அந்த இரவு மட்டுமல்ல, அடுத்த பகலும் ஆந்திராவுக்கு இருட்டாகவே விடிந்தது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகேயுள்ளது கோபாலபட்டினம். இந்தப் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவருகிறது எல்.ஜி. பாலிமர் கெமிக் கல்ஸ் நிறுவனம். கொரோனா ஊரடங்கு சமயத்தில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த இந்த நிறுவனம், சமீபத்திய தளர்வு களால் இயங்கத் தொடங்கி இருந்தது. கடந்த மே 07ந்தேதி அதிகாலை இந்த நிறுவனத்தில் இருந்து விஷவாயு வெளியேறி 11 மனித உயிர்களையும், பல கால்நடைகளை யும் கொன்று பேரழிவை ஏற்படுத்தியது. இதில், நிறுவனத்தைச் சுற்றியுள்ள மூன்று கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆயிரக்கணக்கானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில், அருகில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதில் ஒருவர் பேசுகையில், ""அதிகாலை 3 மணி இருக்கும். கோடை வெப்பத்தின் வெக்கையி லிருந்து தற்காத்துக்கொள்ள வீட்டு ஜன்னல்களைத் திறந்து வ
அந்த இரவு மட்டுமல்ல, அடுத்த பகலும் ஆந்திராவுக்கு இருட்டாகவே விடிந்தது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகேயுள்ளது கோபாலபட்டினம். இந்தப் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவருகிறது எல்.ஜி. பாலிமர் கெமிக் கல்ஸ் நிறுவனம். கொரோனா ஊரடங்கு சமயத்தில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த இந்த நிறுவனம், சமீபத்திய தளர்வு களால் இயங்கத் தொடங்கி இருந்தது. கடந்த மே 07ந்தேதி அதிகாலை இந்த நிறுவனத்தில் இருந்து விஷவாயு வெளியேறி 11 மனித உயிர்களையும், பல கால்நடைகளை யும் கொன்று பேரழிவை ஏற்படுத்தியது. இதில், நிறுவனத்தைச் சுற்றியுள்ள மூன்று கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆயிரக்கணக்கானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில், அருகில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதில் ஒருவர் பேசுகையில், ""அதிகாலை 3 மணி இருக்கும். கோடை வெப்பத்தின் வெக்கையி லிருந்து தற்காத்துக்கொள்ள வீட்டு ஜன்னல்களைத் திறந்து வைத்துவிட்டு உறங்கிக் கொண்டிருந்தோம். திடீரென மூச்சுத்திணறல், உடலில் எரிச்சல் ஏற்பட திடுக்கிட்டு எழுந்து அலறியபடி வெளியே வந்துபார்த்தால், கிரா மத்தை பனிப்புகை சூழ்ந்திருந்தது. என்ன நடக்கிறது என்பதைத் தீர்மானிப் பதற்குள் சுயநினைவை இழந்துவிட் டோம்'' என்று திகைப்பு குறையா மல் விவரித்திருக்கிறார்.
எல்.ஜி. பாலிமர் கெமிக்கல்ஸ் நிறுவனத்தில், ஊரடங்கிற்கு முன்பாக கெமிக்கல் கிணறுகளில், டன் கணக்கில் ஸ்டைரீன் எனப்படும் வேதிப்பொருளை பாதுகாத்து வந்துள்ளனர். இதிலிருந்து தயாரிக்கப்படும் பாலிஸ்டைரீனைக் கொண்டு மின்விசிறி இறக்கைகள், டீ கப்புகள் செய்வதாக இந்த நிறுவனம் கூறுகிறது. இந்த ஸ்டைரீனைப் பராமரிப்பதில் ஏற்பட்ட குளறுபடியாலோ, அல்லது அதைக் கையாண்டதில் ஏற்பட்ட மனிதத் தவறுகளாலோ இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.
ஸ்டைரீன் வேதிப்பொருளால் கண் மற்றும் உடலில் எரிச்சல், குமட்டல், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதிகநேரம் அதைச் சுவாசிக்கும்போது நரம்பு மண்டலத்தைப் பாதித்து, சிறுநீரகம், ஈரல் போன்ற உறுப்புகளை செயலிழக்கச் செய்துவிடும். மேலும், சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் தகவல், மனித உடலில் நுழையும் ஸ்டைரீன், ஸ்டைரீன் ஆக்ûஸடாக உருமாறுகிறது. இது புற்றுநோயை ஏற்படுத்த வல்லது என்று கூறுகிறது.
விபத்து நடந்த சமயத்தில், கொரோனா தடுப்புப் பணியில் இருந்த காவலர்கள் உடனடியாக அங்கு விரைந்து, மயங்கிக் கிடந்தவர்களையும் மூச்சுத்திணறியவர்களையும் பேட்ரோல் வாகனத் தில் ஏற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கிட் டத்தட்ட மூன்று மணிநேரத்துக்கும் அதிகமாக விஷ வாயு தாக்கம் இருந்ததால், அந்தவழியே சென்ற வர்களும் கொத்துக் கொத்தாக மயங்கிவிழுந்தது கொடூரம். இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ள ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, உயிரிழந்தவர் களின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி ரூபாயும், செயற்கை சுவாசத்தில் இருப்பவர்களுக்கு தலா பத்து லட்ச ரூபாயும் வழங்கப்படும் என்று உறுதி யளித்துள்ளார்.
மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த காவலர்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ""மிக மோசமான துர்நாற்றம் அந்தப் பகுதியில் வீசியது. எங்களால் உள்ளே நுழையவே சிரமமாக இருந்தது'' என்று கூறியிருக்கிறார். உண்மையில், ஸ்டைரீன் வேதிப்பொருள் நறு மணம் வீசக்கூடியது. ஏற்கனவே, இந்தத் தாக்கத்தால் பாதிக்கப்பட் டுள்ளவர்களுக்கு எந்தமுறையில் சிகிச்சை அளிப்பது என்பது தெரியா மல் மருத்துவர்கள் குழம்பி வரும் நிலையில், போலீசாரின் இந்தக் கருத்து, ஸ்டைரீனு டன் வேறு ஏதாவது வேதிப்பொருள் கலந்திருக்கக் கூடுமா என்ற அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், சமூக செயற்பாட்டாளருமான இ.ஏ.எஸ்.சர்மா, ""ஸ்டைரீன் போன்ற வேதிப்பொருளைப் பயன் படுத்தும் ஒரு நிறுவனத்திற்கு மிக அருகில் மக்கள் குடியிருப்புகள் இருப்பதே ஆபத்தான விஷயம். ஆனால், மாசு கட்டுப்பாட்டு வாரியம், இந்த நிறுவனத்தை மேலும் விரிவாக்கம் செய்ய அனுமதி கொடுத்திருக்கிறது. ஊரடங்கு தளர்வில் அத்தியா வசியப் பொருட்களுக்கான தொழிற்சாலைகள் மட்டுமே இயங்கலாம் எனும்போது, வேதிப் பொருள் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்க வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது. அரசின் அலட்சியத்திற்குக் கிடைத்த பரிசுதான் இது'' என்று கொந்தளிக்கிறார்.
""அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு ஏற்படுத்தி இருக்கும் இந்த நிறுவனம் குறித்து போராடினால், எங்கள் மீதுதான் அரசு நடவடிக்கை எடுக்கும். இப்போதுகூட, ஒரு விஷவாயு தாக்கி ஊரையே குடித்துக் கொண்டிருக்கும்போது, சைரன் எழுப்பி எச்சரிக்கை செய்யாமல் இந்த நிறுவனம் அலட்சியமாகவே இருந்தது'' என்கிறார் சி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த மூர்த்தி.
1984-ல் நடந்த போபால் விஷவாயு பேரழிவு சம்பவத்தை நினைவுப்படுத்தி இருக்கிறது விசாகப் பட்டினம் சம்பவம். அதைப் போலவே நீண்டகால பின் விளைவுகளை இந்த விபத்து ஏற்படுத்துமோ என்ற அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள் விசாகப்பட்டினம் மக்கள்.
-ச.ப.மதிவாணன்