விழுப்புரம் மாவட்டத்திற்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே முதல்வர் வருகை தரப்போவதாக அறிவிக்கப்பட்டது. பெஞ்சல் புயல் காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. தற்போது ஜனவரி 27, 28ஆம் தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முதல்வர் வருகைதந்தார்.

27ஆம் தேதி மாலை, திண்டிவனம் வருகைதந்த முதல்வருக்கு, அமைச்சர் பொன்முடி, முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திண்டிவனம் பைபாஸ் சாலையில் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து திண்டிவனத்தில் ரோடு ஷோ நடத்தி, பொதுமக்களின் மனுக்களை முதல்வர் பெற்றுக்கொண்டார்.

SS

பின்பு திண்டிவனம் கே.வி.எஸ். திருமண மண்டபத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். மறுநாள் காலை, வழுதரெட்டியில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மறைந்த அமைச்சர் கோவிந்தசாமியின் நினைவு அரங்கம், சிலை, மற்றும் மறைந்த 21 சமூக நீதிப் போராளிகளின் மணிமண்டபம் ஆகியவற்றை திறந்துவைத்தார். அதன் பிறகு மாவட்ட வளர்ச்சிக்காக 11 திட்டங்களை அறிவித்தார். குறிப்பாக, 304 கோடி செலவில் நந்தன் கால்வாய் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார். (இதுகுறித்து சில மாதங்களுக்கு முன்பு நமது நக்கீரன் செய்தி வெளியிட்டிருந்தது) தென்பெண்ணையாற்றில் சேதமடைந்திருந்த தளவானூர் அணைக்கட்டு 84 கோடி செலவில் சீரமைக்கப்படும், சங்கரா பரணி ஆற்றின் குறுக்கே 30 கோடி மதிப் பீட்டில் தடுப்பணை, கோலியனூர் ஒன்றியத்தி லுள்ள 29 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் 35 கோடி செலவில் கூட்டுக் குடிநீர்த் திட்டம், திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோவில் இடத்தில் 4 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம், விரகனூர் -பாதிராபுலியூர் வரை 15 கி.மீ. தூர சாலை, எட்டு கோடி 50 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதல்வர் அறிவித்தார்.

முதல்வர் வருகைக்கு முதல்நாள், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், "21 சமூகநீதிப் போராளிகளின் மணிமண்டபத் தையும், கோவிந்தசாமியின் நினைவு அரங்கத் தையும் திறந்துவைக்கும் நாடகத்தை விட்டு விட்டு, வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டு அறிவிப்பை வெளியிடுங்கள். இந்த இட ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்ற மூன்றாண்டுகளாக நாங்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். இதற் காக முதல்வரை அன்புமணி நேரில் சந்தித்தும் வலியுறுத்தினார். ஆனால் இது நாள்வரை ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடவில்லை. வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்குவதற்கு தயக்கம் காட்டு வது ஏன்? உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த வாறு, கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர் களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்' என்று கடுமையாகச் சாடியிருந்தார்.

Advertisment

SS

28ஆம் தேதி மணிமண்டபத்தையும், நினைவகத்தையும் திறந்துவைத்த முதல்வர், நலத்திட்ட உதவிகளை வழங்கியபின் உரையாற்றினார். அப்போது, "விக்கிர வாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.ஜி.கோவிந்தசாமிக்கும், போராட்டத்தில் உயிர்நீத்த 21 சமூக நீதிப் போராளிகளுக் கும் மணிமண்டபம், நினைவகம் உரு வாக்க வேண்டுமென்று எம்.பி. ஜெகத்ரட் சகன், எம்.எல்.ஏ. அன்னியூர் சிவா போன்றவர்கள் என்னிடம் கோரிக்கை மனு அளித்தனர் அதன்படி இன்றைக்கு மணிமண்டபம், நினைவகம் ஆகியவற்றை திறந்து வைத்திருக்கிறேன். பேரறிஞர் அண்ணா, பெரியார், கலைஞர் போன்ற வர்கள் இட்ட பணிகளைச் செய்து முடிப் பதுதான் தன்னுடைய ஒரே நோக்கம் என்று வாழ்ந்தவர் ஏ.ஜி. (கோவிந்தசாமி).

அடுத்து, 21 சமூகநீதிப் போராளிகளுக்கு நினைவு மண்டபம் திறந்துவைக்கப்பட்டிருக் கிறது. வன்னிய சமுதாய மக்கள் தங்களின் சமூகநீதி உரிமையைக் கேட்டு 1987-ல் அ.தி.மு.க. ஆட்சியில் போராடியபோது அவர்கள், காக்கை, குருவிகளைச் சுடுவதுபோல சுட்டுக் கொல்லப் பட்டார்கள். 1989ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் தலைவர் கலைஞர், தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நியாயமான கோரிக் கையை ஏற்று தனி இட ஒதுக்கீடு வழங்க வழி வகை செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அவர் சொன்னது போலவே முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த 43வது நாள், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டை உருவாக்கிக் கொடுத்த வரலாறு தான் கலைஞருடைய வரலாறு. உயிரிழந்த 21 குடும்பத்தினருக்கு 3 லட்சம் கருணைத்தொகை யும், மாதந்தோறும் 3000 ரூபாய் ஓய்வூதியமும் வழங்கியவர் கலைஞர். அதோடு, உயிர்நீத்தவர் களுக்கு சமூகநீதிப் போராளிகள் என்ற பட்டமும் வழங்கினார். அந்த போராட்டத்தில் கைதான 2 லட்சம் பேர் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன'' எனக் கூறினார்.

Advertisment

வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக் கீட்டுக்கான போராட்டங்கள் தொடரும் சூழ லில்... மணிமண்டபத் திறப்பு விழாவும், நினை வகத் திறப்பு விழாவும் அப்பகுதி மக்களைத் திருப்திப்படுத்தியிருக்குமா?