கொலை வெறி!
நம்ம ஆபீசுக்கு சந்து வழியா வந்தது வேற யாருமில்ல... அண்ணன் தெய்வச்சிலை. நம்ம வெல்விஷர். ஆபீசுக்கு உள்ள வந்தவுடனே எனக்கு கை குடுத்து "வாழ்த்துக்கள்ணே''ன்னாரு.
"இந்த குசும்புதான வேணாங்கறது''ன்னேன் நான்.
"என்னண்ணே நீங்க... எப்படி உங்கள வாழ்த்தாம இருக்க முடியும்? டி.வி.ய தொறந்தாலே நக்கீரன் ஆபீஸ அடிச்சு நொறுக்குறான், தீ வைக்கிறான், கல் எறியுறான்... ஒரே அமளியா இருக்குன்னு செய்தில சொல்றான். ஆபீசுக்குள்ள வரலாம்னா மெயின் கேட் அடைச்சிருக்கு. அ.தி.மு.க.காரய்ங்க தெருபூரா குரூப் குரூப்பா நின்னுக்கிட்டிருக்காய்ங்க. அந்த குரூப்ல ஒரு மூஞ்சி நமக்கு தெரிஞ்சதா இருந்தது. அது யாருன்னா வேளச்சேரி எம்.எல்.ஏ. அசோக். நம்ம ஊரு பக்கத்தூருக்காரன். அவனும் ஒரு குரூப்போட நின்னுக்கிட்டிருந்தான், அதுலயும் ஒரு மார்க்கமா நின்னுக்கிட்டிருந்தான்.
அவனப் பார்த்து, "என்னய்யா நீயெல்லாம் இங்க வந்திருக்க?''ன்னு நான் கேட்டதுக்கு... "ஆமாண்ணே நமக்கு ஏதாவது பதவி கிடைக்கணும்னா இந்த மாதிரி வந்தாதாம்ணே நடக்கும்''னு வெளிப்படையாவே சொன்னான். அவன் பேசுறதுலயே ஒரு திமிர்த்தனம் இருந்துச்சு.
"ஆமா.... உன்ன ஜெயா டி.வி.யில காமிப்பாங்க, அதப் பார்த்தவுடனே அந்தம்மா ஒனக்கு ஏதாவது பதவி குடுக்கும்ல''ன்னு நக்கலா சொன்னேன் நான்.
"ஆமாண்ணே அதுதான் நெஜம்... ரொம்ப எதிர்பார்த்துக்கிட்டிருக்கோம். இப்ப பாருங்க நாங்க பண்ணப்போற வேலய...'' அப்படின்னு சொல்லிட்டிருந்தாப்ல. ஏதோ பெருசா பண்ணப் போறாங்கங்கிற மாதிரி தெரியுதுண்ணே... பொம்ப ளைங்க குரூப் ஒண்ணு, ஆபீஸ் முன்னாடி அசிங்க அசிங்கமா பேசிட்டு குத்தாட்டம் போடுதுக...''
"அதுதான் காலையில இருந்து நடந்துக்கிட்டிருக்கே... இவிய்ங

"அதுதான் காலையில இருந்து நடந்துக்கிட்டிருக்கே... இவிய்ங்களால தெருவே நாறிக்கெடக்கு. நம்மள ஒரு வழி பண்ணாம போகமாட்டாய்ங்களோன்னு பக்கு பக்குன்னு இருக்கு. இந்த லெட்சணத்துல வாழ்த்துச் சொல்ல வந்தீங்களாக்கும்''ன்னேன்.
"அதாண்ணே... அநியாயத்த எதிர்த்து நிக்குற போர்க்குணம் கொஞ்சமும் நக்கீரனுக்கு குறையல. காலையில இருந்து பார்த்துக்கிட்டிருக்கேன். யார், யாரெல்லாமோ எனக்கு போன் பண்ணுனாங்க. நக்கீரன் ஆபீஸ அடிச்சு துவம்சம் பண்ணிட்டாங்க. இனிமே எந்திரிக்கவே முடியாது அவ்வளவுதான்... நக்கீரன முடிச்சிட்டாங்களாமே...ன்னெல்லாம் கேக்குறாங்க... நீங்க இங்க குத்துக்கல்லாட்டம் நிக்குறீங்க. உங்க தம்பிக எல்லார்ட்டயும் இருக்குற போல்ட்னஸுக்குத்தாண்ணே நான் வாழ்த்துச் சொன்னேன்''னாரு.
"உங்க வாழ்த்து சரியில்லயே... ஒரு அரசாங் கமே வாசல்ல நின்னு நம்மள போட்டுத் தள்ளத் துடிக்குது...'' உசுரு போற வலிதான். அத முகத்துல காட்டாம பேசிக்கிட்டிருக்கேன். "அஞ்சுறவன குஞ்சும் விரட்டும்'பாய்ங்களே... நம்ம ஊருல... அதுபோலத்தான் நாம பயந்துட் டோம்ண்டு நினைச்சு நண்டு சிண்டுக எல்லாம் வாலாட்டுது.
"இந்த பக்கிக பண்ற அலம்பல் இன்னிக்கி முடியுமா, என்னைக்கு முடியும்னு தெரியல. இதுலயிருந்து வெளிய வந்துட்டா போதும், நக்கீரனுக்கு ஆயுசு நூறுண்ணே. ஆமா... கரை வேட்டி கட்டுன ஒருத்தன்ட்ட பேசிக்கிட்டிருந் தீங்களே... அந்தாளு யாரு?''
"ஆமாண்ணே... உங்களுக்கு எப்படி...?''
"நான்தான் கேமராவுல பார்த்துக்கிட்டிருக்கேனே''ன்னேன்.
"ஒரு பெரிய குரூப் ஆபீஸ பாத்து வந்துக்கிட்டிருக்குன்னு தம்பிங்க எனக்கு தகவல் சொன்னாங்க. நான் ஸ்கிரீன்ல பார்த்தேன். நீங்க ஒரு ஆள்ட்ட சீரியஸா பேசிக்கிட்டிருந்தீங்க. அந்த ஆளுதான் அசோக்கா''ன்னேன்.
"ஆமாண்ணே... அவன்தான் அசோக்''ன்னார் தெய்வச்சிலை.
"அப்படின்னா... நீங்கதான் அடிக்கச் சொன்னீங்களாண்ணே''ன்னேன் நான்.
"அய்யய்யா... அய்யய்யோ... அய்யய்யோ...''ன்னு பதறுனாரு அவரு.
அப்பதான் போட்டோகிராபர் தம்பி அசோக் எனக்கு போன் பண்ணுனாப்ல. அண்ணே வேளச் சேரி எம்.எல்.ஏ. அசோக் ஒரு கும்ப லோடு ஆபீஸ் முன் னாடி நிக்குறா ருண்ணே...''
தம்பி ஸ்டாலின், பெலிக்ஸ், போட்டோ கிராபர் சுந்தர் எல்லாருமே இந்த தகவலை எனக்கு போன் மூலமா உறுதிப்படுத்து னாங்க.
"அப்படியா.... வேளச்சேரி அசோக்கா? இந்த ஆளு என்ன எழவ கூட்டப்போறானோ தெரியலியே? ஏதாவது அவங்களுக்குள்ள பேசிக்கிறாய்ங்களா தம்பி''ன்னு கேட்டேன்.
ஜெயலலிதாவுக்கு புடிக்காத எதிரிகள டிசைன் டிசைனா கொடுமப்படுத்தணும், அதப் பார்த்து அந் தம்மா ரசிக்கும்.
டிசைன் டிசை னான்னா... ஒருத்தன் பண்ணுறது மாதிரி இன்னொருத்தன் பண்ணமாட்டான். ஏன் சொன்னேன்னா... ஒங்களுக்கு ஞாபகம் இருக்கா... அவுங்க நொம்மாவுக்கு (அதுதான் "ஜெ'வுக்கு) ப்ளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்குல தண்டிக்கப்பட்டு 2-2-2000 அன்னிக்கு ஒரு வருஷம் தண்டனை குடுத்தாங்க. அத எதிர்த்து அ.தி.மு.க.காரய்ங்க அந்தம்மாட்ட நல்ல பேர் வாங்கணும்னு வித்தியாசமா ரூம் போட்டு யோசிச்சி, தர்மபுரிக்கு பக்கத்துல உள்ள இலக்கியபட்டிங்கிற ஊர்ல காலேஜ் டூர் வந்த விவசாயக் கல்லூரியில படிச்ச பொம்பளப் புள்ளைங்க மூணு பேர துள்ளத் துடிக்க பஸ்ஸுக்குள்ளயே வச்சு எரிச்சாய்ங்க படுபாவிங்க... நாசமாப் போறவிய்ங்க...
அவிய்ங்க ஈவு இரக்கமில்லாம எழவு கூட்டுனத நக்கீரன்தான் மொத மொதல்ல, யாரெல்லாம் எரிச்சாங்கங்கிற செய்தியா வெளியிட்டது. அதுல சம்பந்தப்பட்டவங்க லிஸ்ட்ட மொதல்ல சொன்னதும் நக்கீரன்தான். தர்மபுரி பஸ் எரிப்ப பத்தி ஜெயலலிதா ஒரு வார்த்தகூட வருத்தமோ, மன்னிப்போ, செத்துப்போன பிள்ளைங்களுக்கு இரங்கலோ தெரிவிக்கல.
அதுக்குப் பதிலா இந்த படுபாதக பஸ் எரிப்ப பண்ணி ஜெயிலுக்குப் போன கொலைகாரப் பயலுக அத்தன பேருக்கும் வேண்டியத கவனிச்சு, அவனுக மொத்த குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்ப, அவங்க கட்சியச் சேர்ந்த பெரிய முனி கிட்ட பாத்துக்கச் சொல்லி ஆர்டர் போட்டுச்சு. அவரும் கண்ணும் கருத்துமா அவிய்ங்கள பார்த்து, போன பீரியட்ல மேப்படி எல்லா கொலைகாரப் பாவிகளையும் வெளிய கொண்டுவந்துட்டாரு. அதுக்கு அவருக்கு பெரிய அவார்டும் கெடைச்சது.
இப்ப புரியுதா... அந்தம்மாவ திருப்திப் படுத்துறதுக்கு இவிய்ங்க டிசைன் டிசைனா அட்டாக் பண்ணுவாய்ங்கன்றது.
குரூப்பா வந்திருக்கிற அசோக்கும் ஏதோ ஒரு திட்டத்தோட வந்திருப்பாம்போலன்னு தம்பிகளும் சொல்றாங்க, தெய்வச்சிலை அண்ணனும் அதத்தான் சொல்றாரு. அந்த குரூப் வந்த கொஞ்ச நேரத்துல டம்மு... டம்மு... டம்மு...னு கேட் ஓங்கி இடிபடுற சத்தம்.... பயங்கர சத்தம். ஏதோ கடப்பார கம்பிய வச்சி அடிச்சது மாதிரி பயங்கர சவுண்டு. வெளில நிக்குற போலீஸோ எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துட்டு, வங்ள், ஸ்ரீர்ம்ங்... முடிஞ்சிச்சா... ஞ்ர், அப்படின்னுதான் காலையிலிருந்தே சொல்லிக்கிட்டிருக்காய்ங்க.
மனசுல என்னென்னலாமோ யோசனை ஓடிட்டிருக்கு. அப்ப... நம்ம பெருசு சுந்தர் போன்ல கத்துறாரு...
"அண்ணே... ஆபீஸ பூட்டுறாங்கண்ணே...''
"என்ன... ஆபீஸ பூட்டுறாய்ங்களா...? நம்ம ஆபீஸையா?''
"ஆமாண்ணே...''
டிசைன் டிசைனா பண்ணுவானுவோன்னு சொன்னேன்பாருங்க... அதாவது, ஏற்கனவே ப்ளான் பண்ணி ஒரு பெரிய பூட்டு வாங்கிட்டு வந்து கையில வச்சிக்கிட்டு... நம்மள சித்ரவதை செய்றோம்ங்கிற பேர்ல ஆபீஸ பூட்டுறான்... பரதேசி.
கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க, அதாவது கஷ்டமோ நஷ்டமோ நக்கீரன்ங்கிற பத்திரிகைய ஆரம்பிச்சி எல்லாருக்கும் தெரியுற அளவுல ஒரு நல்ல பேரோட இருக்கிற பத்திரிகைய, 100 பேருக்கு மேல வேலை செய்யுற ஒரு ஆபீஸ ஒருத்தன் பட்டப் பகல்ல பூட்டு போட்டுப் பூட்டுறான்னா.... அவனுக்கு எவ்வளவு திமிரு, எவ்வளவு தெனாவெட்டு? ஜெயலலிதாகிட்ட நல்லபேரு எடுக்க என்னெவெல்லாம் பண்ணுனாய்ங்க தெரியுமா...?
உலகத்துலயே எந்த மடையனும் செய்யக் கூடாத ஒரு மோசமான காரியத்த வேளச்சேரி எம்.எல்.ஏ. அசோக், அதாவது எம்.எல்.ஏ.ங்கிறதுக்கு எந்த வகையிலும் அருகதையும் இல்லாத தகுதியும் இல்லாத ஒருத்தன் ஆபீஸ பூட்டுறான். எனக்கு அது ஒரு பகீர்ன்னோ, பெரிய ஷாக்கான விஷய மாவோ படல. ஏன்னா, மூடர்களா இருக்கிறவங்க மூடத்தனமாத்தான் பண்ணுவாங்கன்னு தெரியும். வாடி மாப்ள... பூட்டுறியா, பூட்டு பூட்டு, பூட்டட் டும்னு தம்பிகள்ட்ட சொன்னேன். என்னடா ஒரு எம்.எல்.ஏ.வ ஒருமையில பேசுறானேன்னு நினைக்காதீங்க. நம்மள கொல்ல வந்தவன கொஞ்சவா முடியும், நீங்களே சொல்லுங்க...
கேட்டுக்கு வெளியில நிக்குற போலீஸ்காரய்ங்க எல்லாத்தையும் வேடிக்கை பாத்துக்கிட்டுதான் நிக்கிறாய்ங்க, தடுக்கல.
எனக்கு மனசுக்குள்ள ஒரு சின்ன நெருடல். என்னன்னா... மொத்தமா யாரையும் வெளிய போகவுடாம உள்ளுக்குள்ளயே வெச்சி பெரிய அணுகுண்டா போட்டு ஒரேயடியா அழிஞ்சி போகட்டும்னு ப்ளான் போட்டானுவோன்னா, என்ன வேணும்னாலும் பண்ணுவாய்ங்க... சதிகாரப் பயலுக.
இவ்வளவு நடந்த பிறகும் தெம்பா நிக்கிறீங்களேன்னு தெய்வச்சிலை அண்ணன் சொன்னாரு.
அதுக்காக முக்காடு போட்டுட்டு மூலையில குத்த வச்சு உக்காரவா முடியும்...?
(புழுதி பறக்கும்)
படங்கள் : எஸ்.பி.சுந்தர், ஸ்டாலின், அசோக்