பிக்பாஸ் அரசியல்!

biggboss-politics

க்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து சரியாக 117 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், ஜூன் 17-ஆம் தேதி மீண்டும் விஜய் டி.வி.யின் பிக்பாஸ் அரங்கத்திற்குள் அடி எடுத்து வைத்திருக்கிறார் கமல். பிக்பாஸ் முதல் பாகத்தின் தொகுப்பாளராக கமலை கமிட் செய்த விஜய் டி.வி., 50-லிருந்து 60 லட்சம் பார்வையாளர்களை கூடுதலாக ஈர்க்கலாம் என்று தான் கணக்குப் போட்டது. ஆனால் சேனல் எதிர்பார்த்ததைவிட பத்து மடங்கு பார்வையாளர்கள் பிக்பாஸை பார்த்ததால் 100 நாட்களும் விஜய் டி.வி.யின் டி.ஆர்.பி.ரேட்டிங் எகிறியது.

kamal

இப்போது ஆரம்பமாகியுள்ள பிக்பாஸ்-2 விற்கு தொகுப்பாளராக முதலில் நடிகர் அரவிந்த் சாமியுடன்தான் பேச்சுவார்த்தை நடத்தியது விஜய் டி.வி. ஆனால் கமல் கட்சி ஆரம்பித்து, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்லத் தொடங்கியதும், மீண்டும் கமலையே அணுகியது சேனல் நிர்வாகம். ""எனது அரசியல் பணிகளுக்கு எந்த இடைஞ்சலும் வரக்கூடாது, அதே நேரத்

க்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்து சரியாக 117 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், ஜூன் 17-ஆம் தேதி மீண்டும் விஜய் டி.வி.யின் பிக்பாஸ் அரங்கத்திற்குள் அடி எடுத்து வைத்திருக்கிறார் கமல். பிக்பாஸ் முதல் பாகத்தின் தொகுப்பாளராக கமலை கமிட் செய்த விஜய் டி.வி., 50-லிருந்து 60 லட்சம் பார்வையாளர்களை கூடுதலாக ஈர்க்கலாம் என்று தான் கணக்குப் போட்டது. ஆனால் சேனல் எதிர்பார்த்ததைவிட பத்து மடங்கு பார்வையாளர்கள் பிக்பாஸை பார்த்ததால் 100 நாட்களும் விஜய் டி.வி.யின் டி.ஆர்.பி.ரேட்டிங் எகிறியது.

kamal

இப்போது ஆரம்பமாகியுள்ள பிக்பாஸ்-2 விற்கு தொகுப்பாளராக முதலில் நடிகர் அரவிந்த் சாமியுடன்தான் பேச்சுவார்த்தை நடத்தியது விஜய் டி.வி. ஆனால் கமல் கட்சி ஆரம்பித்து, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்லத் தொடங்கியதும், மீண்டும் கமலையே அணுகியது சேனல் நிர்வாகம். ""எனது அரசியல் பணிகளுக்கு எந்த இடைஞ்சலும் வரக்கூடாது, அதே நேரத்தில் மக்களிடம் மேலும் நெருங்க எனக்கும் இது ஒரு வாய்ப்பு என்பதால் பொலிட்டிக்கல் சட்டயரிங்காக சில விஷயங்களைப் பேசுவேன். அதற்கு ஆட்சேபம் தெரிவிக்கக்கூடாது. சென்ற முறையைவிட இந்த முறை 30% அதிகமாக சம்பளம் தரவேண்டும். விஸ்வரூபம்-2 பட ரிலீஸ் வேலைகளுக்கும் சேனல் தரப்பு ஹெல்ப் பண்ணினால் பிக்பாஸ்-2 விற்கு ஓ.கே.'' என்றாராம் கமல்.

""உங்களைத் தவிர வேறு யாரும் எங்களுக்கு சாய்ஸே கிடையாது, எல்லாவற்றிற்கும் ஓ.கே.'' என சேனல் தரப்பில் உறுதி கொடுக்கப்பட்ட பின், மற்ற வேலைகள் சுறுசுறுப்பாக ஆரம்பித்தன. ஒன்றரை மாதத்திற்கு முன்பே போட்டியாளர்கள் பற்றிய விவரங்கள் அனைத்தும் கமலுக்கு வழங்கப்பட்டன. பிக்பாஸ் வீடு செட்டிற்காக கடந்த முறையைவிட, இந்த முறை ஒன்றரை மடங்கு பட்ஜெட் கூடுதலாகியுள்ளதாம்.

ஜூன் 17-ஆம் தேதி மாலை பிக்பாஸ் காம்பவுண்டிற்குள் கேரவனில் வந்திறங்கிய கமல், தான் போட்ட கண்டிஷன்படியே இது மக்களை மேலும் நெருங்கும் வாய்ப்பு, இது சுயநலம் அல்ல, பொதுநலம்’’ என தனது அரசியல் பேச்சை ஆரம்பித்தவர், பிக்பாஸ் செட்டுக்குள் நுழைந்ததும் மக்கள் நீதி மய்யத்தின் இலட்சினையான ஆறு கைகளை நினைவூட்டுவது போல் இரு கைகளையும் இறுகக் கட்டியவாறு வணக்கம் சொன்னார்.

biggboss

பிக்பாஸ் போட்டியாளர்களாக ‘"இருட்டு அறையில் முரட்டுக்குத்து'’ படத்தின் ஹீரோயின் யாஷிகா ஆனந்த், கவர்ச்சி நடிகை மும்தாஜ் மற்ற நடிகைகளான ஜனனி அய்யர், ஐஸ்வர்யா தத்தா, வில்லன் நடிகர் பொன்னம்பலம், கலைவாணர் என்.எஸ்.கே.வின் பேத்தியும் பாடகியுமான ரம்யா, மறைந்த மூத்த பத்திரிகையாளர் சாவியின் பேத்தி ஆர்.ஜே.வைஷ்ணவி, டி.வி.நிகழ்ச்சிகளில் தோன்றும் அனந்த் வைத்தியநாதன், நடிகை ரித்விகா, தொகுப்பாளினி மமதி, வளர்ந்து வரும் வில்லன் நடிகர் சென்றாயன், வில்லன் நடிகர் ரியாஸ்கானின் மகன் ஷாரிக் ஹசன், நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி, அவரது மனைவி நித்யா, நடிகர் மஹத் மற்றும் டேனியல் ஆன்னி பாப் என போட்டியாளர்கள் அனைவரும் கமலிடம் அறிமுகமாகி, பார்வையாளர்களுக்கு அவர்களை கமல் அறிமுகப்படுத்தியதும் அனைவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.

நிஜ வாழ்க்கையில் பிரிந்திருக்கும் கணவன் -மனைவியான தாடி பாலாஜியும் நித்யாவும் பிக்பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரியாகியிருப்பது, டி.ஆர்.பி.ரேட்டிங் ரகசியம் என்கிறார்கள். ஏனெனில் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பர அறிமுகத்தின் போதே, தாடி பாலாஜியும் நித்யாவும் சிரித்துக் கொள்ளவேயில்லை. அறிமுகத்தின் போது சென்றாயன் பேசும் போது, ""சினிமா தியேட்டர்ல பிளாக்ல டிக்கெட் வித்தவன் நான்''’ எனச் சொன்னதும், “""பிளாக்ல டிக்கெட் வாங்கும் பழக்கம் இல்லாதவன் நான்'' என கமல் பதில் பேசியதும் அப்செட்டாகிவிட்டார் சென்றாயன்.

biggboss

அதே போல் குளிர்ச்சிக்கு யாஷிகா ஆனந்த், கவர்ச்சிக்கு மும்தாஜ், ஏமாளித்தனத்துக்கு சென்றாயன், அரட்டல் உருட்டலுக்கு பொன்னம்பலம் என மசாலா சினிமாவுக்குரிய பக்கா ஸ்கிரிப்டுடன் ஆரம்பமாகியுள்ளது பிக்பாஸ்-2.

பிக்பாஸ்-2 அறிமுக நிகழ்ச்சி முடிந்த மறுநாளே, அதாவது ஜூன் 18-ஆம் தேதி காலை ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில், மக்கள் நீதி மய்யத்தின் உயர்நிலைக்குழுக் கூட்டத்தைக் கூட்டினார் கமல். கட்சிக்கு மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய, நகரச் செயலாளர்கள் மற்ற அணிகளின் செயலாளர்களை நியமிக்கும் வேலைகளை தீவிரப்படுத்துமாறு உயர்நிலைக்குழு உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டுள்ள கமல், கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கையைத் தீவிரப்படுத்துமாறு மாவட்டப் பொறுப்பாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

""என்னடா கட்சி ஆரம்பிச்சு மூணுமாசத்துக்கு மேலாகிப் போச்சு. கிணத்துல போட்ட கல்லு மாதிரி கிடக்கேனு கவலையா இருந்தோம். இதோ வந்துட்டாரு எங்க பிக்பாஸ்'' என்கிறார் கோவை மாவட்ட மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகி ஒருவர். பிக்பாஸ்-2 பிக்-அப் ஆகி 20 நாட்களுக்குப் பின், சில மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார் கமல்.

-ஈ.பா.பரமேஷ்வரன், அரவிந்த்

Biggboss nkn22.06.18
இதையும் படியுங்கள்
Subscribe