poorkalam

(68) நோ தூது... ஒன்- ஆபரேஷன்!

வம்பர் 17-ந் தேதி சென்னையில தரை இறங்குன கர்நாடக டீம் 7 பேருக்கும் தமிழக அரசு சார்புல நல்ல வரவேற்பெல்லாம் குடுத்தாய்ங்க. அவங்களுக்காக தனித் தனி கார் தயாராக இருந்துச்சு. ரொம்ப கவனமா, பாதுகாப்பா ஸ்டார் ஹோட்டல்ல ஒவ்வொருத்தருக்கும் தனி ரூம் குடுத்து தங்க வச்சாய்ங்க. 18-ந் தேதி காலையில உள்துறை அமைச் சர் கார்கே, ஹோட்டல் ரூம்லயே ஆலோசன நடத்துனாரு.

Advertisment

"தமிழ்நாட்டுல இருந்து யாரை தூதுவரா அனுப்ப இந்த அரசு தயாராக இருக்குதுன்னு கேப்போம். தமிழக அரசின் மனநிலை என்னங்கிறத தெரிஞ்சுக்குவோம்''னு ஆலோசனையில முடிவு செஞ்சு, அதுக்கப்புறமா தலைமைச் செயலகத்துக்குப் போய் முதலமைச்சர் ஜெயலலிதாவ சந்திக்கலாம்னு தயாரானாங்க. கூடவே நாகப்பாவோட துணைவியாரும் மருமகனும் வந்திருந்தாங்க. அவங்களும் கூடவே கோட்டைக்குப் போனாங்க.

சென்னை கோட்டையில, கர்நாடக டீம்ல இருந்த உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே, கல்வி அமைச்சர் சந்திரசேகர், தலைமைச் செயலாளர் ரவீந்திரா, கூடுதல் த.செ. அதிப்சவுத்ரி, டி.ஜி.பி. மடியாள், முன்னாள் டி.ஜி.பி. சீனிவாசலு, கூடுதல் டி.ஜி.பி. கே.ஆர்.சீனிவாசன் இவங்களோட பேரெல்லாம் மேஜையில் பளபளக்க, அதுக்கு எதிர்பக்கமா அவங்க உக்கார்றதுக்கான நாற்காலி களும் போடப்பட்டிருந்துச்சு. இன்னொரு வரிசையில், பேச்சுவார்த்தையில் கலந்துக்க வந்திருந்த தமிழக அணியில உள்ளவங்களுக்கு இருக்கைகள் போடப்பட்டிருந்தது.

இந்தக் கூட்டத்துல நாகப்பா குடும்பத்த சேர்க்கல. வேறொரு அறையில அவங்கள தங்க வச்சிட்டாங்க. கூட்டம் முடிஞ்ச பிறகு, தன் அறைக்கு நாகப்பா மனைவியை வரவழைத்த ஜெ., அவங்க கொடுத்த பூங்ககொத்தை வாங்கிட்டு, "நீங்க கௌம்பலாம்... நான் பார்த்துக்கிறேன்'னு அனுப்பி வச்சிட்டாங்க.

Advertisment

poorkalam

பேச்சுவார்த்தை தொடங்கு றதுக்கு முன்னாடி அமைச்சர்கள் ஓ.பன்னீர், பொன்னையன் இவங்க ளோட பேரைச் சொல்லி கர்நாட கத் தரப்புக்கு அறிமுகப்படுத்துன ஜெ., திடீர்னு தமிழக அணி சார்பா கலந்துக்கிட்டவங்ககிட்ட, "நீங்களே எழுந்து நின்னு உங்கள அறிமுகப்படுத்திக்கொள்ள லாமே''ன்னார். மேடத்துக்கு நேரம் கிடையாது... நோ டைம்! உடனே சுகவனேஷ்வர், முனீர் கோடா, நெயில்வால், தேவாரம் எல்லாரும் எழுந்து நின்னு அவங்கள அறிமுகப்படுத்திக்கிட்டாய்ங்க.

எப்படியாவது தூதர அனுப்பி நாகப்பாவை பத்திரமாக மீட்டு வந்துரணும்ங்கிறத கர்நாடகத் தரப்பு திரும்பத் திரும்ப வலியுறுத்தியிருக்காங்க. தமிழக சிறப்பு அதிரடிப்படைத் தலைவர் தேவாரம், "தூது அனுப்புறதுங்கிற பேச்சே கிடையாது. வீரப்பனை சுத்தி வளைச்சு உயிரோடவோ, பிணமாவோ பிடிக்கணும்''னு அந்த நேரத்துல அழுத்தமாச் சொல்லியிருக்காரு.

பாதிப்பு இவங்களுக்கு இல்லைல்ல... ஏன் சொல்லமாட் டாங்க? எல்லாம் ஒரு ஏற்பாடு தான். ஜெயலலிதா முன்னால போல்டா இப்படி கருத்த அவரு சொந்தமா சொல்லிற முடியுமா? சொன்னா அவர தொப்பியோட விட்ருமா... கழட்டிராது.

ரெண்டு தரப்பும் அவங்கவங்க நெலையில உறுதியா இருக்க...

நான் விடாப்பிடியா "ஜெ. பீரியடுல அதுவும் தேவாரம் இருக்கிற இடத் துல போகவேமாட்டேன், மாட்டேன்... மாட்டேன்'னு கோர்ட்ல சத்தியம் பண்ணி சொல்லுற மாதிரி... சொன்ன தால... கர்நாடகாவுல உள்ள வங்க யோசிச்சு, கோபால கேப்போம்... முரண்டு புடிச்சாங்கன்னா இன்னொ ருத்தர அனுப்ப கேப் போம்னு யோசிச்சி, கொளத்தூர் மணிங்கிற வரையாவது தூது அனுப் புங்கன்னு சொல்லு வோம்னு முடிவெடுத்திருந் தாங்களாம்.

முதல் சாய்ஸ் நக்கீரன் கோபால், இரண்டாவதா கொளத்தூர் மணி. இதுல இடிக்கிற விஷயம்.... அண்ணன் மணி, பெல்லாரி சிறையில இருந்தாரு. இவுங்க கொளத்தூர் மணி யையும் என்னையும் கேட் பாங்கங்கிறத ஒட்டுக்கேட்பு மூலமா தெரிஞ்சுக்கிட்டு தான் ஜெயலலலிதா இந்த மீட்டிங்குக்கே வந்திருக்காங்க. இது கர்நாடகாவுல உள்ள மந்திரிகளுக்கும் அதிகாரிகள் குழுவுக்கும் தெரியாது.

ff

சடார்னு குறுக்கிட்ட ஜெயலலிதா, "எஸ் மிஸ் டர்... தமிழகத்திலிருந்து யாரையும் தூதராக அனுப்ப நாங்கள் அனுமதிக்கமாட் டோம். நீங்க யார மனசுல வச்சுக்கிட்டு தமிழ் நாட்டுக்கு வந்திருக் கீங்கன்னு தெரி யும். அவனப் பத்தி பேசவே கூடாது. (பேர்கூட சொல் லாம நமக்கு கொ டுத்த மரியாதை. சூப்பர்.... நான் சொன்னேன்ல போன் ஒட்டுக் கேட்டதுல எல்லா விவரத்தையும் தெரிஞ்சுக்கிட்டு தான் கடுகடுன்னு மூஞ்சிய வச்சிக்கிட்டுப் பேசுது)ன்னு. "இன்னொரு ஆளப்பத்தி சொல்ல வர்றீங்க. அந்த ஆளு நிறைய வழக்குல சிக்கியிருக்காரு'.... (இதத்தான் முன்னமே நான் சொன்னேன்) கொளத்தூர் மணிக்கு கர்நாடகத்துல இருக்கிற வழக்குக்கு பெயில் கிடைக்க நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் விட்டாலும், தமிழகத்தில் அவர் மீது 5 வழக்குகள் இருக்கின்றன என்பதை ஞாபகப் படுத்துகிறேன். இரு மாநில அதிரடிப்படையும் இணைந்து ஆபரேஷன் நடத்தினால் வீரப்பனை பிடிக்க முடியும். அதற்கு ஒப்புக்கொள்ளுங் கள்''னு கர்நாடக உள்துறை மந்திரியை பாத்து கறாராச் சொல்லியிருக்கு.

"நாகப்பாவின் உயிர் முக்கியம்''னு உள்துறை அமைச்சர் கார்கே மெல்லிசா நயந்து... நயந்து சொன்னப்ப, கார்கே -நாகப்பா வின் உயிர் ...இப்படிச் சொன்னதும் போனா போகுதுன்னு, வங்ள்... அவர காப்பாத்திட்டு வீரப்பனை உயிரோடவோ, சுட்டோ பிடிப் போம்''னு சொல்லிருச்சு அந்தம்மா.

"ஒருவேள ரெண்டு மாநில கூட்டு நடவடிக்கையில எங்க நாகப்பாவோட உயிருக்கு ஏதேனும் ஆபத்து வந்து, அதனால அவர காப்பாத்த முடியாம போயிடிச்சின்னா?'' அப்படின்னு கர்நாடகத் தரப்பிலிருந்து தயங்கித் தயங்கி சன்னமான குரல்ல கேள்வி வர...

அடுத்த விநாடியே அழுத்தமான குரல்ல ஜெயலலிதா, "மாஸ்கோ கலையரங்கத்துல 700 பேரை பிணைக் கைதிகளா செசன்ய தீவிர வாதிங்க பிடிச்சு வச்சிருந்தபோது ரஷ்ய ராணு வம் அதிரடி தாக்குதல் நடத்தவில்லையா? அதில் பொதுமக்கள் 100 பேர் செத்தாலும், மொத்த தீவிரவாதிகளையும் ராணுவம் சுட்டுக் கொல்ல வில்லையா? ஒரு தரப்பின் பாதுகாப்பை மட்டும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. பிரச் சினைக்கு நிரந்தர தீர்வு கூட்டு நடவடிக்கைதான்''னு (நம்ம வைகோ அண்ணன் பேசுற மாதிரி காப்பியடிச்சு பேசியிருக்கு ஜெயலலிதா. ஏன் சார் வைகோ அண்ணன் பேச்சு கம்பீரமே தனி ஸ்டைல். அப்படியே மேல் துண்ட ரெண்டு கையிலயும் புடிச்சுட்டுப் பேசுற தொனியே வேற லெவல். அவர இந்தம்மாவோட ஒப்பிடல. இந்த மாஸ்கோ, ரஷ்யா, செசன்யா... இப்படி வாயில வராத பேரெல்லாம் சொல்லுச்சா... அதனால நானா நெனைச்சுக்கிட்டேன்.) விறுவிறுன்னு சொல்லிக்கிட்டே உக்காந்திருந்த சேர்ல இருந்து எந்திரிக்க முற்பட... எதுத்தாப்ல உக்காந்திருந்த நம்ம கர்நாடக கோஷ்டிக்கு அந்த ஏ.ஸி. ரூம்லயும் வேர்க்க ஆரம்பிச்சிருச்சு.

நாகப்பா பற்றி ஜெ. கவலைப்படலைங்கிறத தெரிஞ்சுக்கிட்ட கர்நாடக டீம், "நாங்க எங்க தரப்புல தூது முயற்சிகளை எடுக்குறோம். அதுக்கு தமிழகத் தரப்பிலிருந்து சிரமங்கள் ஏற்படாம நீங்க பார்த்துக்கங்க''ன்னு கெஞ்சிக் கேட்டுக்கிட்டாங்க.

அதுக்கு ஜெயலலிதா எழுந்து நின்னுக் கிட்டே... "வீரப்பன் இப்போது கர்நாடக பகுதி யில்தான் இருக்கிறான். அந்தப் பகுதியில் எங்கள் அதிரடிப்படை எதுவும் செய்யாது. இருந்தா லும், திரும்பவும் சொல்கிறேன்... கூட்டு நடவடிக் கையில் இறங்கினால்தான் வீரப்பனை ஒழிக்க முடியும்''னு படார்... படார்னு விஷம் போல வார்த்தைகள கக்கிட்டு, எதையுமே யார்கிட்ட யும் சொல்லாம "போங்கய்யா... நீங்களும் உங்க நாகப்பாவும்'னு சொல்ற மாதிரி கிளம்பிருச்சு.

எப்படி...?

ஒரு மாநிலம்... நம்ம தமிழர்கள் கிட்டத் தட்ட 70 லட்சம் பேர் அங்க வாழ்றாங்க. அவங் களப் பத்தி கொஞ்சம் கூட நெனைச்சுப் பாக்காம... ஈவு, இரக்கம்னா... அது என்ன விலைங்கிற மாதிரி பேசிட்டு, ஊர்ல வெள்ளாட்ட தரையில படுக்கப் போட்டு கழுத்த கொர... கொரன்னு அறுப்பாய்ங்க பாருங்க... அது மாதிரி பண்ணிட் டுப் போயிருச்சு. ஜெயலலிதாவோடு நடந்த பேச்சுவார்த்தை நிறைவுக்கு வர..., தமிழக அதிகாரிகளோட கர்நாடக டீம் பேசுனாங்க. சக அதிகாரிங்கங்கறதால கொஞ்சநேரம் சுரத்தே இல்லாமப் போச்சு அந்தப் பேச்சுவார்த்தை. ஆனா, "தமிழகத்திலிருந்து யாரையும் தூதுவரா அனுப்பத் தயாரா இல்லை'ன்னு மறுபடியும் மறுபடியும் பொட்டுல அடிச்ச மாதிரி சொல்லிக்கிட்டே இருந்தாரு தேவாரம்.

நாம பேசுனது கொஞ்சமாவது எடுபடும்னு எதிர்பார்த்த கர்நாடக டீம்... அப்செட்டான நெலைமைக்கு போயிட்டாங்க. அப்போ அவங் களுக்கான "ஸ்நாக்ஸ்' வந்தது. யார் ஆண்டாலும் சரி... இந்த மாதிரி மீட்டிங் நடந்துச்சுன்னா, முடிந்ததும் முடியாததுமா கொரிக்க ஏதாவது வரும். சும்மா சொல்லக்கூடாது... பெரிய ஸ்டார் ஓட்டல்ல இருந்துதான் வரும். அவங்களுக்கு முறுக்கு, காபி, ஜூஸ் எல்லாம் குடுத்தாய்ங்க. அதுல ரொம்ப ஹைலைட்... அவங்க குடுத்ததுல தூக்கலா இருந்த "அல்வா'...!

(புழுதி பறக்கும்)