மாநிலம் முழுவதும் அராஜக ஆட்டம்!
"தமிழில் வெளிவரும் புலனாய்வுப் பத்திரிகையான நக்கீரனுக்கு ஆளும் வர்க்கத்தால் கொடுக்கும் நெருக்கடிபோல் வேறு எந்த பத்திரிகையும் கண்டிருக் காது. அதன் ஆசிரியரும் அங்கு வேலை செய்யும் ஊழியர்களின் துணிச்சலும் அந்த பத்திரிகையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் விசுவாசமும் என்னை வியக்க வைக்கிறது. நக்கீரனுக்கு உள்ள நெருக்கடிபோல் எங்கள் பத்திரி கைக்கு நடந்திருக்குமானால் எங்க ளால் தொடர்ச்சியாக பத்திரிகை யை நடத்த முடிந்திருக்குமா என்பது சந்தேகமே' என்று இந்தியாவின் பல்வேறு ஊழல்களை வீடியோ ஆதாரத்தோடு வெளியிட்டு, பா.ஜ.க. ஆட்சியையே ஆட்டம் காணவைத்த புலனாய்வு பத்திரிகையான ’"டெஹல்கா டாட் காம்' ஆசிரியர் தருண் தேஜ்பால்” எல்லா பத்திரிகைகளுக்கும் ஒரு பிரஸ் நோட் அனுப்பியுள்ளார்.
இதுக்கிடையில அண்ணன் கலைராஜன் நம்ம போன்ல வந்தாரு. "தம்பி, அன்னைக்கி அந்தம்மா எங்களக் கூப்பிட்டு மா.செ. சொல்ற மாதிரி நக்கீரனுக்கு எதிரா கோஷம் போடச் சொன்னது எல்லாம் உண் மைதான். மத்தபடி நான் ஏன் உங் கள ஆள்வச்சு அடிக்கப் போறேன்... அண்ணன் உங்களுக்குத்தான் தெரியுமே, நக்கீரன்மேல எனக்கு ரொம்ப மதிப்பு இருக்கு. அந்த வளர்மதிதான் கல்லெறிஞ்சு மாட்டிக்கிச்சு''ன்னார். அதுவும் சரிதான்னேன்.
இடம்: கோயம்புத்தூர்
அந்த நாள் அதிகாலை அப்படி விடிஞ்சிருக்கக் கூடாது. இருந்தாலும் பிரச்சினையை குண்டக்க மண்டக்க தூக்கிக்கிட்டு அமோகமாக விடிஞ்சுச்சு.
7-1-2012 அதே நாள், எஸ்.பி.சி.ஐ.டி ஆபீஸில் இருந்து நம்ம கோவை நிருபர் தம்பி அருளுக்கு போன்.
"என்னத்தையா எழுதித் தொலைச்சீங்க? பெரிய பிரச்சினையா ஆகும்போல இருக்கே?''ன்னு ஒரு காக்கியின் குரல் கத்தியிருக்கு.
"சார்... நீங்க என்ன சொல்றீங்க?''ன்னு இவரு கேட்க...
"என்னமோ, "மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்'னு ப்ரெண்ட் பேஜ் நியூஸ் போட்டுருக்கீங்க. அந்தம்மா மாட்டுக்கறி சாப்பிட்டா உங்களுக்கென்னய்யா? நீங்களும் போய் சாப்பிட வேண்டியதுதானே''ன்னு மறுபடியும் கத்த... உடனே நக்கீரன வாங்க கடைக்கு போயிருக்கார்.
அந்தக் கடைக்காரரோ... "என்ன சார்? இந்த வார புத்தகத் துல அம்மாவப் பத்தி என்ன எழுதியிருக்கீங்க? உங்க புக்கைப் படிச்சுட்டு அ.தி.மு.க.காரன் அவனவன் கோபமா இருக்கான். எல்லா புக்கையும் புடுங்கிட்டுப் போயிட்டான்...னு படபடக்கிறார்.
கோவையில நக்கீரன் விக்குற நிறைய பெட்டிக் கடைக்கெல்லாம் மூடு விழா பண்ணிட்டாய்ங்க... படுபாவிங்க.
மிச்ச சொச்சம் இருக்குற நக்கீரன எரிக்குற விழாவை அ.தி.மு.க.காரங்க முண்டியடித்து செய்ய ஆரம்பிச்சுட்டாய்ங்க. நக்கீரனோட சேத்து ஜெயலலிதாவையும் கருக்கிப்போட்டாய்ங்க.
மத்த பத்திரிகைக்காரய்ங்க எல்லாரும் தம்பி அருளக் கூப்பிட்டு... ஊரையே நக்கீரனை வச்சு எரிச்சுட்டு இருக்கறாங்க... வெளியே வராதே, உன்னையும் எரிச்சுருவாங்கன்னு எச்சரிக்கை பண்ணுறாங்க.
பொள்ளாச்சி எரியுது... உடுமலைப்பேட்டை எரியுது... ஏன் கண்ணகி கொளுத்துனதுக்கு அப்புறம் ஜெயலலிதாவால மதுரையும் எரியுது. தமிழ்நாடு பூரா போர்க்கோலம் பூண்ட மாதிரி இருக்கு. நிராயுதபாணியா இருக்குற எங்கள நாய், பேய் எல்லாம் அவனவனுக்குப் பதவி உயர்வுக்காகவும், புதுசா ஏதாவது கொட்டிக் கொடுத்துறாதா அந்த புண்ணியவதின்னு ஆளாளுக்கு நம்மள பெண்ட கழட்டுறான்...
இடம்: முதுகுளத்தூர் பக்கம் பூங்குளம்
தமிழ்நாடு முழுக்க எழவ கூட்ட ஆரம்பிச்சிட்டாய்ங்க பாவிப்பயலுக. நம்ம தம்பி நாகேந்திரன்கிட்ட பூங்குளம் ராஜகோபால்ங்கிறவர், "எனக்கு விபரம் தெரிஞ்சதிலிருந்து இப்பவரைக்கும் நான் அ.தி.மு.க.காரன்தான். அதுபோல் நக்கீரன் வாசகனும்கூட. அந்த காலகட்டத்தில் நக்கீரன் புத்தகத்தில் அம்மாவை பற்றி தப்பா எழுதிட்டாங்க. அதனால் நக்கீரன் புத்தகத்தை வாங்கிக் கொளுத்தணும்னு ஊரில் கட்சியிலிருந்து சொன்னாய்ங்க. நானும் நக்கீரனுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்துக்கு தயாரானேன். ஆனால் அதைவிட ஆர்வமாக இருந்தது புத்தகத்தில் என்ன எழுதியிருக்காங்கன்னு பார்க்க. 4 கி.மீ. தூரம் முதுகுளத்தூர் போய் புத்தகத்தை வாங்கி வந்து வாசிக்கிறதுதான் என் வழக் கம். அன்றைய நாளில் முதுகுளத்தூருக்கு போனேன். புத்தகம் கிடைக்கல. ஆர்ப்பாட்டத்துக்கும் போகணும். சரி... ராமநாதபுரம் போய் வாங்கலாம்னு போனா அங்கேயும் கிடைக்கல. எரிச்ச சாம்பல்தான் கிடைச்சது''ன்னு நொந்துபோய் சொன்னார். இவுரு இப்படிச் சொன்னது, அவுங்க ஆத்தா ஜெயலலிதாவுக்கு மட்டும் தெரிஞ்சது... சமாதியில இருந்து எந்திரிச்சு வந்து தூக்கிப் போட்டு மிதிக்கும்.
இடம்: சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கவுன்சிலர் பில்லூர் ராமசாமியோ, "அப்ப கட்சியில் விவசாய பிரிவு மாவட்ட தலைவராக இருந்தேன். சிவகங்கைக்கு புத்தகம் வர்ற முதல்நாள் இரவில், "அம்மாவைப் பற்றி நக்கீரனில் தப்பாக எழுதிட்டாங்களாம். அத்தனைபேரும் நக்கீரனுக்கு எதிரா நக்கீரன் புத்தகத்தை வாங்கி மக்கள் மத்தியில் எரித்து கண்டனம் தெரிவிக்கணும்'னு தலைமையில சொன்னதால், நாங்களும் விடியுற நேரத்திற்கு காத்திருந்தோம். எங்க ஊரிலிருந்து ஆட்களை திரட்டி சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் கூடி, ஏஜெண்ட்ட நக்கீரன் பத்திரிகையை எல்லாம் புடுங்கி எரிச்சு "நக்கீரன் கோபால் ஒழிக'ன்னு சத்தம் போட்டோம்''ன்னார்.
இடம்: ஈரோடு
ஈரோட்டில் நமது முகவர் பெரியசாமியண் ணன் (இப்ப அவர் இல்ல) நக்கீரன கடையில சப்ளை செஞ்சுட்டார். அப்போ அ.தி.மு.க. வோட ஈரோடு மாநகர செயலாளரா இருந்த மனோகரனுக்கு, அமைச்சராக இருந்த கே.வி.ராமலிங்கத்திட்டருந்து போன் வந்துருக்கு. "மனோகரா நக்கீரன் புக் எல்லாத்தையும் கடையில் இருந்து எடுத்துட்டு, கட்சிக்காரங்கள கூட்டிட்டுப் போயி ரோட்டுல போட்டு தீ வெச்சு கொளுத்து'' என ஆர்டர் போட்டுருக் கார். அடுத்த நிமிஷம்... அ.தி.மு.க.காரங்க ஈரோட்டில் உள்ள எல்லா கடைக்கும் போய் நக்கீரன் புத்தகத்த பறிச்சிருக்காய்ங்க. சில கடைக்காரங்க "புத்தகத்துக்கு காசு கொடுங்க'ன்னு கேட்டதுக்கு... "புத்தகத்த ரோட்டுல போட்டு கொளுத்தவா... இல்லை கடையோட சேர்த்து கொளுத்தவா?'ன்னு மிரட்டல் விட்டிருக்காய்ங்க.
இடம்: கோபி
கோபிசெட்டிபாளையம் அ.தி.மு.க. நகர செயலாளராக இருந்த கந்தவேல் முருகனின் மகன், பஸ்ஸில் இருந்த நக்கீரன் புத்தகக் கட்டுங்கள வெளியே எடுத்து கீழே வீசினான். நமது முகவர் தேவராஜும் அவரு மச்சானும் "ஏன் இப்படிச் செய் றீங்க''ன்னு கேட்டப்ப... "ஒழுங்கா போயிடு...'ன்னு மிரட்டிட்டு... வந்த கட்சிக்காரர்களோடு புத்தத்த எடுத்துட்டு கிளம்பினாங்க. நேரா அமைச்சர் செங் கோட்டையனின் தோட்டத்து வீட்டுக்குப் போக... அங்கிருந்தவய்ங்க "இதை எதுக்குய்யா அமைச்சர் வீட்டுக்கு கொண்டு வந்தீங்க. அங்கேயே ரோட்டுல போட்டு கொளுத்தணும்... அதைத்தான் அமைச்சர் சொன்னார்னு சத்தம் போட... ரோட்டுலயே எல்லா நக்கீரனையும் தீ வைச்சு எரிச்சாய்ங்க. நம்ம ஈரோடு நிருபர் தம்பி ஜீவாதங்கவேல், அப்போ கோபி செட்டிபாளையம் இன்ஸ்பெக்டரா இருந்த சோம சுந்தரத்திடம், புகார் மனு கொடுத்தப்ப... அந்த இன்ஸ், "புகார் மனு எல்லாம் நாங்க வாங்கமாட் டோம், அப்படி புகார் மனு வாங்கணும்னா, அமைச் சரை சொல்லச் சொல்லுங்க'ன்னு அ.தி.மு.க.வின் விசுவாசத்தை டமால்னு போட்டு உடைச்சார். இவனுகள நம்பி நாம வாழணும்... போங்கடா....
இடம்: வேலூர்
நக்கீரன சப்ளை செஞ்ச லைன்மேன் சுரேஷ், சின்னா இருவரையும் அ.தி.மு.க.காரய்ங்க நையப் புடைக்க... அவங்க தப்பிச்சு ஓடிட்டாங்க. போலீஸ் நம்ம வேலூர் முகவர் கணேசன் அண்ணனைத் தேடிவந்து... போஸ்டர் ஒட்டுனவங்களயும் தேடிப் புடிச்சு, ஒட்டியிருந்த போஸ்டரயெல்லாம் கிழிச்சாய்ங்களாம். அதோட விடாம, ஒவ்வொரு கடைக்கும் போலீஸ் போய், "நக்கீரன வித்தா... கொன்னுடுவோம்'னு மெரட்டியிருக்காங்க. நல்லா இருக்குடா ஒங்க நியாயம்...
இடம்: மதுரை
அன்னைக்கி தமிழ்நாடு பூராவும் உள்ள நக்கீரன் ஏஜெண்ட் ஆபீஸ் எல்லாம் தாக்கப் பட்டுச்சு. அதுபோல மதுரையில் நேதாஜி ரோடுல இருக்குற நக்கீரன் ஏஜெண்ட் ஆபீஸுக்கு அ.தி. மு.க.காரய்ங்க வரப்போறாங்கங்கிற செய்தி அ.தி. மு.க. வட்டாரத்திலிருந்து ஒரு பத்திரிகைகாரர் நம்ம தம்பி அண்ணலுக்குச் சொல்ல, அவரும் வேகவேக மாக மதுரை ஏஜெண்ட் உசேன்ட்ட நேரே போய்... "சீக்கிரம் கடையைச் சாத்துங்க... ஒரு கும்பல் நம்ம நக்கீரன் ஆபீஸுக்கு வருது''ன்னு சொல்லிக் கிட்டிருக்கும்போதே.... தூரத்தில் அவிய்ங்க வர்றது தெரியுது. வேக வேகமாக அங்கயிருந்து உசேன், ரபீக், லைன்மேன் சண்முகம், சம்பத், பஷீர் எல்லாரும் வெளியேற... அடுத்த நொடி அ.தி.மு.க. தடியன்கள், அலுவலக கதவை உடைக்கிறாய்ங்க. இருந்த நக்கீரன அங்கேயே போட்டு எரிச்சுட்டு ஆத்திரம் அடங்குற வரை கெட்ட வார்த்தைகளில் கத்திட்டு... அந்த இடத்தை கா- செஞ்சிருக்காய்ங்க.
அ.தி.மு.க. அமைச்சர்ல இருந்து கட்சி நிர் வாகிக வரைக்கும் நக்கீரனுக்கு எதிரா பகிரங்கமாகவே அராஜகத்த கட்டவிழ்த்துவிட்டதால, நக்கீரன விக்கிறதுக்கும், கடையில ஸ்டால் போஸ்டர் போடுறதுக்கும் கடைக்காரங்க பயப்பட வேண்டிய சூழ்நிலைய உருவாக்கிட்டாய்ங்க. இந்தியாவுல எந்த பத்திரிகைக்கும் வராத ஒரு மிகப்பெரிய நெருக்கடி. இப்படி ஒரு நெருக்கடியில வாசகர்க கூட மறை முகமா பயமுறுத்தலுக்கு ஆளானாங்க. கடைக்காரங்க கடையில ஒளிச்சுவைச்சு நக்கீரனை விக்கிறதும், வாசகர்க நக்கீரன திருட்டுத்தனமா வாங்குனதும், சுருட்டி சட்டைக்குள்ள மறைச்சு கொண்டுபோறதும் நடந்துச்சு. அந்தக் காலத்தில் செக்ஸ் புத்தகத்ததான் ரோட்டோர வியாபாரிகள்ட்ட வாங்கி, பலான வாசகர்க மறைச்சு எடுத்துட்டுப் போறதுங்கறத கேள்விப்பட்டிருக்கேன். அ.தி.மு.க.விலயும் நக்கீரன் வாசகர்க நிறைய பேர் இருக்காங்க. அவங்க நக்கீரன வாங்குனதும் செய்ற முத வேல, முன்அட்டைய கிழிச்சுறதுதான். ஏன்னா... நக்கீரன படிக்கிறது அப்போ கட்சிக்கு எதிரான ஒரு செயலா படுபாவி ஜெயலலிதா ஆணை போட்ருச்சு.
இப்படி பத்திரிகை வாங்குனவன அடிச்சா... யாருதான் பயப்படாமல் இருப்பாய்ங்க. கொஞ்சம் ஏஜெண்டுக இதுக்குப் பயந்து ஏஜென்சிய கேன்சல் பண்ணிட்டாங்க. உண்மையச் சொல்லணும்னா... அதிலிருந்து நக்கீரன் விற்பனையும் கொஞ்சம் சரிஞ்சது. அத நாம ஒத்துக்கிட்டுத்தான் ஆகணும்...
இப்ப நான் மேல சொன்னது வெறும் சாம் பிள்தான். இதேபோலத்தான் மத்த எல்லா ஊர்லயும் அவனவன் பதவிக்காக இஷ்டத்துக்கு நக்கீரன எரிச்சு, அடிச்சு விளையாண்டுட்டு இருந்தானுவோ.
அடுத்து வந்த மெகா சைஸ் இடி...
(புழுதி பறக்கும்)
படங்கள்: பகத்சிங், அருள்குமார், அண்ணல், ராம்குமார்