போர்க்களம்! நக்கீரன் கோபால் (45)

ff

poorkalam

(45) பாம்புகள் சூழ... பரமபத ஆட்டம்!

ந்த எடுபட்ட நாதாரி அனுப்புனானோ தெரியல... அப்பாவ கடத்துன வெறும்பயலுக கெட்ட, கெட்ட வார்த்தைகள அதிகமா பேசி நோகடிச்சிருக்கானுங்க. இரண்டு விலாவுலயும் குத்திக்கிட்டே இருந்ததால, வலி பொறுக்கமாட்டாம... சமயோஜிதமா யோசிச்ச அப்பா, வில்லங்கமா மாட்டிக் கிட்டோமேன்னு நெனச்சி... "அடப் போய்யா... இப்படின்னு தெரிஞ்சிருந்தா நான் இந்த இழவு வண்டியில ஒங்ககூட வந்திருக்கவேமாட்டேன்''னு ஓங்கி கத்தியிருக்காங்க.

"என்ன பெரிசு இப்படிக் கத்துற?''ன்னு அவங்க கேட்டதுக்கு, "நான், அவன தலைமுழுகி ரொம்ப நாளாச்சு. பத்திரிகை ஆரம்பிக்கும் போதே வேண்டாம்.. வேண்டாம்னு தடுத்தேன். என்ன மீறி பத்திரிகை ஆரம்பிச்சான். அந்தம்மாவ பத்தி எழுதித் தொலைக்காதேன்னு பல தடவ சொல்லிட்டேன், அதக் கேக்காம அந்தப் படவா எழுதிக்கிட்டு திரியுறான். அதனால எப்படியோ போய்த்தொலைன்னு அவன எப்பவோ தலைமுழுகிட்டேன். அவன் இருக்கிற பக்கம் நானும், நான் இருக்கிற பக்கம் அவனும் இப்போ தலைவச்சுக் கூட படுக்கிறதில்ல. இந்தப் பக்கம்கண்டு வந்துறாத, வந்தேண்டா பொலி போட்ருவேன்னு சொன்னதுல இருந்து, அந்த நாப்பய அருப்புக்கோட்டைப் பக்கம் தல வச்சே படுக்கிறதில்ல... போவியா. அவனப் பத்தி கேக்கணும்னு எங்கிட்ட மொதல்லயே நீ கேட்டிருந்தா நான் இவ் வளவு தூரம் வந்திருக்கமாட்டேன்''னு அப்பா பட.... பட...ன்னு சொல்லியிருக்காரு.

"பெருசு... அப்புறம் ஏன் உம்பையன் கூப்பிட்டான்னதும் உடனே ஏறுனீரு''ன்னு அவனுக கேட்க...

"நான், ஏதோ அவன் அடிபட்டு குத்துயிரும் குலையுயிருமா கெடக்கானோங் கிற பதட்டத்துலதான்யா ஏறுனேன்''னு சமாளிச்சிருக்காங்க.

"பெருசு சொல்லுறது உண்மைதானா... நம்பலாமா?ன்னு கேட்டுக்கிட்டே, அவனுகளுக்குள்ளேயே குசுகுசுன்னு பேசி யிருக்காய்ங்க

poorkalam

(45) பாம்புகள் சூழ... பரமபத ஆட்டம்!

ந்த எடுபட்ட நாதாரி அனுப்புனானோ தெரியல... அப்பாவ கடத்துன வெறும்பயலுக கெட்ட, கெட்ட வார்த்தைகள அதிகமா பேசி நோகடிச்சிருக்கானுங்க. இரண்டு விலாவுலயும் குத்திக்கிட்டே இருந்ததால, வலி பொறுக்கமாட்டாம... சமயோஜிதமா யோசிச்ச அப்பா, வில்லங்கமா மாட்டிக் கிட்டோமேன்னு நெனச்சி... "அடப் போய்யா... இப்படின்னு தெரிஞ்சிருந்தா நான் இந்த இழவு வண்டியில ஒங்ககூட வந்திருக்கவேமாட்டேன்''னு ஓங்கி கத்தியிருக்காங்க.

"என்ன பெரிசு இப்படிக் கத்துற?''ன்னு அவங்க கேட்டதுக்கு, "நான், அவன தலைமுழுகி ரொம்ப நாளாச்சு. பத்திரிகை ஆரம்பிக்கும் போதே வேண்டாம்.. வேண்டாம்னு தடுத்தேன். என்ன மீறி பத்திரிகை ஆரம்பிச்சான். அந்தம்மாவ பத்தி எழுதித் தொலைக்காதேன்னு பல தடவ சொல்லிட்டேன், அதக் கேக்காம அந்தப் படவா எழுதிக்கிட்டு திரியுறான். அதனால எப்படியோ போய்த்தொலைன்னு அவன எப்பவோ தலைமுழுகிட்டேன். அவன் இருக்கிற பக்கம் நானும், நான் இருக்கிற பக்கம் அவனும் இப்போ தலைவச்சுக் கூட படுக்கிறதில்ல. இந்தப் பக்கம்கண்டு வந்துறாத, வந்தேண்டா பொலி போட்ருவேன்னு சொன்னதுல இருந்து, அந்த நாப்பய அருப்புக்கோட்டைப் பக்கம் தல வச்சே படுக்கிறதில்ல... போவியா. அவனப் பத்தி கேக்கணும்னு எங்கிட்ட மொதல்லயே நீ கேட்டிருந்தா நான் இவ் வளவு தூரம் வந்திருக்கமாட்டேன்''னு அப்பா பட.... பட...ன்னு சொல்லியிருக்காரு.

"பெருசு... அப்புறம் ஏன் உம்பையன் கூப்பிட்டான்னதும் உடனே ஏறுனீரு''ன்னு அவனுக கேட்க...

"நான், ஏதோ அவன் அடிபட்டு குத்துயிரும் குலையுயிருமா கெடக்கானோங் கிற பதட்டத்துலதான்யா ஏறுனேன்''னு சமாளிச்சிருக்காங்க.

"பெருசு சொல்லுறது உண்மைதானா... நம்பலாமா?ன்னு கேட்டுக்கிட்டே, அவனுகளுக்குள்ளேயே குசுகுசுன்னு பேசி யிருக்காய்ங்க. இவர கூட்டிக்கிட்டுப் போறதுல பிரயோஜனம் இல்லன்னு முடிவு பண்ணி அருப்புக்கோட்டை -மதுரை ரூட்டுல காரியாபட்டி தாண்டி 5 கி.மீ. தூரமா நட்ட நடு ரோட்டுல காரை நிப்பாட்டி... அப்பாவ அம்போன்னு இறக்கி விட்டுட்டுப் போயிருக்கானுக பேதியில போறவய்ங்க.

5 கி.மீ. தூரத்த... அங்கிருந்தே பொடி நடையா நடந்தே காரியாபட்டி பஸ் ஸ்டாண்டுக்கு வந்து சேர்ந்திருக்காங்க. ரொம்பவே வெக்கு வெக்குன்னு நடந்து டயர்டாகி... மறுபடியும் அருப்புக்கோட்டை பஸ்ஸ புடிச்சி வீட்டுக்கு வந்திருக்காங்க.

வந்தவரு, வந்ததும் வராததுமா... தலையில எண்ணெய் தேய்ச்சி, சுடுதண்ணில குளிச்சிட்டு... "போதும்டி... ஒம்புள்ள எனக்கு ரொம்ப நல்ல பேர சம்பாதிச்சிக் குடுத்துட்டான்... காலத்துக்கும் இது போதும்.... இது போதும்...''னு விரக்தியா சொன்னாருப்பா''ன்னு சொரத்தே இல்லாம அம்மா சொன்னாங்க.

"சரி.. சரி... வந்துட்டாங்கள்ல... ஒண்ணும் பிரச்சினையில்லியே?''ன்னேன்.

அம்மாட்ட இப்படிப் சொல்லிப்புட் டேனேயொழிய, உள்ளுக்குள்ள உதறல்தான். நம்மள பெத்த பாவத்துக்கு அப்பா ரொம்பவே அனுபவிச்சிட்டாய்ங்க.

"அந்தப் பாவிங்க... அப்பாவோட விலாவுல குத்துனதுனால ஒரே வலியா இருக்குன்னு... மருந்து எண்ணெய்ய தேய்ச்சிட்டு படுத்துருக்காங்க''ப் பான்னாங்க அம்மா ரொம்ப சோகத்தோட.

"வண்டியில போகும்போது இத யாரு செஞ்சாங்கன்னு பேசிக்கிட்டாங்களான்னு அப்பா எதாவது சொன்னாராம்மா?''ன்னு நைஸா கேட்டேன். நம்ம புத்தி அங்கதான போகும்.

""அதெல்லாம் நான் கேட்கல... நீயே வந்து கேளு''ன்னு படக்குனு போன வச்சிட்டாங்க அம்மா.

நான் நண்பர் ஜெயராஜ்ட்ட மறுபடியும் போன்போட்டு, "டேய்... அப்பா ஹைவேஸ் ஆபீஸ்லதான் இருப்பாரு. நீ போய் எப்புடி இருக்காருன்னு விசாரிச்சிட்டு, யாரு இந்த வேலையச் செஞ்சதுன்னு மட்டும் நைஸா கேளு. ஏதாவது அவனுக பேர... கீர... சொல்லியிருப்பானுக''ன்னு அனுப்புனேன்.

மதியம் வீட்டுக்கு சாப்பிட வந்தவருகிட்ட போயி ஜெயராஜ் கேட்டிருக்கான்.

ரொம்பவே கடுப்புல இருந்தவரு... "எங்க உன் பிரண்டு... அவன் கேக்கச் சொன்னானா? இருக் கட்டும்... அவன...''ன்னு பல்ல கடிச்சிருக்கார்.

ஜெயராஜ் எதுவுமே பேசாம தல குனிஞ்சபடியே நின்னுருக்கான்.

கொஞ்ச நேரம் கழிச்சி... அப்பாவே, "அவன்தான்யா...! எங்க ஆபீஸ் எல்லாத்துக்கும் அந்த ஆளுதான் மந்திரியாம்ல, சிவகங்கைக்கார னாம்...''னு போறபோக்குல சொல்லிருக்காரு.

வேற யாரு... மினிஸ்டர் கண்ணப்பன்தான்.

என்ன அடக்க என்னென்ன வேலையெல் லாம் செஞ்சுருக்காங்க பாருங்க. எல்லாம் அந்த பொம்பளைய குஷிப்படுத்துறதுக்குத்தான்.

இப்பகூட நெனச்சா குப்... குப்...னு வேர்த்துரும்.

நீங்களே நெனைச்சுப் பாருங்க... இந்த ஹிட்லர் பொம்பளைய! எழுதுனவங்களோட மட்டும் நிறுத்தாம, அவங்க குடும்பத்தையும் மிரட்டணும், காலி பண்ணணும்... அவங்கள வச்சு நம்மளயும் "துண்டக் காணோம்... துணியக் காணோம்'னு ஓட விடணும்... இதுதான் "ஜெ.' ஸ்டைல்.

அப்பா என்ன வீட்டோட சேர்க்கறதுக்கு ரொம்ப காலம் ஆச்சு.

இப்ப கொஞ்சம்பேரு, "ஏன்தான் இந்த கோபாலண்ணன், ஜெயலலிதா... போலீசு, அடி யாளு எல்லாரையும் இப்படி இந்த அசிங்கசிங்கமா திட்டுறாரு'ன்னு வருத்தப்பட்டாங்களாம். உங்க ளுக்கு இல்ல... இப்படி யாருக்கு நடந்தாலும் இதவிட மருவாதி இல்லாமத்தான் திட்டுவீங்க.

ff

எத்தன இழப்பு...! உங்களுக்குத் தெரியாது... என் புள்ளைய கடத்த ஒரு திட்டம் போட்டாய்ங்க. அத அவிய்ங்க போலீஸ்ல இருக்குற ஒரு நல்ல மனுஷன், அப்ப நம்மட்ட இருந்த தம்பி இணையாசிரியர் காமராஜ்கிட்ட சொல்ல, அவரு நம்மகிட்ட சொல்ல... புள்ளைகள காப்பாத்த நாங்க பட்ட பாடு இருக்கே... அப்படி ஒரு சம்பவம் நடந்தது. அத பின்னாடி சொல்றேன்.

இம்புட்டுப் பிரச்சினைங்க நடக்குதே... "வீட்டுல உள்ளவங்க என்ன நெனைச்சாங்க? அந்த நேரத்துல அவங்களோட மனநிலை எப்படி இருந்திருக்கும்?' நினைச்சுப் பாருங்க.

அந்த நாள்... அதான் 7-1-2012ல தம்பி குருசாமி ஆபீஸ்ல இருக்காரு. அப்பா அக்குபஞ்சர் டாக்டர் நாசர்ட்ட போயிட்டு, சந்து வழியா இருட்டுற நேரம் வீட்டுக்கு வந்துருக்காரு. வந்தவரு என்ன நடந்ததுன்னு எல்லா விவரத்தையும் T.V..லில பாத்துருக்காரு, அப்புறமா வீட்டுலயும் கேட்டிருக்காரு.

என்னடா வாழ்க்கை இது? இவனுக்கு இப்படி ஒரு வாழ்க்கை தேவையா?ங்கிற மாதிரி அப்பா ஸ்தானத்துல இருந்து அவங்களும் யோசிப்பாங்கள்ல.

இப்ப "ஏன் இப்படி ஒரு வாழ்க்கை நமக்கு?'ன்னு நானும் யோசிச்சேன்.

பரமபதத்துல ஏணியும் பாம்பும் மாறி, மாறித்தான் வரும். ஆனா... ஜெயலலிதாவும் நாமளும் ஆடுற பரமபதத்துல நம்மள சுத்தீ மட்டுமே பாம்புகளாவே இருந்தா? நாலா பக்கம் இருந்தும் பாம்பு சீறிக்கிட்டு கொத்த வந்தா... எந்தப் பக்கம் போறது, நீங்களே சொல்லுங்க. பாம்பு வாயில தேரை மாட்டுன கதைய கேள்விப்பட்டிருப்பீங்க. அந்தக் கதைதான் நம்ம கதை பாம்பு வாயில மாட்டுன தேரை வெளியில வர்றதுக்கு துடிக்கிற துடிப்பு இருக்கே... அந்த மாதிரி நெலையில இப்ப நாம இருக்கோம். இதுல இருந்து எப்படி வெளிய வரப் போறோம்?னு யோசிச்சிக்கிட்டே நடந்துக் கிட்டிருந்தேன்.

மணி அதிகாலை 5:30. ஞாயிற்றுக்கிழமை.

லாட்ஜ்ல உள்ள தம்பி அரக்கப் பரக்க ஓடி வந்து... "அண்ணே உங்கள பார்க்கணும்னு ஒருத்தரு கீழ வெயிட் பண்றாரு''ன்னான்.

"தம்பி... போலீசா இருக்கப்போவுது... ஜாக்கிரதையா போய் விசாரிச்சிட்டு வாங்க. அப்படியே ஐயப்பன்னு ஒருத்தரு என்ன தேடி வந்திருக்காரான்னும் கேட்டுட்டு வாங்க தம்பி''ன்னு அனுப்பி வச்சேன்.

கொஞ்ச நேரத்துல மேல வந்த அந்த தம்பி, "ஆமாண்ணே... ஐயப்பன்தான் வந்திருக்காராம்''னு அடித்தொண்டையில மெதுவா சொன்னாரு.

அப்பாடா... நல்லதாப்போச்சு. இந்த ரூமுக்கு ஒரு கும்பிடு, லாட்ஜ் ஓனருக்கு ஒரு கும்பிடு, லாட்ஜுக்கு ஒரு கும்பிடு, திசைக்கு ஒரு கும்பிடுன்னு போட்டேன்.

எங்க போனாலும் எப்பவும் நான் கையில ஒரு "கிட்' மாதிரி வச்சிருப்பேன். நாமதான் நெறைய தடவ தப்பிச்சி... தப்பிச்சி ஓடற ஆளாச்சே.

அந்த "கிட்'ட எப்பவுமே ஏன் கையில வச்சிருக்கேன்னா... நான் வீரப்பன் காட்டுக்குள்ள போகும்போது அங்க பனி ரொம்ப ஜாஸ்தியா இருக்கும். அங்க நாலு மல, அஞ்சு மல, ஏழு மல, எட்டு மல...ன்னு கணக்கில்லாம நடக்கவேண்டி வரும். அங்க போகும்போது நாம உசுர கையில புடிச்சுக்கிட்டு பயந்துக்கிட்டேதான் போவோம். அந்த நேரம் நல்லா வேர்த்துரும். பல நேரங்கள்ல பனியா கொட்டும்... எனக்கு ஒத்த தலைவலி அடிக்கடி வர்றதுனால, அத சமாளிக்கிறதுக்காக மங்கி கேப் ஒண்ணு எப்பவுமே வச்சிருப்பேன்.

இப்போ அந்த மங்கி கேப்ப போட்டுக்கிட் டேன். அது தலையோட சேர்த்து மீசையை நல்லா மறைச்சிக்கும். சின்னதா ஒரு மப்ளர், அத கழுத்துல போட்டுட்டு, கைலிய தூக்கிக் கட்டிட்டு "சல்ல்....'ன்னு கீழ இறங்கிட்டேன்.

என்னைப் பாத்தும் பாக்காதது மாதிரி பெரிய கும்பிடா போட்டுட்டு சுவரு ஓரமா கீழ நிக்கிறாரு லாட்ஜ் ஓனரு. அதுக்கு பல அர்த்தம்...

"நல்லபடியா போயிட்டு வாங்க. அப்பாடா... இப்பவாவது எங்கள விட்டீங்களே இப்பதான் நிம்மதி. தப்பித்தவறிக் கூட இனிமே இந்த திசை பக்கமா வந்துறாதீங்க... அப்படியே போய்த் தொலைங்க...' இந்த மாதிரி எப்படி வேணும்னாலும் எடுத்துக்கலாம்.

லாட்ஜுக்கு கீழே ஒரு பக்கமா ஐயப்பனோட டூவீலர் நிக்குது.

யாரும் பார்க்காத நேரத்துல... டூவீலர்ல ஏறுறேன்... ஏறி....?

(புழுதி பறக்கும்)

nkn050222
இதையும் படியுங்கள்
Subscribe