Advertisment

கட்டிய வீட்டிற்கு பூமி பூஜை! பா.ஜ.க. அமைச்சர் மீது பரபர புகார்!

dd

டந்த 23ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச் சர் வி.கே.சிங், திருமயம் ஒன்றி யம், சேதுராப்பட்டி ஊராட்சி, ஒச்சம்பட்டி கிராமத்தில், ஏற் கெனவே கட்டப்பட்ட வீட்டில் போலியாக பூமி பூஜை போட்ட தாகக்கூறி, அதே ஊராட்சியை சேர்ந்த 1வது வார்டு உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுக்குழு உறுப் பினருமான முருகா னந்தம் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்திருப்பது பரபரப்பை கிளப்பி யுள்ளது.

vv

மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்துள்ள முருகானந்தம் நம்மிடம், "எனது வார்டில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் 2021ஆம் நிதியாண் டில் 5 நபர்களுக்கும், 2022ஆம் நிதியாண்டில் ஒரு நபருக்கும் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கருப்பாயி-முத்துக்கருப்பன் வீட்டில் கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி கருப்பாயி- முத்துக்கருப்பன் வீட்டிற்கு மத்திய இணை அமைச்சர் வி.கே. சிங்கை அழைத்துவந்த பா.ஜ.க. வினர், போலியாக பூமி பூஜை நடத்தியுள்ளனர். அதேபோல், பயனாளிகளாக இல்லாதவர் களை போலி பயனாளிகளாகக் கலந்துகொள்ள வைத்தனர். இப்படி போலி விளம்பரம் தேடு பவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சிய ரிடம் புகார் கொடுத்திருக் கிறேன்'' என்றார்.

இந்த புகார் குறித்து திருமயம் ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்ட போது, "அந்த பகுதிக்கு ஒதுக்கப் பட்ட வீடுகளுக்கு அவங்க பூமி பூஜை நடத்தினாங்களா என்பது தெரியவில்லை. அந்த நிகழ்ச்சிக்கு எங்களை அழைக்காததால் நாங் கள் செல்லவில்லை. இப்படியான விழா நடக்கும்போது ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளை அழைத்திருக்க வேண்டும். ஆனால் அழைக்கவில்லை'' என்றனர்.

Advertisment

இது குறித்து புதுக் கோட்டை தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் செல்வம் அழகப்பன் கூறும்போது, "மத்திய அரசின் திட்டங்களை சிறந்த முறையில் பயன்படுத்திய பட்டியலின மக்களை கௌரவப் படுத்த நடந்த விழா அது. பட்டியலின மக்களை கௌர வப்படுத்தியது தவறா? கௌர வப்படுத்தக் கூடாதா? பூமி பூஜை போட்ட இடத்தில் வீடு கட்டத்தான் போகிறார்கள்'' என்றவரிடம், "யாருடைய வீட் டிற்காக பூமி பூஜை போடப்பட் டது? பயனாளி பெயர் என்ன? ஏற்கெனவே கட்டப்பட்ட வீட் டிற்கு தான் பூமி பூஜை போட்டி ருப்பதாக புகாரில் உள்ளதே?'' என்ற நமது கேள்விக்கு, "அந்த இடத்தில் வீடு கட்டத்தான் அடையாளம் செய்யப்பட்டுள் ளது. பயனாளி பெயர் தெரிய வில்லை" என்றார். இந்த புகார் குறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட் டுள்ளதால் பரபரப்பு தொற்றி யுள்ளது!

nkn050723
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe