(83) காலம் தின்ற பெண்மணி!
ஒரு குரூப் பிரிஞ்சு அங்கிட்டும் இங்கிட்டுமா போய்க்கிட்டிருக்காய்ங்க. அவங்க போலீஸ்ங்கிறது மாத்திரம் தெரியுது... ஆனா மஃப்டியில இருக்காய்ங்க. ஏதோ ஒரு விஷயத்த எதிர்பார்த்து நிக்கிறாய்ங்க அப்படிங்கிறதயும் புரிஞ்சுக்க முடிஞ்சது. அதனாலதான் "இன்னும் ஏதோ ஒரு அபாயம் ஏரோப்ளேன் ஸ்பீடுல வரப்போகுது'ன்னு நான் போனவாட்டிச் சொன்னேன்.
பெரிய... பெரிய கூத்து ஒருபக்கம் நடந்துக் கிட்டிருக்கு. இதுக்கிடையில செல்போன்ல ஒரு சுவாரஸ்யம் ஒண்ணு. நம்ம செக்யூரிட்டி +டிரைவர் கண்ணனப் பத்தி சொல்லிச் சொல்லி.... சிரிச்சிக்கிட்டிருக்காங்க.
"என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்கன்''னு கேட்டேன்.
"திக்... திக்...'னே இருந்து சலிச்சிருச்சு... இடையில கொஞ்சம் சுவாரஸ்யம் வேணும்ல...
பெருசு தொடர்றார்...
"கண்ணன பாத்தா நீங்களே சிரிப்பீங்க. உங்கள மாதிரி மீசை வச்சிருப்பான்ல. அதனாலயே பயந்துபோய் வெளிய வராம இருந்தான். அப்படியே வெளிய வந்தாலும், மீசைய மறைச்சு ஒரு துணி வச்சு கட்டிக்கிறான்...''னு பெருசு சுந்தர், செந்தில், சிவகுமார் எல்லாரும் சொன்னாங்க.
கண்ணன் கதை பெரிய கத. அதாவது... கண்ணன், என்னைய மாதிரி பெருசா மீசை வச்சிருப்பாரு. நெறைய பேரு அவங்களோட வசதி வாய்ப்புகள் வந்தவுடன எல்லாத்தையும் மறந்துருவாங்க. ஆனா பாழாப்போன நம்ம புத்தி எதையும் மறக்குற புத்தி இல்ல.
1991-ல ஜெயலலிதா ஆட்சி. ஜெயலலிதாவோட குரூரப் புத்தி எப்படிப்பட்டதுன்னா... தன்ன அங்கீகரிக்காதவங்கள... தன்ன எதுத்தவங்கள... தனக்கு எதிரா செய்தி எழுதுனவங்கள... பழிவாங்குறதுல அந்த ஆத்தா மாதிரி உலகத்துல யாருமே கெடையாது. அது ஹிட்லர் போர்ஸ்ஸ விட பெரிய போர்ஸ்.
ஹிட்லர் அந் தக் காலத்துல யூதர் கள கொன்னு குவிச்சதா சொல்லு வாங்க... ஆனா இந்தம்மா சகட்டு மேனிக்கு எல்லாரை யும் வீடு புகுந்து அடிக்கிறது. சட சடன்னு ரெண்டு, மூணு ஆட்டோவுல கம்பும், தடியுமா எருமை மாடு கணக்கா ஆட்கள் வருவாய்ங்க. உருட் டுக்கட்டையால சட... சட... சட..ன்னு அடிச்சு கைய, கால உடைச்சிப் போட் டுட்டு அவனுவபாட் டுக்குப் போயிட்டே இருப்பானுக. "அடிச் சவனுக... எங்க இருந்து வந்தானுக, எப்படி அடிச்சானுக, ஏன் அடிச் சானுக'ன்னு திரும் பிப் பாக்குறதுக் குள்ள அடிச்சுப் போட்டுட்டுப் போயிருப் பானுவோ. அடிபட்டவன், எங்க போய் கம்ப்ளைண்ட் குடுத்தாலும் வாங்கமாட்டாய்ங்க.
நமக்கும் கொஞ்சம் கிரிமினல் புத்தி இருக்குல்ல. அதனாலத்தான இப்போ வரைக்கும் 34 வருஷத்த தாண்டி 35-க்குள்ள வந்துருக்கோம்.
நம்மகூட ராஜாமணி அண்ணன்னு ஒருத்தர் இருந்தாரு. அவரும் நம்ம மாதிரி மீசையும் கீசையுமா இருப்பாரு. அவருதான் செக்யூரிட்டி தலைமை. எங்க அண்ணன் பூபதியும், என்னைய மாதிரிதான் மீசை வச்சிருப்பான். நான் பூபதிட்ட, "ஊர்ல இருந்து நம்மள மாதிரி பெரிய மீசையா வச்சிருக்கவய்ங்களா பாத்து பொறுக்கிட்டு வா''ன்னு சொன்னேன். அதோட...
90-கள்ல நான் மதுரைக்குப் போனா ரெகுலரா ஒரு அம்பாசிடர் கார் ஓடும். வண்டி நெம்பர் 3677. அந்தக் கார் ஓனர், இப்ப நம்ம நக்கீரன் காசாளர் + ஸ்டுடியோ மேனேஜரா இருக்குற தம்பி ஆனந்த்தோட சித்தப்பா. அந்த காரோட டிரைவர் பெயர் ராமலிங்கம்.
ரெண்டுபேர் கிட்டயும் சொன்னதுனால, ரொம்ப கர்மசிரத்தையோட போய், (நம்ம பூபதிக்கு கமுதி பக்கத்துல மரக்குளம்தான் சொந்த ஊரு) அப்படியே ராமநாதபுரம்... உசிலம்பட்டி, சிவகங்கைன்னு ஊருகளுக்குப் போய் கொஞ்சம்பேர புடிச்சி அனுப்புனாங்க. அதுல நல்ல சிலம்பம் சுத்துற நல்லமுத்து தேவர், பூபதி, அப்புறம் சிவகங்கை நாலுகோட்டையில இருந்து இந்த கண்ணன், சோழவந்தான் செல்வம், தங்கமணின்னு ஒருத்தரு, பெருமாள் தேவர்... இவங்களோட இன்னும் நாலுபேரையும் கூட்டியாந்து விட்டாய்ங்க. அப்படி வந்ததுல ஒருத்தர்தான் மேற்படி கண்ணன்.
நான் சொல்ற இது நடந்தது 91-ல. கணக்குப் பாத்தா கிட்டத்தட்ட 30 வருஷம் ஆகிப்போச்சு. இந்த 30 வருஷத்துல என்னைப் போல மீசை வச்சவங்கள்ல மிஞ்சியிருக்கிறது கண் ணன் மட்டும்தான். பூபதி தனியா செக்யூரிட்டி காண்ட்ராக்ட் எடுத்துப் போயிட்டாப்ல. ராஜாமணி அண்ணன் இப்போ உசுரோட இல்ல. மத்தவங்களும் பிரிஞ்சு போயிட்டாங்க.
ஏன் இவங்கள மீசையோட வரவச்சேன்... அது ஒரு கத...!
ஜெயலலிதாவப் பத்தி ஒரு செய்தி வந்தா, அவங்க ஆளுங்கதான் ஒரு படையோட ஆட்டோவுல வந்து அடியோ அடின்னு அடிப்பாய்ங்கன்னு சொன்னேன்ல... அப்போ நம்ம மீசைய அடையாளம் வச்சு அடிக்க வந்தா (அந்த நேரம் 90-கள் ஆரம்பத்துல நம்ம மூஞ்சி ஒண்ணும் பெருசா பிரபலம் கிடையாது. இப்ப என்ன வாழுதாம்னு நினைச்சுறாதீங்க... கொஞ்சம் சுமார் பிரபலம்... அம்புட்டுதான்) வந்தவன் மூள குழம்பி நிக்கணும்னு இந்த 10 மீசைக்காரங்களுக்கும் வேலை குடுத்து, காக்கி பேண்ட், கலர் சட்டை போடச் சொல்லி ஆபீஸ் வாசல், வீட்டு வாசல்னு மாறி... மாறி... நிக்கச் சொல்லுவேன். நம்மள தேடி வர்றவய்ங்க ஏமாந்து போகணும்ங்கிறதுக்குத்தான் இந்த ஏற்பாடு. "கிரிமினலுக்கு கிரிமினல்..!. செக்குக்கு செக்!' அந்த மாதிரிதான் வச்சுக்கிட்டோம்.
ஏன்னா, அந்தம்மாவ எதுத்து எழுதுனவன், எதுத்துப் பேசுனவன், தன் கூட்டத்துல இருந்துக்கிட்டே தனக்கு எதிரா பேசுனவன்... இப்படி யாரையும் விட்டு வைக்கல. அப்படி ஒரு செய்தி வந்து அடிக்க ஆள் அனுப்பி, அவனுக ஆபீசுக்கு வந்து பார்த்தாய்ங்கன்னா நம்மள மாதிரி மீசை வச்சவனா நின்னா குழம்பிப் போய் யார அடிக்கணும்னு தலையச் சொரிவாய்ங்க. அதப் பாத்துட்டு நம்ம ஆளு ராஜாமாணி, அவருதான் இவங்களுக்குத் தலைவரு... அவரு அத மோப்பம் புடிச்சு, "அண்ணே 3, 4 குரூப் வந்து நிக்குது ஆட்டோவுல. உத்து உத்துப் பாக்குறாங்க அப்படீம்பாரு.
நான் மெள்ள மேல பால்கனியில இருந்து நைஸா பாப்பேன். அப்ப ஹாரிங்டன் ரோடு, 49-ஆம் நம்பர் வீட்டு மாடில நம்ம ஆபீஸ் இருந் துச்சு. கொஞ்சநேரமா நோட்டம் போட்டுட்டு அப்படியே கிளம்பிப் போவாய்ங்க. நான் விருட்...னு இறங்கி, ஒரே ஓட்டமா தப்பிச்சு ஓடிருவேன்.
இதுக்காக வந்தவருதான் அந்தக் கண்ணன். அந்த மீசைய அப்படியே மெயின்டெய்ன் பண்றாரு. நமக்குப் பதிலா அவருக்கு சல்யூட்லாம் அடிப்பாய்ங்க. அவரும் அந்த போதைக்காகத்தான் மெயின்டெய்ன் பண்றாப்ல...
அதே கண்ணன்தான் மீசைய மறைச்சிக்கிட்டு போயிருக்காரு... அதச் சொல்லித்தான் நம்ம ஆளுங்க சிரியோ சிரின்னு சிரிச்சிருக்காய்ங்க... நல்ல கூத்துல்ல...!
விழுப்புரம் வடக்கு மாவட்ட காவல் நிலையங்கள் மொத்தம் 19. மேற்படி காவல்நிலை யங்கள் ஒண்ணுலயும் நம்ம மேல எந்த எஃப்.ஐ. ஆரும் பதிவாகலைங்கிறது தெரிஞ்சதும் நம்ம எஸ்.பி. சேகர் அண்ணன்ட்ட விசாரிக்கச் சொன்னேன்.
ஆச்சரியம்...
அந்த நேரத்துல ஈரம் இருக்குற ஒண்ணு, ரெண்டு நல்ல மனுஷங்க, ஜெயலலிதா கட்சியில இருந்துருக்காங்க. பதவி கிடைக்கணும்னா... படுபாதகச் செயல யோசிக்காம செய்ற கூட்டத்துக்கு நடுவுல, நம்ம அண்ணன் சி.வி.சண்முகம்தான் அந்த விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்.
இதப்பத்தி சேகரண்ணன் விசாரிச்சிட்டு என் லைனுக்கு வந்தார். "அண்ணே... அமைச்சரா இருக்குற சி.வி.சண்முகத்துட்ட, கட்சி நிர்வாகிகள் போய் "நக்கீரனுக்கு எதிரா போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுக்கப் போறதா சொல்லியிருக்காங்க.
அதுக்கு அமச்சர் சி.வி.சண்முகம், "நாம அரசியல்வாதிகள், ஆட்சியில் இருக்கிறோம். நம்மள பத்திரிகைகளும், மீடியாக்களும் கண்டிப்பா விமர்சனம் செய்யும். இதுக்கெல்லாம் காவல்நிலையத்துல புகார், வழக்குன்னு தொடுத்துக் கிட்டிருந்தா நாம எப்படி மக்கள் பணிய செம்மையா செய்ய முடியும். அதனால இதயெல் லாம் பெருசா எடுத்துக்க வேண்டாம்...போய் மக்கள் பணி, கட்சிப் பணி இருந்தா பாருங்க. யாரும் போலீஸ் ஸ்டேஷன் பக்கம் போய் புகார்லாம் பண்ணவேண்டாம்'னு கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டாராம். அதன் அடிப்படையிலதான் அவரது எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங் கள்ல நக்கீரன் மேல எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படலன்னு நமக்குத் தெரிஞ்ச அ.தி.மு..க.காரங்க சொன்னாங்கண்ணே''ன்னு கேப் விடாம சொல்லி முடிச்சாரு சேகர்.
தாக்குதல் அன்னிக்கு இருந்தே நக்கீரன அழிச்சிப்புடணும்னு மேலயிருந்து ஆர்டர் போட்டு, அதையே அக்கறையோட பண்ணிக்கிட்டுத் திரிஞ்சவய்ங்க மத்தியில மனசாட்சியோட இருந்த அண்ணன், அமைச்சர் சி.வி.சண்முகம் அவர்களுக்கு நக்கீரனின் நன்றிகள்!
3 வருஷத்துக்கு முன்னாடி இதே அமைச்சர் சி.வி.சண்முகத்த பத்தி நக்கீரன்ல வந்த செய்திக்காக திண்டிவனத்துல ஒரு அவதூறு வழக்கு போட்டாரு... அது வேற விஷயம். (தகவலுக்காக...)
கடந்த ரெண்டு இதழ்களா புகார், வழக்கு, எஃப்.ஐ.ஆர்.ன்னு தமிழ்நாட்டுல அங்க ஒண்ணு... இங்க ஒண்ணுன்னு சாம்பிளுக்குத்தான் சொன்னேன். இதுபோல மாநிலம் பூராவும் நெறைய புகார்கள் குடுத்துருந்தாங்க. அது என்னங்கிறத விரிவா பின்னாடி சொல்றேன்.
ரெண்டாவது நாளும் அ.தி.மு.க.காரய்ங்க கூத்து நடத்த ஆரம்பிக்கிறாய்ங்க. எங்கிருந்தெல் லாமோ கட்சிக்காரய்ங்க வர்றாங்க, கல்லெறியு றாய்ங்க... கோஷம் போட்டு குண்டக்க மண்டக்க கண்டபடி வையுறாய்ங்க... எல்லாம் முடிச்சுட்டு போட்டோவுக்கும் போஸ் குடுத்துட்டுட்டுப் போறாய்ங்க...
மணி 10:00, 11:00-க்குள்ள இருக்கும்... ஆபீஸ் முன்னாடி ஒரு வண்டி நெறைய போலீஸ்...?
(புழுதி பறக்கும்)