uu

முட்டை ஆசிட் வீசிய அ.தி.மு.க!

ன் துணைவியார்கிட்ட, "வீட்ல எல்லாரும் பத்திரமா இருந்துக்கங்க. அக்குபஞ்சர் சிகிச்சைக்குப் போயிருக்கும் அப்பாவை, சாயந்தரம்வரை அங்கேயே இருக்கச்சொல்லி, டாக்டர் நாசருக்கு போன் பண்ணிடுங்க. தம்பி மனைவி, மகள், பசங்க எல்லாரையும், ஆடிட்டர் மோரீஸ் (அப்ப நம்ம ஆடிட்டர்) வீட்டுக்குப் போயிடச் சொல்லுங்க. இங்க எல்லாரும் வந்தாங்கன்னா, நம்ம வண்டிய அடையாளம் வச்சிக்கிட்டு அட்டாக் பண்ணி னாலும் பண்ணுவாங்க''ன்னு, அவங்களை எல்லாம் ஒருவழியா அங்கங்க போக வச்சுட்டேன்.

அந்த நேரத்துலதான்... அஞ்சுலட்சுமி அக்காவோட டீம், வீடு பூறணும்னு திட்டம் போட்டு, ஆவேசமா வரிஞ்சி கட்டிக்கிட்டு நிக்கிது.

Advertisment

பொம்பள ஆளுக எல்லாம் மேல மொட்டமாடியில ஒளிஞ்சி நின்னுக்கிட்டு, கீழ நடக்கறதப் பாக்கறாங்க. அப்ப என் மக பதறியடிச்சிக்கிட்டு ஓடிப்போய், தான் பார்த்த அட்டாக் பத்தியெல்லாம் எங்க வீட்டம்மாகிட்ட சொல்ல... மறுபடியும் அவங்ககிட்ட இருந்து எனக்கு போன். "என்னங்க... அவ்வளவு பேர் இருக்காங்களாம்.. என்னங்க, ஏதாச்சும் பிரச்சினை ஆனா என்ன ஆகறது. ஐயய்யோ... ஐயய்யோ...'ன்னு பதறுறாங்க.

அப்ப நான்,’"அதெல்லாம் ஒண்ணும் இல்ல. நம்ம வீட்டுக்கு வர்ற சந்தை எல்லாம் க்ளோஸ் பண்ணிட்டோம், லாக் பண்ணியாச்சு... யாரும் வரமுடியாது கவலப்படாதீங்க, நான் பாத்துக் கறேன்... நான் பாத்துக்கறேன்''னு சொல்றேன். ஆனா… அவங்க ரொம்பவே நடுங்கிப்போயிட்டாங்க.

வேற என்ன பண்றது...?

Advertisment

இந்த அட்டாக்குக்கெல்லாம் பயந்து, இதவிட்டு விலகிட்டா என்ன வரும்னா...…நக்கீரனே போய்டுச்சு, நீ என்ன வெங்காயம்னு எதிர்காலத்துல ஒரு உதாரணமாயிடுவோம். இல்ல, அவங்கள விட்டுட்டு ஒதுங்கிப் போனா,… என்ன மீசையும் கீசையுமா அலைஞ்சாய்ங்க... இப்ப பார்றா… ரோசம் இல்லாம ஆயிட்டாங்கன்னு சொல்லுவாய்ங்க.

இப்ப ரெண்டும் இல்லாம எதுத்து அடிக்க ணும்னா, இத எல்லாம் நாம எதிர்கொண்டுதான் ஆகணும்... வேற வழியில்ல.

இப்படி ஒரு ஜெயலலிதா, இப்படி ஒரு விளங்காத ஜெயலலிதா, இப்படி ஒரு அநியாய மான ஜெயலலிதா, இப்படி ஒரு அரக்கத்தனமான ஜெயலலிதா, இப்படி ஒரு மமதையான ஜெயலலிதா, இப்படியொரு பழிவாங்கற ஜெயலலிதா, இத்யாதி …இத்யாதி.. ஜெயலலிதா, இப்படி ஒரு மோசமான ஜெயலலிதாவ, எதிர்த்து நின்னா, இதையெல்லாம் வாங்கி கட்டிக்கிட்டுத்தான் ஆகணும்.

அப்பவும் கூட சிலபேரு, அந்தப் பொம்பளய எதிர்த்தீல்ல, உனக்கு வேணும்டின்னு கடுப்ப கிளப்புவாய்ங்க. அத இப்ப யோசிச்சி என்ன பிரயோஜனம்?

uy

எங்க வீட்டம்மா.. இப்படி எல்லாம் பயந்தாலும், இல்ல… இனி இதெல்லாம் வேணாம் இதோட விட்ருங்கன்னு சொல்ற ஆளு இல்ல. அவங்களுக்கும் தெரியும். இவன் திருந்தமாட்டான், திருந்தாத அரசியல்வாதிகளும் அவர சும்மா விடமாட்டாங்கன்னு.

எப்படி எங்க வீட்டம்மா இதையெல்லாம் சமாளிச்சிக்கிட்டாங்க? எப்படி இந்த மன நிலைக்கு வந்தாங்க?ன்னு சொல்றேன்.

எனக்குத் தெரிஞ்சி, என் வீட்டம்மாவ நான் பெரிய அளவில் சந்தோசப்படுத்தினது இல்லை. அவங்களுக்கு ஒரு நல்ல விசயத்தக் காட்னதில்ல. அவங்களுக்கு நான் கொடுத்த மிகப்பெரிய சந்தோசம்ன்னா, அது என் மகளோட திருமணம். நக்கீரன் குடும்பமே இருந்து நடத்திய திருமணம் அது. ரொம்பவும் சீரும் சிறப்புமா, எல்லாப் பெரியவங்களும் வந்திருந்து நடத்திவச்ச திருமணம். அதைத்தவிர ஒரு சந்தோசத்த அவங்க பார்க்கல.

எப்பவுமே ஜெயலலிதா ஒருத்தர பணிய வைக்கணும்னா, அவர மெரட்டுறது... அது இல்லையா, அவங்க குடும்பத்துல இருக்குற ஒருத்தர... அப்படியும் ஒண்ணும் ஆகலன்னா, அவுங்க சம்பந்தம் பண்ணுன இடம்... இல்ல அவன் தங்கச்சி மாமனார், கொழுந்தன், மச்சான், மச்சான் சம்பந்தி... இப்படி யாரையாவது புடிச்சு மிரட்டி, இல்ல... காசு வச்சு அடிச்சு கால்ல விழ வைப் பாய்ங்க. இதேபாணி நம்மட்ட செல்லுபடி ஆகல. இத்தனைக்கும் எங்க மாமா திரு.ஆர்.எஸ்.பாண்டி யன், ஏ.டி.எம்.கே.காரர். உள்ளூர்ல "ஜெ.' பேரவையில் பொறுப்புல இருந்தார். அவர, தோட்டத்துக்கு கூப்புட்டு மிரட்டி, என்ன பணியவைக்கப் பார்த்தார். மாமா கட்சியா, இல்ல அன்பு மகளான்னு இரண்டு விரல்ல ஒரு விரல் தொட்டதுல... மகள்தான் என முடிவெடுத்தார்.

விளைவு... அடுத்த நாளே கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து கட்டம் கட்டிட்டாங்க. ஊர்ல ரொம்ப கௌரவமா வாழ்ந்தவரு. அந்த அவமானம் தாங்காம உசுர விட் டுட்டார். எனக்காக தன்னையே மாய்ச்சுக்கிட்டார்.

எங்க மாமா, தன் பிள்ளைகள்ட்ட அப்படி ஒரு அன்பு காட்டுவார். அதுவும் என் துணைவியார் மீது அபாரம். அந்த பாவி ஜெயலலிதாவால ஒரு பெரிய உசுரு போச்சு. என் துணைவியாருக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னு தவிச்சுட்டேன். நான் சிறையில் இருந்ததால் அவங்களுக்கு ஆறுதல் சொல்லக்கூட ஆளில்லை.

அடுத்து... எனக்கும் எங்க குடும்பத்துக்கும் ஜெயலலிதா கொடுத்த வேதனையால எங்கம்மா வும், நோய்வாய்ப்பட்டு இறந்துட்டாங்க.

gg

என் துணைவியாரும் ஓடி ஓடிப் போயி களச்சிப் போயிட்டாங்க. நாங்க ஒரு பக்கம் ஓடினா, அவங்க ஒரு பக்கம் ஓடணும். பிள்ளைகளுக்கு எதுவும் ஆயிடக்கூடாதுன்னு அவங்கள யாராவது ஒருவர் வீட்ல, எங்காவது ஒரு இடத்துல பாதுகாப்பா விட்டுட்டு, நாங்க எங்காவது ஓடணும். ஏன்னா...… அந்தப் பொறுக்கிங்க எடுத்த உடனே, வீட்டத்தான் குறிவச்சி தாக்குவாய்ங்க. 90-கள்ல ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த நேரத்துல, நாங்க கீழ்ப்பாக்கம், மண்டபம் ரோட்ல ஒரு வீட்ல இருந்தோம். அங்க ஜன்னல், அதன் கதவெல்லாம் மரத்துல இருக்கும். அதெல்லாம் கருப்பு கருப்பா தீஞ்சுபோயிருக்கும். நைட்ல தூங்கும் போது பொடேர் பொடேர்ன்னு சவுண்டு வரும். உடனே, எங்க வீட்டம்மா பதறிப்போய் என்னங்கன்னு கேட்பாங்க. யாரோ பந்து விளையாடறாங்கன்னு சமாளிப்பேன். நைட் நேரம் எவன் பந்து விளையாடுவான். வாய்க்கு வந்தத சொல்வேன். அது அ.தி.மு.க.காரனுங்க முட்டைல ஆசிட் வச்சி அடிச்சதுன்னு அவங்களுக்கு அப்ப தெரியாது. பின்னாடி நான் இதுபத்தியெல்லாம் பேட்டிகள்ல சொன்னப்பதான் அதுவே அவங்களுக்குத் தெரிஞ்சது. இந்த மாதிரியான அனுபவங்கள அடிக்கடிப் பாத்துப் பாத்து அவங்க மரத்துப் போய்ட்டாங்க.

இப்ப சிவசங்கர் பாபா உள்ள இருக்காரு. அந்தக் கிரிமினல் மேல, நாமதான் டி.ஜி.பி.கிட்ட கம்ப்ளைண்ட்டு கொடுத்தோம். அந்தாள உள்ள வக்கிறவரை நாமதான் எல்லாம் பண்ணினோம். இதப் பெருமையாவே சொல்லிக்கிறேன்.

ஒரு மோசமான -பொம்பளப் பிள்ளைகளக் கெடுத்தவன் -பச்ச மண்ணுகள ருசிச்சவன் ஒருத்தன -நாம இவ்வளவுநாள் உள்ள வச்சிருக்கோம்ங்கிற பெரும ஒருபக்கம் இருக்கு. அது சம்மந்தமா எங்களுக்குள்ள நடந்த ஒரு சில சம்பவத்த நான் சொல்றேன்.

இடையில ஒருநாள், நம்ம நண்பர் பெட்ரோல் பங்க் பாலுவோட அலுவலகத்துல உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்கோம். எங்ககூட ஐய்மா ராஜு அண்ணன், அம்பத்தூர் இண்டஸ் ட்ரியல் எஸ்டேட்டோட முன்னாள் தலைவர், அவரும் இருந்தாரு. அப்ப பாலு, "அண்ணே எங்கம்மா, மனைவியெல்லாம் உங்கள நெனச்சி வருத்தப்பட்டாங்க. ஏன் இவரு இன்னமும் இப்படிப் பிரச்சினைகள வளர்த்துக்கிட்டு இருக்காரு. இப்ப சாமியாரப் பத்தி எழுதறார். அப்புறம் அவங்க கோவப்பட்டு... எதாவது செய்வாங்க. இதெல்லாம் எதுக்கு? இனிமேயாச்சும் நிம்மதியா இருக்க வேண்டியதுதானே? போராடி போராடி... இன்னமும் இதையே பண்ணிக்கிட்டு இருக்காரே, பாவம் அவங்க வீட்லன்னு வருத்தப் படறாங்கண்ணே''’ன்னு சொன்னாரு.

அப்ப நான் சொன்னேன், ”உங்க அம்மாவும் உங்க வீட்லயும் இப்படிச் சொல்றாங்க. ஆனா எங்க வீட்ல என் துணைவியார் என்ன சொல்றாங் கன்னா,… "அவன (சிவசங்கர் பாபாவ) சும்மா விட்றாதீங்க. தூக்குல தொங்கற வரைக்கும் அவன விட்றாதீங்க'ன்னு, இதே வார்த்தையத்தான் சொன்னாங்க. ஏன்னா "பெண் பிள்ளைகள்ட்ட அவன் விளையாடியிருக்கான், அவன விட்றக்கூடாதுன்னு என் துணைவியார் சொல் றாங்க''ன்னு சொன்னேன். அந்த பேச்சு அதோட முடிஞ்சிடுச்சி.

இந்தக் கதைய பெருமையா வந்து எங்க வீட்டம்மாகிட்ட சொல்றேன். அடுத்த நிமிசம்.. என் துணைவியார், "ஆமா நாங்க விட்ருங்கன்னு சொன்னதும் நீங்க விட்றப்போறீங்க பாருங்க... அதனால்தான் அப்படி சொன்னேன்''னாங்க பொட்ல அடிச்சாப்ல. அவங்க சொன்னது புரியும்னு நினைக்கிறேன். என்னை மாத்த முடியாதுன்னு நெனைச்சிக்கிட்டு, தலவிதியேன்னு எனக்கு ஏத்தமாதிரி மாத்திக்கிட்டாங்கன்னு அதுக்கு அர்த்தம்.

(புழுதி பறக்கும்)