பீர், பிரியாணி விருந்து ! திருக்கோவிலூர் தி.மு.க. பரபரப்பு!

ss

தேர்தல் நெருங்குவதால் தி.மு.க., அ.தி.மு.க., நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உட்பட பிரதான கட்சிகள் அனைத்தும் தமிழகமெங்கும் வாக்குச்சாவடி முகவர் குழுக்களை நியமித்துவருகின்றன அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் ஒன்றியத்தின் சார்பில், கிழக்கு, மேற்கு, தெற்கு செயலாளர்கள் அய்யனார், ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர், தங்கள் பகுதியில் வாக்குச்சாவடி முகவர்கர்களுடன் இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில், கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளரும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப் பினருமான வசந்தம் கார்த்திகேயன், தொகுதி பொறுப்பாளர் பெறுநர்கிள்ளி ஆகியோர் கலந்துகொண்டு, வாக்குச்சாவடி பாக முகவர் களாக எப்படிப்பட்டவர்களை நியமிக்க வேண் டும், எப்படி கண்காணிக்க வேண்டும், மக்க ளிடம் ஆட்சியின் நலத்திட்டங்களை எப்படி

தேர்தல் நெருங்குவதால் தி.மு.க., அ.தி.மு.க., நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உட்பட பிரதான கட்சிகள் அனைத்தும் தமிழகமெங்கும் வாக்குச்சாவடி முகவர் குழுக்களை நியமித்துவருகின்றன அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் ஒன்றியத்தின் சார்பில், கிழக்கு, மேற்கு, தெற்கு செயலாளர்கள் அய்யனார், ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர், தங்கள் பகுதியில் வாக்குச்சாவடி முகவர்கர்களுடன் இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில், கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளரும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப் பினருமான வசந்தம் கார்த்திகேயன், தொகுதி பொறுப்பாளர் பெறுநர்கிள்ளி ஆகியோர் கலந்துகொண்டு, வாக்குச்சாவடி பாக முகவர் களாக எப்படிப்பட்டவர்களை நியமிக்க வேண் டும், எப்படி கண்காணிக்க வேண்டும், மக்க ளிடம் ஆட்சியின் நலத்திட்டங்களை எப்படி எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க வேண்டும், வாக் காளர் பட்டியலை எப்படி சரிபார்க்க வேண்டு மென்று பல்வேறு ஆலோசனைகளை இளைஞ ரணியினருக்கு வழங்கினார்கள். கூட்டம் முடிந்தபின் மணலூர்பேட்டையில் வேறொரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் புறப்பட்டு சென்றுவிட்டனர்.

vv

கூட்டம் முடிந்தபின், அதில் கலந்து கொண்ட இளைஞரணி பொறுப்பாளர்களுக்கு மட்டன், சிக்கன் அசைவ விருந்தினை அமோக மாக ஏற்பாடு செய்திருந்தனர். விருந்தில், தண் ணீர் பாட்டிலுக்கு பக்கத்தில் பீர் பாட்டிலும் வைக்கப்பட்டிருக்கிறது! பிரியாணியும் மட்டனும் ஜில் பீருமாக சுவைத்த மகிழ்ச்சியில், அதை செல்போனில் படம்பிடித்து, தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பந்தாவாக அந்த படங் களை, வீடியோக்களை இளைஞரணியினர் அனுப்பினர். அவை அ.தி.மு.க.வினருக்கும் செல்ல, அவர்களோ அப்படங்களை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கியதோடு, எடப் பாடி வரை கொண்டுசென்றதால், போதையின் பாதையில் தி.மு.க. இளைஞரணியினர் என்று ஊடகத்தினரிடம் ஒரு பிடி பிடித்திருக்கிறார் எடப்பாடி!

இதுகுறித்து தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் கள் வினோத், ஏகாம்பரம் மறுப்பு தெரிவித்ததோடு, ""ஆலோசனைக் கூட்டம் முடிந்து நிர்வாகிகள் மற்றும் இளைஞரணியினர் கலைந்து சென்றபின் அதே மண்டபத் தில் நடந்த கூட்டத்தில் சிலர் பீர் பாட்டிலுடன் கறிவிருந்து சாப்பிட்டுள்ளனர். அந்த வீடியோவைத்தான் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி னர். தி.மு.க. சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பீர் விருந்து என எதிர்க்கட்சியினர் பொய்ச்செய்தி பரப்புகின்றன. இது எங்கள் இளைஞரணிக் கெதிரான திட்டமிட்ட சதி. உண்மைக்கு புறம்பானது'' என்று விளக்கமளித்தனர்.

சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் தரப்பினரிடம் கேட்டபோது, ""வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைத் தக்கவைக்க, கட்சிப் பொறுப்பாளர்கள் களப்பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இதுபோன்ற கூட்டங்கள் நடத்தப்படு கின்றன. அதற்கு களங்கம் ஏற்படுத்த அ.தி.மு.க.வினர் அவதூறு பரப்புகின்றனர். அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் குமரகுரு, உளுந்தூர்பேட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். அதோடு கடந்த எம்.பி. தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் எங்கள் கட்சி வேட்பாளரிடம் தோற்றவர். இதற்கு காரணம் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தீவிரமாக தேர்தல் பணியாற்றியது தான். வரும் தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் குமரகுரு நிற்பதற்கான முயற்சியில் இருக்கிறார். அவரது வெற்றிக்கு தடையாக இருப்பதால் வசந்தம் கார்த்தி கேயனுக்கு எதிராகக் குமரகுரு ஆதரவாளர்கள் காய் நகர்த்துகின்றனர் அதன் எதிரொலி யாகத்தான் இந்த பீர் விஷயத்தை பூதாகரமாக்க முயற்சிக்கின்றனர்'' என்கிறார்கள்.

-எஸ்.பி.எஸ்.

_________

அமைச்சர் பதவிக்கு குறி!

vv

விழுப்புரம் மாவட்ட அமைச்சரான பொன்முடி சர்ச்சையில் சிக்கி அமைச்சர் பதவியை இழந்துள்ள நிலையில், அடுத்த அமைச்சர் யாரென்று தி.மு.க. தலைமையகத்தில் விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. கள்ளக் குறிச்சி மாவட்டத்துக்கு அமைச்சர் பிரதிநிதித்துவம் இல்லை. பக்கத்து மாவட்டமான திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த எ.வ.வேலு தான் இம்மாவட்டத்துக்கு பொறுப்பாளராக இருக்கிறார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் ஆகியோரும், விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தானும் அமைச்சர் பதவியை எதிர்பார்த்து காய்நகர்த்தி வருகின்றனர். தற்போது உடையார் சமூகத்தை சேர்ந்தவரை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கியதால் இன்னொரு உடையார் சமூகத்தவரை அந்த பதவிக்கு கொண்டுவருவார்கள் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில், வசந்தன் கார்த்திகேயன் தனக்குத்தான் அடுத்த அமைச்சர் பதவி என்ற வலுவான எண்ணத்தில் இருக்கிறார்.

எனவே தனது மாவட்டத்துக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகளுக்கு தாராளமாக செலவழித்துவருகிறார். அந்த அடிப்படையில் தான் ரிஷிவந்தியம் தொகுதியில் நடைபெற்ற இளைஞரணி கூட்டத்தில், கறிவிருந்துக்கு பீர் சப்ளையை ஏற்பாடு செய்திருக்கிறார். இங்கு பரிமாறப்பட்ட பீர் வகைகள், சாதாரண டாஸ்மாக் கடைகளில் கிடைக்கக்கூடியவை இல்லையென்றும், வசந்தன் கார்த்திகேயன் நடத்திவரும் ஹோட்டல் பாரிலிருந்து எடுத்துவரப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. பொதுவாக அரசியல் கட்சியினர் மது விருந்து நடத்தினால், அதை தனியாகக் கமுக்கமாகத்தான் நடத்துவார்கள். ஆனால் இங்கே கறிவிருந்தோடு சேர்த்து பீர் பரிமாறப்பட்டதுதான் சர்ச்சையாகியிருக்கிறது.

-ராஜா

nkn030525
இதையும் படியுங்கள்
Subscribe