(64) ஜெ.வுக்கு கடிவாளம் போட்ட நீதியரசர்!
"அந்தம்மாவ எதுத்து வழக்கு போடப்போறேண்ணே''ன்னேன்.
"நல்லா பண்ணுங்க''ன்னாரு கலைஞர்.
நாங்க உடனே கர்நாடக அரசாங்கத்தோட காவல்துறை உயர் பொறுப்புல இருக்கிற அதிகாரியான சீனிவாசன் ஐ.பி.எஸ்.ஸ காண்டாக்ட் பண்ணி, "தமிழ்நாட்டுல ஜெயலலிதா ஒரு அறிக்கை விட்டிருக்கே, பாத்தீங்களா சார்?''ன்னு கேட்டேன்.
"ஆமா... எங்களுக்கும் அந்த செய்தி வந்துச்சு, நானும் பார்த்தேன். எங்க சி.எம். சாரும் பார்த்தாரு. அவருக்கு டிரான்ஸ்லேட் பண்ணிச் சொன்னோம். நாங்க எல்லாருமே ரொம்ப அப்செட். இந்த நேரத்துல ஏன் இந்தம்மா இப்படி ஒரு அறிக் கைய வெளியிடுது? நீங்க இப்பதான் ராஜ்குமார் சார பார்த்துட்டு வந்து, "நாங்க எல்லாரும் இங்க நல்லா இருக்கோம். நீங்களும் நல்லா இருங்க. அமைதியா இருங்க... வேற எந்த மோசமான செயல்லயும் ஈடுபட்டுறக் கூடாது' அப்படின்னு அவரு அறிவுரையெல்லாம் சொல்லி, நீங்க அனுப்புன கேசட்ட நாங்க டி.வி.யில போட்டோம். அதைக் கேட்டுட்டு இங்க உள்ள எல்லா மக்களும் அமைதியா இருக்காங்க. எப்படியும் ராஜ்குமார் சார் உயிரோட திரும்பி வந்துருவாரு. நீங்க கண்டிப்பா மீட்டுக் கொண்டு வந்துருவீங்க அப்படிங்கிற நம்பிக்கையோட இருக்காங்க. "இந்த நேரத்துல இப்படி அறிக்கை வந்திருக்கே. இதுனால ராஜ்குமார் சாருக்கு ஏதாவது ஆபத்து வந்துருச்சுன்னா ரொம்ப சிக்கல் ஆயிருமே'ன்னு எங்க சி.எம். ரொம்ப வருத்தப்பட்டாங்க''ன்னாரு.
இந்தம்மாவோட நோக்கமே அதுதான. அதாவது நான் காட்டுக்கு போயிறக்கூடாது. அப்படியே போனாலும் ராஜ்குமார் சார உசுரோட காப்பாத்தி கூட்டிட்டு வந்துறக்கூடாது.
எதுக்காக அடிக்கடி இதைச் சொல்றேன்னா...
"அடிச்சதுடா லக்கு. இதுல மட்டும் ராஜ் குமார் சார் செத்துட்டா... அந்தக் களேபரத்துல கர்நாடகத்துல வ
(64) ஜெ.வுக்கு கடிவாளம் போட்ட நீதியரசர்!
"அந்தம்மாவ எதுத்து வழக்கு போடப்போறேண்ணே''ன்னேன்.
"நல்லா பண்ணுங்க''ன்னாரு கலைஞர்.
நாங்க உடனே கர்நாடக அரசாங்கத்தோட காவல்துறை உயர் பொறுப்புல இருக்கிற அதிகாரியான சீனிவாசன் ஐ.பி.எஸ்.ஸ காண்டாக்ட் பண்ணி, "தமிழ்நாட்டுல ஜெயலலிதா ஒரு அறிக்கை விட்டிருக்கே, பாத்தீங்களா சார்?''ன்னு கேட்டேன்.
"ஆமா... எங்களுக்கும் அந்த செய்தி வந்துச்சு, நானும் பார்த்தேன். எங்க சி.எம். சாரும் பார்த்தாரு. அவருக்கு டிரான்ஸ்லேட் பண்ணிச் சொன்னோம். நாங்க எல்லாருமே ரொம்ப அப்செட். இந்த நேரத்துல ஏன் இந்தம்மா இப்படி ஒரு அறிக் கைய வெளியிடுது? நீங்க இப்பதான் ராஜ்குமார் சார பார்த்துட்டு வந்து, "நாங்க எல்லாரும் இங்க நல்லா இருக்கோம். நீங்களும் நல்லா இருங்க. அமைதியா இருங்க... வேற எந்த மோசமான செயல்லயும் ஈடுபட்டுறக் கூடாது' அப்படின்னு அவரு அறிவுரையெல்லாம் சொல்லி, நீங்க அனுப்புன கேசட்ட நாங்க டி.வி.யில போட்டோம். அதைக் கேட்டுட்டு இங்க உள்ள எல்லா மக்களும் அமைதியா இருக்காங்க. எப்படியும் ராஜ்குமார் சார் உயிரோட திரும்பி வந்துருவாரு. நீங்க கண்டிப்பா மீட்டுக் கொண்டு வந்துருவீங்க அப்படிங்கிற நம்பிக்கையோட இருக்காங்க. "இந்த நேரத்துல இப்படி அறிக்கை வந்திருக்கே. இதுனால ராஜ்குமார் சாருக்கு ஏதாவது ஆபத்து வந்துருச்சுன்னா ரொம்ப சிக்கல் ஆயிருமே'ன்னு எங்க சி.எம். ரொம்ப வருத்தப்பட்டாங்க''ன்னாரு.
இந்தம்மாவோட நோக்கமே அதுதான. அதாவது நான் காட்டுக்கு போயிறக்கூடாது. அப்படியே போனாலும் ராஜ்குமார் சார உசுரோட காப்பாத்தி கூட்டிட்டு வந்துறக்கூடாது.
எதுக்காக அடிக்கடி இதைச் சொல்றேன்னா...
"அடிச்சதுடா லக்கு. இதுல மட்டும் ராஜ் குமார் சார் செத்துட்டா... அந்தக் களேபரத்துல கர்நாடகத்துல வாழ்ந்துக்கிட்டிருக்கிற தமிழ் மக்கள் எக்கச்சக்கமா செத்துட்டாங்கன்னா... அந்த எழவ காரணமா வச்சி அரியணை ஏறிடலாம்னு தான் இந்த குண்டக்க மண்டக்க அறிக்கை எல்லாம் விட்டது. (எழவு நடந்து அது மூலமா இந்தம்மா அரியணை ஏறுன முன்னுதாரணம் 1991-ல நடந்திருக்கு)
"நாங்க ரொம்ப அப்செட்'னு சீனிவாசன் சார் சொன்னாரு.
"நான் உங்ககிட்டயோ, உங்க கவர்ன்மென்ட்டுக்கிட்டயோ எதாவது டிமாண்ட் வைச்சேனா சார்?''ன்னு கேட்டேன்.
"அப்படி எதுவும் இல்லியே''ன்னாரு.
"அப்படின்னா நீங்க அந்த அறிக்கைக்கு ஒங்க சி.எம். மூலமா ஒரு பதில் குடுங்க சார்''ன்னேன்.
உடனே ஜெயலலிதாவின் பொய்யான குற்றச்சாட்டை மறுத்து ஒரு அறிக்கையும், நம்ம பேருக்கு ஒரு லெட்டரும் குடுத்தாங்க.
நான் காட்டுக்குப் போயிருவேன். காட்டுலயிருந்து நான் அனுப்புற கேசட்டயோ, கடிதத்தயோ, போட்டோக்களயோ தம்பி சுப்புவும் பாலுவும், தம்பி மோகன் கார்ல சென்னைக்கு வந்து தம்பி காமராஜை அழைச்சிக்கிட்டு நேரா நம்ம சி.எம். கலைஞரைப் பாத்து குடுப்பாங்க.
அதே மாதிரி கர்நாடகாவுக்கு குடுத்துவிட வேண்டியது இருந்தா சீனிவாசன் சார்கிட்டயும், நாகேஷ் சார்கிட்டயும் (அவரு டைரக்ட் பி.ஏ. டூ சி.எம். கிருஷ்ணா) குடுப்பாங்க. அவங்க ரெண்டு பேரும் சென்னையிலதான் இருந்தாங்க. ராஜ்குமார் சாரோட மூத்த பையன் சிவண்ணாவும் ராகவேந்திராவும் இங்கதான் ரூம் போட்டு தங்கியிருந்தாங்க.
முதல் அறிக்கை வந்த தேதி 16-10-2000.
22-ந் தேதி "நக்கீரன்கோபால் எங்களை மிரட்டவோ, ப்ளாக்மெயில் பண்ணவோ இல் லை'ன்னு கர்நாடக கவர்ன்மெண்ட் சார்பா ஒரு லெட்டர் குடுத்தாங்க. இதவச்சி ஐகோர்ட்ல ஜெய லலிதா மேல, நான் கேஸ் ஃபைல் பண்ணுனேன். இந்த அறிக்கை + பதில் அறிக்கை + அவங்க குடுத்த லெட்டர் எல்லாத்தையும் வச்சி, எங்க அட்வகேட் பெருமாள் சார் ஒரு ரிட் தயார் பண்ணுனாரு.
உயர்நீதிமன்றத்துல ராமமூர்த்தின்னு ஒரு நீதியரசர் அப்போ இருந்தாங்க. ஜெயலலிதா சைடுல இருந்தும் பெரிய பெரிய வக்கீல் எல்லாம் வந்தாங்க.
அவசர வழக்கா எடுத்து விசாரிச்சாங்க.
நீதியரசர் ராமமூர்த்தி குடுத்த ஜட்ஜ்மெண்ட்ல, ஜெயலலிதாவுக்கு எதிரா ஒரு ஆர்டர் போட்டாரு. அந்த ஆர்டர்ல சுருக்கமா என்ன சொல்லியிருந்தாருன்னா...
"இது இரண்டு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. அவர்கள் உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சினை. இதில் தேவையில்லாமல் அரசியலைப் புகுத்தாதீங்க. மக்களின் வாழ்க்கையில விளையாடாதீங்க. ராஜ்குமார் மீட்புக்காக தூதுவராகச் செல்கிற நக்கீரன் கோபாலைப் பற்றியோ, அவரது தூது பயணம் பற்றியோ இனிமேல் நீங்கள் எதுவுமே பேசக்கூடாது''
அப்படின்னு ஸ்ட்ராங்கா ஒரு உத்தரவே போட்டாரு.
ஜெயலலிதாவுக்கு எதிரா முக்கியமான ஒரு ஆர்டர வாங்கி வச்சிருக்கேன்னு சொன்னேன் பாருங்க. நக்கீரன் கோபாலுக்கு எதிரா ஜெயலலிதா எதுவும் பேசக்கூடாதுன்னு நான் வாங்குன ஆர்டர் இன்னிக்கும் என்கிட்ட இருக்கு. (அந்தம்மா செத்துப்போச்சு. கடைசியில அந்தம்மா காலு ரெண்டும் இல்லாமலே செத்துப்போச்சு. இத நான் அடிச்சுச் சொல்லுவேன்... அடிச்சுச் சொல்லுவேன், அதுக்கு கால் இல்ல. அதுக்கு ஆணையம் என்ன சொல்லப்போகுதோ தெரியல. சரி... அத விட்ருங்க.)
இப்ப அப்படி ஒரு ஆர்டர வாங்கிட்டோம். ஆர்டர் கிடைச்சது முதல் அறிக்கைக்கு.
"நக்கீரன் கோபால பத்தி பேசக்கூடாது'ன்னு ஒரு ஆர்டர வாங்கியிருக்கோம். அப்படியிருந்தும் மறுபடியும்... மறுபடியும் ஒரு அறிக்கை விடுது. 19-10-2000ல ஒரு அறிக்கை விட்டுச்சு. அந்த அறிக்கையில நம்மள ரொம்ப நோண்டல. ஆனா வீரப்பன ரொம்பவே சீண்டியிருக்கும். ஒரு எடத்துல மட்டும் நக்கீரன் கோபால லைட்டா டச் பண்ணும்.
ஜெயலலிதாவுக்கு உள்ளுக் குள்ள எவ்வளவு வன்மம் இருந்துச்சுன்னு இந்த அறிக்கையப் பாத்தாலே தெரியும்.
இந்த அறிக்கையில ஒரு இடத்துல...
"1994, டிசம்பர் மாதம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் திரு.சிதம்பரநாதனும் இன்னும் இருவரும் கடத்தப்பட்டபோதும், 1991-ஆம் ஆண்டு 3 வனத்துறை அதிகாரிகள் கடத்தப்பட்டபோதும், எனது உத்தரவின்படி சிறப்பு அதிரடிப் படையினர் வீரப்பன் கூட்டத்தினர் மீது நேரடியாக தாக்குதல் நடத்திதான் பிணைக் கைதிகளை விடுவித்தார் களே தவிர, கருணாநிதியைப் போல வீரப்பனிடம் சரணாகதி அடைய வில்லை. நக்கீரன் கோபால் போன்ற ஏஜெண்டுகளை கோட்டைக்குள் நுழைய விடவில்லை. வீரப்பனுக்கு பணம் கொடுத்து யாரையும் மீட்டு வரவில்லை.''
அதாவது, வேற எதையும் பேச முடியல. ஏன்னா... நாமதான் கோர்ட் ஆர்டர் வாங்கியிருக்கோம்ல. நம்மள அவன்... இவன்...னு ஏக வசனம்லாம் போட முடியல. அங்கதான் ஜெயலலிதாவுக்கு சரியான கடிவாளம் போட் டுட்டாரு நீதியரசர் ராமமூர்த்தி. அதனால வேற கண்டதையும் அந்தம்மாவால சொல்ல முடியல.
அந்த அறிக்கைய ஏன் இப்போ சொல்றேன்னா... ஜெயலலிதாங்கிற முன்னாள் முதல்வர் எப்பேர்ப்பட்ட கொடுமைக்காரிங்கிறது காலத்துக்கும் பதிவு வேணும்னு நெனைக்கிறேன். ஏன்னா... வரலாறு முக்கியம். கடந்த கால தமிழ்நாட்டு வரலாறுல நடந்த இந்த மாதிரி சில விஷயங்கள நாம போற போக்குல மறந்துருவோம்... அப்படி மறந்துறக்கூடாது, மறைக்கவும் கூடாது. இல்லன்னா இன்னும் கொஞ்சநாள்ல அந்த டூப்ளிகேட் புண்ணியவதிக்கு புனிதர் பட்டம் கூட குடுத்துருவாய்ங்க. அதனாலதான் இந்த அறிக்கையப் பத்தி நான் சொல்றதுக்கான காரணம்.
ராஜ்குமார் சார சீக்கிரமா வெளிய கொண்டுவர முடியல. அத நாம ஒத்துக்கிட்டுதான் ஆகணும். அவரு வெளிய வரதுக்கு 108 நாள் ஆயிடிச்சி. அதுக்காக ரொம்பவே நாம மெனக்கெட்டோம்... போராடுனோம், முக்கி முனகுனோம். அவர மீட்டுறணும்னு தலைகீழா நின்னோம்.
ஆனா... இந்தம்மா நமக்கு எதிரா முக்குன முக்கு பெரிய முக்கா இருந்துச்சு.
அறிக்கையில இன்னொரு எடத்துல... (19-10-2000ல் வெளியிட்ட அறிக்கை)
"கொலைகாரன் வீரப்பனைப் பிடிப்பதற்கு கருணாநிதி தனது நாலரை ஆண்டு கால ஆட்சியில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. (இத இந்தம்மா பாத்துச்சு...?)
தன்னுடைய நிர்வாகத் திறமையின்மை, கையாலாகாத் தனம் ஆகியவற்றை ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக 1991-ல் இருந்து 96-ஆம் ஆண்டு வரை கொலைகாரன் வீரப்பனால் கொல்லப்பட்டவர்களின் பட்டியலை வெளியிட்டு மகிழும் கருணாநிதி, உண்மைகளை மூடி மறைத்து தவறான பதில்களை உச்சநீதிமன்றத்தில் தெரிவிப்பார்.''
நல்லா இத கவனிங்க...
"சந்தனமரக் கடத்தல்காரன் வீரப்பனைப் பிடிப்பதற்கு தமிழக -கர்நாடக மாநில அரசுகள் இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது என்பது பற்றிய முழு விபரங்களையும் தருமாறு உச்சநீதிமன்றம் கட்டளை பிறப்பித்திருக்கிறது. கொலைகாரன் வீரப்பனைப் பிடிப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்த உண்மையான விபரங்களை, கர்நாடக மாநில அரசு, உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கும் என்று நம்பலாம். ஆனால் தமிழக முதலமைச்சர் கருணாநிதி, சந்தனமரக் கடத்தல்காரன் வீரப்பன் விவகாரத்தில் உண்மைகளை தெரிவிப்பாரா என்பது சந்தேகமே?
அரசு கோப்புகள், காவல்துறை நடவடிக் கைகளில் உண்மைகள் இருந்தாலும் அதை உச்சநீதிமன்றத்திற்கு கருணாநிதி தெரிவிக்க மாட்டார் என்பதால்தான் இதுபற்றிய விவரங்களை நாட்டு மக்களுக்குத் தெரிவிப்பது எனது கடமை என்று கருதுகிறேன்.
கொலைகாரன் வீரப்பனைப் பிடிப்பதற்கு, கருணாநிதி தனது நாலரை ஆண்டு கால ஆட்சியில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.''
(புழுதி பறக்கும்)