Advertisment

ஐ.ஐ.டி.யில் தொடரும்... சாதிய பாலியம் கொடூரம்! -மாணவிக்கு நீதி கிடைக்குமா?

IIT

சென்னை ஐ.ஐ.டி. என்றாலே பட்டியலின மாணவர்களுக்கு நெருக்கடி தரப்படுவது, அதனால் அவர்கள் தற்கொலை செய்வது, தற்கொலை முயற்சியில் இறங்குவது எனத் தொடர்கதையாகியுள்ளது. தற்போது மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பட்டியலின மாணவி தற்கொலை முயற்சியில் இறங்கிய விவகாரம் பரபரப்பாகியுள்ளது.

Advertisment

iit

சென்னை ஐ.ஐ.டி.யில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பட்டியலின மாணவி ஆராய்ச்சிப் படிப்பைப் படித்துவந்தார். இவர் படிக்கும் காலத்தில், 2017-ம் ஆண்டு முதல், அதே துறையில் படித்த கிங்ஸ் தேப்சர்மா, சுபதீப் பேனர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ ஆகிய மாணவர்கள் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ள னர். தொல்லை தாங்க முடியாததால் தன்னுடைய பேராசிரியரான எடமனபிரசாத்திடம் புகார் கொடுத்துள்ளார் மாணவி. ஆனால் பேராசிரியரோ அந்தப் புகாரைக் கண்டுகொள்ளாமல், சாதிரீதியாகப் பேசி அந்த மாணவியின் மனதைப் புண்படுத்தியதோடு, ஆராய்ச்சிக்கான லேப் உள்ளே விடாமல், "நீ இரவில் மட்டும் இந்த லேப்பைப் பயன்படுத்திக்கொள்'' என்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி இ

சென்னை ஐ.ஐ.டி. என்றாலே பட்டியலின மாணவர்களுக்கு நெருக்கடி தரப்படுவது, அதனால் அவர்கள் தற்கொலை செய்வது, தற்கொலை முயற்சியில் இறங்குவது எனத் தொடர்கதையாகியுள்ளது. தற்போது மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பட்டியலின மாணவி தற்கொலை முயற்சியில் இறங்கிய விவகாரம் பரபரப்பாகியுள்ளது.

Advertisment

iit

சென்னை ஐ.ஐ.டி.யில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பட்டியலின மாணவி ஆராய்ச்சிப் படிப்பைப் படித்துவந்தார். இவர் படிக்கும் காலத்தில், 2017-ம் ஆண்டு முதல், அதே துறையில் படித்த கிங்ஸ் தேப்சர்மா, சுபதீப் பேனர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ ஆகிய மாணவர்கள் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ள னர். தொல்லை தாங்க முடியாததால் தன்னுடைய பேராசிரியரான எடமனபிரசாத்திடம் புகார் கொடுத்துள்ளார் மாணவி. ஆனால் பேராசிரியரோ அந்தப் புகாரைக் கண்டுகொள்ளாமல், சாதிரீதியாகப் பேசி அந்த மாணவியின் மனதைப் புண்படுத்தியதோடு, ஆராய்ச்சிக்கான லேப் உள்ளே விடாமல், "நீ இரவில் மட்டும் இந்த லேப்பைப் பயன்படுத்திக்கொள்'' என்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி இரவில் ஆராய்ச்சிக்கூடத்திற்கு வந்த மாணவிக்கு பேராசிரியரும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

அனைத்தையும் தன்னுடைய தாயிடம் சொல்லிக் கண்ணீர்விட்டு, படிப்பை நிறுத்தப்போவதாகக் கூறியிருக்கிறார் மாணவி. அதற்கு தாயோ, "இதையெல்லாம் தாண்டித்தான் நாம் முன்னுக்கு வரவேண்டும்'' என்று தைரியப்படுத்தியதால் மீண்டும் கல்லூரிக்குச் சென்றிருக்கிறார். கல்லூரிக்கு வந்த மாணவியிடம், அம்மாணவர்கள் மீண்டும் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார்கள். 2018-ம் ஆண்டு கல்லூரிச் சுற்றுலா சென்றபோது அதே மாணவர்கள் மாணவியிடம் வன்புணர்ச்சியில் ஈடுபட்டு, அதை வீடியோ எடுத்து, அவ்வப்போது அதனை மாணவியிடம் காட்டி மிரட்டி வந்துள்ளனர். தொல்லை எல்லை மீறவே, அதுகுறித்து காவல்துறையில் புகாரளித்திருக்கிறார். காவல்துறையில் நட வடிக்கை எடுப்பதற்கு காலதாமதம் செய்துவந்தி ருக்கிறார்கள். எனவே, இறுதியாக கல்லூரி வளாகத்திலுள்ள புகார் கமிட்டிக்கு 2020-ல் புகார் கொடுத்தபிறகு, விசாரணை நடத்திய ஐ.ஐ.டி. நிர்வாகம், "அம்மாணவியின் படிப்பு முடியும்வரை குற்றம்சாட்டப்பட்ட மாணவர் கள் கல்லூரிக்குள் வரக்கூடாது' என உத்தரவைப் பிறப்பித்தது. ஆனால் அந்த மாணவர்கள் உத்தரவைப் பொருட்படுத்தாமல் வழக்கம்போல கல்லூரிக்கு வந்ததால் அச்சமடைந்த மாணவி, அம்மாணவர்களின் தொடர் தொல்லையால் அடுத்தடுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

2021, ஜனவரியில் அதுகுறித்து மீண்டும் காவல்துறையில் புகாரளித் திருக்கிறார் மாணவி. இம்முறை மாதர் சங்கத்தினர் தலையிட்டு நியாயம் கேட்டதால், மூன்று மாதம் கழித்து சி.எஸ்.ஆர். கொடுத்துள்ள னர். அதன்பிறகு சென்னை கமிஷனர் மகேஷ்குமார் அழுத்தம் தர, ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி கிங்ஸ்தேப், சுபதீப் பேனர்ஜி, மலாய்கிருஷ்ண மகதோ, டாக்டர் ரவீந்திரன், எடமன பிரசாந்த நாரா யண் பத்ரா, அய்யன் பட்டாச்சர்யா, சௌரவ தத்தா என 8 பேர் மீது மயிலாப்பூர் மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப் பட்டது. "நீ வழக்கு போடும் அளவிற்கு சென்று விட்டாயா? இனி உன்னை யாரும் காப்பாற்ற முடியாது'' என ஐ.ஐ.டி. நிர்வாகம் மிரட்டியுள் ளது. அதேபோல் வழக்குப் பதிவுக்குப் பின் அந்த விவகாரம் மீண்டும் கிடப்பில் போடப்பட்டது.

IIT

இந்நிலையில், ஜனநாயக மாதர் சங்கத்தினர் குற்றம்சுமத்தியதால், சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் கோட்டூர்புரம் ஏ.சி. சுப்பிரமணியன் தலைமையில் சிறப்பு விசா ரணைக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அதையடுத்து, மாணவர் களைப் பிடிப்பதற்காக மயிலாப்பூர் தனிப்படை போலீசார் மேற்கு வங்கம் விரைந்துசென்று, ஆராய்ச்சி மாணவர் கிங்ஸ் தேப்சர்மாவை கைது செய்தனர். ஆனால் அம்மாணவர், தன்னைக் கைது செய்யக்கூடாதென முன் ஜாமீன் எடுத்திருந்ததால், அவரைக் கைது செய்து தமிழகத்துக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய இந்திய ஜனநாயக மாதர் சங்கப் பொதுச்செயலாளர் சுகந்தி, "இந்த விவகாரத்தில் காவல்துறை முழுமையாக நாடகமாடுகிறது. முதல் தகவல் அறிக்கையில் ஐ.பி.சி. 376, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் என எதையுமே பதிவு செய்யாமல் விட்டுவிட்டது. இந்த இரண்டையும் செய்திருந்தால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் முன்ஜாமீனே பெற்றிருக்க முடி யாது. ஆனால் இந்த பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யாமல், மாணவர்கள் முன்ஜாமீன் பெறு வதற்கு ஏதுவாக காவல்துறை நடந்துகொண்டுள்ளது. இதன் காரணமாக தற்போது, சம்பந்தப்பட்ட மாணவரைக் கைது செய்ய முடியாமல் போயிருக் கிறது. பாதிக்கப்பட்ட மாணவி, பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக காவல்துறை சாதிய ஆதிக்கத்தைக் காட்டியுள்ளது. இதில் மாணவர்களுக்கு உடந்தையாகச் செயல் பட்டுள்ள மயிலாப்பூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுசித்ரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

ஐ.ஐ.டி. மாணவர்கள் சிலரிடம் விசாரித்த போது, "இந்த விவகாரம் நான்கைந்து ஆண்டு களாக இழுத்தடிக்கப்பட்டுள்ளதால், இடைப்பட்ட காலத்தில், இந்த வழக்கு சம்பந்தமான ஆதாரங்களை ஐ.ஐ.டி. நிர்வாகமே மறைத்திருக்க வாய்ப்புள்ளது. இந்த விவ காரத்தில், அம்மாணவர்களுக்குச் சாதகமாகவே ஐ.ஐ.டி. நிர்வாகம் செயல்பட்டுள்ளது'' என்று குற்றம்சாட்டுகிறார்கள். சென்னை ஐ.ஐ.டி.யில் பாலியல் தொந்தரவும், சாதீய கொடுமை களும் தொடர்கதையாவதற்கு எப்போது தான் முற்றுப்புள்ளி வைக்கபோகிறதோ இந்த அரசு!

Advertisment

nkn020422
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe