படிவம் ஒரு காலாண்டில் வழங்கப்பட வேண் டும். C படிவத்தைப் பெற்றபிறகு, விற்பனையாளர் அதை குறிப்பிட்ட நேரத்திற்குள் விற்பனை வரித் துறையிடம் டெபாசிட் செய்யவேண்டும். இந்த படிவத்தை, வாங்குபவர் தனது பகுதியிலுள்ள விற்பனை வரி அலுவலகத்திலிருந்து பெறவேண்டும். வாங்கிய தேதி, பில் தொகை போன்ற கொள்முதல் விவரங்களைக் கொடுத்து, சில மாநிலங்களில் C படிவத்தை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம் (எ.கா. டெல்லி, குஜராத் போன்றவற்றில் யஆப துறையின் வலைத்தளம் மூலம்).
C’ படிவத்தில் மூன்று பகுதிகள்/நகல்கள் உள்ளன: C Form: Countertfoil, Original and Duplicate, இந்த மூன்று பகுதிகளும் (வாங்கு பவரின்) அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிடப்பட வேண்டும். ஒரு நகலை அதாவது C படிவத்தின் எதிர்த்தாளை வாங்கு பவர் தக்க வைத்துக்கொள்ள வேண்டும், மீதமுள்ள 2 பிரதிகள்/பகுதிகளை விற்பனையாளரிடம் கொடுக்கவேண்டும்.
சுருங்கச் சொன்னால், இரு மாநிலங்களுக்கு இடையே பரி வர்த்தனை நடைபெறும்போது, C படிவம் சமர்ப்பித்தால் வாங்குபவ ருக்கு வரிச்சலுகை கிடைக்கும். குறிப்பாக அப்படி சலுகை பெறுபவர் பஒச TIN Number பதிவு செய்திருக்கவேண்டும். இதற்கான விதிமுறைகளை இரு தரப்பும் கடைப்பிடிக்கவேண்டும்.
"Annexure (8) u T¥, ANGUS DUNDEE INDIA PVT LTD (New Delhi), PENGUIN OVERSEAS (New Delhi), KLASSIC BUSINESS ADVlSERY PVT LTD (Utthrakhand), SONARYS COISRAND PVT LTD (Mumbai), PERNOD RICARD INDIA PVT LTD (Mumbai), MONIKA ALCOBEV LTD (Mumbai), ASPRI SPIRITS PVT LTD (Maharastra), VINSPRI DISTRIBUTORS PVT LDT (Mumbai), AESUN BEVERAGES (West bengal), SUN LIGHT SPIRITS PVT LTD (Bengaluru), MAGIPIE TRADING AGENCIES PVT LTD (Bengaluru), RADELAN DISITRIBUTORS (Haryana), SAMIS ENTERPRISES INDIA PVT LTD (Telangana) தொழிற்சாலைகள் உட்பட 30-க்கும் மேற்பட்ட வெளிமாநில மது பானத் தொழிற்சாலைகளிலிருந்து தமிழ்நாட்டில் மதுபானங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. THE CENTRAL SALES TAX ACT #1956, Sec. 6: Liability to tax on inter#State sales. Annexure(8)-ன்படி, வெளிமாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்யப்படும் மதுபானங்களுக்கு, 58 சதவீதம் CST Tax (CENTRAL SALES TAX) விதிக்கவேண்டும். ஆனால் குறிப்பிட்ட சிலருக்காக இந்த மதுபான நிறுவனங்களுக்கு, C Form மூலம் 2 சதவீதம் மட்டுமேCST Tax வசூலித்துள்ளனர். 56 சத வீதம் CST Tax தள்ளுபடி செய்துள்ளனர். மிக முக்கியமாகTIN Number பதிவுசெய்யாத வெளி மாநில மதுபான தொழிற்சாலைகளுக்கு 56 சதவீத CST Tax தள்ளுபடி செய்திருப்பது, சட் டப்படி கிரிமினல் குற்றமாகும். இதனால் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 8,000 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும்விதமாக TAMILNADU STATE MARKETING CORPORATION LIMITED (TASMAC) TIN (Commercial Taxes): 33920640319-ன்படி வருமான வரிக்கணக்கு: 2021 முதல் 2025 மார்ச், இருப்பு அறிக்கை 2021 முதல் 2025 மார்ச் மற்றும் லாபம் & நஷ்டக்கணக்கு அறிக்கை 2021 முதல் 2025 மார்ச் வரையிலான கணக்கு அறிக்கையினை இன்றுவரை தாக்கல் செய்யவில்லை. அதுபோக COMERCIAL TAXES DEPARTMENT List of LTU (Large Taxpayer Unit) Dealers 19 பேர்களுக்கும் Assessment கணக்கு முடிக்கவில்லை.
இதனை சமர்ப்பித்திருந்தால் நடந்த ஊழல் அப்பட்டமாகத் தெரிந்துவிடும் என்ப தால் கமுக்கமாக இருக்கிறார்கள் சம்பந்தப் பட்டவர்கள். இப்போது ரூ.1,250 கோடி ரூபாய்க் கான ஆவணங்கள் அமலாக்கத்துறை வசம் கிடைத்துள்ளது. இதனை கைவசம்கொண்டே அடுத்து இயங்கவுள்ளது. ஆவணங்கள் இப்பொழுது அமலாக்கத்துறை வசமிருப்பதால் நடவடிக்கை நிச்சயம்'' என்கின்றார் துறைரீதி யான அதிகாரி ஒருவர். இந்த வருவாய் இழப்பின் மூலம் ஆதாயமடைந்தது, யார் என்பதை... வரும் வாரங்களில் விடையளிக்க உள்ளது அமலாக்கத்துறை.
இந்த "சி பார்ம்' முறைகேடு குறித்து அமலாக்கத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட பொழுது அதிகம் விவரமெதுவும் தெரிவிக்கா மல், "சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்த வழக்கு ஒன்றில் எங்களுக்கு வழி கிடைத்துள் ளது. ஆகையால் வரும் வாரத்தில் எங்களுக்குக் கிடைத்திருக்கும் ஆவணங்களைக் கொண்டு வழக்கின் இடைக்கால தடை குறித்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளோம். இனி டாஸ்மாக் வழக்கு வேகமெடுக்கும். மாற் றுப் பாதையில் பயணிக்கும்'' என்றார் அவர்.
-வேகா