பீஃப் விற்கக்கூடாது! சண்டியரான பா.ஜ.க சங்கியை கதறவிட்ட பெண்!

ss

கோவை மாநகராட்சி உடையாம்பாளையம் பகுதியில் சாலையோரத்தில் தள்ளுவண்டி மூலம் பீப் பிரியாணி கடை நடத்திவரும் ரவி -ஆபிதா தம்பதியினரிடம், பீப் பிரியாணி விற்கக்கூடாது என பா.ஜ.க. மாநகர் மாவட்ட ஓ.பி.சி. அணி செயலாளர் சுப் பிரமணி மிரட்டியது வீடியோ வாக வைரலானது. அதில், "இங்கு மாட்டிறைச்சி விற்கக்கூடாது. யாரைக்கேட்டு விற்பனை செய்து வருகிறீர்கள்?'' எனக் கடைக்காரர்களிடம் வாக்குவாதம் செய்வது பதிவாகியுள்ளது. இது கோவையா? இல்லை உத்தரபிரதேசமா? பொதுமக்களை மிரட்டும் அதிகாரத்தை இந்த சங்கிகளுக்கு யார் கொடுத்தது.? என புதன்கிழமையன்று சமூக வலைத்தளங்களில் பா.ஜ.க.விற்கு எதிராக அதிர்வலைகள் எழுந்தது.

ss

"நானும் அவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். எங்களுக்கு தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி இங்கு பீப் பிரியாணி கடை போட்டோம். கடந்த 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தன்று எங்களுடைய கடைக்கு வந்த பா.ஜ.க. சுப்பிர மணி, "இங்கே பீப் பிரியாணி, சில்லி பீஃப் போட

கோவை மாநகராட்சி உடையாம்பாளையம் பகுதியில் சாலையோரத்தில் தள்ளுவண்டி மூலம் பீப் பிரியாணி கடை நடத்திவரும் ரவி -ஆபிதா தம்பதியினரிடம், பீப் பிரியாணி விற்கக்கூடாது என பா.ஜ.க. மாநகர் மாவட்ட ஓ.பி.சி. அணி செயலாளர் சுப் பிரமணி மிரட்டியது வீடியோ வாக வைரலானது. அதில், "இங்கு மாட்டிறைச்சி விற்கக்கூடாது. யாரைக்கேட்டு விற்பனை செய்து வருகிறீர்கள்?'' எனக் கடைக்காரர்களிடம் வாக்குவாதம் செய்வது பதிவாகியுள்ளது. இது கோவையா? இல்லை உத்தரபிரதேசமா? பொதுமக்களை மிரட்டும் அதிகாரத்தை இந்த சங்கிகளுக்கு யார் கொடுத்தது.? என புதன்கிழமையன்று சமூக வலைத்தளங்களில் பா.ஜ.க.விற்கு எதிராக அதிர்வலைகள் எழுந்தது.

ss

"நானும் அவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். எங்களுக்கு தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி இங்கு பீப் பிரியாணி கடை போட்டோம். கடந்த 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தன்று எங்களுடைய கடைக்கு வந்த பா.ஜ.க. சுப்பிர மணி, "இங்கே பீப் பிரியாணி, சில்லி பீஃப் போடக் கூடாது. மாட்டிறைச்சி சம்பந்தமாக எதுவும் இருக்கக் கூடாது. உடனே காலி செய்யுங்கள்' என்றார். "நாங்க யாரையும் கட்டாயப்படுத்தி சாப்பிடக் கூப் பிடலை. விருப்பம் இருக்கிற வங்க சாப்பிட வர்றாங்க. இதில் என்ன பிரச்சனை?' என்று கேட்டதற்கு, "என்னையப் பொறுத்தவரை மாட்டிறைச்சி நீங்கள் விற்கக்கூடாது. ஒரே கவுச்சி வாசம்' என்றார். "கவுச்சி வாசம்தான் பிரச்சனை என்றால் பக்கத்துல சிக்கன் கடை போட்டிருக்காங்க. அந்தப்பக்கம் மீன்கடை இருக்கு. அதில் கவுச்சி இல்லையா?' எனக் கேட்டதற்கு, "உடனே காலி செய்யலைன்னா 10 பேரை கூட்டிட்டு வந்து அடிச்சு நொறுக்கவேண்டி வரும்' என்றார். மன்றாடிப் பார்த்தும் கேட்கவில்லை. இவரு சண்டை போடுறதப் பாத்துட்டு யாரும் கடைக்கு சாப்பிட வரலை. அன்னைக்கு மட்டும் ரூ.6 ஆயிரம் நட்டம். எங்களுக்கு தெரிந்த தொழிலைத் தானே நாங்க செய்ய முடியும். எங்களை நிம்மதியாக தொழில் செய்யவிட்டால் போதும்'' என்றார் ஆபிதா.

அவரது கணவரான ரவியோ, "அவர் களைப் பொறுத்தவரை ஒரே விஷயம் தான். இங்கு மாட்டிறைச்சி விற்கக்கூடாது. பீப் விற் கும் எங்களை சாதி ரீதியாகவும், மதரீதியாகவும் அச்சுறுத்துகின்றனர்.'' என்றார்.

வீடியோ வைரலான நிலையில் சரவணம்பட்டி போலீசார் சம்பவம் குறித்து நேரில் விசாரணை மேற்கொண் டனர். "பீப் விற்பதற்கு யாருக்கும் தடையில்லை. விசாரிக்கையில், உணவு சுகாதாரம் குறித்து தகவல் வந்தது. அதுகுறித்து உணவுப் பாதுகாப்புத்துறை தான் முடிவு செய்யும். போக்கு வரத்து நிறைந்த இடத்தில் கடைகள் போட்டதால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவோம்.'' என்றது சரவணம்பட்டி போலீஸ். இது இப்படியிருக்க, காவல்துறையின் அறிவுறுத்தல் பேரில் அங்கிருந்து 200 மீட்டர் தூரத்தில் பீப் பிரியாணி கடையைப் போட்டுள்ளனர். அங்கேயும் வந்து பீப் விற்கக்கூடாது என பிரச்சனை செய்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

bb

"பத்து நாட்களுக்கு முன்பு இங்கு பீப் கடை போட்டார்கள். அப்போதே கடை போடக்கூடாது என்று நாங்கள் கூறினோம். மீண்டும் அவர்கள் அதே இடத்தில் பீப் கடை போட்டனர். கவுன்சிலரிடம் கேட்டுத்தான் கடை போட்டுள்ளோம் என்றார்கள். இந்த பகுதியில் கோவில் உள்ளதால் இறைச்சிக் கடைகள் போட வேண்டாமென்று அறிவிக்கப் பட்டுள்ளது. மது அருந்திவிட்டு வருபவர்கள் இந்த கடைகளில் நின்று சாப்பிடுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இங்கு இறைச்சிக் கடைகள் வைக்கக்கூடாதென்பது ஊரின் கட்டுப்பாடு. இட்லி தோசை என்ற சைவ உணவுகளை விற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் நாங்கள் கூறினோம்'' என்றார் வீடியோவில் மிரட்டிய பா.ஜ.க.வை சேர்ந்த சுப்ரமணி.

ss

இந்நிலையில், கோவை மாநகர காவல் ஆணையரிடம் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் முஜீப் ரகுமான் தலைமையில், பா.ஜ.க. நிர்வாகியை கைது செய்யக்கோரி மனு அளித்தனர். பத்திரிகை யாளர்களிடம் முஜீப் ரகுமான் பேசுகையில், "கோவை உடையாம்பாளையத்தில் பீஃப் பிரியாணி, சில்லி பீஃப் கடை நடத்தக்கூடாது என ஏதேச்சதிகாரப் போக்கோடு பா.ஜ.க.வின் சுப்பிர மணியம் பேசியுள்ளார். மாநகராட் சிப் பகுதிகளில் பா.ஜ.க.வினரிடம் அனுமதி வாங்கித்தான் கடை போட வேண்டுமா? இப்படி மிரட்டுவதை தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மாட்டுக்கறி அரசியல் கோவைக்கு புதிது. வட இந்தியாவுக்கு புதிதல்ல. இஸ்லாமியர்கள், பட்டியலினத்தவர்களுக்கு எதிரான ஆரம்பப்புள்ளியாக இதைப் பார்க்கிறோம். அதைத் தடுக்கவே மாநகர காவல் ஆணையரிடம் புகாரளிக்க வந்துள்ளோம்'' என்றார்.

இந்நிலையில், பீஃப் கடைக்காரர்களை மிரட்டிய பா.ஜ.க பிரமுகர் சுப்பிரமணி மீது துடியலூர் காவல் துறையினர் 126 (2), 192, 196, 351/2 உள்ளிட்ட நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்திருப்பது நம்பிக்கையளிக் கிறது. காவல்துறை இதுபோன்ற விவகாரங் களைக் கவனத்தோடும், கண்டிப்போடும் செயல்பட்டு, ரவுடித்தனங்களை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். இல்லையென்றால் மதத்தின் பெயரில் கலவரம் செய்யும் சங்கிகளின் திட்டம் வெற்றி பெற்றுவிடும்.

படங்கள்: விவேக்

nkn150125
இதையும் படியுங்கள்
Subscribe