பத்தான வைரஸ் போலவே மோசடி பேர்வழிகளும் புதிதுபுதிதாக கிளம்புகிறார்கள். ஈரோட்டில் சில நாட்களுக்கு முன்பு ஒரு கும்பல் தங்களை பத்திரிகையாளர்கள் என்றும் மாநில சங்க நிர்வாகிகள் என்றும் கூறி போலீசார் மற்றும் வருவாய் துறை அலுவலர்களிடம் சென்று கொரோனா பிரச்சனையால் பத்திரிகையாளர்களுக்கு நிதி திரட்டுவதாக கூறி வசூலில் ஈடுபட்டுள்ளனர். இதில் சில டுபாக்கூர்கள் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க் களிடமே சென்று லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்ட, அவர்கள் சில ஆயிரங்களை கொடுத்து அனுப்பியுள்ளனர்.

Advertisment

ஈரோடு சென்னிமலை ரோடு, காந்தி நகரைச் சேர்ந் தவர் சதீஷ்குமார். இவர் ஈரோடு பெருந்துறை ரோட்டில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் மருத்துவமனையில் நிர்வாக அதிகாரியாக உள்ளார். இந்நிலையில் இவரது செல்போனுக்கு நேற்று முன்தினம் பேசிய ஒருவர் தன்னை ஓய்வு பெற்ற நீதிபதி என்றபடி, ஒரு பிரபலமான நீதிபதியின் பெயரை கூறியதோடு இப்போது கொரோனா வைரசுக்காக நிதி திரட்டி வருவதாகவும், உங்கள் மருத்துவமனை நிர்வாக இயக்குனரிடம் கூறி நிதியுதவி வழங்குங்கள் என கூறியிருக்கிறார்.

Advertisment

tt

இதனை தொடர்ந்து அந்த மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆகியோர் நிதி உதவியாக ஒரு லட்சம் பணம் கொடுக்க முடிவு செய்தனர். இந்த நிலையில் சதீஷ்குமாருக்கு அந்த நபர் மீண்டும் போனில் தொடர்பு கொண்டு, ""பணத்தைப் பெற்றுக்கொள்ள நான் அனுப்பும் வக்கீலானான வெங்கடபதி என்பவர் வருவார் அவரிடம் பணத்தைக் கொடுங்கள்'' என்றும் கூறி உள்ளார்.

3 பேர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். ஓய்வுபெற்ற நீதிபதியால் அனுப்பப்பட்டவர்கள் என்றும் வக்கீல் வெங்கடபதி, கிருஷ்ணமூர்த்தி, கிரிஷ் குமார் எனவும் அறிமுகப்படுத்தி கொண்டனர். பின்னர் சதீஷ்குமார், மருத்துவமனை ஊழியர்களிடம் இருந்து திரட்டிய ரூபாய்.50 ஆயிரம், மருத்துவ நிர்வாக இயக்குனர் கொடுத்த ரூ. 50 ஆயிரம் என ரூபாய் ஒரு லட்சம் பணத்தை அவர்களிடம் கொடுத்தார். தகவலை தன்னிடம் நிதியுதவி கேட்ட ஓய்வு பெற்ற நீதி பதிக்கு சொல்லிவிடலாம் என அவரது நம்பரைத் தொடர்புகொண்டபோது, நிதிவாங்க வந்த மூவரில் ஒருவரின் செல்போன் ரிங் ஆனது.

Advertisment

சந்தேகம் அடைந்த சதீஷ்குமார் அவர்களிடம் விசாரிக்க, மூன்று பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் சொன்னதால் இது டுபாக்கூர் ஆசாமிகள் என்பதை உணர்ந்த சதீஷ்குமார் அவர்களிடம் பணத்தை திரும்பக் கேட்டுள்ளார் ஆனால் அந்த மூவரும் சதீஷ்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். மருத்துவமனை ஊழியர்கள் துணையுடன் மூவரும் மடக்கப்பட்டு போலீசிடம் ஒப்படைக் கப்பட்டுள்ளனர்.

விசாரணைக்குப் பிறகு மோச டிப் பேர்வழிகள் மூவர் மீதும் 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து கொரோனா நிதியாக கொடுக்கப்பட்ட ஒரு லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

- ஜீவாதங்கவேல்