pp

பிரதமர் ஆசைக்கு பலிகடாக்கள்!

வஹர் அண்ணன் பதறுறாரு. "நான் உங்கள கிளம்பச் சொன்னா, ஏன் அடிக்கிறாங்கன்னு ஆராய்ச்சி பண்ணுறீங்க, முதல்ல கிளம்புங்க''ன்னு சத்தம் போட்டார்.

"இருக்கட்டும்ணே... என்ன பெருசா நடக்கும், ரெண்டுல ஒண்ணு பாத்துருவோம்''னு சொல்லிட்டேனே ஒழிய, நமக்கு பாடிதான் ஸ்ட்ராங்க்... பேஸ் மெண்ட் ரொம்ப ரொம்ப வீக்காயிருச்சு.

Advertisment

2004-ல பாராளுமன்றத் தேர்தல். அதுல ஜெயிச்சு பிரதம ராகணும்னு அந்தம்மா ஒரு பெரிய பெரிய திட்டமெல்லாம் போட்டுச்சு. அந்த திட்டத்த செயல்படுத்த என்னென்னமோ திட்டம்லாம் போட்டுச்சு. அதா வது, இந்தியாபூரா நம்மளப் பத்தி பேசணும். இந்தியா தன்ன ஒரு அயன் லேடியா பார்க்கணும்னு தான் 2001-ல ஆட்சிக்கு வந்த ஒடனே கலைஞர கடுமையா சித்ரவதை பண்ணி அரெஸ்ட் பண்ணுனாங்க. அது உங்களுக்குத் தெரியும். அதே மாதிரி மத்திய அமைச்சரா இருந்த முரசொலி மாறன... பேஸ்மேக்கர் வச்சிருந்த அவர கடுமையா அடிச்சதுலதான் 2003-ல அதாவது, அந்த சம்பவம் நடந்து ஒரு வருஷம், ரெண்டு வருஷத்துக்குள்ள அவரு இறந் துட்டாரு. 2004-ல இந்தியா முழுக்க தன்னப் பத்தி பேசணும்ங் கிறதுக்காகத்தான். மத்திய அமைச்சர அடிச்சது, டி.ஆர். பாலு அண்ணன அரெஸ்ட் பண்ணுனது. இப்படி மத்திய அமைச்சர்கள அரெஸ்ட் பண்ணுனா இந்தியா பூரா பேசப்படும் இல்லியா... அதுக்குத்தான்.

ff

அதுக்கு அடுத்து எங்கள அரெஸ்ட் பண்ணுற நோக்கமே வீரப்பன எங்கள வச்சு தூக்கிரணும். அதுக்கு என்னை தூக்கி நையப் புடைச்சிச்சி. ஒருகட்டத்துல நக்கீரன் ஜெயில்ல இருந்தாதான் வீரப்பன தூக்க முடியும்னு எவனோ ஒரு விளக்கெண்ணெய் சொல்லியிருக்கான். அத வச்சு கேணத்தனமா ஒரு முடிவெடுக்குறாங்க. நாம வெளிய இருந்தா வீரப்பன தூக்க முடியாதாம். இந்தக் கொடுமைய எங்க போய்ச் சொல்ல. (சீப்பை ஒளிச்சு வைக்கிற கதைதான்) அதனால 2003-ல என்ன பொடாவுல அரெஸ்ட். நம்மள உள்ள வச்சு நொங்க பிதுக்கிட்டாய்ங்க.

Advertisment

எனக்கு கடுமையான சித்ரவதையெல்லாம் கொடுத்து, ஒருவாரம் ஜட்டியோட மோசமான லாக்கப்புல வச்சிருந்தானுவோ. எங்கிட்ட ஒரு கையெழுத்து கேட்டு அப்ப டி.எஸ்.பி.யா இருந்த நாகராஜனும், டி.ஐ.ஜி. முகம்மது அலியும் ஆளாளுக்கு மிரட்டு னாய்ங்க. மேற்படி கையெழுத்து எதுக்குன்னா... அதாவது வீரப்பன், நடிகர் ராஜ்குமார கடத்துறதுக்கு நானு, கலைஞர், கர்நாடக முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, ரஜினி... நாங்க நாலுபேரும் கூட்டு சேர்ந்து நடிகர் ராஜ்குமார கடத்துனோம் அப்படின்னு பேப்பர்ல கொட்டை எழுத்துல எழுதியே, எங்கிட்ட கையெழுத்து கேக்குறாங்க. என்னைய பொடாவுல போட்டாச்சு. வீரப்பன் காட்டுக்குள்ள இருக்காப்ல. அப்ப மிச்சம் இருக்கிற மூணுபேர் மேல பொடா போடணும். பொடா போட்டா இந்தியா முழுக்க அது பேசப்படும்ல... அதுக்குதான் என்கிட்ட கையெழுத்துக் கேட்டாங்க. என்னைய சாகடிச்சாக்கூட பரவால்ல... நான் கையெùழுத்து போடமாட்டேன்னு சொன்னதுனாலதான் எனக்கு இவ்வளவு பெரிய அநியாயமான சித்ரவதை.

கலைஞர், அந்தம்மாவோட ஜென்ம விரோதி. அவர கைது பண்ணினா, அதப்பத்தி பரவலா தமிழ்நாட்டுக்குள்ள பேசுவாங்க. ரஜினி மேல பொடா வழக்கு வந்ததுன்னா மும்பைல இருக்குற பெரிய நடிகர்களான அமிதாப்பச்சன், சத்ருகன் சின்கா... அப்புறம் இந்தியா முழுக்க ரஜினி மேல மரியாதை வச்சிருக்கிறவங்க எல்லா ரும், "ரஜினி மேலயேவா?'ன்னு பேசுவாங்கள்ல. அதோட அவர் எல்லா அரசியல் தலைவர்கள்ட்ட யும் நல்ல நட்பு வச்சிருந்தார். அவங்களும் திரும்பிப் பார்ப்பாங்க. அடுத்து கிருஷ்ணா மேல வழக்கு போடுறதுக்கு காரணம், காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலத்து முதல்வர் மேல கை வச்சா, "காங்கிரஸ் மேலயே கைவச்சிடுச்சா அந்தம்மா'ன்னு இந்தியா முழுக்கவே பேசும்ல. அப்போ இதையெல்லாம் இந்தியா பேசணும்... தன்னை ஒரு போல்டு லேடி, அயன் லேடி, வெயிட்டான லேடின்னு சொல்ல ணும், "இந்தியாவ ஆளுகிற சக்தி, திறமை ஜெயலலிதாவுக்கு இருக்குதுன்னு இந்தியா முழுவதும் பேசப்படணும்'னுதான் இவ்வளவு பெரிய ஏற்பாட இந்தம்மா பண்ணுச்சு.

வீரப்பன 2004, அக்டோபர் 18-ஆம் தேதி சுட்டுக் கொன்னதா ஒரு படம்லாம் காமிச்சாங்கல்லியா, அது ஒரு படம்தான். (புரிஞ்சவங்க புரிஞ்சுக் கங்க) அது நமக்கெல்லாம் கொடுத்த பெரிய அல்வாதான். அத நான் பின்னாடி சொல்றேன். இப்ப சின்னதா ஒரு பிட் மட்டும் சொல்லிடுறேன். வேன்ல இருந்த வீரப்பன 30 அடி தூரத்துல சுத்தி வளைச்சு ஜு... ஜுன்னு கரெக்ட்டா நெத்திய குறி பார்த்து 2 தோட்டா இறங்குற மாதிரி சுட்டாய்ங் களாம். அதுல அவரு செத்துட்டாராம். என்னல் லாம் கத விடுறாய்ங்க. சப்பாத்திக்கு மாவு பிசையிற கதையெல்லாம் சொன்னாங்க... அது இருக்கட்டும்.

இப்ப வீரப்பன் செத்தவுடனே காலைல விஜயகுமாருங்கிறவரு ஒரு பிரஸ்மீட் வச்சாரு. வீரப்பனை சுட்டுக்கொன்ற வீரர்னு அவருக்கு பட்டயம் ஒண்ணு குடுத்திருப்பாய்ங்க. அதவிட ரொம்ப கொடும என்னன்னா... வீரப்பன புடிச்சு வச்சு கொன்னதுக்கு மகாராணி ஜெயலலிதா, அவுங்க அரசு சார்புல எல்லாருக்கும் சன்மானம் + பொற்கிழியெல்லாம் குடுத்தாங்க. அது மட்டுமே அரசாங்க பணம் 108 கோடி ரூபாய். ஏதோ இவங்க அப்பன் வீட்டுத் துட்ட குடுத்த மாதிரி. எப்படி... வீரப்பன பிடிக்க வேண்டிய கடமை போலீஸுக்கு, கடமைய செஞ்சதுக்கு வெகுமதி. அப்ப மத்த போலீஸ் எல்லாம் வேலையை பார்க்காம ஊரச் சுத்துறாங்கன்னு நினைச்சுக்கிடுச்சு இந்தம்மா. அத யாரும் பெருசா கண்டுக்கல. ஏன்னா எதேச்சதிகாரம் ரவுண்டு கட்டி ஆடுது. இருக்கட்டும்... இருக்கட்டும்.

pp

வீரப்பன சுட்டாய்ங்களா... சுட்டுக்கொன்ன பிறகு படம் எடுத்தாய்ங்களா அப்படிங்கிற தெல்லாம் வேற. இப்ப ஒரு பொசகெட்ட தறுதல மூதேவி ஒண்ணு பினாத்திக்கிட்டு அலையுது நான்தான்... நான்தான்னு. எனக்கென்னவோ இந்த பீ திங்கிற நாயும், இன்னொண்ணும் சேர்ந்துதான் வீரப்ப மகராஜனை எச்சக் காசுக்கு காட்டிக் கொடுத்துட்டாய்ங்களோன்னு சந்தேகம் இப்ப வருது. வீரப்பன் பாஷையில சொன்னா அரக்கங்க, இந்த சிய்ய்... சு... நாயை விலைக்கு வாங்கிட் டாங்களோன்னு பேச்சு அடிபடுது. இருக்கட்டும்... இருக்கட்டும்... இன்னொரு முறை அதுக்கு ஒரு கச்சேரி வச்சுக்குவோம்.

காலைல தர்மபுரி பக்கத்துல எல்லா பத்திரிகைக்கும், டி.வி.க்கும் பிரஸ்மீட் வச்சாரு விஜயகுமார். அதுல அவரு பேசும்போது ஒரு இழையோட்டம் ஓடும். "வீரப்பன 2004 மார்ச்லயே நாங்க தீர்த்துக்கட்ட திட்டமிட்டிருந்தோம், அது எங்களுக்கு மிஸ் ஆயிடிச்சி'ம்பாரு. நெறைய பேரு அந்த வார்த்தைய மறந்துருப்பாங்க, நமக்குதான் குறுக்கு புத்தியாச்சே... அது மாத்திரம் நமக்கு உறுத்தலா தோணுச்சு அப்படின்னா... வீரப்பன கொல்ல மார்ச்ல திட்டமிட்டிருக்காய்ங்க... ஏன் மிஸ் ஆச்சு? 2004, ஏப்ரல் மாசத்துல பாராளுமன்ற எலெக்ஷன். எலெக்ஷனுக்கு முன்னாடி வீரப்பனைக் கொன்னா... வீரப்பனைக் கொன்ற வீராங்கனை அப்படின்னு அந்தம்மாவுக்கு பேரு வந்தாதான இந்தியாபூரா அத கொஞ்சம் பேசுவாய்ங்க. ஏன்னா, வீரப்பனுக்கு இந்தியாபூரா பேர் இருக்கு. அதனால அந்தம்மாவுக்கு பேரு வரும்னு திட்டமெல்லாம் போட்டுதான் காய் நகர்த்தி இருக்காய்ங்க. அது கொஞ்சம் தள்ளிப் போச்சுன்னு விஜயகுமாரும் தன் வாயால ஒத்துருப்பார். அடுத்து...

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் சங்கரராமன் கொலை வழக்குல சங்கராச்சாரி யாருக்கு பங்கு இருக்கு, அவருடைய பின்னணி இருக்கு அப்படிங்கிறத நாம புலனாய்வு செய்து வெளியிட்டோம். நக்கீரன் சொல்ற மத்த விசயங்கள யெல்லாம் ஜெயலலிதா கண்டுக்கவே கண்டுக்காது. ஏன்னா நம்ம சொன்னோம்னா அத தூக்கி தூரப் போட்டுரும். இவன் சொல்லி, நான் என்ன கேக்குறதுங் கும். அதுக்கு ஒரு நல்ல உதாரணம் சொல்றேன்.

கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி ஜெயலலிதாவோட மகள்னு சொல்லிட்டு சேலத்துலயிருந்து ஒரு பொண்ணு, அது பேரு லட்சுமி ப்ரியா. பத்திரிகைகளுக்கெல்லாம் பேட்டி குடுத்துச்சு. அப்ப நாம என்ன பண்ணுனோம்னா... ஜெயலலிதாவோட பொண்ணுன்னு சொன்ன அந்தப் ப்ரியா பத்தி புலனாய்வு பண்ணி, இந்தப் பொண்ணு ஜெயலலிதாவோட மக கிடையாது, பித்தலாட்டம் பண்ணுது, இது ஒரு டுபாக்கூரு, இது பொய் சொல்லுதுன்னு ஆதாரத்தோட நக்கீரன்ல அட்டைப்பட செய்தியா வெளியிட்டோம். இந்த செய்தி ஜெயலலிதாவுக்கு சாதகமானதுதான...? நீங்களே சொல்லுங்க. அப்போ என்ன பண்ண ணும்... நக்கீரன பாராட்ட வேணாம், குறைந்த பட்சம் சரின்னு விட்ற வேண்டியதுதான? அந்தம்மா என்ன பண்ணுச்சு தெரியுமா? வழக்கு போட்டுச்சு. யாருமேல.... நக்கீரன் மேல. என்னன்னா... அவ மக இல்லங்கிறத நீ சொல்லாத, நீ சொல்லக்கூடாதுல்லன்னு சொல்லி, எங்க மேல ஒரு கேஸப் போட்டு துரத்த ஆரம்பிச்சிருச்சு. நாம ஒரு செய்தி போட்டா அத ஒடனே கையில எடுக்காது, ஒத்துக்கவும் ஒத்துக்காது. அது கையில எடுத்ததுன்னா ஒண்ணு அரெஸ்ட்டுக்குத்தான்...

இப்படியெல்லாம் நடந்துக்கிட்ட ஜெயலலிதா... ஜெயேந்திரர், சங்கரராமன் கொலை வழக்குல அவருடைய கை இருக்குங்கிறத நாம புலனாய்வு செய்து சொன்னவுடனே சங்கராச்சாரியார ஒரு தீபாவளிக்கு முதநாளு கைதுபண்ணி, களி தின்ன வச்சிது. அது உங்க எல்லாருக்கும் தெரியும். அவரு 90 நாள் ஜெயில்ல இருந்தாரு. இத எதுக்கு ஜெயலலிதா பண்ணுச்சுன்னா... இந்தியாவே பேசணும். இந்து மதத்துல ஒரு தலைவர். இந்து மதத்தோட ஒரு பிராந்திய தலைவர். அப்ப, இவர் மேல கை வச்சா... காஷ்மீர்லயும் அது பிரதிபலிக்கும்ல? அதாவது... இந்துமதத் தலைவர் சங்கராச்சாரியாரையே கைது பண்ணிட் டாங்கப்பா... அவங்க ஒரு வெரி... வெரி போல்ட் லேடின்னு சொல்லணும்னு நினைச்சது அந்தம்மா.

ஆனா இங்கயிருக்கிற ஒன்றிரண்டு ஆர்.எஸ்.எஸ். வென்றுக... ... ...

(புழுதி பறக்கும்)