தமிழை விட்டுக் கொடுக்காமல் போராடுகிறது தமிழ்நாடு. விடாமல் இந்தியை, இந்துத்துவத்தைத் திணிப்பதில் மும்முரம் காட்டுகிறது மத்திய அரசு.
அந்த வரிசையில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுமமான ஏ.ஐ.சி.டி.இ. வழிகாட்டுதல்படி, உலகத்தரம் வாய்ந்த அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.ஐ.டி., சி.இ.ஜி., ஏ.சி.டி., எஸ்.ஏ.பி. ஆகிய வளாகங்களில் பயிலும் பொறி யியல் மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் தத்துவவியல் பாடம் கற்பிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
அதன்படி, முதுநிலை மற்று

அதன்படி, முதுநிலை மற்றும் இளநிலை பொறியியல் மாணவர்களுக்கு மூன்றாவது செமஸ்டரில், ஆறாவது பாடமாக இந்திய -மேல்நாட்டு தத்துவப் படிப்பு கட்டாயப் பாடமாகிறது. 3 கிரெடிட்டுகள் கொண்ட இந்த பாடத்தில், இந்துமத நூல்களாகக் கருதப்படும் பகவத்கீதை குறிப்புநூலாக இணைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய மற்றும் மேற்கத்திய தத்துவங்களை மாணவர்கள் ஒப்பிட்டு புரிந்துகொள்ளும் விதமாக இந்தப் பாடம் இருக்கும் என்றும், திறனாய்வையும், கற்பனை வளத்தையும் பெருக்குவதோடு, இலக்கியம் மானுடவியல் ஆகியவற்றுடன் அறிவியலுக்கு இருக்கும் தொடர்பை மாணவர்கள் புரிந்துகொள்ள ஏதுவாக இந்தப் பாடம் கற்பிக்கப்படும் என்றும், மாணவர்கள் சுயத்தை அறிவதுடன், பிறர் சுயத்தையும் அறிந்துகொள்ள இந்தப்பாடம் உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியிடம் இதுதொடர்பாக பேசியபோது, ""இந்த இணைப்பு இந்து மதத்தைக் கட்டாயமாக்குவதுபோல் உள்ளது. கல்வியில் இந்துமத நூலை பாடத்திட்டத்தில் திணிக்கவேண்டும் என்றால் நாளை குரானையும், பைபிளையும் இணைக்கவேண்டும் என்பார்கள். அந்த நூல்களிலும் இலக்கணநயத்தையும், பிறர் சுயத்தையும் அறிந்துகொள்ள முடியும். இந்தியோ, இந்துத்துவமோ தமிழகத்தில் எந்தவழியில் திணிக்க நினைத்தாலும் அதை முறியடிப்போம்''’என்றார் உறுதியுடன்.
இந்த அறிவிப்பு வெளியான சிலமணி நேரங்களிலேயே எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் தரப்பிலிருந்து கடுமையான கண்டனம் விடுக்கப்பட்டது. பொறியியல் மாணவர்களுக்கு எதற்காக பகவத்கீதையும், வேதமும், உபநிடதமும் என சமூக ஊடகங்களிலும் எதிர்ப்பு கிளம்பியது.
சர்ச்சையைக் கிளப்பிய இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, ""அறிவியல் மற்றும் மானுடவியலுக்கு இடையேயான வெற்றிடத்தை பூர்த்தி செய்யவே இப்பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அதைக் கட்டாயப்பாடமாக இல்லாமல், விருப்பப்பாடமாக படிக்க வழிவகை செய்யப்படும். பல்கலைக்கழக அமைப்பு என்றுமே மதச் சார்பற்றதாகவே இருக்கும்''’என தெரிவித்துள்ளார். விருப்பப் பாடம் என்பது மாணவர்கள் விரும்பும் பாடமாக இருப்பதில்லை. ஆட்சியாளர்களின் விருப்பு வெறுப்பைச் சார்ந்ததாக இருக்கிறது.
-அ.அருண்பாண்டியன்