poorkalam

(60) நக்கீரனை பாராட்டிய கர்நாடக முதல்வர்!

ஸ்.டி.எப். போலீஸால பாதிக்கப்பட்டவங்கள்ல ஒருத்தரான பெருமாள் சொல்றாரு. (23-5-93)

Advertisment

"கருணாநிதி முதலமைச்சராக வந்த பிறகு தான் தமிழ்நாட்டுக்கு கர்நாடக போலீஸ் வந்து யாரையும் பிடித்துக்கொண்டு போவதில்லை. ஜெயலலிதா காலத்தில்தான் கொடுமைகள் எல்லாம்''

ஐயா பெரியவங்களே நோட் பண்ணிக்குங்க...

எஸ்.டி.எப்.காரங்களுக்கு முழு சுதந்திரம் குடுத்தோம்ங்கிற பேர்ல காட்டுல கண்ணுல பட்ட பொம்பளைப் புள்ளகள நாசம் பண்றதுக்குப் பேரு என்ன?

Advertisment

ஜெயலலிதா இதத்தான் பெருமையா சொல்லிச்சு.

நான் கேக்குறேன்... அதுவும் ஒரு பொம்பளைதான...?

ஆனா கலைஞர் திரும்பவும் ஆட்சிக்கு வந்த உடனே... இந்த கொடுமைகளுக்கெல்லாம் முதல்ல தடை போட்டாரு. "எவனாவது பொம்பளப் புள்ளைங்க மேல கை வச்சீங்க... டிஸ்மிஸ்'தான்னு ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா ஆர்டரும் போட்டாரு.

"நீங்களே சொல்லுங்க... யாரு நல்லாட்சி பண்ணுனது?'ன்னு.

எஸ்.டி.எப். போலீஸ்காரங்களால பாதிக்கப் பட்டவங்க நெறைய பேர் இருக்காங்க. அதுல ஒரு சிலர் சொன்னத மட்டும்தான் ஒங்களுக்குச் சொல்லி யிருக்கேன்... இன்னும் எவ்வளவோ இருக்கு...!

இப்ப ஜெயலலிதாவும் உசுரோட இல்ல. ஜெயலலிதாவோட அடிப்பொடிங்க இருக்காங்க.. அவங்களும் யாரும் இத ஒத்துக்கமாட்டாய்ங்க. இன்னிக்கி வரைக்கும் எந்த எஸ்.டி.எப்.பாவது பாவப்பட்ட மலைவாழ் மக்கள... "நான்தான் சுட்டேன்', "நான்தான் கொன்னேன்'னு சொல்லியிருக்காங்களா?... சொல்லமாட்டாய்ங்க.

19-10-2000-ல அந்தம்மா ரெண்டாவதா ஒரு அறிக்கை விடுது.

இதுவும் ரொம்ப மோசமான அறிக்கைதான். மொதல்லயும் ஒரு மோசமான அறிக்கை விட்டுச்சு... அதுக்குத்தான் நான் முன்னாடி பதில் சொன்னேன்.

ராஜ்குமார் சார் காட்டுக்குள்ள இருக்காரு. அங்க போய் அவர உசுரோட காப்பாத்தி கூட் டிட்டு வரணும்னா... அவங்க ஏகப்பட்ட கண்டிஷன போடுறாய்ங்க. "காவேரி தண்ணிய தொறந்துவிடு, அது... இது'ன்னு என்னென்னமோ அறிக்கை விடுறாய்ங்க. நாமளும் எல்லாத்தையும் கேட்டுக் கிட்டு பொறுமையா போய் வந்துக்கிட்டிருக்கோம். இங்க இருந்து காட்டுக்குப் போவோம். அங்க இருந்து திரும்ப நடையா நடந்து வருவோம்.

மூணாவது முறையா காட்டுக்குப் போயிட்டு வந்தவுடனே கலைஞர் சொன்னதால, நானும் ரஜினி சாரும் பெங்களூருக்குப் போனோம்.

poorkalam

நல்லா கவனிச்சிக்கங்க... தூது போன நக்கீரன் கோபாலத்தான் "நீங்க மாத்திரம் ராஜ்குமார் வீட்டுக் குப் போங்க... அங்க இருக்கிற சி.எம்.ம பாருங்க... என்ன நடந்ததுங்கிற சொல்லிட்டு வாங்க...' அப்ப டின்னு சொல்லி கலைஞர் என்னைய அனுப்புனாரு.

இதுல நல்லா கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா...?

ஒரு வௌங்காத மூதேவி என்ன பொலம்பிக் கிட்டுத் திரியுதுன்னா... "என்னையும் கூப்புட்டு, நீங்களும் போயிட்டு வாங்க... ரெண்டு பேரையும் தான் போயிட்டு வாங்க'ன்னு சொன்னதா சொல்லிட்டுத் திரியுது.

அதனாலதான் மறுபடியும் நான் சொல்றேன்.

கலைஞர் என்னக் கூப்புட்டு, "நீங்க மாத்திரம் போங்க. உங்ககூட ரஜினிய கூட்டிட்டுப் போங்க'ன்னு அனுப்புனாரு. உடனே நாங்க ரெண்டு பேரும் தனி விமானத்துல பெங்களூரு போனோம். போய் சி.எம்.ம பார்த்துட்டு வரும்போது, ரஜினி சார் வீட்டுக்கு போயிடுறாங்க. நான் மட்டும் பத்திரிகையாளர்களச் சந்திக்கிறேன். சந்திப்பு முடிஞ்சவுடனே நானும் ரஜினி சார் வீட்டுக்குப் போனேன்.

அங்க இருந்து நானும் ரஜினி சாரும் நேரே ராஜ்குமார் சார் வீட்டுக்குப் போனோம். ராஜ்குமார் சார் வீட்டுல எங்கள ரொம்ப அன்பா பாத்துக்கிட்டாங்க. ஒரு உசுரு அங்க காட்டுல தவிச்சிக் கிட்டிருக்கு. அதப் பாத்துட்டு வந்த நம்மள உசுரா நெனைச்சி ரொம்ப பாசத்தோட நான் சொல்றத கேட்டுக்கிட்டிருந்தாங்க. ராஜ் குமார் சார் பத்தி நான் சொல்ற எல்லா விஷயங்களையும் ரொம்ப ஆர்வமா கேட்டாங்க. (படத்த பார்த்தா ஒங்களுக்குத் தெரியும்) ரஜினி சார்கூட அவ்வளவு ஆர்வமா உக்காந்து கேட்டுக்கிட்டிருப்பாங்க. படத்துல ஓரத்துல ஒருத்தரு சின்ன உருவமா நிப்பாரு பாருங்க... அவருதான் புனித் ராஜ்குமார். கன்னட திரைப்பட உலகுல சூப்பர் ஸ்டாரா இருந்தப்ப... திடீர்னு ஹார்ட்அட் டாக்ல சமீபத்துல இறந்துட்டாரு.

poorkalam

இதையெல்லாம் எதுக்காகச் சொல் றேன்னா...

"என்னய்யா நீ.... ஆபீஸ் அட்டாக்க பத்தி சொல்லிட்டு வந்தவன், திடீர்னு நாகப்பா கடத்தல்னு போன... அதுக்கப் புறம் ராஜ்குமார் கடத்தல்னு போன, அப்புறம் ஜெய லலிதா விட்ட அறிக்கைக்கு வந்த... இப்ப அறிக்கையிலிருந்து திடீர்னு நீங்களும் ரஜினியும் பெங்களூரு போனத சொல்லிட்டு வர்ற...'ன்னு கேட்டுறாதீங்க. எல்லாத்துலயும் ஒரு லிங்க் இருக்கு. அந்த லிங்க் இல்லாமப் போனா... எதுவோ ஜம்ப்பானது மாதிரி ஆயிடும்.

ஏன்னா... இந்தம்மாவோட வெறி. "கோபால்ங்கிறவன உருத்தெரியாம அழிச்சிற ணும்'னு அவ்வளவு ஆங்காரத் தோட அரச பயங்கரவாதத்த என்மேல ஏவி விட்டுது. அதுக்கு சில காரணங்கள் இருந்திருக்கலாம்.... சும்மா இருந்தவனையோ, தெருவுல போறவனையோ போய் தட்டி தூக்கிட்டு வான்னு சொல்லல. அதோட மனசுக்குள்ள மதயானைக்கு இருக்கிற வெறி இருந்துச்சு. அதனாலத்தான் அவ்வளவு வன்மத்த நம்மமேல காமிச்சுதுங்கிறதுக்கு, இந்த விஷயங்களயெல்லாம் நான் சொல்லவேண்டியிருக்கு. இதையெல்லாம் சொல்லிட்டு... மறுபடியும் அமிஞ்சிக்கரை பேப்பர் பாயிண்ட்டுக்கு நான் திரும்ப வருவேன்.

பெங்களூருக்கு போயிட்டு நானும் ரஜினி சாரும், ராஜ்குமார் சார் வீட்டுல போய் அங்க உள்ளவங்கள பாத்து நம்பிக்கையா பேசிட்டு வந்தோம்.

நான் பெங்களூருல பத்திரிகையாளர்கள சந்திச்சப்ப... அத 2 மணி நேரம் டைரக்ட்டா டெலிகாஸ்ட் பண்ணுனாங்க. குறைஞ்சது 250-க்கும் மேல பத்திரிகைக்காரங்களும், மீடியாக்காரங்களும் அப்போ வந்திருந்தாங்க. கர்நாடகா சரித்திரத்திலேயே அதுவரையிலும் நடக்காத ஒரு பிரம்மாண்ட மான பத்திரிகையாளர் சந்திப்பா அது நடந்துச்சு.

ஒரு வெறும்பய சொல்லிட்டுத் திரியுறான் பாருங்க... நான்தான் அவர கூட்டிட்டுப் போனேன்னு...

ஒத்த ஆளு பெங்களூருல 250-க்கு மேல பத்திரிகைக்காரங்களுக்கு நான் பதில் சொல்லியிருக்கேன்.

அதப் பார்த்துட்டு, நைட்டு 12:00 மணிக்கு எனக்கு ரஜினி சார் போன் பண்ணுனாரு. "கிருஷ்ணா சார், உங்களுக்கு போன் பண்றதா சொன்னாங்க, நீங்க கண்டிப்பா அவங்கள்ட்ட பேசணும்''னு சொன்னாங்க. சி.எம். கிருஷ்ணாவோட பி.ஏ. நாகேஷ் சார் எனக்கு போன் போட்டு, கிருஷ்ணா சார் பேசணுமாம்னு சொன்னாரு. அப்போ நைட் 12:30 மணி இருக்கும்.

What Gopal. You done a very good job. Our colleagues and our press peoples are very happy. We believe you will rescue Rajkumar. Congratulationனு கர்நாடக மாநிலத்தோட சி.எம். கிருஷ்ணா, என்கிட்ட இப்படிச் சொன்னாரு.

poorkalam

அந்த வென்ரு, நான்தான் கையப்புடிச்சு கூட்டிட்டுப் போனேன்னு புலம்பிக்கிட்டுத் திரியுது. ஏன் திரும்பத்... திரும்ப அந்த சின்னப்புத்தி உள்ளவனப் பத்திச் சொல்றீங்கன்னு நீங்க நெனைக்கலாம். நம்மள ரொம்பவே காயப்படுத்திட்டான்... அதனாலதான் இதச் சொல்லவேண்டியிருக்கு.

பெங்களூர்ல இருந்து வந்ததும், அண்ணன் கலைஞர்ட்ட எல்லா விஷயங்களயும் சொன்னேன். எல்லாத்தையும் கேட்டுட்டு, அடுத்தநாள் அவங்க பெங்களூர் போக தயாராயிட்டாங்க.

"பெங்களூர்ல என்ன நெலம...?'

அங்க கொஞ்சம் உஷ்ணமாத்தான் இருக்கு. ஆனா பிரச்சினை எதுவும் ஆகாம இருக்கும்படியான செய்திகள சொல்லிட்டு வந்திருக்கேன். ஸ்கூல், காலேஜ்களுக்கெல்லாம் லீவு விட்டிருக்காங்க. ஆனாலும் நெறைய எக்ஸைட்மெண்ட் இருக்கு. அடுத்து என்ன நடக்கும்.? ராஜ்குமார் வருவாரா... வரமாட்டா ரா?ங்கிற கேள்விதான் எல்லாரோட மனசுலயும் ஓடிக்கிட்டிருக்கு'ங்கிறத நான் ஏற்கனவே கலைஞர்ட்ட சொல்லியிருந்தேன்.

நான் பிரஸ்மீட் குடுத்ததயும் நைட்டு 12:00 மணி வரைக்கும் முழிச்சிருந்து அண்ணன் கலைஞர் பாத்திருக்காங்க.

உடனே எனக்கு போன்போட்டு, "கோபால் பிரஸ்மீட்ல நல்லா பேசு னீங்க''ன்னு பாராட்டு னாரு. சாதாரணமா கலைஞர்ட்ட யாராவது இப் படி பாராட்டு வாங்கிற முடியுமா... சொல்லுங்க?

இத எதுக்காக சொல்ல வர்றேன்னா... "கலைஞர் எவ்வளவு மகத்தான தலைவர்ங்கிறதுக்கும், எவ்வளவு பெரிய நம்பிக் கைய நக்கீரன் மேல வச் சிருந்தாருங்கிறதுக்காகவும் தான்'' சொல்றேன்.

பெங்களூரு போறதுக் காக கலைஞர் ஏர்போர்ட் டுக்குப் கௌம்புறாரு.

கலைஞர் பெங்க ளூர் போறார்ங்கிற நியூஸ் தெரிஞ்சு பத்திரிகைக் காரங்க பூராவும் விமான நிலையத்துல கலைஞர சூழ்ந்துக்கிட்டு கேள்வி கேக்குறாங்க.

இதுக்கிடையில ஒரு சின்ன சம்பவம்...

(புழுதி பறக்கும்)