பொருநை அருங்காட்சியகம் திறப்பு, 45 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள், தரிசன பூமியில் கிறிஸ்துமஸ் விழா உள்ளிட்டவைகளுக்காக நெல்லைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். வரும் நாளிற்காக காத்திருந்தனர் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட சிறுபான்மையின மக்கள்.
ரோமன் கத்தோலிக், பெந்தெகோஸ்தே மற்றும் சி.எஸ்.ஐ. என்றழைக்கப்படும் தென்னிந்திய திருச்சபைகளை ஒன்றிணைத்தது தான் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம். இதற் காக, அனைத்து மதங்களும் ஒன்றே என்ற அடிப்படையில், அத்தனை மத குருமார் களையும் அழைத்து, டக்கம்மாள் புரத்திலுள்ள "தரிசன பூமியில் கிறிஸ்துமஸ் பெருவிழாவினை கொண்டாடினால் என்ன?' என போட்டி போட்டு விழாவிற்காக பணியாற்றியது கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம்.
சனிக்கிழமையன்று மதியவேளையில் தூத்துக்குடி வாகைகுளம் விமானநிலையத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து சாலை மார்க்கமாக, நெல
பொருநை அருங்காட்சியகம் திறப்பு, 45 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள், தரிசன பூமியில் கிறிஸ்துமஸ் விழா உள்ளிட்டவைகளுக்காக நெல்லைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். வரும் நாளிற்காக காத்திருந்தனர் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட சிறுபான்மையின மக்கள்.
ரோமன் கத்தோலிக், பெந்தெகோஸ்தே மற்றும் சி.எஸ்.ஐ. என்றழைக்கப்படும் தென்னிந்திய திருச்சபைகளை ஒன்றிணைத்தது தான் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம். இதற் காக, அனைத்து மதங்களும் ஒன்றே என்ற அடிப்படையில், அத்தனை மத குருமார் களையும் அழைத்து, டக்கம்மாள் புரத்திலுள்ள "தரிசன பூமியில் கிறிஸ்துமஸ் பெருவிழாவினை கொண்டாடினால் என்ன?' என போட்டி போட்டு விழாவிற்காக பணியாற்றியது கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம்.
சனிக்கிழமையன்று மதியவேளையில் தூத்துக்குடி வாகைகுளம் விமானநிலையத்திற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து சாலை மார்க்கமாக, நெல்லைக்கு வந்தார். மேளதாளத்துடன் கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் பொய்க்கால் குதிரை ஆட்டம் என முதலமைச்சரை கே.டி.சி. நகர் ரவுண்டானாவில் கூடியிருந்த மக்கள் வரவேற்கின்றனர்.
மாலை வேளையில் டக்கம்மாள் புரத்தில் அமைந்துள்ள தரிசன பூமிக்கு வந்த முதலமைச்சர், விழாவின் தொடக்கமாக, தென்னிந்திய திருச்சபை சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாராள் தக்கர் கன்வென்ஷன் சென்டரின் பிரதான நுழைவாயிலை திறந்து வைத்தார். தொடர்ந்து, விழாவின் முக்கிய அங்கமாக வைக்கப்பட்டிருந்த கலைநயமிக்க கிறிஸ்துமஸ் குடிலையும் திறந்து வைத்தார். கனிமொழி கருணாநிதி எம்.பி., தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, அமைச்சர்கள் கே.என்.நேரு, மனோ தங்கராஜ், கீதா ஜீவன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட இந்த பிரமாண்ட விழாவில், முதலமைச்சருக்கு, பெண்கள் ஐக்கிய சங்கத் தலைவி ஜாய் பர்ணபாஸ் செங்கோல் வழங்கி கௌரவித்தார்.
அதனைத் தொடர்ந்து, இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்கள் ஒன்றிணைந்து தமிழக அரசின் தாரக மந்திரமான "எல்லோருக்கும் எல்லாம்' என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்த மகுடத்தை சூட்டினர். கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடும் விதமாக, பல்வேறு மதத் தலைவர்கள் முன்னிலை யில் முதலமைச்சர் கேக் வெட்டினார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/22/stalin2-2025-12-22-15-52-14.jpg)
விழாவில் சிறுபான்மை கல்வி நிறுவனங் களின் ஆசிரியர் தேர்வுக் கமிட்டியில், அந்தந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் மட்டுமே இருந்து ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான அரசாணை, ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், மூக்கையூர் கிராமத்தில் இருக்கின்ற தொன்மை வாய்ந்த புனித யாக்கோபு தேவாலயம் புனரமைப்பு, சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஆயிரத்து 439 ஆசிரியர்கள் நியமனம் உள்ளிட்ட நான்கு அறிவிப்புக்களை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இங்கே ஒரு கோயிலில் திருவிழா நடந்தால், அங்கே வருகின்ற மக்களுக்கு, முஸ்லீம் மக்களும் -கிறித்துவ மக்களும் உணவு, மோர் என்று வழங்குவார்கள்.… வேளாங்கண்ணி தேவாலயத்துக்கும், அருகாமையி லுள்ள வீட்டில் நடைபெறுகின்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிக்கும் இந்துக்கள் செல்வார்கள். ரம்ஜான் நோன்பு காலத்தில், முஸ்லீம் மக்களின் நோன்புக் கஞ்சியும் -ரம்ஜான் பிரியாணியும், இந்துக்கள் வீட்டுக்கு தேடிவரும். இந்த சகோதர உணர்வும், பகுத்தறியும் திறனும்தான் நம்முடைய தமிழ்நாடு. எல்லார்க்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்’ என்ற இயேசு பெருமானின் எண்ணத்துக்கு இலக்கணமாக, நம்முடைய திராவிட மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம். எந்த மதத்தைச் சேர்ந்தவங்களாக இருந்தாலும், மதத்தின் பெயரால் ஒருவர், உங்கள் உணர்வு களைத் தூண்டுகிறார் என்றால், அவரை “சந்தேகப்படுங்கள், கவனமாயிருங்கள், ஒருவரும் உங்களை வஞ்சிக்காதபடி எச்சரிக்கையாக இருங்கள்” எனும் பைபிள் வாசகத்தை இங்கே குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்'' என்றார் அவர்.
தொடர்ந்து, ரெட்டியார்பட்டியில் தமிழகத்தின் தொன்மையான நாகரிக வரலாற்றை உலகிற்கு எடுத்துச்சொல்லும் வகையில், பொருநை அருங்காட்சியகத்தை திறந்துவைத்து அருங்காட்சி யகத்தைச் சுற்றிப் பார்த்தார்.
ஞாயிற்றுக்கிழமையன்று நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.639 கோடியில் காயிதே மில்லத் நினைவு நூலகம் உள்ளிட்ட புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பல்வேறு அரசுத் திட்டங்களைத் தொடங்கி வைத்தவர், "100 நாள் வேலை திட்டத்திலிருந்து காந்தி பெயரை நீக்கியது மட்டுமல்லாமல், வேலை வாய்ப்புக்கான பலனையும் பா.ஜ.க. அரசு அழிக்க நினைக்கிறது. பல கோடி ஏழை மக்களின் வயிற்றில் பா.ஜ.க. அரசு அடிக்க நினைக்கும்போது கூட அ.தி.மு.க. அநியாயத்திற்கு துணைபோவதை மக்கள் மறக்கவும், மன்னிக்கவும்மாட்டார்கள்'' என்றார்.
முதலமைச்சரின் நெல்லை வருகை, தங்களுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கின்றார் என்கின்ற நம்பிக்கையை ஒவ்வொரு சிறுபான்மை மக்களிடமும் விதைத்துள்ளது என்றே கூறலாம்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us