அடியாள் வேலை பார்த்த பொறுக்கிகள்!
தொடர்ந்து ராஜாராமன் பேசுறாரு. அன்னிக்கு உங்கள மிஸ் பண்ணிட்டோம். எவ்வளவோ முன்னேற்பாடுகள செஞ்சிருந்தும் எங்களால உங்கள அன்னிக்கு எங்க இருக்கீங்கன்னு கண்டேபுடிக்க முடியாமப் போச்சு. அது எங்களுக்கான தோல்விதான். அத ஒத்துக்கிட்டுதான் ஆகணும்னு ரொம்ப ஃபீல்பண்ணி சொன்னாரு.
ஏதோ லாட்டரியில ஒருகோடி ரூபாய் கெடைக்காம போனது மாதிரி... கெடைக்க வேண்டிய அவார்டு கெடைக்காம போயிருச்சேங்கிற மாதிரி... ஓட்டப் பந்தயத்துல ஒரு செகண்ட்டுல வெற்றிக்கோட்ட தவற விட்ட மாதிரி... பெரிய புதையல் கெடைக்காம போயிருச்சிங்கிற மாதிரி அவரு ரொம்ப ஆதங்கப்பட்டு சொன்னாரு.
என்ன ஆதங்கம்னு கூட்டிக் கழிச்சி பார்த்தா... அது என் உசுரு...
என்னோட உசுர எடுக்கிறதுக்கு அன்னிக்கு 3:00 மணியில இருந்து கிட்டத்தட்ட நூறு பேருக்கு மேல ஒயர்லெஸ்ஸோடயும் கையில துப்பாக்கியோடயும் அலைஞ்சிருக் காய்ங்க.
அப்படி என்ன பெரிசா நான் பண்ணிட்டேன்? அட... அந்தம்மா சோறு தின்னத பத்தி எழுதிப் புட்டோமாம்! "என்ன கொடும சரவணா...'ங்கிற மாதிரிதான் இருந்துச்சு. அந்த செய்திக்கு ஆதாரமான ஒரு விஷயம் எங்கிட்ட இருக்கு. அதப் பார்த் தீங்கன்னா எல்லா விஷயமும் ஒங்களுக்கு தெளிவா புரியும். அந்த உண்மைய பின்னாடி ஒரு இடத்துல சொல்றேன்.
ஆத்தாடி...! இவங்கள்ட்ட இருந்து தப்பிச்சு வந்ததே நமக்கு கெடைச்ச வெற்றி வாகைதான! இத பெரிய சாதன செஞ்சுட்டோம்னு சவடாலாச் சொல்லல... ஆனா என்னதான் சொல்லுங்க... இதுவும் வெற்றிதான?
ஒரு பெரிய தீவிரவாதிய தப்பிக்க விட்ட மாதிரி டி.எஸ்.பி. ராஜாராமன் சார் ரொம்ப ரொம்ப "உச்' கொட்டுனாரு.
"என்ன கொடுமை ஸார் இது. நான் சாதா ரணமான ஒரு ஆளு. என்னை கொல்லுறதுக்கு எதுக்கு ஸார் நூறு துப்பாக்கி போலீசு?
முன்னாடி அப்படித்தான்... வீரப்பன் காட்டுல வச்சி என்ன தீர்த்துடணும்னு தேவாரமும் அந்தாளுடைய அடிபொடிகள் நெறைய பேருமா சேர்ந்து பேயா அலைஞ்சாய்ங்க. ஏன் அலைஞ் சாய்ங்கன்னா... வீரப்பன் தேடுதல் வேட்டைங்கிற போர்வையில காட்டுல இருக்கிற அப்பாவி பொம் பளைங்கள அநியாயமா கெடுத்து குட்டிச்சுவராக்கு னத... பக்கம் பக்கமா நக்கீரன்ல ஆதாரத்தோட பொளந்து கட்டுனோம்.
தேவாரம் தலைமையில இருந்த எஸ்.டி.எஃப்.ல இருந்த கொஞ்ச வெறிநாய்ங்க, தூணுக்குப் புடவைய சுத்தி வச்சாவே தூக்கிப் பார்க்கிற அயோக்கியனுகளா இருந்தானுங்க. அவனுக காட்டுல சும்மா சவ்வுமிட்டாய் தின்னுவானுங்களா...? மேய்ஞ்சுட்டாய்ங்க.
நக்கீரன்தான் உசுரப் பணயம் வச்சு எல்லா அக்கிரமத்தையும் வெளிய கொண்டு வந்துச்சு. அதுக்கு பிரதி உபகாரமாத்தான் நம்ம உசுரக் கேட்டாரு தேவாரம். ஏன்னா... இவனுங்களுக்குத் தலைவருல்ல?! அவிய்ங்ககிட்ட இருந்து தப்பிச்சதே தம்புரான் புண்ணியம். இப்ப நாம வாழறதே எக்ஸ்ட்ரா லைஃப்தான். அங்க தப்பிச்சி, இங்க தப்பிச்சி, கடைசியில உங்ககிட்ட மாட்டிக்கத் தெரிஞ் சேன் சார்... நல்லவேள ஜுட் விட்டேன்''னேன்.
"ஒங்களுக்குத் தெரியாது ... நான் மொதல்ல உங்கள்ட்ட சொன்ன மாதிரிதான் ஸார். நாங்க குனிஞ்சு நிமிர்றதுக்குள்ள, எங்க கண்ணுல மண்ணத் தூவிட்டு தப்பிச்சுப் போயிட்டீங்க. பெரிய பொறுப்புல உள்ள ஆபீஸருங்கள்லாம் எங்கமேல எரிஞ்சு விழுந்தாங்க. ஆபீஸ்பூராவும் தேடுறோம்... நீங்க இல்லங்கிறது மாத்திரம் எங்களுக்குத் தெரிஞ் சிருச்சு. மே-டத்துக்கு இன்பார்ம் பண்ணிட்டோம். எங்க தேடியும் இல்ல. அய்யய்யோ... தப்பிக்க வுட் டுட்டோமே... எங்கேயே தப்பு பண்ணிட்டோ மேன்னு தலைல கைய வச்சிட்டு உக்காந்துட்டோம்.
நாங்க தேடிவரும்போது ஒங்க வீடு எங்க இருக்குன்னு எங்களுக்கு சத்தியமா தெரியாது. அப்புறமாத்தான் தெரிஞ்சது, ஆபீசுக்கு சைடுல பின்னாடியே இருக்கிற நாலாவது மாடியிலதான் ஒங்க வீடு இருந்துச்சு அப்படிங்கிறது. நாங்க உள்ள வர்றதுக்கு கொஞ்ச நிமிசத்துக்கு முன்னாடிதான் அந்த ஏரியாவ கா- பண்ணிட்டுக் கௌம்பியிருக்கீங்க.
வெளியூருக்கு எங்கேயும் தப்பிக்காம இருக்குறதுக்கு என்னென்ன பண்ணணுமோ அத மொதல்ல பண்ணுங்கன்னு எங்க சீனியர்ஸ் கத்துனாங்க. அதுக்கு என்ன வழின்னு எல்லாரும் டிஸ்கஸ் பண்ணுனோம்.
அப்போ சீனியர்ஸ் என்ன சொன்னாங் கன்னா... இதுக்கு முன்னாடி இந்த மாதிரி நேரங் கள்ல இவரு, எப்படி தப்பிச்சாரு? யாருக்குமே தெரியாம எங்க மறைஞ்சிருப்பாரு? அந்த மாதிரி நாட்கள்ல எங்க இருப்பாரு? இதெல்லாம் தெரிஞ்சவங்க யாரு? டிபார்ட்மெண்ட்ல உள்ள போலீஸ்காரங்க யாருக்காவது இதுபற்றி ஏதாவது க்ளூ தெரியுமா? அப்படியான ஒரு -ஸ்ட்ட உடனே எடுக்கச் சொல்- கத்துறாய்ங்க.
நான், எனக்குத் தெரியாதுன்னு சொல்-ட் டேன். இன்னொருத்தரு, "முன்னாடி ஒரு அதிகாரி இருந்தாரு, அவரு இப்போ எந்த டிவிஷன்ல இருக் காருன்னு தெரியல்ல'ன்னாரு. நெறைய பேரு ஒவ் வொருத்தர் பேரையா சொல்லுறாங்க. அப்புறமா சி.பி.சி.ஐ.டி.காரங்க ஒங்கள பொடாவுல அரெஸ்ட் பண்ணுனாங்கள்ல... அதுக்கு முன்னாடி ரொம்ப நாளா நீங்க தலைமறைவா இருந்ததா சொன்னாங் களே... அப்போ எங்க இருந்தீங்க?''ன்னாரு.
அவரு பேசப் பேச எல்லாத்தையும் கேட்டுக்கிட்டே இருந்தேன். "சொல்லுங்க... சொல்லுங்க''ன்னேன்.
"பொடாவுல நீங்க கைதானதுக்குப் பின் னணியில முகம்மது அ- இருந்தாராமே...?''ன்னாரு.
"யோக்கியரு வராரு... சொம்ப எடுத்து உள்ள வை'ன்னு கிராமத்துல சொல்லுவாய்ங்க.
அந்த ஆளு எவ்வளவு பெரிய அயோக்கியத் தனம்லாம் பண்ணுனாரு. எப்படியான கொள்ளைக் கூட்டம்லாம் நடத்துனாரு? போ- முத்திரைத் தாள் மோசடியில தமிழ்நாடு ஏஜெண்டாவே இருந்து எவ்வளவு கொள்ளையடிச்சாருங்கிறத நாங்கதான் புலனாய்வு செஞ்சு புட்டு... புட்டு வச்சோம்.
முகம்மது அ- டி.ஐ.ஜி. இவன் பண்ணுன மொள்ளமாரித்தனம் என்னன்னா...?
அப்துல் கரீம் தெல்கிங்கிறவன் இந்தியாவை யே உலுக்கிய போ- முத்திரைத் தாள் மோசடியின் அக்மார்க் பிராடு. இவன் தலைவன்னா... அவனுக்கு துணைபோன, தமிழ்நாட்டோட பிராஞ்ச் மேனேஜிங் பிராடுதான் இந்த முகம்மது அ-. இவ னோட களவாணித்தனத்தை நக்கீரன்தான் கண்டு புடுச்சி வெளிய கொண்டுவந்துச்சி. அப்புறமாத் தான் சி.பி.ஐ. இவனை அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல போட்டு... பலநாளா களி தின்னான்.
இத எதுக்கு சொல்ல வர்றேன்னா... தான் பண்ணுன அயோக்கியத்தனத்த மறைக்கத்தான் என்னை மும்முரமா கைதுபண்ணி ஜெயல-தாட்ட பேரெடுக்கணும்னு துள்ளாட்டம் போட்டான் முகம்மது அ-. கடைசில நம்மகிட்டயே வசமா மாட்டிக்கிட்டான்.
ஜெயல-தா, தன்னோட எதிரிகள காவு வாங்கறதுக்கு பயன்படுத்துற ஆளுங்களோட லெட்சணம் எப்படிங்கிறது தெரியுதா...? எல்லாமே பொறுக்கிங்க. அவனுக செஞ்ச பொருளாதார குற்றம், பண்ணுன கொலை... கொள்ளை, திருட்டு எதைப் பத்தியும் அந்தம்மாவுக்கு கவலை இல்ல. ஒரே குறிக்கோள்.... எதிரிய எந்த வழியிலயாவது பழி வாங்கணும் அவ்வளவுதான். எப்பவுமே ஆணவத்தின் உச்சியில நின்று ஆடுற... அவனு களோட தலைவிக்கு இவனுக... கடைசிவரைக்கும் அடிமையாவே இருந்தானுக.
இவன் கைது பண்ணுனது என்ன மாத்திரம் இல்ல... முன்னாடியே சொன்ன மாதிரி நான் பெரிய ஆளெல்லாம் கெடையாது. ஆனா தமிழ்நாட்டுக்கு அஞ்சு தடவ முதலமைச்சரா இருந்த பெரிய தலைவர், முத்தமிழ் அறிஞர் அண்ணன் கலைஞர நடுராத்திரி துள்ளத் துடிக்க அரெஸ்ட் பண்ணுனதும் அந்த ஆளுதான்...''ன்னு சொன்னேன்.
"இல்ல ஸார்... அவர காண்டாக்ட் பண்ண முடியல. ஒங்களப் பத்துன தகவல் எதையாவது கேக்கலாம்னு நெனைச்சோம். ஆனா எங்களுக்கு அவரப் பத்துன எந்த தகவலும் சரியா கெடைக்கல. வெளிநாட்டுல செட்டிலாயிட்ட மாதிரி சொல்லுறாங்க. அதனால அந்த முயற்சியும் எங்களுக்கு தோல்வி.''
அப்புறம்... சி.பி.சி.ஐ.டி.யில ஒரு டி.எஸ்.பி...
அவரு பேரு...
(புழுதி பறக்கும்)