poorkalam

(38) காக்கி உடையில் ஒரு "நாக'ப்பாம்பு!

"2001-2003 ... காலகட்டத்துல ஒங்களையும், ஒங்க டீமையும் நாகராஜ்னு ஒருத்தரு அரெஸ்ட் பண்ணுனாராமே''ன்னாரு ராஜாராம் சார்.

Advertisment

"இல்ல சார்... எங்க டீமுல என்ன மட்டும்தான் நாகராஜன்ங்கிற நாசமா போறவன் கொலையா கொன்டுப்புட்டான்...''

"நாகராஜன்ங்கிற பேர்ல ஒரு நாய்... சொல்ஜ்நாய்... அத மறக்கவே முடியாது'' (ஒரு போலீஸ் ஆபீஸர இப்படிச் திட்றானேன்னு நெனைக்காதீங்க. தொடர்ந்து படிச்சீங்கன்னா அந்தாள நீங்களும் எங்கூட சேர்ந்து திட்டுவீங்க.)

Advertisment

poorkalam

அவன ஒரு மனுஷனாவே மதிக்க முடியாது. எவ்வளவு மோசமா நடத்த முடியுமோ அவ்வளவு மோசமா என்ன நடத்துனான். ஒரு மனுஷன எவ்வளவு தூரம் கொடுமப்படுத்த முடியும்னு திட்டம் போட்டு பண்ணுனான். என்னைய அரெஸ்ட்பண்ணி சிந்தாதிரிப்பேட்ட போலீஸ் ஸ்டேஷன்ல 6 நாளு ஜட்டியோட முக்கால் நிர்வாணக் கோலத்துல சகிச்சிக்கவே முடி யாத மொடநாத் தம் புடிச்ச செல்லுல வெச்சது இவன்தான். அதுக்குப் பின்னணியில ஜெயலலிதா இருந்துச்சு. அந்த லேடி ஹிட்லருக்கு இவன் ஏவல் நாயா வேலை செஞ்சான்.

என்னையும் சேர்த்து 3 பேர பொடா கேஸ்ல கைது பண்ணணும்னு ஏற்கனவே ப்ளான் பண்ணி எங்கிட்ட கையெழுத்து கேட்டான். (அந்த 3 பேரு... கலைஞர், எஸ்.எம்.கிருஷ்ணா, ரஜினி. இத ஏற்கனவே நான் சொல்லியிருக்கேன்) நான் கையெழுத்து போட முடியாதுன்னு பல்லக் கடிச்சுக்கிட்டே சொன்னதுனால கடுமையா... ரொம்ப கொடுமையா சித்ரவத செஞ்சான். ஒரு கட்டத்துல என்னோட புறங்கைய கட்டி, லாடம் கட்றதுக்கு... ஆளுயர பெஞ்ச்ல டவுசரோட அடிக்கிறதுக்கு குப்புற படுக்க வச்சாய்ங்க. அந்த பெஞ்ச சுத்தி காலுல கட்டுறதுக்கு கட்ட, தாம்புக் கயிறு, பெரிய ராடு எல்லாத்தையும் சுத்திவச்சி... கொஞ்ச நேரம் என்ன மரண பயத்துல இருக்க வச்சான். நானும் நெஜமாவே பயந்துட்டேன். அப்புறம் பயப்படாம... எனக்கு கதி கலங் கிருச்சு.

பிறகு, வெறும் உடம்போட நிக்கவச்சி, எங்கையில சிலேட்ட குடுத்து, "நான் ஒரு திருடன்... கொலைகாரன்... தீவிரவாதி'ன்னு எழுதி, போட்டோல்லாம் எடுக்கச் சொன்னான். போட்டோ எடுத்த அந்த பரதேசி, விழுந்து விழுந்து நெறைய எடுத்தான். அதப்பாத்து ரொம்ப நக்கலா சிரிச்சான் அந்த பொறுக்கி நாகராஜ்.

அதோட விடல்ல... அப்புறமா காட்டுக்கு கூட்டிட்டுப் போயி, "எந்த எடத்துல ஆயுதங்கள புதச்சி வச்சிருக்க?'ன்னு செய்யாத விஷயத்துக்காக மோசமா துப்பாக்கி முனையில மிரட்டுனான். அதுக்காக காட்டுல வச்சி பெரிய டிராமாவே போட்டாய்ங்க.

சுத்தி அவனோட ஆளுக.... நமக்கு யாருமே இல்ல.

திரும்பிப் பாத்தா ஜ்லோன்னு ஒரே அலங்காடு. நமக்கு ஆதரவா ஒரு நாய்கூட இல்ல... என் உசுரே அப்போ எங்கிட்ட இல்ல.

"நான் வீரப்பனுக்காக பயங்கர ஆயுதம், துப்பாக்கி, தோட்டா, ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டு, நெறைய பணம்... எல்லாத்தையும் கொண்டுபோய் காட்டுல ஒரு எடத்துல மறைவா புதைச்சி வச்சிருந்ததாவும், அத அவிய்ங்க கண்டுபுடிச்சி எடுத்ததாவும்' செய்தி பரப்புனாங்க. அத ஜூனியர் விகடன் பத்திரிகை அட்டைப் படமாவே போட்டுச்சு. அவிய்ங்களுக்கு அதுல ஒரு சந்தோஷம் பாருங்க. அதெப்படி.... போலீஸ் எடுத்த படம் இவங்களுக்கு மட்டும் உடனே கெடைச்சது? சரி, அத அப்படியே விட்ருவோம்...

ஆயுதம், வெடிகுண்டு...ன்னு பொய் சொன்னாலும் பொருந்துற மாதிரி சொல்ல வேண்டாமா? அவன் தப்பு செஞ்சத மறைக்க அவ்ளோ... மெரட்டுனான். தலையில துப்பாக்கிய வச்சி "சுட்டுருவேன்... சுட்டுருவேன்..னு காட்டுக் கத்தலா கத்துனான் அந்தப் படவா நாகராஜன்.

"நான்தான் ஆயுதங்கள புதைச்சி வச்சேன்னு சொல்லு. சொல்றியா இல்லியா? இல்லேன்னா... இங்கயே ஒன்ன போட்டுத் தள்ளிட்டுப் போயிட்டே இருப்பேன்''னு பி.பி. வந்தவன் மாதிரி வெறிகொண்டு கத்துனான். .

poorkalam

"சும்மா சொல்லிக்கலாம்... "சுடுன்னு நெஞ்ச தொறந்து காமிச்சேன்'னு. உண்மையிலே அண்ட சரீரமும் ஆடிப்போச்சு. போச்சுடா.... இந்த அத்துவானக் காட்டுல வச்சு நம்மள சோலிய முடிச்சிடுவானோ...? காண்டாமிருகம் மாதிரி இருந்த நாலஞ்சு போலீஸ்காரய்ங்க சுத்தி நின்னு என் கைய புடிச்சி முறுக்குறாய்ங்க. வலி பின்னியெடுக்குது... "இப்படி யாருக்குமே நடக்கக்கூடாதுடா சாமீ'.... அவ்வளவு கொடூர சித்ரவதைகள எனக்குப் பண்ணுன நாய்தான்.... அந்த நாகராஜன்.''

இவ்வளவு வயித்தெரிச்சலோட அவன ஏன் திட்டுறேன்னா... ஜெயலலிதாவுக்கு, அந்த நாய் காட்டுன விசுவாசம் அப்படி.

என்னைய வச்சி கலைஞர லிங்க் பண்றதுக்காக என்னை ஜீப்புல ஏத்துவான். கையில மாட்டுற லீடிங் செயின மாட்டாம, அத என் காலுக்கு கீழ போடுவான். செயினோட இன்னொரு சைட வேற ஒரு போலீஸ் எஸ்கார்டுட்ட குடுத்து, புடின்னு மிரட்டுவான். அதாவது எதுக்குன்னா... எந்த நேரத்துலயும் நான் ஒன்ன கட்டி இழுத்துட்டுப் போவேன்டாங்கிற மாதிரி. கோபாலபுரம் வரைக்கும் ஜீப்புல என்னை கொண்டுபோயிட்டு, திருப்பி சிந்தாதிரிபேட்டை ஸ்டேஷன்ல ஒப்படைச்சிட்டு... மறுபடி கோபாலபுரம் போய் கலைஞர விசாரிச்சான்.

ராஜ்குமார் கடத்தல் விவகாரம்...

கலைஞர், ரஜினி, நான்...

ராஜ்குமார் கடத்தல் விஷயத்துல, அவருடைய மீட்புக்காக வீரப்பனுக்கு கலைஞர்தான் பெருசா வெகுமதி குடுத்தாருன்னும்... ஒரு ஸ்டோரிய கிரியேட் பண்ணி... கோபாலபுரம் போய் விசாரிச்சிருக்கான் நாகராஜன். லட்சுமணசாமின்னு ஒரு இன்ஸ்பெக்டரும், அப்ப அவன்கூட போனாப்ல. (லட்சுமணசாமி யாருன்னா... ராஜ் குமார் கடத்தல் வழக்கை விசாரிச்ச போலீஸ் அதிகாரி. படத்த பாத்தீங்கன்னா ஒங்களுக்குத் தெரியும். கலைஞரோட கோபாலபுரம் வீட்டு வரவேற்பறையில ரெண்டுபேரும் கையில ஃபைலோட உக்காந்திருப்பாங்க பாருங்க) கலைஞரும் எதுக்கும் பயப்படாம கேட்ட கேள்விக்கெல்லாம் கூலா பதில் சொல்லி அனுப்பியிருக்காரு.

இந்த விஷயத்த கேள்விப்பட்டு பெரிய அரசியல் தலைவர்கள்லாம் கட்சி பாகுபாடு இல்லாம கண்டிச்சாங்க.

இவ்வளவு வக்கிரமா, மோசமா நடந்துக்கிட்ட ஒருத்தன்.... (எனக்கு செஞ்ச கடுமையான சித்ரவதைகள் வேறு விஷயம்.... அத விடுங்க...) ஒரு முன்னாள் முதல்வர... அதுலயும் நாலு முறை தமிழ்நாட்டோட முதலமைச்சரா இருந்த ஒரு மூத்த வயசுள்ள ஒருத்தர... ஒருத்தன் போய், அவரோட வீட்டுல உக்காந்துட்டு ராஜ்குமார் கடத்தல்.... வீரப்பன்... நக்கீரன் கோபால்... கலைஞர்.... ரஜினி...ன்னு விசாரிக்கிறான்னா... உலகமே போற்றுற ஒரு ஒப்பற்ற தலைவருக்கு அது எவ்வளவு பெரிய அவமரியாதை!

எனக்கு அவ்வளவு கொடும நடந்துச்சு. அவன் அப்படி செஞ்சான்கிறதுக்காகவோ, கொடுமப்படுத்துனதுக்காகவோ சொல்லல. என்ன விடுங்க.... நான் ஒரு சாதாரண பத்திரிகைக்காரன் தான். ஆனா தப்புக்கு மேல தப்பா பண்ணுன அவன... (எல்லாரையும் சொல்லல.) நாகராஜ் நீ செஞ்சது தப்புன்னு சொல்லி, அவன தண்ணியில்லாத காட்டுக்கில்ல டிரான்ஸ்பர் பண்ணியிருக்கணும். அப்படிச் செய்யவேண்டிய எடத்துல இருந்த மேலதி காரிங்க எதையுமே செய்யாம விட்டுட்டாங்க.

"ஐயோ... நம்ம தலைவர இப்படி கேவலப்படுத்தி, அசிங்கப்படுத்தி விசாரணை வரை கொண்டுபோன ஒருத்தன சும்மா விடலாமா?'ன்னு தி.மு.க.வுல இருந்த சில வக்கீல்களும், அவர் கூடவே பொறுப்புல இருந்த மத்த பெருசுங்களும் கொஞ்சமாவது நெனைச்சாங்களா...? ம்ஹும்... ஒரு எழவும் இல்ல.

இதுவே ஜெயலலிதா மேல விசாரணைன்னு சொல்லி எந்த போலீஸாவது போயிட்டு உசுரோட வந்துருவானா? போனவனோட கதி...? அதோகதிதான்...!

ஏன்னா... அவங்க எண்ணம் என்னன்னா, கலைஞர்தானே அவமானப்பட்டாரு, நாம இல்லையேன்னு விட்டுட்டாங்க போல... நல்லா இருக்கட்டும்!

இதுல என்ன கொடுமைன்னா...?

அவ்வளவு அநியாயம் பண்ணுன ஒருத்த னுக்கு கலைஞர் கையாலயே அவார்டும் குடுத்து, பாராட்டுப் பத்திரமும் கொடுக்க வச்சதுதான்.

மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வருது. அப்போ நடந்த சுதந்திர தின விழாவுல, கலைஞர் கையால அவனுக்கு விருது குடுக்க வச்சிட்டாங்க. அதுக்கு காரணம், அந்த நாகராஜன் சார்ந்திருந்த ஜாதி. அவனோட ஜாதிக்காரங்க செஞ்ச லாபியினாலதான் அது நடந்துச்சு. தி.மு.க.வுல இருந்த ஒரு சிலரே இதச் செஞ்சாங்க.

2006 மே மாசம். கலைஞர் ஆட்சி பீடத்துல உக்கார்றாரு.

ஒருநாள்... கலைஞர் கூப்பிட்டார்னு கோபாலபுத்துக்குப் போனேன்.

அப்போ, கலைஞர் எங்கிட்ட....!?

(புழுதி பறக்கும்)