காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கிவந்த சிறப்பு அந்தஸ்தான, அரசியலமைப்புச் சட்டங்கள் 370 மற்றும் 35 ஏ ரத்து செய்திருக்கிறது மத்திய அரசு. இந்தியாவின் வெற்றியென்று இதனை கொண்டாடுகிறது பா.ஜ.க. அரசு. மாநில உரிமையை நசுக்கும் நடவடிக்கையென கண்டிக்கின்றன எதிர்க்கட்சிகள். எந்தவித கருத்தையும் சொல்லமுடியாமல் அடக்கி வைக்கப்பட்டிருக்கிறது காஷ்மீர். இந்தச் சூழலில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்ஃபோன்ஸைச் சந்தித்து, சில கேள்விகளை முன்வைத்தோம்…

aa

அரசியலமைப்புச் சட்டம் 370 ரத்து செய்யப்பட்டது குறித்த உங்கள் பார்வை?

இந்த அறிவிப்பு வெளியான நாள், சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் கூட்டாட்சித் தத்துவத்தின் மீது விழுந்த மிகப் பெரிய சம்மட்டி அடி; கறுப்பு நாள். முழு அங்கீகாரம் பெற்ற ஒரு மாநிலத்தை உடைத்து, யூனியன் பிரதேசங்களாக மாற்றுவதற்கான உரிமையை, அனுமதியை யார் தந்தது? சம்பந்தப்பட்ட மாநிலத்து மக்களை, அங்கிருக்கிற அர சியல் தலைவர்களைக் கலந்தாலோசித்திருக்க வேண்டாமா? இதைப் போன்றதொரு நிலை நாளை மற்ற மாநிலங்களுக்கு ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?

Advertisment

சிறப்பு அந்தஸ்தைத் திரும்பப் பெறுவதற் கான காலகட்டம் வந்திருப்பதாக சொல் கிறார்களே?

காஷ்மீரி மக்கள் தங்களுடைய தனிப்பட்ட கலாச்சாரம், மொழி, இயற்கைவளம் உள்ளிட்ட வற்றை பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் சில கோரிக்கைகளை முன்வைத்தனர். அப்போது ஷேக் அப்துல்லா போன்ற பெரிய தலைவர்கள், "எங்கள் நிலங்களை மற்ற மாநிலத்தவர்கள் வாங்கி, கல்வியறிவில்லாத ஏழை, எளிய காஷ்மீரிகளை வாழ்விழக்கச் செய்யக்கூடாது. எங்களது தனிப் பட்ட அடையாளமான காஷ்மீரி மொழி மற்றும் அதிகாரங்களைப் பாதுகாத்துத் தரவேண்டும்' என்று கேட்டுக் கொண்டதால், 370 சிறப்புப் பிரிவு கொடுக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசாங்கம் ஜம்மு காஷ்மீரில் அமைத்த சட்டசபையின் சட்டப்படி, அவர்கள் சொல்லுகிறவரை 370-வது சட்டப்பிரிவு இருக்கும். ஆனால், ஜம்மு காஷ்மீர் சட்டசபை அதைப் பற்றிப் பேசாமலேயே தன் பதவிக்காலத்தை முடித்துக்கொண்டது. அதனால்தான், 2018-ல் உச்சநீதிமன்றம் 370-வது சிறப்புப்பிரிவை நிரந்தர அந்தஸ்தாக அறிவித்து தீர்ப்பளித்தது. ஆகவே, அதில் கைவைப்பதாக இருந்தால், அம்மாநில பிரதிநிதிகளை அழைத்துப் பேசியிருக்க வேண்டுமல்லவா. அதைவிடுத்து, இரவுநேரத்தில் எதிரிநாட்டினரைப்போல் நடத்தினால், அந்த மக்களின் உணர்வு எப்படியிருக்கும்.

காங்கிரசும் காஷ்மீர் மக்களுக்கு துரோகம் செய்திருப்பதாக வைகோ குற்றம்சாட்டுகிறாரே?

Advertisment

ada

ஷேக் அப்துல்லா கொடைக்கானலில் வீட்டுச் சிறையில் இருந்து, அவருக்கும் காங்கிரஸ் அரசுக் கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டு, அவரே முதல்வராக இருந்திருக்கிறார். அதன்பிறகு அவருடைய மகன் ஃபரூக் அப்துல்லா முதல்வராகவும், காங்கிரஸ் கூட்டணியில் உமர் அப்துல்லா அமைச்சராகவும் இருந் திருக்கிறார்கள். அவர்கள் யாருமே காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டதாக சொன்னதில்லை. காங்கிரசுடனான நல்லுறவை நீட்டித்திருக்கிறார் கள். பா.ஜ.க.வை மட்டுமே பேசாமல், காங்கிரசை யும் பேசினால் அது நியாயமான பேச்சாக இருக்குமோ என்று நினைத்து அவர் பேசினாரா என்று எனக்குத் தெரியவில்லை.

இனி காஷ்மீரில் அடிப்படைவாதக் குழுக் கள் தலை தூக்கவோ, தனிநாடு கோரிக்கைக்கான முழக்கத்திற்கோ வாய்ப்பில்லை என்கிறார்களே?

ஒரு மாநிலத்தை இப்படிக் கையாண்ட பிறகு, அங்கிருக்கும் மக்கள் இவர்கள்மீது நம்பிக்கை வைத்துவிடுவார்களா? இங்கு தமிழன் என்கிற சுய மரியாதை இருப்பதைப் போலவே, காஷ்மீரிகளுக் கும் மரபு, இனம் என்கிற உணர்வு இருக்கிறது. அதைத்தான் "காஷ்மீரியாத்'’என்று குறிப்பிட்டு, அதைத், தாம் மதிப்பதாக சொன்னார் முன்னாள் பிரதமர் வாஜ்பாய். எல்லா வகையிலும் இந்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு, பா.ஜ.க.வுடனே கூட்டணிவைத்து ஆட்சி நடத்தியவர்களை ஏன் நம்பிக்கைக்கு எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான் கேள்வி.

இதன் விளைவுகள் என்னவாக இருக்கும்?

அதிருப்திகொண்ட இளைஞர்கள் திரண் டால், அவர்களது உணர்வுகளை பாகிஸ்தானோ, சீனாவோ எப்படித் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும்? அப்படியொரு பதற்ற மான சூழலில் இந்தியா இருந்தால், வளர்ச்சியும் முன்னேற்றமும் எப்படி இருக்கும்? பொருளாதார முதலீடுகள் எப்படி வரும் போன்றவற்றையெல்லாம் சிந்திக்காமல், முழுக்கவே சிக்கல்களையும், அதைத்தொடர்ந்து வரும் விளைவுகளையும் கொண்டிருக்கிறது இந்த நடவடிக்கை.

என்னதான் இருந்தாலும் பா.ஜ.க. சாதித்துவிட்டதே?

டெல்லிக்கு முழுமாநில அந்தஸ்து கேட்பதற் காக உருவான ஆம்ஆத்மி கட்சி இதனை ஆதரிக் கிறது. மாநில உரிமைக்காக குரல்கொடுத்துவந்த அண்ணாவின் பெயரைத் தாங்கியிருக்கிற அ.தி.மு.க. இதை எப்படி ஆதரிக்கிறது?. மாநில சுயாட்சி, மாநில உரிமைகள், மாநில அதிகாரம் போன்றவற்றைப் பேசியே ஆட்சிக்குவந்த கட்சிகள், அதையே இழக்கத் தயாராக இருக்கின்றன என்றால், எதற்காக என்று மக்கள் நிச்சயம் கேட்பார்கள்.

சந்திப்பு: பெலிக்ஸ்

-தொகுப்பு: ச.ப.மதிவாணன்

படங்கள்: பிரதாப்