Advertisment

மணல் குவாரியால் வறண்ட பெண்ணையாறு! 3 மாவட்ட அவலம்!

ss

சிறுவாணி தண்ணீருக்குப்பிறகு சுவையான தண்ணீருக்கு பெயர் பெற்றது விழுப்புரம் பெண்ணையாற்று தண்ணீர். இந்த ஆற்றினால் எத்தனை ஆண்டுகள் மழை பொய்த்தாலும் விழுப்புரத்தில் மட்டும் பஞ்சமே வந்ததில்லை. ஆனால் இன்று நிலைமையே வேறு. தண்ணீர்ப்பஞ்சம் எப்படி தலைவிரித்து ஆடுகிறது என்பதற்கு புதிய பேருந்துநிலையத்திற்கு எதிரே சுதாகர்நகர் உள்ளிட்டப் பகுதி குடியிருப்புகளே சாட்சி.

Advertisment

sand

பத்தாண்டுகளுக்கு முன்புவரை பதினைந்து அடிகளில் கிடைத்த சுவையான நீர் இன்று 200 அடிகளுக்குமேல் வறண்டு விட்டது. விழிப்புணர்வில்லா மக்களும், கண்டுகொள்ளா அரசும்தான் இதற்கு காரணம்.

Advertisment

1990வரை பம்பை ஆற்றில் சித்திரையில் நீராடிய விழுப்புரம் மக்கள் அகரம் பாலம், செஞ்சிரோட்டுப்பாலம் மற்றும் திருவா மாத்தூர் அபிராமேஸ்வரர், முத்தாம்பிகைக் கோய

சிறுவாணி தண்ணீருக்குப்பிறகு சுவையான தண்ணீருக்கு பெயர் பெற்றது விழுப்புரம் பெண்ணையாற்று தண்ணீர். இந்த ஆற்றினால் எத்தனை ஆண்டுகள் மழை பொய்த்தாலும் விழுப்புரத்தில் மட்டும் பஞ்சமே வந்ததில்லை. ஆனால் இன்று நிலைமையே வேறு. தண்ணீர்ப்பஞ்சம் எப்படி தலைவிரித்து ஆடுகிறது என்பதற்கு புதிய பேருந்துநிலையத்திற்கு எதிரே சுதாகர்நகர் உள்ளிட்டப் பகுதி குடியிருப்புகளே சாட்சி.

Advertisment

sand

பத்தாண்டுகளுக்கு முன்புவரை பதினைந்து அடிகளில் கிடைத்த சுவையான நீர் இன்று 200 அடிகளுக்குமேல் வறண்டு விட்டது. விழிப்புணர்வில்லா மக்களும், கண்டுகொள்ளா அரசும்தான் இதற்கு காரணம்.

Advertisment

1990வரை பம்பை ஆற்றில் சித்திரையில் நீராடிய விழுப்புரம் மக்கள் அகரம் பாலம், செஞ்சிரோட்டுப்பாலம் மற்றும் திருவா மாத்தூர் அபிராமேஸ்வரர், முத்தாம்பிகைக் கோயிலை 365 நாட்களும் அரவணைத்தோடிய பம்பையை தயவுசெய்து போய்ப் பார்க்கவும். ஆறு தூர்ந்துபோய் முட்காடாக பரவியிருக் கிறது. இதில், பெண்ணையாற்றைக் கேட்கவே வேண்டாம். திருக்கோயிலூர் அணைக்கட்டு வரை வரும் நீரை, சித்தலிங்கமடம் வாய்க்கால், மலட்டாறு வாய்க்காலுக்குத் திருப்பிவிடும் பொதுப்பணித்துறை, எல்லீஸ் சத்திரத்திற்கோ, பம்பையாற்றிற்கோ துளிநீரும் விடுவதில்லை. மக்களும், விவசாயம் பொய்த்து நட்டம் வந்தாலும் நகரத்தினுள் சென்று கூலிவேலை செய்தாவது பிழைத்துக்கொள்ளலாம். நிலங்களை பிளாட்டுகளுக்கு விற்றுவிடலாம் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர்.

விளைவு, நீர் நிலைகளைப்பற்றிய எந்த கோரிக்கைகளும் மாவட்ட-விவசாய ஆலோ சனைக்கூட்டங்களில் விவாதிக்கப்படாததால் ஆறுகளும் நீர்நிலைகளும் அறவே அழிந்து நிலத்தடிநீர் 120 அடிவரை போய்விட்டது. இது எத்தனைநாள் என்று சொல்லமுடியாது. ஒரு வருடம், ஆறுமாதம் ஏன் நாளைக்கேகூட இந்த நீர் முற்றிலும் கிடைக்காமல் போகலாம்.

இந்தப் பெண்ணையாற்றில் இருந்து கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் 300க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. காவிரிநீரைப்போல பெண்ணையாற்று நீரை கர்நாடகாவிடம் கேட்டுப்பெற் றால்தான் இனி விழுப்புரம் காக்கப் படும். திருக்கோயிலூரைத்தாண்டி எல்லீஸ் சத்திரம், பம்பையில் நீர் நிரம்பினால்தான் விழுப்புரத்தில் நிலத்தடிநீர் கிடைக்கும்.

sand

நிலைமை இப்படி இருக்க, மக்களின் நீர் ஆதாரம், குடிநீர் வாழ்வாதாரத்தை கருத்தில் கொள்ளாமல் அண்டராய நல்லூர்-தி.புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள பெண்ணையாற்றில் பொதுமக்க ளின் எதிர்ப்பை மீறி, அவர்கள் நடத்தும் போராட்டங்களை அடக்கி ஒடுக்கிவிட்டு காவல்துறை, வருவாய்த்துறை உதவியுடன் அரசு மணல் குவாரி அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.

மக்கள் போராட்டத்தை சிதைக்கும் வகையில் போலீசார் கிராமங்களுக்குச் சென்று ஒலிபெருக்கி மூலம், ""உங்களுக்கு தேவையான மணலை மாட்டு வண்டிகளில் அள்ளிக்கொள்ள அனுமதி தருகிறோம். ஆனால், லாரியில் மணல் அள்ளி செல்ல sandயாரும் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது. அதையும் மீறி எதிர்ப்பு தெரி வித்தால், போராட்டம் நடத்தினால் உங்களையெல் லாம் கைது செய்து சிறைக்கு அனுப்புவோம்'' என்று ஒலிபெருக்கி மூலம் தெரிவித்துள்ளதால் மக்கள் கொதித்தெழுந்துள்ள நிலையில், ’இந்த குவாரியை உடனடியாக மூட வேண்டும். மூட மறுத்தால் திமுக சார்பில் நடவடிக்கை எடுக்கப் படும்’என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் திருக் கோவிலூர் தொகுதி திமுக எம்எல்ஏ பொன்முடி.

""சுமார் 20ஆண்டுகளுக்கு மேலாக பெண்ணையாற்றின் மணல் சுரண்டல் ஒரு தொடர் சம்பவமாக நடந்து வருகிறது. இதற்கு எதிராக போராடும் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியையும் அதிகாரிகள் பயன்படுத்துகிறார்கள். ஆகவே, அதிகாரிகளின் ஆட்டத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வருவோம்'' என்கிறார் சி.பி.ஐ. முருகன்.

மணல் சுரண்டல் மூலம் நிலத்தடி நீர் மட்டம் மிக மிகக் கீழே சென்றுவிட்டது. குடிநீரை நம்பியிருக்கும் கிராமங்கள் வரும் காலங்களில் தவிக் கப் போகின்றன.. அதைப் பற்றி கவலைப்படாமல் அரசும், அதிகாரிகளும் மணல் அள்ளுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். இதை தடுத்து நிறுத்தப் போராடும் மக்களையும் ஒடுக்கப் பார்க்கிறார்கள். எனவே நீதிமன்றம் மூலம் வழக்குத் தொடுப்பதற்கு ஆலோசனை செய்து வருகிறோம்’’ என்கிறார் அ.ம. மு.கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சோலையப்பன்.

-எஸ்.பி.சேகர்

nkn250720
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe